Sunday, May 22, 2011

என்ன செய்தேன்

 என்ன செய்தேன்
21/05/11 இரவு 8pm - mahendiran.
இவர் பெயர் பாலசுப்ரமணி 80 வயது இருக்கும் .
இவர் இரவு 8pm இருக்கும் கோவை கவுண்டம் பாளையம் பகுதியில் ஒரு மது பானகடை முன் கீழே விழுந்து கிடந்தார்.
பார்பவர்கள் எதோ அவர் குடிபோதையில் விழுந்து கிடப்பது போல இருந்தார்.
அந்த வழியாக நான் ஒரு திருமண விழாவிற்க்கு செல்லும் பொது அவர் இருந்த பரிதாபமான நிலையை கண்டு  திருமண விழாவிற்கு செல்ல மனம் இல்லாமல் அவரிடம் நெருங்கி அவரை விசாரித்தேன், அப்போது தான் தெரிந்தது அவர் நடந்து வரும்போது ஒரு காலும் கையும் வாதம் வந்து கீழே விழுந்து விட்டார் என்று . பிறகு 108 ய் அழைத்து, 108 வருவதற்குள் அவரது முகவரியை அவரிடம் விசாரித்தேன் அவர் மகன் கோபால் , நம்பர் 61 கொண்டாய் சாமி நாயுடு வீதி  வேலண்டி பாளையம் என்று சொல்ல 108 வாகனம் வந்து விட்டது.
அதுவரை இல்லாத கூட்டம் 108 வாகனம் வந்ததும் வந்து விட்டது.
பிறகு 108 வாகனத்தில் கோவை அரசு மருதுவமனைக்கி அனுப்பி வைத்தேன். பிறகு அவர் கொடுத்த முகவரியை தேடும் பணியில் இறங்கினேன், ஒருவழியாக ஒருமணிநேரம் அலைந்து முகவரியை கண்டு பிடித்து அவரது மகன் கோபாலை சந்தித்து அவர் பதட்ட படாதவாறு. அவருடைய தந்தையின் நிலையை எடுத்து சொல்லி அரசு மருதுவமனைக்கி உடனே செல்லும்படி சொன்னேன் , அதற்கு கோபால்  என்னை பார்த்து கை எடுத்து கும்பிட்டு கண்ணிறொரு நான் செய்த உதவிக்கு நன்றி சொன்னார்.
அவரிடம் எனது போன் நம்பரை கொடுத்துவிட்டு திரும்பினேன்.
தற்சமயம்  பாலசுப்ரமணி கோவை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார்.
பிறகென்ன திருமண விழாவிற்க்கு செல்ல நேரம் இல்லாமல் வீடு திரும்பும் பொது மணி 10:30pm
அந்த பெரியவர் விரைவில் குணமடைய வேண்டிகோங்க.


 -மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

10 comments:

சத்யன் said...

நீங்கள் செய்த நல்விசயத்துக்கு நன்றி ! இருப்பினும் இது தற்பெருமை போல் அல்லவா தோன்றுகிறது ! வலது கை கொடுப்பது இடது கை அறியக் கூடாது என்னும் உண்மை மொழியைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன் !

Mahendran said...

இது போன்ற செயல்கள் வெளிவருவதால் தான், மக்களிடையே ஒரு விழிப்புணர்வு கொண்டு வரமுடியும். தற்பெருமை என்றல் கவிதைகளை எழுதி நம் கண்களுக்கு மட்டுமே காட்டிவிட்டு தனது பைக்குள் வேண்டி இருக்கும் பிரசூரம் செய்ய தேவை இல்லை.
என் பார்வைக்கு இதுவும் ஒரு கவிதை தான்.
என் பார்வைக்கு இது விழிப்புணர்வு.
இந்த விழிப்புணர்வுக்கு கூட ஊக்கு விப்பது என்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
உங்கள் கருத்துப்படி தற்பெருமை என்று சொன்னால்.
குயில்கள் கூவுவதை கூட யாரும் ரசிக்க கூடாது.

santhana kumar said...

last words "kuyilkal koovuvathai yarum rasika mudiyathu" .....superb....gendle man words....nasooka solliteenga mahi

NILA ( நிலா ) said...

என் பார்வைக்கு இதுவும் ஒரு கவிதை தான்.
என் பார்வைக்கு இது விழிப்புணர்வு.
இந்த விழிப்புணர்வுக்கு கூட ஊக்கு விப்பது என்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
உங்கள் கருத்துப்படி தற்பெருமை என்று சொன்னால்.
குயில்கள் கூவுவதை கூட யாரும் ரசிக்க கூடாது......What u said is rite Magi
வலது கை கொடுப்பது இடது கை அறியக் கூடாது அது மொழி...ஆனல் நீங்க இப்படி செய்தது ஒரு விழிப்புணர்வு...இதை பார்பவர்களுக்கு
எதோ ஒரு வழியில் நாமும் உதவலாம் என்று ஒரு உணர்வு அவர்களுக்குள் தோணலாம் அல்லவா...Magi, i appreciate your work....
Nila

everestdurai said...

சுந்தரம் தாத்தா காப்பாற்றப்பட்டார் நன்றி

balaravisankar said...

மகேந்திரன் உங்கள் கருத்து சரியே இது போன்ற இடுகைகள் ஏனையோருக்கு ஒரு விழிப்புணர்வே தவிர பிரசாரமோ, தற்பெருமைக்கோ இல்லை. இதை படித்த ஒருவரால் வேறு எங்கோ ஏதோ ஒரு உயிர் உதவி பெற்றால் இந்த இடுகையின் பலன் அன்றுதான்

கண்ணகி said...

ம்கேந்திரன் உங்கள் கருத்து சரி...பாலரவிசங்கரின் கருத்தே என் கருத்தும்...தொடர்ந்து செய்யுங்க்ள்...

Anonymous said...

nandre sey athuvum indre sey.

Ganezh said...

என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ...
காண்டீபம் நழுவ விட்டாய்,
காண்டீபம் நழுவ விட்டாய்!
மன்னரும் நானே, மக்களும் நானே,
மரஞ் செடி கொடியும் நானே...
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில், தர்மம் வாழ்க!

Anonymous said...

manitham tholaitha manithargal naduvil manathil punitham sumanthu paniyarrum magikku vazhthukkalum, vanakkamum. vazhha, vallarha. chithrakuppuraj

Post a Comment