என்னுடைய முதல் மேடை ஸ்ரீ நேரு வித்யாலய NSS மாணவர்களுக்காக சிறப்பு சொற்பொழிவு ஆற்ற எனது நண்பர் பழனியப்பன் பரிந்துரைக்க மறுக்க மனம் இல்லாமல் சென்றேன் .
அங்கு 70 மாணவர்கள் படைக்கு முன்னாள் நான் என்ன பேச போகிரோமோ என்ற சிறு தயக்கம் , பேச என்னை ஒரு மாணவி அழைக்க மைக் முன்னாள் நான், எனக்கு முன்னாள் மாணவர்கள் , தயக்கத்துடன் உரையை துவக்கினேன் ,நான் பேசுவதை மாணவர்கள் கவனிப்பதை நான் கவனித்தபடியே உரையை தொடர்ந்தேன் . நான் செய்த சேவைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்
15 வருடம் கழித்து வீடு சென்ற அசோகன
பழனிக்கு உறவு கிடைக்கவேண்டும்...
வீடு திரும்பிய சண்முகம் தாத்தா
என்ன செய்தேன்
மரண நேரத்தில் மகனை சந்தித்த அம்மா
மண்ணைவிட்டு மறைந்த மணியம்மா
நான்கு வருடத்திற்கு பிறகு பெற்றோருடன் இணைந்த நிர்மலா
மணிகண்டனின் மறுவாழ்வு
ஆதரவற்றவர்களின் ஆதரவு
எங்க போனாங்களோ பழனியம்மாள்
இதை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டேன் . அதனை தொடர்ந்து மாணவர்களிடம் முகத்தில் மாற்றம் காணமுடிந்தது , தாங்களும் மனிதகுலத்தை காக்கும் இந்த சேவைக்கு வருகிறோம் என்ற மாற்றம் அதில் கண்டேன் ,
இறுதியில் மனித நேயம் தினம் ஒன்றை உருவாக்குவோம் உலகமெங்கிலும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் மாணவர்களிடம் இருந்து விடைபெற்றேன் .விடை பெரும் வேளையில் எனக்கு இராமாயணம் புத்தகம் ஒன்றும் மாணவர்கள் பரிசளித்தனர் ...
Tweet | ||||
No comments:
Post a Comment