கோவையில் ஒரு காப்பகத்தில் (அற்புதமணி இருக்கும் ) ஆறு மாதங்களுக்கு முன் பிரபாவதி வயது ஐம்பது இருக்கும் . என்னகாரனத்திநாளோ தெரியவில்லை காவல் துறையால் இந்த காப்பகத்தில் கொண்டுவந்து அடைக்கப்பட்டார் , நான் சேவைக்காக அந்த காப்பகம் செல்லும் போது கடந்த 20/10/2011 அன்று இந்த பிரபாவதி என்னிடம் " தான் ஆறுமாதத்திற்கு முன் சாலையில் மயங்கி இருந்தநிலையில் இருக்கும் போது யாரோ இங்கு வந்து என்னை விட்டுவிட்டு போய்விட்டார்கள் , அதற்குபிறகு இங்கு இருப்பவர்களிடம் என்னை பற்றி சொல்லும் போது என்னை ஏதோ பைத்தியக்காரி போல கருதி கவனிக்கவில்லை, தற்போது நீங்கள் எல்லோரிடமும் பழகுவதை பார்க்கும் பொழுது உங்களிடம் சொள்ளதொன்றுகிறது, எனது கணவர் பெயர் பாஸ்கர் தஞ்சை மாவட்டம், இது எனது கணவரின் அலைபேசி எண் என்றும் ஆனால் தற்பொழுது அது இயங்கவில்லை, எப்படியாவது என்னை கணவருடன் சேர்த்துவையுங்கள் என்றார் ,மேலும் அவர் கூறுப் பொழுது தன்னை இங்கு வேலை செய்வதற்கு ஏதுவாக பயன்படுத்தி கொள்கிறார்கள் அதனால் தான் நான் சொல்வதை கவனிப்பது இல்லை என்றும் "
அதனைதொடர்ந்து நான் எனது நண்பர் ரவிச்சந்திரன் விபரத்தை சொல்ல இது நம்மால் முடியும் எனில் முயச்சி எடுக்கலாம் ஆனால் காப்பக நிர்வாகிக்கு தெரிந்தால் ,நம்மால் மற்றவர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை வரலாம் அதனால் கவனம் என்றார் , (ஒன்று தெரியுமா அற்ப்புதமனியின் நிலையம் இதேதான்) ,
பிரபாவதி குடுத்த அலைபேசி என்னை வைத்து தேடினேன் 23/10/2010 அன்று பாஸ்கர் என்பவர் கிடைத்தார், அவரிடம் பிரபாவதி யார் என்று கேட்க " தனது மனைவி கடந்த ஆறு மாதமாக காணவில்லை தஞ்சையில் காவல்துறையிடம் தகவல் குடுத்து இருக்கிறோம் ,நாங்களும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோ , எண் மனைவியை பற்றி விபரம் உங்களுக்கு தெரியுமா என்றார், "
உடனே அவரை (பாஸ்கர் ) கோவைக்கு வரசொல்லி அவராக தன் மனைவி இங்கு இருப்பதை தானாக அறிந்து வந்ததை போல காட்டிக்கொண்டு உங்கள் மனைவியை அழைத்து போங்க , அதன் படி நேற்று 29/10/2011 காலை பாஸ்கரும் அவரது தம்பியும் நேரில் வந்து பிராபாவதி இருக்கும் காப்பகன் சென்று பிரபாவதியை என்னிடம் வந்தார்கள் , அவர்களோடு நானும் ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு மதியம் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு பிரபாவதி ,பாஸ்கர் அவரது தம்பியையும் தஞ்சைக்கு அனுப்பிவிட்டு சந்தோசமாக வீடுதிரும்பினேன்..!
பிரபாவதி பாஸ்கர் இனி எந்த சத்தியாலும் பிரிக்ககூடாதுங்க ! எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் ,
~மகேந்திரன்
Tweet | ||||
No comments:
Post a Comment