Wednesday, August 31, 2011

ஏன் இந்த துன்பம்..!

ஒருமுறைக்கு
நூறுமுறை யோசித்துவிட்டேன்...
உன்னை
நினைத்துகொண்டு
இருந்தால் தான்
இன்பமாய் இருக்கிறது.!
ஆனாலும்
ஏன்
இந்த துன்பம்..!


அபாயம்...

இறைவன்
படைப்பில்
அழகான
அபாயம்...
உன்
விழிகள்...♥

Tuesday, August 30, 2011

சுவடுகள்...

ஐயோ...
நேற்று
பெய்த மழையில்
உன்
பாத சுவடுகள் கரைந்து போயிற்றே...
வெள்ள நிவாரணம்
கேட்டு
மனு எழுதி போடவேண்டும்...♥

ஒரு நாள் முடிவுக்கு வரும்...

எழுதி
எழுதி கவிதைகள்
எல்லாம்
ஒரு நாள் 
முடிவுக்கு வரும்...
முடியாமல்
இந்த
இரண்டு கவிதை மட்டும் 
தொடர்ந்து கொண்டே இருக்கும்...
ஒன்று
தாய்
இன்னொன்று
தாய்மை...


முற்றுப்புள்ளி இல்லை.

எல்லா கவிதை
புத்தகத்தின்
பினட்டையிலும்
சில வரிகள்
இருக்குமே...
உன்
முதுகில்
மட்டும்
ஏன்
ஒரு
முற்றுப்புள்ளி
கூட
இல்லை..?


தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தந்த மறுவாழ்வு

எத்தனையோ பத்திரிகை துறை இருக்கிறது , தினம் ஒரு பத்திரிக்கையும் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது...
சில பத்திரிக்கைகள் அரசியலை சார்தே இருக்கிறது...
இன்னும் சில பத்திரிக்கைகள் சினிமாவை மையப்படுத்தியே வளர்கிறது,
அத்தகைய பத்திரிகை சார்ந்த நிருபர்களும் நல்ல செயல்பாடுகளை வெளிபடுத்த  முன்வருவது இல்லை...
இதனால் பல சமுதாய வளர்ச்சிக்கு இடையூறாகவும் பல நல்ல மனிதர்களை மறைக்கவும் படுகிறார்கள்,
பத்திரிகை துறை என்பது மக்களை சார்ந்து இருக்க வேண்டும் மக்களின் குறைகளை எடுத்துரைக்கும் மக்களின் தோழனாக இருக்க வேண்டும்,
அதற்க்கு எடுத்துக்காட்டாக கோவை  இந்தியன்  எக்ஸ்பிரஸ் விளங்குகின்றது...
ஒரு சமயம் ரத்தினபுரியை சேர்ந்த மாலா என்னும் உடல் ஊன முற்ற பெண்ணை பற்றி அவளுடைய இயலாமையை பற்றி M.Rafi Ahmed அவர்களால் கட்டுரை எழுதியதில்
அந்த மாலா விற்கு அரசு சார்பாக மாதம் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்க வழிவகுத்தது, அதுமட்டும் அல்லாது மாலா அப்பளம் வியாபாரம் செய்து வருவதால் பக்கத்தில் இறக்கும் சில உணவு விடுதிகல்லில் இருந்து மாலாவிடம் அப்பளம் வாங்கிசெல்கிறனர், வறுமையில் வாடிய அந்த மாலாவின் குடும்பம் இப்போது புன்னகையில் வாழ்கிறது...

அதே போன்று சில வாரங்களுக்குமுன் போலீஸ் ஆவதே தன்னுடைய லச்சியமாக வாழ்த்த ஏழ்மை குடும்பத்தை சேர்த்த காளிசாமி அவருடைய போதாதநேரம் பேருந்து விபத்தில் உடல் உறுப்புக்கள் செயலிழந்து மருத்துவ செலவிர்க்காகவே தனது சொத்துக்களை இழந்து கடனுக்குமேல் கடன் வாங்கி , கடன்தொல்லையால் தனது சகோதரன், சகோதரிகள் படிப்பை இழந்து , காளிசாமியின் குடும்பமே தற்கொலைதான் தீர்வு என்னும் முடிவெடுத்த நிலையில் தினமணி மற்றும்
இந்தியன்  எக்ஸ்பிரஸ், V. பழனியப்பன் அவர்களால்  தக்கநேரத்தில் வெளிவந்த கட்டுரையால் காளியப்பன் குடும்பத்தை கடவுளைப்போல காப்பாற்றித்தன்தது,
சக்திநிறுவனம் காளிசாமியின் கட்டுரை படித்துவிட்டு காளிசாமியின் உடன் பிறந்தவர்களின் படிபிர்கான  தொகை சுமார் 4,00,000 (நான்கு லச்சம் ரூபாய்) தாங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது,
அதன்படி முதல்கட்டமாக கடந்தவாரம் 25/08/11 அன்று காளிச்சமியின் உடன் பிறந்தவர்கள் மீண்டும் படிப்பை தொடர படிப்பிற்காக  10000 பத்தாயிரம் ரூபாய் வழங்கியது,

அதுமட்டும் இல்லாது காளிசாமியின் கட்டுரையை படித்துவிட்டு கோவை மாநகர இளையதளபதி விஜய் தலைமை செயலகம் சார்பாக தலைவர் S. பாபு,
காளிச்சமியின் உடன் பிறந்தவர்களுக்காக பள்ளிசீருடையும் குடும்ப நிதி வளர்ச்சிக்காக தையல் எந்திரமும் இன்று 30/08/11 வழங்கியது,
மேலும் சமூக ஆர்வலர் மகேந்திரன் மற்றும் லக்கி நிறுவன நிர்வாகி அருள்ராஜ் 5000 ஐயாயிரம் ரூபாய் வழங்கி காளிசாமியின் வறுமையின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது,


இதுபோன்று
மக்கள் பணியில் தினமணி மற்றும் இந்தியன்  எக்ஸ்பிரஸ் செயலாற்றுவதால் உங்கள் பத்திரிகை மீது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது ,
மேலும் படித்த பத்திரிக்கைதுரையில் ஆர்வம் உள்ள  இளைஞர்கள்
இதுபோன்ற பத்திரிகையில் பணியாற்ற ஆர்வம்கொல்கிரார்கள்...
தினமணி மற்றும் இந்தியன்  எக்ஸ்பிரஸ் இன்னும் மேலும் மக்கள் பணியில் செயலாற்ற மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்...

Monday, August 29, 2011

மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா ஒரேநாளில் குணமடைந்த அதிசயம்

மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா ஒரேநாளில் குணமடைந்த அதிசயம்

இன்று 29/08/11 மாலை நிர்மலாவீட்டிர்க்கு சென்று இருந்தேன் அபோது நான் பார்த்த நிர்மலா "வாங்க அண்ணா சாப்பிடலாம் "
நல்லா இருக்கிங்களா, சாப்பிடுங்க " இன்னும்பல என்னோடு பரிமாரிக்கொண்டால்...
ஒன்றை ஆண்டுகாலம் மனநிலை பாதிக்கப்பட்டு அன்பாலயத்தில் இருக்கும்போது பேசாத நிர்மலா நேற்று வீடுதிரும்பியது சகஜமாக பேசுவதை கண்டு சிலிர்த்துபோனேன்...

நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா வயது 29 இருக்கும்  என்பவரை கோவிந்தராஜ் மனிதநேயமுடயவர் சாலையோரம்  பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி கோவை ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து உள்ளார்,இதனை தொடர்ந்து நிர்மலாவை ஸ்ரீ அன்பாலயம் நல்லபடி பராமரித்து வந்தது ,இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார், 



அசோகன், சண்முகம், பெத்தாத்தால், இது போன்ற ஆதரவை தொலைத்த  இன்னும் பலரை சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துவைத்தது குறிப்பிடத்தக்கது...
http://youtu.be/7wUdFFaZiCQ

ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் வீடு இருக்கும், சொந்தங்கள் இருக்கும் பெத்தவங்க தான் பிள்ளைகளை தொலைத்துவிட்டு  படும் அவஸ்த்தை மிக கொடியதுங்க, நிர்மலா, அசோகன், சண்முகம்  இதுபோன்றவர்கள் மனநிலை சரியில்லா காரணத்தால் தனது சொந்தங்களை  தொலைத்துவிட்டு சாலையிலும், ஆதரவற்ற இல்லங்களிலும் நிறையப்பேர் இருக்கின்றார்கள், அவர்களுடைய பெற்றவங்களும் இவர்களை காணமல் தேடிக்கொண்டுதான் இருக்காங்க கண்ணீருடன்,
அவங்களுக்கும் உண்மையான மறுவாழ்வு கிடைக்கவேண்டும்,

ரயிலுக்காக காத்திருப்பது போல

உனக்காக
காத்திருப்பது 
என்பது
பேருந்து நிலையத்தில்
ரயிலுக்காக 
காத்திருப்பது போல ♥

புயலுக்கு பெயர் ...

எனக்கு தெரிந்து
முதன் முதலில்
புயலுக்கு
பெயர் சூட்டப்பட்டது
எட்டய்யபுரத்தில் தான்...
மகாகவி சுப்ரமணிய பாரதி என்று !

உன் நினைவு...♥

இரவானாலும்
இந்த ஒளி
என்னை
விட்டு மறையாது...
என்னோடு
இருப்பது
உன் நினைவு...♥

Sunday, August 28, 2011

நான்கு வருடத்திற்கு பிறகு பெற்றோருடன் இணைந்த நிர்மலா












 (இதை கிளிக் செய்தால் அந்த உருக்கமான காட்ச்சியை காணலாம்.)
நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா வயது 29 இருக்கும் என்பவரை கோவிந்தராஜ் மனிதநேயமுடயவர் சாலையோரம் பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி கோவை ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து உள்ளார்,
இதனை தொடர்ந்து நிர்மலாவை ஸ்ரீ அன்பாலயம் நல்லபடி பராமரித்து வந்தது ,இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார்,
அசோகன், சண்முகம், பெத்தாத்தால், இது போன்ற ஆதரவை தொலைத்த இன்னும் பலரை
சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துவைத்தது குறிப்பிடத்தக்கது...

ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் வீடு இருக்கும், சொந்தங்கள் இருக்கும் பெத்தவங்க தான் பிள்ளைகளை தொலைத்துவிட்டு படும் அவஸ்த்தை மிக கொடியதுங்க, நிர்மலா, அசோகன் இதுபோன்றவர்கள் மனநிலை சரியில்லா காரணத்தால் தனது சொந்தங்களை தொலைத்துவிட்டு சாலையிலும், ஆதரவற்ற இல்லங்களிலும் நிறையப்பேர் இருக்கின்றார்கள், அவர்களுடைய பெற்றவங்களும் இவர்களை காணமல் தேடிக்கொண்டுதான் இருக்காங்க கண்ணீருடன்,
அவங்களுக்கும் உண்மையான மறுவாழ்வு கிடைக்கவேண்டும்,



--

P.Mahendiran
9843344991

வசந்தம்

வசந்தம்
பருவகாலங்களில்
அல்ல...
உன்
பார்வை களங்களில்...
 

போனஉயிர் திரும்பியது...

உனக்கு
பிடிச்சதை எல்லாம்
சொல் என்றேன்...
பெரும் வருத்தம்
நீ
சொன்ன பட்டியலில்
நான்
இல்லை...
பிடிக்காததை
சொல் என்றேன்...
போனஉயிர்
திரும்பியது...
உன்
பிடிக்காத பட்டியலில்
என்

பெயர் இல்லை...♥

உபசரணை...

தேசிய
விலங்குக்கு கூட
கிடைக்க வில்லை
உபசரணை...
தேசிய
குற்றவாளிக்கு

 ராஜ உபசரணை...

தேடுகிறது...♥

தன்னை
அலங்கரித்துக்கொள்ள 
உன்னை
தேடுகிறது
தங்கநகைகள்..♥

Saturday, August 27, 2011

நிர்மலா , பெற்றோர்களுடன் சேரவேண்டும்

இந்த பெண்ணுடைய பெயர் நிர்மலா...
சற்று மனநிலை பாதிக்கப்பட நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கோவை காருண்யா பகுதியில் இருந்து  ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் ஆனால்...
அங்கு நிர்மலாவை நல்லபடி கவனித்து வந்தனர் இவள் நிர்மலா என்பதைத்தவிர வேறு எதுவும் தெரியாது...
ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இவளாக இவள் முகவரியை எழுதினால் அதனைதொடர்ந்து நான் (மகேந்திரன்) நிர்மலா எழுதிய முகவரியை கொண்டு கோவை முழுவது தேடி அவளுடைய வீடு கிடைக்க வில்லை ... 
(கொஞ்சம் யோசித்து பாருங்க நிர்மலாவின் மனதில் அவளுடைய அம்மா அப்பாவை எப்படியாவது பார்க்க மாட்டோமா என்ற மன எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா பாவங்க நிர்மலா )
இன்று 27/08/11)  நான் கோவை பீளமேடு பகுதியில் ஒரு வேலையாக நான் வந்து கொண்டு இருக்கும் பொது அவள் எழுதி குடுத்த முகவரியில் இருந்த நேரு நகர் நினைவிற்கு வந்தது...
 நான் நின்று இருந்த பகுதியும் நேரு நகர் என்பதால் அந்த முகவரியை மீண்டும் தேட முடிவு செய்து அந்த முகவரியை ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன்...
  அந்த முகவரியில் உள்ள வீட்டின் கதவை தட்ட ஒரு பெண் வந்து கதவை திறந்தாள் அந்த பெண்ணிடம் நிர்மலாவை பற்றி விசாரிக்க அந்த பெண் என்னிடம் ஆமாங்க இந்தநிர்மலாவை காணாமல் அவர்களுடைய பெற்றோர்கள் தேடாத இடம் இல்லை இப்பது நிர்மலா எங்கு இருக்கிறாள் என்றால், அவள் என்னோடுதான் இருக்கிறாள் நிர்மலாவின் பெற்றோர்கள் எங்கு என்றதற்கு , அவர்கள் இப்போது இங்கு இல்லை வீட்டை காலிசெய்துவிட்டு வேறு பகுதிக்கு போய் இரண்டு வருடம் ஆகிறது என்றார்கள் , அந்த பெண்ணிற்கு நிர்மலாவின் பெற்றோர் தற்போது இருக்கும் முகவரி தெரியாதாம் , இன்று மாலை அந்த பெண்ணின் கணவர் ரங்கராஜ்  வருவார் அவரிடம் விசாரிக்கலாம் என்றார், தற்போது நான் (மகேந்திரன்) அந்த ரங்கராஜ் அவருக்காக காத்திருக்கிறேன்,
அந்த நிர்மலா , பெற்றோர்களுடன் சேரவேண்டும் கடவுளிடம் வேண்டிக்கோங்க...

 நான்கு வருடங்களுக்குமுன் நிர்மலா அவளது வீட்டில் இருந்துவாங்கியது 

இரவு 8:30pm  இருக்கும் ரங்கராஜ் வேலைக்கு போய்விட்டு  மிகவும் களைப்பாக வந்தார்,
அவர் நாளை பார்த்துக்கொல்வோமா என்றவரை நான் ஒருவருடமாக நிர்மலாவின் பெற்றோரை தேடிக்கொண்டு இருக்கிறேன் ஒரு வழியாக இப்போது தான் உங்களை சந்தித்தேன் நாளை வரும் வரை என் பொறுமை காக்காது இப்போதே வாங்க அவர்களின் முகவரிக்கு போவோம் என்று வல்கட்டாயமாக அழைத்து சென்றேன் ஒரு மூன்று மணிநேரம் தேடி ஒரு வழியாக நிர்மலாவின் அப்பாவான சுப்பையன் என்பவரை கண்டுபிடித்துவிட்டேன் , அவரிடம் நிர்மலாவை பற்றி சொன்னதும் என்னை கையெடுத்து

கும்பிட்டு ஐயா என் பெண்ணை தேடாத இடமில்லை காவல் துறையிடமும் புகார் அளித்துவிட்டேன் பத்திரிக்கையிலும் சொல்லி காணவில்லை என்ற செய்தி வந்தது அதன் பின் மூன்று வருடமாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை, இப்போது நீங்கள் (மகேந்திரன்) கடவுள் போல வந்து நிர்மலா இருக்கிறாள் என்று சொன்னதும் என்னால் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன், இதனை தொடர்ந்து  மணி இரவு  பத்தை தாண்டியதால்  நிமலாவின் அப்பாவான சுப்பையன் அவர்களிடம் நாளை 28/08/11 காலை 11 மணிக்கு காந்திபுரத்தில் உள்ள என் வீட்டிற்கு வாருங்கள் உங்களை  அன்பாலயம்  அழைத்துபோய் உங்கள் நிர்மலாவை உங்களுடன் சேர்த்துவைக்கிறேன் என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். 


~மகேந்திரன்

போடீ..♥

நான்:
உன்னை
நான்
"டி" போட்டு
கூப்பிட்டால்
எப்படி இருக்கும்?
நீ:
நான்
போடும்
"டீ" யை விட
நீ
அழைக்கும்
"டி"
சுவையாக இருக்கும்..!


நினைத்துகொண்டு இருந்தால்..♥

உன்னை
நினைக்காமல் இருந்தால்
என்
இதயம் இயங்காது...
உன்னை
நினைத்துகொண்டு
இருந்தால்
நான்
இயங்குவது இல்லை...♥
என்ன விளையாட்டு..?

காவியம்...♥

இலக்கியம் நீ...
இலக்கணம் நான்...
தலைப்பு எழுதலாம் காதல்...♥


Friday, August 26, 2011

அப்படி என்னடி எழுதி வைத்தாய்..!


எப்படி புரண்டு
படுத்தாலும்
இரவெல்லாம்
உறங்கவே
முடிய வில்லையடி..?
நேற்று
எனக்கு
அனுப்பிய
கவிதையில்
அப்படி என்னடி
எழுதி வைத்தாய்..!

15 வருடம் கழித்து வீடு சென்ற அசோகன் - மகேந்திரன்


மனநிலை பாதிப்பால் அசோகன் (வயது 40 இருக்கும்), நள்ளிரவு ஒரு மரத்தில் ஏறி கொண்டு காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறையாலும் காப்பாற்ற முடியாமல் மரத்தில் இருந்து கிலேவிளுந்து பலத்தகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் காவல்த்துரையால் சேர்க்கப்பட்டார்கள்...
அங்கு அசோகனுக்கு துணையாக யாரும் இல்லாத காரணத்தால்
காவல் துறையினர் மரத்துவமனையில் இருந்து கோவையில் நமது அன்பாலயம் மறுவாழ்வு மையத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர்...
வழக்கமாக நான் (மகேந்திரன்) அன்பாலயத்திர்க்கு அங்கு இருக்கு ஆடகவற்றவர்களை பார்பதற்கும் பராமரிப்பதற்கும் சென்றபோது
முகத்தில் வெட்டு கைகால்களில் சிராய்ப்பு காயங்கள் மயங்கியநிலை கொடூரமான தோற்றம் ...
இந்த நிலையில் தான் அசோகனை பார்த்தேன்...


அவர் யார் எந்த ஊர் எந்த விபரமும் தெரியாது 3 நாட்கள் கழித்துதான் அவர் சொன்னதை வைத்து தெரியும் அவருடயபெயர் அசோகன் என்று..
ஏதோ உளறுவார் ஏதேதோ செய்வார் அப்படி ஒருமுறை நான் அவனோடு பேசி கொண்டு இருக்கும் சமயம் அவன் பைங்கநாடு என்று கூற எனக்கு ஒரு சந்தேகம் ஒரு வேலை இவர்
பைங்கநாடு என்னும் ஊரை சேர்ந்தவராக இருக்கலாமோ என்று...

உடனே
பைங்கநாடு எங்கு உள்ளது என்று தேட ஆரம்பிக்கையில்  மன்னார்குடி தாலுக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது என்று தெரியவந்தது,
அதனைதொடர்ந்து எனது உறவினர் லோகநாதன் என்பவர் மன்னார்குடியை சேர்ந்ந்தவர் அவரிடம் மன்னார்குடியில் அவருக்கு தெரிந்து அசோகன் என்பவர் யாரேனும் காணமல் போயிருக்கங்களா? என்று கேட்க அவர் தெரியவில்லை இருந்தாலும் அந்த ஊரில் தனக்கு  தெரிந்தவர்கள் உள்ளனன் அவர்களுடைய அலைபேசி எண்னை குடுத்து விபரத்தை தெரித்துக சொன்னார்,
நூறு அழைப்புகளுக்கு மேல் அந்த
பைங்கநாடு ஊர் தலைவருடைய அலைபேசி எண் கிடைத்தது
அவருடைய பெயரும் அசோகன் தலைவரிடம் இப்படி ஒருவர் உங்கள் ஊர் பெயரை சொல்கிறார் அந்த அசோகனை பற்றி உங்களுக்கு தெரியுமா என்றேன் ,  அவர் ராமகிருஸ்ணன் , சரவணன்
என்பவர்களது சகோதரர் ஒருவர் காணவில்லை நீங்கள் சொல்லும் நபர் அவராக இருக்கலாம் உங்களுடைய அலைபேசி எண்னை 9843344991 குடுங்கள் ராமகிருஸ்ணன் , சரவணன்  அவர்களை உங்களிடம் தொடர்புகொள்ள சொல்கிறேன் என்றான், அதன் படி அன்று இரவே சரவணன் மற்றும் ராமகிருஸ்ணன் என்பவர்கள்  என்னை தொடர்பு கொண்டார் எதற்காக தலைவர் உங்களை தொடர்புகொள்ள சொன்னார் என்றார்,
உங்களுக்கு அசோகனை பற்றி தெரியுமா என்றேன் சரவணை, என்பவரும்  என்னுடைய தம்பி அவன் காணமல் போய்  15 வருடம் ஆகிறது என்றார், மேலும் அவர்கள் கூறுகையில் இந்த அசோகன் இவர்களுடைய தம்பிதான் என்பதை உறுதி படுத்திகொண்டு அவர்களை பைங்கநாட்டில் இருந்து முன்னூறு கிலோமீட்டர் இருக்கும் கோவைக்கு உடனே வரசொன்னேன் , ஆனாலும் அவர்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை,
ஒருமனதாக அடுத்தநாள் விடியற்காலையி கவிக்கு வந்தார்கள் , அவர்களை என்வீட்டில் தங்கவைத்து குளிக்க சொல்லி சாப்பிட்டபிறகு அன்பாலயத்திர்க்கு அழைத்து சென்றேன் உடன் எனது நண்பர் செந்திலும் வந்தார்,
இங்கு  இவர்கள்  15  வருடம் கழித்து தனது தம்பி அசோகனை கண்டதும்
அதிசயம் அசோகன் அவர்களை பார்த்து கட்டி தழுவி என்னால் எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை  அந்த காட்சி எல்லோர் கண்ணிலு கண்ணீர் ஆறாக வரத்துவங்கி விட்டது.

பிறகு அசோகனுக்கு புது உடைகளை எடுத்து குடுத்து அசோகன் மற்றும் அவருடைய சகோதரர்கள்
ராமகிருஸ்ணன் , சரவணன் மூவரையும் எண் வீட்டிற்கு அழைத்து சென்று என்னுடைய அம்மா காளியம்மாள் , அப்பா பழனிசாமி அவர்களுடைய ஆசிர்வாதத்துடன் அவர்களுடைய ஊருக்கு மன்னார்குடிக்கு அனுப்பி வைத்தேன்,
ஒரு சிலமாதங்கள் கழித்து ஒரு திருமனத்திர்க்காக  மன்னார்குடிக்கு சென்று இருந்தேன் அப்போது அசோகன் பார்த்தேன் எப்படி இருந்தவர் அடையாளமே தெரியவில்லை மாப்பிள்ளை மாதிரி இருந்தார்.  ஒரு விஷயம் அவருக்கு கல்யாண பேச்சு வார்த்தை நடக்கிறதாம் ...

உங்களுக்கும் சந்தோசமா இருக்கா ?

குயில்கள்...

மேடை ஏற 
அனுமதிப்பதில்லை...
கிளைகளையே
மேடையாக்கிக்கொல்கிறது...!


Thursday, August 25, 2011

மலர்கோலம்..!

நீ
போடும் கோலம்
பார்த்து
மரங்களும்
மலர்கோலம்
போடுகிறது...♥


ஏனடி..♥

வார்த்தையால்
என்னை 

பற்றவைகிறாய்...
பார்வையால்
பற்றும் 

வைக்கிறாய்..

Wednesday, August 24, 2011

பொய் புன்னகை...!

காகித 
பூ 
போல தான்...
பலருக்கு 
பொய் புன்னகை...!

நீ உலா வருகிறாய்...♥

என்
மனம் பராமரிப்பற்ற
பூங்கா....
அதில்
புத்தம் புது
வாசமாக
நீ
உலா வருகிறாய்...♥