Sunday, January 27, 2013

தினமலரில் என்னை பற்றி ~நன்றி தினமலர்

இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன் > முன்பெல்லாம் தெருவோரங்களில் குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர்.

கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்ததை, உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை , வீசியெறியப்பட்ட முதியவர்கள் ரத்தகாயமின்றி இருந்தால் ஒரு விநாடி நின்று பார்த்து, "ஐயோ பாவம் ' என சொல்லி செல்வார்கள், அதே வயதானவர்கள் அருவறுப்பான தோற்றத்துடனோ, ரத்த காயத்துடனோ, ஆடைகள் களைந்த நிலையிலோ, நோய் தாக்கிய நிலையிலோ இருந்தால், திரும்பி கூட பார்க்காமல் வேகவேகமாக நடப்பார்கள். அந்த முதியவர்கள் மனநோயாளியாக இருந்துவிட்டால் போதும், எதிர்திசையில் ஒட்டமெடுப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குறையில்லை அம்மா, மனைவி, குழந்தைகளிடம் கூட பேச நேரமில்லாத அவசர யுகத்தில் வசிக்கின்றனர்.

பொருள் தேடும் உலகில் உயிர்கள் மீதான பாசமும், நேசமும் அவ்வளவுதான்.

ஆனால் எல்லோரும் அப்படியில்லை, ஒரு சிலருக்குள் இன்னமும் மனிதத்தன்மை மரித்து போய்விடாமல்தான் இருக்கிறது,அவர்களில் ஒருவர்தான் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதாகும் மகி என்கின்ற மகேந்திரன்
கடந்த 2009ம்ஆண்டில் இவரது சகோதரி ஒருவர் திடீரென உடல்நலம் குன்றி ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஏன் என்று கேட்டு ஒருவரும் உதவி செய்யவரவில்லை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மகேந்திரன் அன்று முதல் ரோட்டில் யார் ஒதுங்கிக்கிடந்தாலும், உடனே என்ன ஏது என்று கேட்டு அவர்களை உரிய உறவினர்களிடமோ, காப்பகத்திலோ, ஆஸ்பத்திரியிலோ சேர்த்து வருகிறார்.
வீதியோரம் கிடப்பவரை பார்த்ததும் முதலில் அவருக்கு நல்ல உணவு கொடுத்து தெம்பு ஏற்படுத்துவார், பின் ஆணாக இருந்தால் முடிவெட்டி, முகச்சவரம் செய்வார், நன்றாக குளிக்க வைத்து, புது உடைவாங்கிக்கொடுத்து விடுவார், பார்ப்பவர்கள், "கொஞ்ச நேரத்திற்கு முன் ரோட்டில் கிடந்த ஆளா இது!' என்று ஆச்சசரியப்படும் அளவிற்கு ஆளை மாற்றிவிடுவார் .

அதன் பிறகு அவர்கள் அருகில் அமர்ந்து விசாரிப்பார், முடிந்தவரை அவர்களை, அவர்களது உறவினருடன் சேர்த்து விடுவார், முடியாத போது காப்பகங்களிலும், சிகிச்சை தேவை எனில் ஆஸ்பத்திரியிலும் சேர்த்துவிடுவார்.
காப்பகத்தில் சேர்த்தாலும் சரி, ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சரி , சேர்த்ததோடு தனது கடமை முடிந்ததாக கருதாமல், அவ்வப்போது போய் பார்த்து ஒரு உறவினராக, நண்பனாக நடந்து கொள்வார்.

பதினெட்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனை நினைத்து அழுதவர்கள் முன் இந்தாருங்கள் உங்கள் பிள்ளை என்று நிறுத்தி, அந்த குடும்பத்தின் நீண்ட கால வேதனை கண்ணீரை, ஆனந்த கண்ணீராக மாற்றியுள்ளார். மன நோயாளிகள் பலர் இவரது அன்பால் மன நோய் நீங்கிப்பெற்று தற்போது திருமணம் முடிந்து நல்லபடியாக இருக்கின்றனர், தெருவோரம் கேட்பாரற்று கிடந்த பாட்டிகளும், தாத்தாக்களும் இப்போது காப்பகத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோய் "அநாதை பிணங்கள்' என முத்திரை குத்தப்படுபவர்களின் உடல்களை, "நானே அவரது உறவினர் என்று தானே வலியப் பெற்று' அவர்களது உடலை மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் வருகிறார்.

தீபாவளி பொங்கல் என்றால் உறவினர்களை அழைப்பது போல அரவாணிகள், உடல் ஊனமுற்றவர்ககள், முதியவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் குடும்பத்துடன் தானும் மகிழ்ந்து வருகிறார்.
ஈர நெஞ்சம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய தொண்டாற்றிவரும் மகேந்திரனின் இந்த பணிக்கு பெரும் பலமாக இருந்து உதவுபவர்கள் பாலசந்திரன், பரிமளா வகீசன், தபசுராஜ், சுரேஷ் கணபதி, கணேஷ் குமார், மணிமேகலை, வசந்திரா, மோகனசுந்தரம், செண்பகம், பழநியப்பன் ஆகிய நண்பர்களும், இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி தோள்கொடுக்கும் அன்னை தெரசா காப்பகம், பிரபஞ்ச அமைதி சேவாலயம், சாய்பாபா முதியோர் இல்லம், அன்பாலயம், சாய் முதியோர் இல்லம், கருணாலயம் ஆகிய காப்பகங்களும்தான்.

இவரால் நலமடைந்து பலனடைந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது கோவை வீதியில் யாரேனும் விழுந்து கிடந்தால், "கூப்பிடு மகேந்திரனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமடைந்துவிட்டார்.
ஒரு வார்த்தை மகேந்திரனை வெறுமனே கூப்பிட்டு வாழ்த்தினால் கூட போதும், இன்னும் ஆயிரம் பேரை காப்பாற்றும் தெம்பும், திராணியும் அவருக்கு கிடைத்துவிடும், மகேந்திரனை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள; 9843344991, 9600400120

தினமலரில் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=634850

Friday, January 25, 2013

சலவை தொழிலாளர்கள்...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் சொல்வாங்க சலவை தொழிலாளர்கள் சமுதாயத்தில் உள்ள பலரது அகத்தின் அழுக்கை மறைக்கப்பட்டு முகம் அழகாக உறுதுணையாக இருக்கிறார்கள் .அது என்னமோ தெரியலை இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கம்யூட்டர் உலகத்திலும் ஆங்காங்கே இந்த சமூகமானது சலவை தொழிலாளர்களை கண்டால் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்படுகிறது. இவர்களை தனிமை படுத்துவது இவர்களுக்கு தண்ணீர் தருவதேன்றாலும் தனியொரு பாத்திரம் வைப்பது வீட்டினுள் அனுமதிக்காமல் வாசலோடு அனுப்பிவிடுவது ஆங்காங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு கிடைக்கும் மதிப்பு கூட மனிதர்களாகிய இவர்களுக்கு இந்த சலவை மனிதர்களுக்கு சமூதாயம் கொடுப்பது இல்லைங்க . இந்த சலவை தொழிலாளர்கள் என்னும் வண்ணான் இனத்தவர் இல்லாமல் எந்த ஒரு சாவு வீட்டிலும் பிணம் சுடுகாடு செல்வதில்லை. ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பின்னர் அவனது ஈமக்காரிய சடங்குகளை செய்ய இந்த சலவை தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் . சமுதாயம் இவர்களை தன்னுடைய பொலிவிற்கு பூச்சாக பயன்படுத்திக் கொள்கிறது ஆனால் இவர்களின் பொலிவற்று நொலிவுற்றிருப்பதை கண்டுகொள்வதில்லை.
 


 சலவை தொழிலாளர்களும் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்த சலவையாளர் காலனியில் சுமார் 75 வருடங்களுக்கு மேலாக மூன்று தலைமுறையினருக்கு மேல் 150 குடும்பங்களுக்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த சலவை தொழிலாளர்கள் தன்னுடைய மூதாதையர் காலத்தில் இருந்தே இச்சலவை தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள். இதன் மூலம் வரும் வருமானத்தையே நம்பி உள்ளனர். ஆகையில் இதில் பெரும்பாலானோர் படிப்பறிவின்றி காணப்படுகின்றனர். இவர்களின் ஒவ்வொரு நாள் வேலையும் அன்றைய வயிற்றுப் பசியை தீர்க்க மட்டுமே சரியாக இருக்கிறது. அதுவும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பாடுபட்டால் மட்டுமே. இந்த சலவை தொழிலாளர்களின் பிள்ளைகள் வறுமையின் காரணமாக இளம் வயதிலேயே தன்னுடைய குடும்ப தொழிலை செய்ய பழகிக்கொள்கிறார்கள். இதனால் சிறு வயதிலேயே பள்ளி படிப்பில் இருந்து இடையில் நின்றோரோ இவர்களில் அதிகம் காணப்படுகின்றனர். நாகரீகத்தின் வளர்ச்சியில் இந்த தலைமுறையில் தான் இவர்களில் சிலர் பட்டப்படிப்பை தொடுகின்றார்கள் .
 
தண்ணீரே இவர்களுக்கு முதலீடு அதுவே இவர்களுக்கு சாபக்கேடும் கூட , தண்ணீரில் இறங்கி இவர்கள் துணிகளை சலவை செய்வதால் இவர்களுக்கு உள்ளங்கால் வெடிப்பு , சேற்றுப் புண், சிரங்கு, புண், மூட்டுவலி போன்ற தண்ணீரால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உட்பட்டு தான் தங்களுடைய தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தாங்கும் விடுதி , மருத்துவமனை போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரும் துணிகளைசலவை எல்லாக்காலமும் சலவை செய்யவேண்டி இருக்கும் . வெயில் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்கி அல்லது ஊரெல்லாம் அலைந்து தண்ணீர் கொண்டுவந்து சலவை செய்கிறார்கள் . மேலும் இப்படி பாடுபடும் சலவை தொழிலாளர்களுக்கு என்று மத்திய அரசோ மாநில அரசோ எந்த ஒரு சலுகையோ நல திட்டங்களையோ இதுவரை வழங்க வில்லை என்பது கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது , இவர்களுடைய ஏக்கங்கள் எல்லாம் படிப்புக்கும் படித்தவர்களுக்கு என்ற வேலைவாய்ப்பு இட ஒதுக்கிடும் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதியும் எதிர் நோக்கி வாழ்கிறார்கள்.

~மகேந்திரன்

Tuesday, January 22, 2013

கலைந்துபோகுமோ கலைகள்... ~மகேந்திரன்
நாட்டின் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு கைத்தொழில் ஒரு இன்றியமைதாத ஒன்று. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை உனக்கு ஒப்புக்கொள் வரிகள் மறக்கமுடியுமா , மறுக்க முடியுமா ? கற்றதையும் மறக்க கூடாது , கற்றவரையும் ஒதுக்கப்பட கூடாதே.

கோவையில் காந்திபுரம் மையப்பகுதி ஒரு சாக்கடை ஓரமாக மூங்கிலை கட்டுக்கட்டாக பையில் வைத்து கொண்டுவந்து சிறியது சிறியதாக ஒடித்து கொண்டு இருந்தார். திரு. ஜயசீலன் என்பவர் . அவர் எதற்க்காக அப்படி செய்கிறார் அடுத்து என்ன செய்வார் என்பதை கவனிக்கையில் நீண்டநேரம் சுமார் நன்குமநிநேரம் முயற்சிக் முயற்சிக்கு பிறகு அவர் அழகான ஒரு சின்ன மூங்கில் கப்பலை கட்டி முடித்தார் என்ன ஒரு கைவினை அதை வேடிக்கை பார்த்த ஒருவர் “என்ன விலை என்றார் இவர் 300 ரூபாய் என்று சொல்ல வாங்க வந்தவர் அந்த அழகிய மூங்கில் கப்பலை 100 ருபாயுக்கும் குறைவாக கேட்டார் எவ்வளவோ போராடியும் கொஞ்சம் சேர்த்து கொடுங்கள் என்று கேட்டும் வேறு வலி இல்லாமல் இறுதியில் வாங்க வந்தவர் சொன்ன விலைக்கே கொடுத்து அனுப்பினர்.

இதை கவனித நான் அவரை அணுகி அவரை பற்றி விசாரித்தேன் “அவர் பெயர் ஜயசீலன் கோவை சூலூர் பகுதியில் பிறந்து நான்காம் வகுப்பு வரை படித்ததாகவும் அதன் பிறகு பொருளாதாரம் நிலை காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை. கூலிவேலை செய்து பிழைப்பை ஒட்டி வந்ததாகவும் பெலிக்ஸ் என்பவர் இவருக்கு இந்த கலையை கற்றுக்கொடுத்தது தனக்கு ஒரு வரமாக கருதுகிறார் , இந்த கலையை கொண்டு சாலைகளில் அமர்ந்து வீடு , கப்பல் என செய்து விற்று வருமானத்தை தேடிக்கொள்கிறேன் என்றார் , இவருக்கு மனைவி தங்கமணி, மற்றும் விஜயகுமார் , பிரேம் குமார் என்னும் இரண்டு மகன்கள் அவர்கள் ஒரு தனியார் கம்பெனியில் கூலிவேலைக்கு போகிறார்கள், ஆனாலும் எதுவும் நிரந்தரமில்லாத பணியாக உள்ளது தற்போது கோவையில் நிலவும் மின் வெட்டால் இவர்கல்லால் சரிவர வேலைக்கு போகமுடியாத சூழல் . என்னுடைய இந்த கலையை கொண்டே குடும்பம் உள்ளது,

என்றார் . ஒரு கடையை போல வைக்கலாமே என்றதற்கு அதற்க்கு முதலீடாக குறைந்தது 20000 ஆகுமே என்றார் .அப்படி யாரேனும் வட்டிக்கு கொடுத்தால் கூட கடையில் வரும் வருமானத்தை கொண்டு சிறிது சிறிதாக கடனை அடைத்து விடுவேன் என்றார் .

மேலும் அவரிடம் இந்த கைவினையை கற்றுகொடுக்க குன்களால் முடியுமா என்பதற்கு ஒருமாத காலம் பயிற்சி கொடுக்கலாம் அதற்குள்ளாக இந்த பயிற்சியை கற்றுக்கொள்ளலாம் என்றார் திரு ஜயசீலன் அவருடைய அழகான படைப்புகளை பார்த்து நானும் ஒரு பொருளை வாங்கிவந்தேன் (பேரம் பேசாமல்)

மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் சரி, மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றன. திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள்தான். ஆனால், அந்த திட்டங்கள் பல வெற்றி பெறுவதில்லை. இதற்கு காரணம், இந்த திட்டங்களால் பயனடையும் மக்களுக்கு அதுபற்றிய விவரங்கள் முழுமையாக போய் சென்றடைவதில்லை.

இது போன்று எத்தனையோ கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலையை கற்று வீதிக் உள்ளார்கள் , இவர்கல்ற்க்கேல்லாம் அரசாங்கம் என்ன திட்டங்கள் உள்ளது என்பது தெரிவது இல்லை . இப்படி பட்டவர்களை தேடிபிடித்து அவர்கள் மூலமாக கலைகளை கற்றுக்கொடுக்கலாமே ,

கலைவாணி வீதியில் விடாம காக்கலாமே

இவருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய விரும்புகிறீர்களா ஜயசீலன் 9698914658

கலைகளை போற்றுவோம் .


இந்த இணைப்பில் தினமலரில்  காணொளி  செய்தி காணலாம்.
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=17929&cat=32#.UPU-OPux94Y.facebook

~மகேந்திரன்

யோகா அசத்தும் பத்துவயது பிரதிப்பா பாப்பா...


அறிவுக்கும் திறமைக்கும் வயது ஒரு பொருட்டல்ல. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்று சொல்வார்கள். அதற்கு இணங்க கோவையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் P. பிரதிப்பா என்னும் 10 வயது குழந்தை சிறுமி அசாத்திய திறமை பெற்று திகழ்கிறார்கள்.

ஏழாம் வயதில் தனது பள்ளியான சந்திர மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆரம்பித்த யோகாசனம், அடுத்தடுத்து P. பிரதிப்பா எடுத்துக்கொண்ட முயற்சியிலும் பயிற்சியிலும் 2010, 2011 சென்னையில் தமிழ்நாடு யோகா அமைப்பு நடத்திய மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றாள். அதனை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் P. பிரதிப்பா பல பரிசுகளை வென்று இந்த ஆண்டு குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான யோகாசனம் போட்டியில் தமிழ்நாடு யோகா அமைப்பின் சார்பில் கலந்துக்கொண்டு மூன்றாம் இடம் பெற்றால் . இதனால் மே மாதம் மலேசியாவில் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு P. பிரதிப்பா பரிந்துரை செய்யப்பட்டு உள்ளால் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா மட்டும் இல்லைங்க இந்த பத்து வயது P. பிரதிப்பா பல கட்டுரை போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல் பரிசும் தட்டி சென்று இருக்கிறாள் . பாரத நாட்டியத்தில் சலங்கை பூஜை முடித்து அரங்கேற்றமும் நடந்தி இருக்கிறாள்.


இப்படிப்பட்ட ஒரு அசாத்திய திறமை கொண்ட சிறுமியை கோவை விலாங்குருச்சியில் உள்ள அவளது வீடிற்கு சென்று P. பிரதிப்பா வின் தந்தை பூவராகவன் அவர்களை சந்தித்தோம் அவர் சாதாரண ஒரு கம்பெனியில் கூலித்தொழில் செய்துவருவதாகவும் பிரதிபாவின் இளம் வயதில் இந்த திறமையை தன் வறுமையும் பொருளாதாரம் எந்த வகையிலும் இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டு இவளை ஊக்குவித்து வருகிறேன் என்று கூறினார்.

மேலும் பிரதிப்பாவை சந்தித்து அவளது லட்சியம் பற்றி கேட்க்கையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதே தன்னுடைய லட்சியம் என்றும் அதற்காக தான் கடும் பயிற்சி எடுத்துவருகிறேன் மருதுவராகவேண்டும் என்று கூறினால்.
திறமை எங்கிருந்தாலும் நாம் அதை ஊக்குவிக்க வேண்டும் அதுவும் இந்த இளம் வயதில் வறுமை கோட்டில் இருக்கும் இந்த சிறுமி பிரதிபாவின் திறமையை பாராட்டாமல் விடலாமா.
வாழ்த்துக்கள் பிரதிப்பா கண்டிப்பா உனது எண்ணம் போல இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் பெண்ணாக நீ விளங்க எங்களுடைய வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் பிரதிப்பாவை ஊக்குவிக்க வேண்டும் , வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கா கண்டிப்பா இந்த அலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு பேசுங்கள் பிரதிபாவின் தந்தை பூவராகவன் 9787835373
~மகேந்திரன்


இந்தியன்  எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் 16/01/13 அன்று வெளியான செய்தி .

 


திறமை உள்ளவர்களை பாராட்டாமல் விடலாமா
அதுவும் இந்த இளம் வயதில் பிரதிபா தன்னுடைய முயற்சியால் யோகா போட்டியில் சென்னை நடந்த மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடமும் , குஜராத்தில் நடந்த போட்டியில் மூன்றாம் இடமும் வெற்றி பெற்று மலேசியாவில் நடக்க இருக்கும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றமைக்கு பிரதிபா வசிக்கும் விளாங்குறிச்சி 32 வார்டு சார்பாக இன்று பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடந்தது அதில் கவின்சிலர் K.R. ஜெயராமன் கலந்து கொள்ள பிரதிபாவிர்க்கு பொன்னாடையும் பரிசுப்பொருளும் கொடுக்கப்பட்டது.

வாழ்த்துக்கள் பிரதிபா மே மாதம் மலேசியாவில் நடக்க இருக்கும் இறுதி சுற்றில் நீ வெற்றி பெற்று இந்தியாவிற்கு நீ பெருமை தேடி தருவதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள் பிரதிபா பாபா.

  ~மகேந்திரன்
 

Sunday, January 20, 2013

மகியின் கவிதைகள்...


 
நீ  
தோளில் சாய்த்து
பயணித்த கனவுகளில்...

நான்இன்னும்
பயணித்துக்கொண்டே
இருக்கிறேன்..!
'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

காதலும் அதற்க்கான ஆறுதலும் நீயே தர வாராய்...
 
பேய் வீடு கண்டு
அஞ்சுவது போல...

நீ
இல்லாத
பகலை கண்டும்
அஞ்சி நடுங்குகிறேன்..!
 
சிறு
புன்னகை துளியில் தள்ளிவிட்டு...

காதல் கடலில்
தத்தளிக்க விட்டு விட்டு
போகிறாய்..!
 
உன் பார்வை வேப்பதிர்க்காகவும்
உன் பார்வை வெப்பத்திலும்
தவம் இருக்க வேண்டும்

மார்களியல்லாது
சித்திரையிலும்..!
 
புன்னகையை புயலாக்குவது...

புயலை பூவாக்குவதும்...

காதலுக்கு
கைவந்த கலை..!
 
ஆயிரம் ஏவுகணைகள்
அவள் பார்வையில்...
எனக்கு
மட்டும் சொந்தமாகவேண்டும்
அதன் தாக்குதல்..!
 
நீ இரவில் சூரியாங்க வருகிறாய்
பகலில் நிலாவாக வருகிறாய்
வேற்கின்ற போது அனலை மூடிகிறாய்
குளிர்கின்ற போது விசிரிவிடுகிறாய்
உன்
வார்த்தைகள் , பார்வைகள் , ஸ்பரிசங்கள் எல்லாம்
விசேஷ காலங்களில்
நான் உடுத்தும் ஆடைகளாக இருக்கிறது..!
 
உன்
விழி ஈர்ப்பு விசையால்
கரைதட்டிய
கப்பல் நான்..!
 
உன்னை
பார்க்கவோ...
பேசவோ...
பழகவோ...
எனக்கு எந்த அச்சமும்
இல்லை..!

ஆனால்
ஒரே ஒரு பயம்தான்
அதன் பிறகு
என்னை மறந்துவிடுவேனோ
என்று..!
 
இசையை போல...

என்
மெய் மறக்க செய்யும்
உன்
நினைவுகளுக்கு தெரிவதில்லை
காரணம்
தான் தானென்று..!
 
நூறு சூரியன் வந்தாலும்
உன் கோவம்
சுட்டேரிப்பதுபோல
எந்த
சூரியனாலும் முடியாது...!
 
எரிக்கும்
உன் கோவம்...

விளக்குகள் இல்லா
இரவு போல
இருக்கிறேன்..!
 
நீ
அந்தி சூரியன்...

உன்னை
பிரிய மனம் இல்லாத
வானம் கருவழிந்து
நிற்கிறது...

என்னை போல..!
 
இன்னும் எந்த எந்த
பழங்கள் தடை
செய்யப்பட்டு
உள்ளதோ...

வா
நீயும் நானும்
தேடி தின்போம்..!
 
எனக்கு
பிடித்தமான கவிதை
உன்
விழிகளை தவிர
வேறு யாரும்
எழுத முடியாது...

உனக்கு
பிடித்தமான கவிதை
என்
குறும்புகளை தவிர
என்னால் கூட
எழுத முடியாது..!
 
  எனக்கு
முன்னதாகவே
உனக்கு
"காலை வணக்கம்"
சொல்ல எழுந்து வந்துவிடும்
இந்த விடியலை
என்ன செய்வது..?
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..! 
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..!
 

Friday, January 18, 2013

சிற்ப கலைஞர் சரவணன். திருவண்ணாமலை
தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் கல்லிலும் இருக்கிறார் கடவுள். இதனை நம் கண் முன்னே காட்டுகிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திரு.சரவணன் என்னும் 35 வயது சிற்பி.


திரு சரவணன் ஒரு BA (பொருளாதாரம்) படித்த பட்டதாரி படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால் இவரது தந்தை காசிலிங்கம் காலமான பிறகு அவரைப் போலவே சிற்பம் செதுக்கும் கலைஞனாக திருவண்ணாமலையில் இருபது வருடமாக இந்த கலைத்துறையில் உள்ளார். இவருக்கு தாயார் குணாம்பாள், மனைவி வசந்தி மற்றும் மீனாட்சி ,காயத்ரி என இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவரை திருவண்ணாமலையில் நேரில் சந்திக்கும்போது . ஒரு கல்லை உளியைகொண்டு சுத்தியலில் அடிக்க அடிக்க அந்த அடியை வாங்கிக்கொண்டிருந்த கல்லில் இருந்து கடவுள் சற்றுநேரத்தில் வெளிப்பட்டார். என்ன ஆச்சர்யம் அப்போதுதான் புரிந்தது பல அடிகள் வாங்கினால்தான் பக்குவம் அடையமுடியும் என்று .

அவரை அணுகி அவரிடம் இதை போல என்ன, என்ன சிற்பம் எல்லாம் செய்வீர்கள் செய்து உள்ளீர்கள் என்பதை கேட்க, அவர்  “பஞ்சமுக விநாயகர், அருணாச்சலேஸ்வரர் , விநாயகர் , லிங்கம், அம்மன் சிலை, மாரி  அம்மன்  என பலவகை கடவுள் சிற்பங்கள் இந்தபகுதியிலேயே செய்து விற்பனையும் செய்து வருகிறேன் நான் செதுக்கிய பச்சை அம்மன் நான்கு அடி கொண்டது. திருப்பத்தூரில் ஒரு இனத்தவரின் குலதெய்வமாக நிறுவப்பட்டு உள்ளது" என்றார்.  மேலும் இந்த கலைத்  தொழிலை பற்றி விவரிக்க , அவர் இந்த சிற்பம் செய்வதற்காக பயன்படுத்தும் மாவுகள் விழுப்புரம் அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருந்து கிடைக்கிறது ஒரு கிலோ கல் முப்பதிலிருந்து நாற்பது ருபாய் வரைக்கும் கிடைக்கிறது , அதை வாங்கிக்கொண்டு வந்து கடையிலேயே வைத்து சிற்பமாக்கி விற்கிறோம் என்றார்.  மேலும் "ஒருநாளைக்கு  300 ரூபாயில் ரூபாயில் இருந்து 350 வரை வருமானம் கிடைக்கும் அதுவும் நாங்கள் உற்பத்தி செய்வதை பொறுத்தே அது அமையும் , இந்த சிற்பங்களை வாங்க வருபவர்கள் எங்களது கலையை மதிக்காமல் அவர்கள் கேட்க்கும் விலைக்கே கொடுக்க வேண்டும் இல்லையேல் வாங்காமல் போய்விடுகிறார்கள் என்ன செய்யமுடியுமாக கேட்ட விலைக்கே கொடுத்துவிடுகிறோம். “ என்றார்


திருவண்ணாமலையை சுற்றி சுமார் 150 சிற்பி குடும்பங்கள் சிற்ப கலையை நம்பி உள்ளார்கள் இந்த சிலைகளுக்கான கற்கள் திருவண்ணாமலை கன்றான்பெட் பகுதியில் தாழநோடை கிராமத்தில் கிடைக்கும் ஆனால் இதனை எடுக்க கொஞ்சம் காலமாக வனத்துறையினர் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கிருந்து கிடைக்கும் மாவுகள் விலை குறைவாகவும் தரமானதாகவும் செதுக்குவதற்கு சுலபமாகவும் இருக்கும் , வனத்துறையினர் அனுமதிக்காததினால் விலை அதிகம் கொடுத்து விழுப்புரத்தில் கற்களை வாங்க வேண்டி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்பாக ஏகப்பட்ட சிற்பிகள் திருவண்ணாமலை பேய் கோபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர் அதற்கு காரணம் மத்திய அரசு ஒரு திட்டம் செயல் படுத்தி இருந்தது அதில் இந்த சிற்ப கலையை மேம்படுத்தும் வகையில் கலைத்துறையில் விருப்பம் கொண்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுத்து இந்த சிற்பக் கலையை கற்றுக்கொடுத்து வந்தது , ஆனால் காலப்போக்கில் அந்த திட்டம் என்னவானது என்று தெரியவில்லை , இதனால் இந்த சிற்ப கலை அழியும் அபாயம் உள்ளது , திரு சரவணனை போன்ற நல்ல கலைஞர்களை கொண்டு இந்த கலையை வளர்க்கும் பொருட்டு மத்திய அரசோ , அல்லது மாநில அரசோ இந்த கலையை இந்த கால இளைஞர்களுக்கு கல்வியாக கற்றுக்கொடுப்பதால் சிற்ப கலையில் நல்ல கலைஞர்களை உலகிற்கு பரிசாற்றலாமே.

~மகேந்திரன்Thiruvannamalai based Mr. Saravanan, BA (Economics) graduate who couldn’t find suitable decided to take over his father’s profession sculpture artist. He is living at Thiruvannamallai with his mother Mrs. Gunambal, wife Mrs Vasanthi and his two daughters Meenakshi & Gayathri. By Chiseling the stone with hammer he  creates God s statue. 
He is making “Panjamuga vinayagar, Arunachaleswara, Vinayagar, Siva lingam, Mariyamman statues and selling it at Thiruvannamalai.  One family of origin from Thiruppathur workship the four feet Pachaiyannan statue made by Mr. Saravanan.

He is getting raw materials from Nearby town Villupuram at the cost of rs 30-40 per kg of stone.  With that stone he make statues and selling it.  He is earning rs 300-350 per day and it depends his work.  Most of the buyers are not giving respect or importance to the workmanship but they bargain the price.  We have no option and we have to sell it for they buyers wish. 

In and around of Thiruvannamalai there will be 150 sculpture families living.  Earlier we used to get stones from near by village Thazhanoadai, but now a days forest department is not allowing us to take the stone, so we have to pay more amount for stones and buy from Villupuram. 

There was a scheme by Central govt for the welfare of sculptures, they gave training and encouragement. Now its not  continued, and the art of sculpture is in a danger of extinction. 
Either central or state Govt should encourage sculptures like Saravanan and teach this art to interested person to give life to this art.

Monday, January 14, 2013

கொண்டாடும் போது கொஞ்சம் கொடுத்தாடலாமே...

உலக தமிழர்கள் அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் . பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களும் குதூகலங்களும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் . அதுவும் தீபாவளி , பொங்கல் என்றாலே கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு களை கட்டும் இதில் ஒரு ஆனந்தம் நமக்குள் இருக்க இதுதான் பண்டிகை என்று இருந்தேன் அந்த சமயம் கடந்த தீபாவளி திருநாளில் பண்டிகை என்றால் கொண்டாடுவது இல்லை கொடுத்தாடுவது என்று சொன்ன Sita Lakshmi மற்றும் Ananthalakshmi Rajasekharan இவர்களுடைய வரி என்னை மிகவும் கவர்ந்தது, வழக்கமாக நான் என் நண்பர்கள் மட்டும் இப்படி பட்ட தினங்களில் காப்பகங்களுக்கு போய் அங்குள்ள குழந்தைகள் , மற்றும் முதியவர்களுடன் பொழுதை கழித்து வருவோம் , ஆனால் அவர்களுடைய இந்த வரிகள் நாம் ஏன் கடை பிடிக்க கூடாது என்று என் குடும்பத்துடன் எடுத்த முடிவில் இந்த பொங்கல் திருநாளில் திருநங்கை வைஷ்ணவி அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி , புது உடை எடுத்து கொடுத்து வைஷ்ணவி அவகளை உபசரித்து வழி அனுப்பி வைத்தோம் .
என்ன அழகான பண்பு கொண்டவர்கள் என்று அவங்களுடன் நல்லமுறையில் பழகும் போதுதான் தெரியவருகிறது அவர்களும் மனிதர்கள் தான்... யாரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லைங்க , இதுபோல உங்களது வாழ்விலும் வரும் சுபதினங்களை கொண்டாடும் போது கொஞ்சம் கொடுத்தாடலாமே...
~மகேந்திரன்

Friday, January 11, 2013

திருநங்கைகள் ஆனாலும் எங்களாலும் நல்லது செய்ய முடியும் ~ஈரநெஞ்சம்


கோவை காந்திமாநகர் பகுதியில் வயதான ஒரு பெரியவர் (கந்தசாமி) தெருவில் ஆதரவற்று இருந்ததைக் கண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி 09.01.2013 அன்ற...ு எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். எங்கள் அமைப்பு அவரை, கோவை B6 காவல் துறையின் அனுமதி பெற்று, கோவை சாய் ஆதரவற்றோர் காப்பகத்தில் அந்த திருநங்கைகள் மூலமாகவே சேர்த்துள்ளது.
மேலும் ஒதுக்கப்பட்ட இனம் என்று யாரும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் ஈரநெஞ்சம் செயல்பாடுகளைக் கண்டு தாங்களாலும் சமூக பணியில் ஈடுபட முடியும், என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்ட திருநங்கைகள் ப்ரியா மற்றும் வைஷ்ணவி இருவரையும் ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.
~ நன்றி 129/2013
(ஈர நெஞ்சம்)
https://www.facebook.com/eeranenjam


Both Priya and Vaishnavi, thirunangais, informed Eera Nenjam on 09.01.2013 about an old orphaned (Mr. Kanthasamy) man on the street of Gandhimanagar, Coimbatore. We, after getting the proper permission from B6 Police Station, helped him admitted in Sai Home, Coimbatore, through Priya and Vaishnavi. After seeing the secular activities of Eera Nenjam, both of them have involved in such public help and we appreciate their timely help.
Thanks 129/2013

Friday, January 04, 2013

அனுவாவி சுப்ரமணியர் கோவில் கோவை

"அனுவாவி சுப்ரமணியர் கோவில் கோவை."
கோவையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மலையில் அமைந்துள்ள இந்த கோவில் . அனுமான் சஞ்சீவி மலை சுமந்து செல்லும் போது தாகம் ஏற்ப்பட்டதால் குன்றிருக்கும் இடம் எல்லாம் முருகனின்   இடம் ஆகையால் முருகனை வழிபட முருகப்பெருமாள் நேரில் காட்சியளித்து அந்த மலையில் இறுதி தன வேலை கொண்டு ஊற்று வர வைத்து அனுமான் தாகத்தை தீர்த்தாராம் . என்று கூறிவருகின்றார்கள் . பசுமை நிறைந்த இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் முருகனை தரிசிக்க வரும் பக்தர்களை கவனமாக இருக்கும் படி அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றார்கள் .
~மகேந்திரன்


 இந்த  குட்டி  சாமியார் பெயர்  சர்வேஸ் படு சுட்டிங்க ...


 இந்த  போட்டோ  எல்லாம் நான் எடுத்தது  தாங்க நல்லா இருக்கா ?~மகேந்திரன்