Wednesday, November 30, 2011

வருவாயா..♥

அளவுக்கு
அதிகமானால்
அமிர்தமும் நஞ்சாகும்..!
உன்
நினைவு என்னை
கொல்வதற்குள்
என்னை காப்பாற்ற
வருவாயா..♥

Tuesday, November 29, 2011

நீ வருவதாக சொல்லிப்பார்...

புத்தகம் இருந்தால்தான்
நூலகமா..?
நீ
நூலிடை கொண்ட
நூலகம்..♥

 
நீ
நிலாவிடம்
வருவதாக சொல்லிப்பார்...
உன்னை
சந்திக்கும் சந்தோசத்தில்
பூமியை போல
நிலாவும்
தனக்கு தானே
சுற்ற ஆரம்பித்துவிடும்..♥


 
நார்வே நாட்டில்
இரவு இல்லையாம்...
இதை
கேட்டதும்
சலிப்பே இல்லாத
உன்
அன்பு முகம் தான்
நியாபகத்திற்கு
வந்தது..♥


 
உனக்கு
இவ்வளவு தற்பெருமை
ஆகாது...
எல்லோரிடமும்
என் கவிதை அழகு என்கிறாய்
நீ
அழகி
என்று யாருக்கும்
தெரியாதா..?


 
இரவினிலும்
வானவில் தெரியுமா
என வியக்க வேண்டாம் ...
அவள்,
அவளுடைய
காய்ந்த துணிகளை
எடுக்க
மாடி உலா
வந்திருக்கிறாள்..♥


 
 
பசி
வந்தால்
பத்தும் மறந்து போகும்..!
காதல்
வந்தால்
அந்த
பசியும் மறந்து போகும்..♥


 
 
உன்
குடைக்குள்
புகமுடியாமல்
தவிக்கும் மழைத்துளி போல..!

உன்
இதயத்திற்குள்
புகமுடியாமல்
தவிக்கும் என்னை போல..!

உன்
நிழலுக்குள்
புகமுடியாமல்
என்
நிழலும் தவிக்கிறது..♥


 
கனகாம்பரம் பூவில்
வாசம்
இல்லை...
கனகாம்பரம்
பூ போட்ட
என்
சட்டையில்
உன் வாசம்..♥

 
அது
புள்ளியல்ல
என் கண்கள்..!
நீ
போடும் கோலத்தில்
என்
கண்கள் சிக்கி கொண்டது..♥


 
நீ வந்து போகும்
கனவில்
உன்னை படம் எடுத்து
உன்
அருகினில் வைத்து
நீ
அழகா இல்லை
கனவினில் வரும்
நீ
அழகா என்று பார்க்க வேண்டும்..♥

 

Monday, November 28, 2011

எல்லாமும் நீ ...

எந்த கவிஞனையும்
எழுத
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
எனக்கு
ஏனடி தடை செய்கிறாய் ..♥

 
நிலாவில்
நட்சத்திரம்
மின்னுவது தெரியுமா..?
உன் மூக்குத்தி
மின்னுகிறதே..♥

 
நீ
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
நான்
உனக்கு குடுக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
உனக்கு
குடுப்பதர்க்காகவே
வைத்திருந்தவன் என்று..♥


 
 
நீ
எழுத்துப்பிழையோடு
எழுதும் கவிதைக்கு
என்
திருத்தல்கள்
அவசியம்...
அதற்காகவாவது கொஞ்சம்
மக்காய் இரு..♥


 
புத்தகம் இருந்தால்தான்
நூலகமா..?
நீ
நூலிடை கொண்ட
நூலகம்..♥


 
 

Friday, November 25, 2011

அப்படியொரு அழகி...

எந்த
அழகு சாதனமும்
தேவையில்லை...
உன்
ஒரு ஓரப்பார்வை
போதும்
என்னை அழகு படுத்த..♥

 
வானவில் துண்டு
அவிழ்ந்து விழுந்துவிட்டதோ
என்று வியப்பதில்
உண்மை இருக்கிறது..!
அவள் விட்டு சென்றது
அவளுடைய
துப்பட்டாவாசே..♥

 

மறுவாழ்வு படமே கதை சொல்லும் ~மகேந்திரன்

Thursday, November 24, 2011

சாந்தாமணியின் நல்லகாலம் ~மகேந்திரன்


கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாந்தாமணி என்னும் பெண் வசித்து வந்துள்ளாள்,சாந்தாம...ணி இவளுக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை , கடந்த நான்கு வருடமாக சாந்தாமணி மனநிலை பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு விதியால் தள்ளப்பட்டால் , அந்த நஞ்சுண்டபுரம் பொது மக்கள் இவளுக்கு அவ்வப்போது உணவு வழங்கி வந்துள்ளனர் , ஆனால் கடந்த சிலநாட்களாக இவளுக்கு உணவு யாரும் குடுக்க படவில்லை என்று தெரிகிறது , நஞ்சுண்டாபுரம் பகுதியில் எனக்கு தெரிந்த தங்கை நந்தினி இவள் மூலமாக சாந்தாமணியை பற்றி இன்று 24/11/11 எனக்கு தகவல் வந்தது , உடனடியாக நான் அந்தபகுதிக்கு சென்று தங்கை நந்தினி அவளது தோழி சந்தியா அவர்களின் உதவியால் சாந்தாமனிக்கு முன் உதவி செய்து சாந்தாமணியை கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிட்டு வீடு திரும்பினோம்,
தங்கை நந்தினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை
நந்தினி மிகவும் ஏழ்மை நிலை உடையவள் அடுத்த வேலைக்கு உணவு என்பது அவளுக்கு கனவு , நான் சமூக சேவகனாக உருவாக அவளும் ஒரு காரணம் என்பதை சொல்ல நான் இங்கு கடமை பட்டுள்ளேன் .
Magi Mahendiran

Wednesday, November 23, 2011

அழகி..♥

ஒரு
பட்டி காட்டான்
மிட்டாய் கடை
கண்ட உணர்வே
எனக்கு...
ஒவ்வொரு முறை
உன்
குறுஞ்செய்தி
காணும் கணமும்..♥
 
 உன்னை
ஒவ்வொரு முறை
பார்க்கும் பொழுதும்
நீ
உன்னைவிட
அழகாகவே தெரிகிறாய்..♥

 
உன்
கிளையில்தான்
என் கூடு...
என்னை
பிடிக்க வலை
தேவை
இல்லை..♥


 
 
நிலா
உடைந்து உதிர்ந்து
இருக்கோ
என்று யாரும்
வியக்க வேண்டாம்..!
அது
அவள் கூந்தலில்
இறந்து
உதிர்ந்த மல்லிகை பூக்கள்..♥

 
தூங்குகின்றவனை
கண்ணடித்து எழுப்பும்
வித்தை கற்றவள்
நீ
இருக்க
 எனக்கு எப்படி
உறக்கம் வரும்..♥

 

Tuesday, November 22, 2011

காதல் வானிலே...♥

கொடுமையது
மறுக்கப்பட்டால் கூட
பொறுத்துக்கொள்ளலாம்..!
நீ
மறைக்க படும்
உன் அன்பு
மரணத்தை விட
கொடுமையானது..!

 
உன் கன்னம் கண்ட பொறாமையில் தான்
ஆப்பிள் அழுகி போகிறது
 
நான் உன் அழகை ரசிக்கவில்லை...
நான் உன் அகத்தை ரசிக்கிறேன்...
உன்னை
அழகென்று யார்
சொல்லும் போதிலும்
அது
புரிவது இல்லை..♥

 
ஏதேனும் ஒன்று
பழகிவிட்டால் நிறுத்தமுடியாது..!
உன்னோடு
இருக்கும்போதும்
உன்னை
எதிர் பார்த்து இருக்கிறேன்..!

 
 
இந்த
இரவு ஏன் தெரியுமா
அமைதியாக
இருக்கு..?
நீயும்
நானும் கனவில்
விளையாடுவது
சத்தமிட்டால் கேட்டுப்போகுமே..!


 
நிழலிலேயே
வாழ நினைக்காதே...
நிலா நிழலை
தேடினால் இரவுக்கு
ஒளி
கிடைக்காதே..!


 
நீயும்
நானும்
இல்லை...
இப்போதெல்லாம்
மழையும் இல்லை..!

 
பெண் பட்டாம் பூச்சி தனது துணையான ஆண் பட்டாம் பூச்சியை
எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டுகொள்ளும்..♥


 
கடும் கவலையோடு
இருக்கிறேன்...
காலையிலேயே
கார்மேகங்கள் எல்லாம்
மாநாடு கூட்டம் போல
கலை கட்ட
துவங்கி விட்டது...
விரல் நோக
நீ
போட்ட கோலம் என்னாகுமோ..♥

 
கடும் கவலையோடு
இருக்கிறேன்...
காலையிலேயே
கார்மேகங்கள் எல்லாம்
மாநாடு கூட்டம் போல
கலை கட்ட
துவங்கி விட்டது...
விரல் நோக
நீ
போட்ட கோலம் என்னாகுமோ..♥


 
 
அதே மேடை
அதே கதை
நடிகர்கள் மற்றும் மாற்றபடுகிறது..!
"காதல்"


 
எத்ததையோ
முறை
என் போர்வை
நீயாக இருந்தது..!
எப்போது
நீ என்
போர்வையாவாய்..?


 
உனக்கும்
எனக்கும் இருந்த
இடைவெளியை
காதல்
சிறை படுத்திவிட்டது..♥


 
எழுதினேன்...
எழுதிய கவிதையில்
எனக்கு தெரியாமலே
உன்னை
சந்திக்க முந்திக்கொண்டது
என்
எழுத்துப்பிழைகள்..♥


 
உன்
உணவில்
சர்க்கரையை குறைத்துக்கொள் ...
உன்
முத்தத்தால்
எனக்கு
சர்க்கரை வியாதி
வந்துவிடபோகிறது..♥


 
"உன்னை இழந்து விடுவேனோ"
என்ற அச்சம்
எல்லாவற்றையும்
இழந்து கொண்டு
இருக்கிறேன்...♥

 
உனக்கு தெரியாமல்
நீயும்
எனக்கு தெரியாமல்
நானும்
காதலில் சந்திக்கிறோம்..♥


 
நான்
உனக்காக
என் இதையத்தை
நேர்ந்து விட்டிருக்கிறேன்...
நீயோ
அதை
பலி எடுக்காமல்...
வலி கொடுக்கிறாய்..♥


 
என்
இரவுகளில்
உன்
நினைவுகள்
விளக்கேற்றுகின்றன..♥


 
ஒரு
பிரம்மாண்டமான
கடலுக்குள் மூழ்கி
தேடுவது
சிறு முத்தைத்தான்...
நான்
உன் அன்பை
சொன்னேன்..♥

 
உன்னை
கனவில் கண்டே
பழகி போய்விட்டது...
கனவு என்றே
நினைக்கிறேன்
நீ
எதிரில்
நின்ற போதும்..♥


 
வரம்
வேண்டி துறவறம்
போவதுபோல...
உன்னை
இன்னும் நினைக்க
வேண்டும் என்பதற்காகவே
வெறுக்கிறாய்..♥

 
என்
வேதனைகளை
மறக்க செய்ய
நீ
போதையாக வருகிறாய்..!