Tuesday, August 27, 2013

"மனிதநேயம் கொண்ட காவல் அதிகாரி திரு. சபரிராஜ்"நேர்மையான காவல் அதிகாரியை பற்றி நிறைய படித்திருக்கிறோம் அறிந்திருக்கிறோம் , ஆனால் ஈரநெஞ்சம் கொண்ட காவல் அதிகாரியை பற்றி அறிந்திருப்போமா ? அப்படிப்பட்ட ஈரநெஞ்சம் கொண்ட காவல் அதிகாரிதான். திரு,சபரிராஜ், இவர் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர், SSI யாக பணியாற்றுகிறார். 48 வயதான இவர் தனது 28 வருட காவல் பணியில் நேர்மையான அதிகாரியாக மட்டும் இல்லாமல் மனிதநேயம் கொண்ட மனிதராகவும் பணியாற்றிவருகிறார். குற்றங்கள் தடுப்பதும் , குற்றம் புரிந்த குற்றவாளிகளை திறன் பட கண்டுபிடிப்பதும், நன்னடத்தைக்காக நன்னடத்தை விருதும் பல காவலர்களுக்கு மதிப்பை கூட்டும் . அப்படிப்பட்ட காவலர்களில் திரு. சபரிராஜ் அவரும் ஒருவர். இவருக்கு மனிதநேயம் கொண்ட மாமனிதர் என்ற இயற்கையால் அளிக்கபப்ட்ட நற்சான்றும் ஒன்று இருக்கிறது .
ஒரு சந்திப்பில் அவரை பற்றி அவர் கூறும்போது .
"ஆமாங்க.. ரயில்வே காவலராக இருப்பதனால் இரயில் விபத்து, மற்றும் தற்கொலை என பல அடையாளம் தெரியாத சடலங்கள் அடக்கம் பண்ணவேண்டி இருக்கும், அப்போது அந்த சடலங்களை அரசு மயானத்தில் புதைக்க வேண்டும், புதைத்த இடம் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக மட்டும் மயானத்திற்கு போனால் போதும். ஆனால் நான், இறந்தவர்கள் நல்ல நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் அனாதையாக போக கூடாது என்ற எண்ணத்தில் என்னுடைய சொந்த உறவினராக எண்ணி இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு என்னுடைய சொந்த செலவில் சடங்குகள் செய்து அடக்கம் செய்து வருகிறேன். இதுவரை சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட சடலங்களை என்னுடைய சொந்தங்களாக எண்ணி அடக்கம் செய்து இருக்கிறேன். மேலும் வயதானவர்கள் ஊர் செல்ல டிக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் அவர்களது அவசியம் அறிந்து டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பேன். வீட்டில் கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் வருபவர்களையும் , இரயிலில் தற்கொலை செய்துக்கொள்ள வந்த பத்திற்கும் மேற்ப்பட்டவர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு நல்ல புத்திமதிகளை சொல்லி பாதுகாப்புடன் விட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறேன்" என்றார்.
மேலும் இவர் சொல்லும் போது கடந்த சிலநாட்களுக்கு முன் 75 வயதான ஒரு மூதாட்டி இரவு 11 மணியளவில் தண்டவாளம் கடக்க முடியாமல் எதிர்புறம் இரயில் வருவதும் கூட தெரியாமல் தண்டவாளத்திலேயே நடந்து கொண்டிருப்பதை அறிந்து . சபரிராஜ் அவர்கள் விரைந்து காப்பாற்றி அவரை அவரது அறைக்கு அழைத்து சென்று விபரம் கேட்க அந்த மூதாட்டி தனது பெயர் அருக்காணி என்றும் தனது முகவரி நினைவு இல்லை என்றும் ஊர் திருப்பூரில் வஞ்சிப்பாளையம் , வளைய பாளையம், பாலையங்காடு எனவும் உளறிக்கொண்டு இருந்தாராம், இதை வைத்துக்கொண்டு பாட்டியின் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் பாட்டி சொன்ன ஊர்களில் எல்லாம் பாட்டியை பற்றி விசாரித்து இருக்கிறார். பலரிடம் புகைப்படத்தை காட்டி பாட்டியை தெரியுமா என்று கேட்க்க யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லவும் , விடாமுயற்சி கொண்டு அடுத்தநாள் பகலிலும் தேட ஆரம்பித்து இருக்கிறார். உணவு கூட உண்ணாமல் பாட்டியின் உறவினர்களை தொடர்ந்து தேடியிருக்கிறார். சுமார் 100 கிலோ மீட்டர் அலைந்தும் பயனளிக்கவில்லை, இறுதிக்கட்ட முடிவாக பாட்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பாட்டி சொன்ன ஊருக்கெல்லாம் மீண்டும் அழைத்து சென்று இருக்கிறார் இறுதியில் அன்று மாலை குருசாமி என்பவரை சந்தித்து ஆட்டோவில் இருக்கும் பாட்டியை காட்டி இவரை தெரியுமா என கேட்க அந்த முதியவர் உற்று கவனித்து கொஞ்சம் யோசித்துவிட்டு "அட இது நம்ம அருக்காணி போல இருக்கே" என்றாராம். சபரிராஜ் அவர்கள் இந்த வார்த்தையால் பெரும் இன்ப மகிழ்ச்சியடைந்து அந்த குருசாமி தாத்தாவை கட்டி பிடித்து ஐயா இந்த பாட்டியை உங்களுக்கு தெரியுமா இவர் யார் எங்கு இருக்கிறார் என கேட்டு நடந்த நிகழ்வையும் கூறி இருக்கிறார் . அந்த குருசாமி தாத்தா இந்த அருக்காணியை நான் பார்த்து 40 வருடங்கள் ஆகிறது , இவளுக்கு சரஸ்வதி என்னும் பெண் இருக்கிறாள். நீண்ட வருடமானதால் அடையாளம் நியாபகம் குறைந்துவிட்டது , அருக்காணி பாலயன்காட்டில் அவளது மகள் சரஸ்வதியுடன் இருந்தார் என்பது மட்டும் அறிந்திருக்கிறேன் என்று கூறி, இருங்கள் சரஸ்வதி அவளுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கலாம் என சொல்லி சரஸ்வதி அவர்களை வரவழைத்து அருக்காணி பாட்டியோடு அனுப்பிவைத்தாராம். இந்த நிகழ்வு குறித்து சபரிராஜ் அவர்கள் கூறும்போது"எத்தனையோ தவறுகளை செய்தவர்களை, திருடர்களை நாங்கள் தேடி தேடி பிடித்திருக்கிறோம். ஆனால் அதை எல்லாம் விட இப்போது இந்த பாட்டியின் உறவினர்களை தேடி அவர்களை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த போது கிடைத்த மன திருப்தி போல் வாழ்வில் வெற்றி தந்தது எதுவும் இல்லை" என்று மன நிறைவோடு கூறினார்.
கடமைக்கோ, கடனுக்கோ பல அதிகாரிகள் பணியாற்றிவருகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட அறிய மனிதர்கள் பணிக்கு அப்பார்ப்பட்டு சேவையாக எண்ணி தங்களை சமூகத்திற்காக அர்ப்பணித்து பணியாற்றுபவர்கள் மிக குறைவு. அப்படிப்பட்ட அறியவர்களில் ஒருவர் திரு,சபரிராஜ் என்பது இந்த சமுதாயம் பெருமைபட வைக்கிறது.
~மகேந்திரன்

Tuesday, August 13, 2013

நான் கண்ட தியாகி தங்கவேலு ஐயா...அனைவருக்கும்  சுதந்திர தின வாழ்த்துக்கள் . நமக்கு சுதந்திரம் கிடைத்து 66 ஆண்டுகள் நிறைவடைந்தது விட்டது. உதந்திர போராட்ட காலத்தில்  அப்போது இருந்த மக்கள் எப்படி இருந்தாங்க என்று நமக்கு தெரியாது. சுதந்திரத்துக்காக எல்லோரும் எப்படி போராடினாங்க என்று நாம் படிப்பில் தான் அறிந்திருக்கின்றோம் .   இப்போது மக்களுக்கு இன்றைய அரசியல்வாதிகளுடனும், சுதந்திரம் பெற்ற நமது நாட்டிலேயே  மக்கள் அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும்  பெரிய போராட்டம் நடத்திக்கொண்டு வாழும் இக்காலத்தில் . அன்று அந்நியனுடன் நாட்டையே மீட்க சுதந்திர போராட்ட தியாகிகள் எப்படி போராடி இருப்பார்கள் என்று நாம்  நினைத்து பார்க்க வேண்டும். இப்போது கஷ்டப்படுகிற யாருக்காவது உதவி செய்யும்போது உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, நீ ஏன் பிறருக்காக கஷ்டப் படுகிறாய் என்றெல்லாம் கேட்கிறார்கள். அன்று சுதந்திரத்துக்கு போராடிய தியாகிகள் நாட்டுக்காக போராடி தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கின்றனர். அவர்களை நாம் எவ்வளவு தூரம் நினைகிறோம்..?

இந்த கேள்விக்கு பதில் தரும் வகையில் ஒருவரை நான் சந்தித்தேன். சரவணம்பட்டியில் நான் வண்டியில் சென்று கொண்டு இருந்த போது பெரியவர் ஒருவர் வெள்ளை உடையணிந்து கொண்டு சாலையை  சுத்தம் செய்து கொண்டிருந்தார். சட்டையில் தேசியக்கொடியுடன். இன்றைக்கி  சுதந்திரதினம் கூட இல்லையே, மேலும்  அவருக்கு அருகில் பூ, சந்தனம், குங்குமம், தேங்காய், பழம், கற்பூரம் போன்ற பூஜைக்கு தேவையான அனைத்து சாமான்களும் இருந்தன. அது எல்லாம் தாண்டிய ஆச்சரியமான ஒரு விஷயத்தை நான் அங்கே கண்டேன். அங்கே ஒரு கோவில் அதில்  சாமி சிலைகளுக்கு பதிலாக மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் சிலை இருந்தது. ஆச்சரியத்துடன் அவரை அணுகி அவரிடம் விசாரித்த போது கொஞ்சம் பொறுங்கள் என்று பூஜை ஆரம்பித்தார் கோவிலில் மகாத்மா காந்திக்கு ஜே... மகாத்மா காந்திக்கி ஜே... வந்தே மாதரம்.. என்று  பூஜைநிமர்தங்கள் முடித்து எனக்கு பிரசாதத்தை கொடுத்துவிட்டு   அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைத்தது.

ஒன்று புரிந்ததுங்க சுதந்திரம் வாங்கிதந்தவங்களை நாம் மறந்து விட்டோம் , ஆனால் எக்காலம் கடந்தாலும் இவரை என்னால் மறக்க வாய்ப்பே இல்லை என்று.

இவர் பெயர் 
  திரு. தங்கவேல். இவர் 1947 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆம் சுதந்திரம் கிடைத்த வருடத்தில் தான் இவர் பிறந்துள்ளார். அதனால்தானோ என்னவோ தேசத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்துள்ளார். தேசத்தின் மீது மட்டுமல்ல... தேசத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் மீதும். அதனால் தான் இந்த தேசத் தலைவர்களுக்கு சிலை செய்து கோயில் கட்டி வழிபட்டு வருகிறார் போல.இவர் சிறுவனாக இருந்த போது கோவை கணபதியில் ஒரு  காந்தி மண்டபம் இருந்தது  அந்த இடத்தில் பல பெரியவர்கள் கூடி சுதந்திரம் கிடைத்ததை பற்றியும் அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் பேசுவார்களாம். அதை தொடர்ந்து கேட்டு வந்த அவருக்கு தான் அந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மீது அளவு கடந்த பற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தேசத்துக்காகவும், மக்களுக்காவும் தானும் தன்னால்  இயன்ற சேவையை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.மக்களுக்காக உழைக்க முன்வந்துள்ளார் சேவையில் இறங்கினார் மக்களுக்காக உழைக்க அதற்க்கு இடையூறாக இருந்த  தனது படிப்பை கூட 2ஆம் வகுப்புடன் நிறுத்தி விட்டார்.

யாருக்குங்க மனசு வரும் சொந்த சொத்தை அடமானம் வைத்தும் , விற்றுவிட்டும் 

ஒருமுறை பாருங்க இவர்
1970 ஆம் ஆண்டு , தற்போது இருந்தால் பல கோடி மதிப்பு பெறுமானமுள்ள தனது வீட்டை அன்று வெறும்  1500 ரூபாய்க்கு அடமானம் வைத்து மும்பை சென்றுள்ளார். அங்கே அவர் கைவண்டி இழுத்தும் சாலையில்   வீட்டு உபயோக பொருள் வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளார்.  அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்ய துவங்கினார் . அங்கும்  பெரும் தலைவர்களுக்கு கோவில் கட்டி இருக்கின்றார்.  சுதந்திர தின விழாக்களில் குழந்தைகளுக்கு கொடி, மிட்டாய்  போன்றவை  வழங்குதல். மேலும் பார்வை அற்றவர்கள் , உடல் ஊனமுற்றவர்களுக்காக நிறைய பாடுபட்டுள்ளார். அவர்களுக்கு பஸ் மற்றும் ரயில் பயன்கங்களில் செல்ல  இலவச அனுமதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி பணம் பெற்றுத்தருவதுமாய் பல சேவைகளை  பார்த்த   அன்றைய பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய் நேரில் சந்தித்து  பாராட்டி உள்ளார். அதன் மூலம் அவருடன்  நல்ல நெருங்கிய  நண்பராகவும் இருந்துள்ளார். 

காந்தியின் மீது பற்று கொண்ட இவரது ஆலோசனைப்படியே கரைக்கப்படாமல் இருந்த மகாத்மா காந்தியின் ஆஸ்தி 49 ஆண்டுகள் கழித்து திருவேணி சங்கமத்தில் அவரது பேரன் துஷார்அருண் காந்தி தலைமையில் கரைக்கப்பத்தது என்றார் . எவ்வளவு பெரிய பெருமை பெற்றவரா இருக்கின்றார் பாருங்கள் தங்கவேலு ஐயா அவர்கள். 
பின்னர் தனது சொந்த  ஊருக்காகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பி 16லட்ச  ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை விற்று மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோருக்கு கோயில் கட்டி பூஜைகள் செய்து மரியாதை செலுத்தி வருகிறார். மேலும்  தனது இரு சக்கர வாகனத்தையே தேர் போல செய்து அதில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளை வைத்து பள்ளிக்கூடங்களிலும், தெருவோரங்களிலும் சுதந்திரம் போராட்டங்கள் மற்றும் தியாகிகள், தலைவர்களை பற்றிய பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

இவர் கிட்ட ஒரு கேள்வி கேட்டேங்க
 காந்தி சிலைக்கும் தேசத் தலைவர்களுக்கும் பூஜை செய்து பிரசாதம் வழங்குகிறீர்களேஎன்ன காரணம் என்று  ?
சுயநலம் இல்லாமல்  பொதுநலம் கருதி வாழ்க்கையும் உயிரையும் தியாகம் செய்த பெரியவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அதனால் தான் பூஜை செய்து பிரசாதம் வழங்குகிறேன். என்று சொல்லிவிட்டு  கொஞ்சம் வெளியே போகணும் என்று  அவர் கிளம்பினார் பாருங்க அபோ இன்னும் சிலிர்த்து போனேன். 
தனது இரு சக்கர வாகனத்தையே ரதம் போல   செய்து அதில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளை வைத்து பள்ளிக்கூடங்களிலும், தெருவோரங்களிலும் சுதந்திரம் போராட்டங்கள் மற்றும் தியாகிகள், தலைவர்களை பற்றிய பிரச்சாரங்களை செய்ய கிளம்பறேன் சொல்லிட்டு  வந்தேமாதரம்  மகாத்மா காந்திக்கி ஜே...  என்றார் .


நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டும் இந்த உலகில், சினிமாவுக்காக தனது உயிரை மாய்த்து கொள்ளும் அறிவிலந்தோர்  இருக்கும் இந்த உலகில் தேசத்துக்காக பாடுபட்ட தலைவர்களை நினைத்து பார்த்து, அவர்களுக்கு கோயில் கட்டி இன்று பூஜிந்து வரும் தங்கவேலு ஐயாவிற்கு   தலைவணங்குவது மட்டும்  அது மிகையாகாது. இவர் சுதந்திரத்துக்காக போராடவில்லை என்ற போதும் இவரை பார்க்கும் போது ஒரு சுதந்திர போராட்ட தியாகியாகவே இவைரையும் உள்ளுணர்வு எண்ணுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவரை போல இல்லாவிட்டாலும் நமக்காக ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகளை நாமும் இனியாவது மனதார வணங்குவோம். 


இந்த சுதந்திர தினத்தில் சுதந்திர பக்திகொண்ட   தங்கவேலு ஐயாவை பற்றிய கட்டுரை எழுதியதில் உண்மையில் நானும்  இந்தியன் என்ற பெருமையடைகிறேங்க.

நன்றி
~மகேந்திரன்
 

Monday, August 12, 2013

உறவாக ஈரநேஞ்சமும் உண்டு , நல்லடக்கம்

"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(192/10.08.2013)
நேற்று 09-08-2013 இரவு கோவை, பூசாரி பாளையத்தில் லட்சுமி அம்மாள் மூதாட்டி ஒருவர் தெருவில் இறந்து கிடந்ததாக B10 காவல் நிலையத்தினரிடம் இருந்து நமது ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் வந்தது. ஈரநெஞ்சம் அமைப்பும் B10 காவல் துறையினரும் இணைந்து அவரை பற்றிய தகவல்களை விசாரித்த போது லட்சுமி அம்மாள் திருப்பூர், புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பிழைப்பு தேடி கோவை வந்தவர் என்றும் தெரிய வந்தது. கோவையில் அவர் தனியே வசித்து வந்தார். பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது பேத்தி திருமதி. மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் உடனே கோவை வந்தார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலையும் வறுமையின் காரணமாகவும் அவரது உடலை திரும்ப ஊருக்கு எடுத்து செல்ல இயலாததாலும் அவர் நமது ஈரநெஞ்சம் அமைப்பையே நல்லடக்கம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 10-08-2013 அன்று அவரது உடல் ஈரநெஞ்சம் அமைப்பால் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைய ஈரநெஞ்சம் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
On 09-08-2013 night, B10 Police Station called Eeranenjam and informed that a old lady, named Lakshmi ammal, was died on a Poosaaripalayam street. Then eeranenjam searched her relation along the police and found that she was from Tirupur, New bus stand area and she came coimbatore for a job. And then she fall in sick and died. Eeranenjam informed her family about her death. Her grand daughter Ms. Mariyammal came with her family. But as she is not wealth in economy and she unable to take her body for her final rituals. So as per the requisition of Ms. Mariammal, Eeranenjam taken care and done her final rituals on 10-08-2013. We pray god for her soul rest in peace.
Eera Nenjam
~ Thanks

Sunday, August 11, 2013

"பிறந்தாலும் மாடிவீட்டு நாயா பிறக்கணும்"

இப்போது எல்லாம் வளர்ப்பு நாய்களுக்கு அதிநவீன குடும்ப கட்டுப்பாடு மற்றும் பிரசவ காலம் தாமதனானால் நாய்களுக்கு சிசேரியன் பிரசவம் செய்யும் அளவிற்கு நம்ம நாடும் வளர்ந்து விட்டதுங்க .
இந்த நாய் பாருங்களேன் எதோ பக்கெட்டை அறுத்து கழுத்துல மாட்டி விட்டு பாக்க பரிதாபமாவும் இருக்கேன்னு அந்த நாய் வளர்ப்பவர் வீட்டுல போய் ஏனுங்க இப்படி மாடி இருகிங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க விளக்கம் கொடுத்தாங்க.

வளர்ப்பு நாய்களுக்கு மட்டும்தான் உண்ணி என்னும் ( பூச்சி) தோன்றுகிறதாம், தெருவில் இருக்கும் நாய்களிடம் உண்ணிகள் தோன்றுவது இல்லையாம் . அது ஏனுங்க என கேட்டால் ரொம்ப சுத்தமா வைத்து கொள்வதனால் உண்ணிகள் வருகின்றதாம் , உண்ணி உடலில் ஓட்டும் அப்போது அந்த பூசிகளை விரட்ட முற்படும் போது தனது உடலை கடித்துக் கொள்ளுமாம் .அதற்காகவும் நாய்களுக்கு பிரசவ காலங்க தள்ளி போனால் அல்லது நல்ல நேரங்களில் பிரசவிக்க வேண்டு என்று நேரம் காலம் பார்த்து மருத்துவ மனைகளுக்கு கொண்டு சென்று சிசேரியனும் செய்து குட்டி நாய்களை பெற்று எடுக்கின்றனர்கலாம்.

அதன் பிறகு உடலில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில தையல் போடுவார்கள் தையல் போட்ட இடம் புண் ஆறும் வரை அரிப்பு ஏற்ப்படும் அப்போது நாய்கள் தனது நாக்கிநாளோ அல்லது பல்லாலோ கடிக்கும் அதனால் காயம் இன்னும் அதிகமாகும் இதனை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுரைப்படி அந்த நாய்களுக்கு புண் ஆறும் வரை மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டும் இப்படி ஒரு பக்கிட்டை மாட்டி விடுவார்களாம் . ஹ ஹ ஹ அது பக்கிட் இல்லைங்க "நெக் காலர்" சொல்லறாங்க . மருத்துவரிடமும் , வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்குமாம். கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படியே இதனை பயன் படுத்தவேண்டும் என்றும் கூறினார்.

எப்படி இருக்கு பாருங்க நாய்களின் வாழ்வு .

~மகேந்திரன்.

Saturday, August 03, 2013

மாணவர்களுக்கு ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வு ~ ஈரநெஞ்சம்


"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(191/02.08.2013)
கோவையில், விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு, ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து இன்றைய வகுப்பில் பள்ளி மாணவர்களுக்கு பத்திரிகை துறையை சேர்ந்த deccan chronicle பத்திரிக்கையாளர் V.பழனியப்பன் மற்றும் ஊடகத்துறை ஆய்வாளருமான R.ஜயசீலன் இருவரும் ஈரநெஞ்சம் அமைப்பின் அழைப்பை ஏற்று இன்று 02/08/2013 விழிப்புணர்வு கல்வி வழங்கினார்கள் .
மாணவர்களுக்குபத்திரிக்கைத்துறை என்றால் என்ன, அதன் பணிகள் என்ன சமூகத்தில் பத்திரிக்கைத்துறை செயல்பாடுகள் , பத்திரிக்கையாளர் ஆவது எப்படி என்பதனை பற்றியும் பத்திரிக்கைக்கு செய்திகள் அனுப்புவது எப்படி என்பது பற்றியும் விளக்கி கூறினார்கள் . மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த இன்றைய விழிப்புணர்வு கல்விக்கு பத்திரிக்கையாளர் V.பழனியப்பன் மற்றும் ஊடகத்துறை ஆய்வாளருமான R.ஜயசீலன் இருவருக்கும் ஈரநெஞ்சம் மற்றும் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்


https://www.facebook.com/eeranenjam

Each Fridays, on behalf of Eera Nenjam there has been motivation sessions conducted for Coimbatore, Velangurichi area high school students. This project is to motivate to enhance their self confidence and self promotion.

In today's session (02.08.2013), Journalist of Deccan Chronicle Mr. V. Palaniyappan and media specialist Mr. R. Jayaseelan accepted the invitation of Eera Nenjam and came to provide the motivational education session to the students. They have lectured to the students about media, how it works, how to send a news message to the press, and how to become a journalist. Today's awareness education was very effective to the students.

On behalf of the students Eera Nenjam is thanking both Mr. V. Palaniyappan and Mr. R. Jayaseelan for giving an effective awareness education.

Thank you 
Eera Nenjam