இந்த தாத்தா பெயர் சண்முகம், இவரை இந்த
நிலையில் தாங்க கோவை கணபதி வேலன் தியேட்டர் வளாகம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் அருகில் கண்டேன்...
மிக பரிதாபமான நிலை இவருக்கு வயசு 90 இருக்குமா ?
எத்தனை நாள் பட்டினியோ...
ஒரு சிலவேளைகளில் ஈரம் நிறைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு வழங்கி உள்ளனர்,
நான் அவரை கண்டதும் அவரால் பேசமுடியாத நிலையில் தண்ணீர் தண்ணீர் என்று பாவனை காண்பிக்க என்னிடம் இருந்த தண்ணீரை அவருக்கு குடுத்து ,
அருகில் இருந்தவர்களிடம் "யார் இவர்" என்று கேட்டேன்...
சண்முகம் தாத்தா இப்பகுதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வந்ததாக சொன்னார்கள் ,
அதும் அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்து தவழ்ந்து வந்ததாக சொன்னார்கள் , அவர் தவழ்ந்து வந்ததில் அவருடைய கை கால்களில் எல்லாம் காயத்துடன் இருந்தார்...
பிறகு அப்பகுதி மக்கள் என்னிடம் அவரை அழைத்து செல்கிரிர்களா , ஏதேனும் ஒரு ஆசரமத்தில் இவரை சேர்த்து விட்டு விடுங்கள் என்று கேட்க நான் சம்மதித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தேன்.
அங்கு அவரை நல்லபடியாக பராமரித்து வந்தார்கள்...
பிறகு அவர் அடிக்கடி கல்லறை வீதி என்று உளறிக்கொண்டு இறக்கிறார் என்று என்னிடம் அந்த இல்லத்தில் இருந்து தகவல் குடுத்தனர் . ஒரு வேலை சண்முகம் தாத்தா கல்லறை வீதியில் வசித்தவராக இருக்கலாம் என்டற எண்ணத்தில் கோவையில் அதன் சுற்றுப்புறத்தில் கல்லறை வீதி என்ற பகுதி எங்கு உள்ளது என்று இரண்டு , மூன்று நாட்களாக தேடி , கோவையில் சௌரிபாளையத்தில் உள்ளதை தெரிந்துக்கொண்டேன்.
கல்லறை வீதியில் அவருடைய புகை படத்தை வைத்துக்கொண்டு
ஒவ்வொரு வீடாக தேட ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் இவர் என் மாமனார் எங்கே இருக்கிறார் அவருக்கு மனநலம் சரியில்லாமல் இருந்தார் 60 நாட்களாக காணவில்லை என்று கண்ணீருடன் கதறியபடி கேட்டார்.
அதற்குள் அப்பகுதி மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர் ,
அவர்களிடம் நான் நடந்ததை சொல்லி ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் நல்லபடியாக இருக்கிறார் என்றேன்,
உடனே சண்முகம் தாத்தா வீட்டாரை அழைத்துக்கொண்டு ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள சண்முகம் தாத்தாவிடம் அழைத்துப்போனேன் ...
சண்முகம் தாத்தாவின் உறவினர்கள் சண்முகம் தாத்தாவை கண்டு பெரும் பூரிப்படைந்தனர் .
அதன் பிறகு ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தின் நிர்வாகி ஸ்ரீ கலா அவர்களின் அனுமதியோடு சண்மிகம் தாத்தாவின் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றனர் ,
சண்முகம் தாத்தாவை அவரது உறவினருடன் சேர்த்து வைத்த மனநிறைவில் வீடு திரும்பினேன் நான் மகேந்திரன் .

Tweet | ||||

2 comments:
//கல்லறை வீதியில் அவருடைய புகை படத்தை வைத்துக்கொண்டு
ஒவ்வொரு வீடாக தேட ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் இவர் என் மாமனார் எங்கே இருக்கிறார் அவருக்கு மனநலம் சரியில்லாமல் இருந்தார் 60 நாட்களாக காணவில்லை என்று கண்ணீருடன் கதறியபடி கேட்டார்// இத்தகைய ஒரு நிலையில் உங்கள் முயற்சி........உண்மையிலேயே பாராட்டத்தக்கது
தோழர் மகேந்திரனே,
தருமம் தலை காக்கும் நீங்கள் செய்த நல்ல காரியங்களுக்காக ஆண்டவன் தங்களை காத்தருளுவான்.
மும்பை ரமணன்
Post a Comment