Thursday, December 29, 2011

அன்னப்பறவை ஜாதி நீ..!

ஒரு
வேலை
நீ
எப்போதாவது
நான்
உன்னை
புறக்கணிக்கிறேன் என்று
நினைத்தால்
அதற்க்கு
இந்த முத்தம் பதில் சொல்லும்...



நீ
என்னையும்
நான்
உன்னையும்
நினைத்துக்கொண்டு
இருக்கும்
பொது...
நீயும் நானும்
ஒன்றாக இல்லை
என்ற கவலையே இல்லை..♥



நிஜத்தில்
நீ அறியாத சமயம்
நான் தந்து விடுகிறேன்...
கனவில்
என்னையே வேடிக்கை பார்க்க வைத்து விட்டு
என்னையே அள்ளிக்கொல்கிறாய்..♥


நீ
என்னை விட்டு
எவ்வளவு தூரத்தில்
இருக்கிறாயோ...
அந்த
இடைப்பட்ட
தூரத்தை எல்லாம்
உன்
நினைவுகளை
நிறைப்பி வைக்கிறது
காதல்..♥



எந்த
பூவிலும்
தென்படாத மேன்மை...
உன் பெண்மை..♥


என்னைத்தவிர
என்னிடம்
இருந்து
எல்லாவற்றையும்
எடுக்கும்
அன்னப்பறவை
ஜாதி நீ..!


மணி ஓசைக்கி
புறாக்கள்
பறந்து போகும்..!

கொலுசின் ஓசைக்கி
உன்
நினைவுகள்
பறந்து வரும்..!








Tuesday, December 27, 2011

ராஜேசை தவறவிட்டு விட்டோம் ...

இவருடைய பெயர் ராஜேஷ்


25 /12 /11 சென்னை நான் மற்றும் நண்பர் Sudarsan Rajendranஇவருடன் சென்று கொண்டு இருக்கும் பொது , இவரை கடற்க்கரை ரயில் நிலையத்தில் சந்தித்தோம் பரிதாபமான நிலையில் கிழிந்த அழுக்கு ஆடையுடனும் மன அழுத்தத்தால் இவர்  மன பாதிப்போடு இருப்பது தெரிந்தது , அவரிடம் தாங்கள் யார் ஏன் இப்படி இருக்கின்றிர்கள் என்றதற்கு, நீண்ட நேரம் கழித்து அவர் Dip.como tech படித்து இருப்பதாகவும் தனக்கு வேலை தேடி அலைந்து வேலை கிடைக்க வில்லை , உணவுக்கு வழி இல்லை , மேலும் அவர் மும்பை SH.Jomley Poltchnc ல் படித்துள்ளார் , இவர்ருடைய அண்ணன் பெயர் விஸ்வநாதன் ,தம்பி ராமச்சந்திரன் என்றம் கூறினார் , அவருக்கு 2, பெருங்குலத்தூர் , முல்லை தெரு , சென்னையில் , என்ற முகவரியில் இவருடைய நெருங்கிய உறவினர் திரு நடராஜன் குடும்பத்தார் வசிக்கின்றனர் என்றும் நான்கு மணிநேரமாக அவரோடு பேசியதில் இந்த தகவலை திரட்ட முடிந்தது , பிறகு அவரை ஒரு முடிதிருத்தம் செய்யக் கடைக்கு அழைத்து சென்று அவருக்கு முன் உதவி செய்யது வேறு ஒரு புது உடையை அணிவித்து , ஒரு பெரிய உணவு விடுதியில் அவருக்கு உணவு வாங்கி குடுத்து விட்டு,




சென்னை சென்றல் நிலையத்தில் ஒரு பகுதியில் தங்க வைத்து விட்டு அன்று மதியம் சந்தித்த ஒரு புதிய நண்பர்
syam selvam அவர்களை அழைத்து நமது ராஜேஷ் அவர்களை பற்றி விபரங்களை குடுத்து விட்டு நாங்கள் ஊருக்கு கிளம்பிவிட
Syam Selvam அவர் 26 /12 /11 அன்று காலை முதலே ராஜேஷ் அவர்கள் குடுத்த முகவரியை தேடி அளந்து அவர்களின் உறவினர்களை கண்டு பிடித்து, நாங்கள் ராஜேஷ் அவரை சென்றல் ரயில் நிலையத்தில் தங்க வைத்த இடத்திற்கு ராஜேஷ் உறவினரை அழைத்து வந்து பார்க்கையில் ராஜேஷ் அந்த பகுதியில் இல்லை , மதியம் வரை Syam Selvam அவரும் ராஜேஷ் உறவினருமான நடராஜ் தேடி ராஜேஷ் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை,


நண்பர்களே நீங்க இந்த ராஜேஷ் அவரை நேரில் சந்தித்தால் உடனே Mr. Natarajan 9840232353 சந்துரு 09823006323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ராஜேஷ் இருக்கும் இடத்தை தெரியப்படுத்தவும் ...
Magi Mahendiran


( இவரை ஹோட்டலுக்குள் அழைத்து சென்றதும் அங்கு பரி மாறுபவர் இவரிடம் வந்து மிக தாழ்மையுடன் சார் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது, எனகளது பணியை நினைத்து சந்தொசப்பட்டுக்கொண்டோம்)

Saturday, December 24, 2011

அடங்க வில்லை உன் ஆழகு..♥

கண்கள்
கல்லாக இருந்தால்
கண்ணீருக்கு
அவசியம்
இருக்காதே..!



ஒரு
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன்
நினைவுகளுக்கு
முன்
நான்..♥

இது
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள்
வந்து விடாதே..!
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥

முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!


அணைக்குள்
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை
உன்
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!


பார்வை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
பார்த்து என்னைபோல
அவதி
பட தேவை இல்லையே ..♥




Thursday, December 22, 2011

நினைவுகளுக்குள்ளேயே ஒளிவது தவிர...

பூட்டை போட்டு
பூட்டிவைத்தாலும்
புகை
நின்னாலும்
காதல்
நிற்காது..♥


உன்
கோபத்தை
கொஞ்சம் காட்டு
மார்கழி
சூடேரட்டும்..!



காதலில்
நீ
சத்யாக்கிரகம் செய்கிறாயா..?
சம்ஹாரம் செய்கிறாயா..?
புரியவில்லை..!

 
ஒரு
காகித தொழிற்சாலையை
இழுத்து மூடினாலும்..!
உனக்காக
நான் எழுதும்
கவிதை முடிவடையாது..♥

உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
அதுவும்
போதையை தான் தரும்..♥


உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
 அதுவும்
போதையை தான் தரும்..♥



கஷ்டங்கள் இல்லாமல்
கடவுளை
வழிபடுவது இல்லை..!
சண்டைகள் இல்லாமல்
காதலை
கொண்டாடுவதும் இல்லை..♥



பூக்களை
அலங்கரிக்க அதிகாலை ,
பனித்துளியை
அனுப்புகிறது..!
உன்னை
அலங்கரிக்க
நான்
கவிதைகளை அனுப்புகிறேன்..♥



உன்னை விட்டு பிரியும்
பாதைகள்
எல்லாம்
உன்னிடமே சேர்கிறது...
உன்னைவிட்டு
எப்படி
பிரியமுடியும்..♥



நீ
கைகுட்டையில்
முகம் துடைக்கும் போதெல்லாம்
கைக்குட்டையின்
மீது
 பொறாமை..!
உன்
வியர்வை
அதில் பதிகிறதே..♥



நிலாவிற்கு
துணையாக
நட்சத்திடங்கள் வருவதுபோல...
உன்
நியாபகத்திற்கு
துணையாக கவிதைகள் வாடுகின்றன..♥


உன்
சுவாசத்தில்
வாழும் உயிர் என்னிடம்..!
அதை பொறுக்காமல்
என்னை
நிராகரிக்கும் இதயம் உன்னிடம்..!





போன ஜென்மத்தில்
உன்
கூந்தல் அரியணை
ஏறி
இருக்கும் போல
இந்த பூக்கள்...
உன்
வாசத்தையும்
உன்
வண்ணத்தையும் கொண்டுள்ளது..♥



என்
தெருவில்
எரியாத விளக்குகள்
என்
காதலுக்கு
முகவரி சொல்கிறது..!


உன்
நினைவுகளில் இருந்து
என்னால்
தப்பிக்க முடியாது..!
உன்
நினைவுகளுக்குள்ளேயே
ஒளிவது தவிர
வேறு வழியும்
இல்லை..♥



Wednesday, December 21, 2011

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!
மரங்கள் நமக்கு  தராதது என்று என்ன இருக்கிறது..?
மரங்களுக்காக நாம் என்ன குடுத்து இருக்கிறோம்..?
கருவறை முதல் கல்லறை வரை மரங்கள் தான் சுனக்கிறது..?
ஆணி அடித்தாலும் சரி 
தொட்டில் கட்டினாலும் சரி
மரங்கள் தொகையை தான் விரிக்கிறது..!
இடியானாலும், மின்னலானாலும், மழையானாலும், வெய்யில்லானாலும், மனிதனுக்கு  பொறுமையை கற்றுத்தருகிறது..!
மனிதன் கல்லை எறிந்தாலும்
மரங்கள் மனிதனுக்கு  மலர்களையே  உதிர்க்கிறது..!
மாநாட்டுக்குள் எந்த மரங்களும்  மார்தட்டிக்கொள்வது இல்லை தான்தான் உயர்ந்த ஜாதி என்று..!
எந்த மரமும் அடுத்த மரத்துக்கு  எதிரியாய்  இருந்தது இல்லை..!
மனிதனிடம்  எத்தனை  மிருகங்கள்..!
மரங்களிடம்  மரங்கள் மட்டுமே இருக்கின்றது..!
மனிதா... 

கொஞ்சம் கவனித்தாயா  
நீ 
மரங்களை 
வெட்டும் போதுகூட  
கிளைகள் 
உனக்கு சாமரம் வீசுவதை..!

கனவு கூட காண்பது இல்லை ..!

கழிவு நீர் ஓரமாக ஒரு ராஜாங்கம்..!
இரவு விளக்கு நிலா தரும்..!
கொசுக்களின் தாலாட்டு தரும்..!
கல்லும் கிழிந்த துணியுமே தலையணை..!
போர்வைக்கி ஆயிரம் ஜன்னல் கொண்ட சேலையும் வெட்டியும்..!

இதிலும்
இவர்களுக்கு
தேச வளர்ச்சிக்கான
கனவு வரும்...
தேசத்துக்குதான்
இவர்களின் வளச்சிக்காக
கனவு கூட
காண்பது இல்லை ..!


Tuesday, December 20, 2011

அவினாசி அலமேலு அம்மாவின் விடிவுகாலம் ~மகேந்திரன்


 அவினாசியில் 15/12/2011 அலமேலு அம்மாள் இருந்த நிலை ...
அவினாசியில் அலமேலு என்பவர்  ஆதரவு இல்லாமல் சாலையோரமாக இருக்கின்றார்   தகவல் வந்தது உடனடியாக நான்  Magi Mahendiran,   Mohan Sundaram,  Senbagam Subramaniyam, மூவரு அவினாசிக்கு நேரில் சென்று அந்த அம்மாவை சந்தித்தோம் , அந்த அம்மாவிற்கு உறவினர்கள் இருப்பது தெரிய வந்தது, அனால் அவர்கள் அவினாசியில் இல்லை திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் வசிப்பது தெரியவந்தது , மேலும் இந்த அம்மாவின் பெயர் அலமேலு என்றும் அவருக்கு வயது எம்பது  என்றும் இந்த அம்மா ஒரு சாலையோரமாக  வாழ்க்கையை களிதுவருவதும் தெரிந்தது , அதனைதொடர்ந்து நாங்கள் அந்த அலமேலு அம்மாவின் உறவினரை தேடி செல்லும் பொது ,அலமேலு அம்மாவின் அண்ணன் மகன் வெங்கடேசை அலைபேசியில் தொடர்பு கொள்ள நேர்ந்தது அவரிடம் நம்மைப்பற்றிய விபரத்தை சொல்லி , அந்த அம்மாவை காப்பகத்திற்கு சேர்க்கும்படி அறிவுரிதியதும் வெங்கடேஷ் அவர்கள் உறவினர்களிடம் கலந்து பேசி காப்பகத்தில் சேர்க்க சம்மதிக்கிறோம் என்று கூறி உள்ளார், அப்படி அவர்கள் முயற்சி இடிக்க வில்லை என்றால் காவல்துறை உதவியுடன் நங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவந்துள்ளோம் .






இதனை தொடர்ந்து  இன்று 19/12/11 அலமேலு அம்மாவின் சகோதரிக்கு ஈரோட்டில் வசிக்கிறார்கள் அவர்களிடம் கடந்த இரண்டுநாட்களாக பேசிவந்தோம்,  அவர்கள் மனம் மாறி  இன்று ஈரோட்டில் இருந்து  அவினாசிக்கு வந்து  தனது சகோதரியை  பலநாட்களுக்கு பிறகு  குளிப்பாட்டி முடி வெட்டிவிட்டு  புது ஆடை அணிவித்து  தனது  ஈரோட்டில் உள்ள வீட்டில்  பாதுகாப்புடன் வைத்துக்கொள்கிறேன்  ,


இனி இப்படி வெளி விடமாட்டேன்  என்றும் சொல்லி  , இன்று மாலை  அழைத்து போக உள்ளார்  , இப்படி ஒவ்வொருவரும் மனம் மாறினால்  ஆதரவு     இல்லை என்பது  இல்லாமல் போகுமே  ....


 இன்று 21/12/2011  ஈரோட்டில்  உள்ள  தனது சகோதரி  தேவியுடன்  அலமேலு அம்மா 

~மகேந்திரன் ,

Monday, December 19, 2011

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: விருது

அதீதமான கல்வியறிவு, பெரும் தொழில் என்றில்லாமல், மிகச்சாமனியனாக இருந்து கொண்டு இந்த இளைஞர் செய்து வரும் அரிய பணிகள் போற்றுதலுக்குரியது. புத்தருக்குப் போதி மரம் போல், ஓவ்வொருவரின் முக்கிய முடிவுக்கும், திருப்புமுனைக்கும் போதி மரத்துக்கு நிகரானதொரு நிகழ்வு நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்வு இவருடைய வாழ்விலும் ஒருமுறை நடந்தேறியிருக்கின்றது. ஒரு முறை அவரது சகோதரிக்கு பொது இடத்தில் ஏற்பட்ட உடல் நல குறைவின்போது ஓரிருவரே மட்டுமே உதவ முன்வந்து, பலரும் வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்த இக்கட்டான சூழலே இவரை சமுதாயத்தின் மேல் அதீத அன்புகொண்டவராக மாற்றியிருக்கின்றது. தெருவில் ஆதரவில்லாமல் இருப்பவர்களின் நிலைமை உண்மையில் பரிதாபமானது என்பதை உணர்ந்து, ஆதரவில்லாதவர்கள், மனநலம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நம்மை போன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர்.

அப்படி இருப்பவர்களுக்கு இனி என்னால் முடிந்த   உதவி செய்ய வேண்டும் என அவர் எடுத்த முடிவு பலநூறு பேரை மீட்டு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்திருக்கிறது. யாரும் செய்யத் தயங்கும் துணிந்திடாத காரியமாக, சாலை ஓரம் கிடக்கும் வயதானவர்களையும், மனநிலை பிறழ்தவர்களையும் நல்ல உள்ளம் படைத்த நண்பர்களோடு மீட்டு அதற்கான இடங்களில் சேர்க்கவும், மருத்துவ உதவிகள் அளிக்கவும் உழைத்து வருகிறார். மனநிலை பாதிப்பால் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்கள் கூட இவரின் உதவியால் தங்கள் சொந்த பந்தங்களோடு இணைந்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியானதோரு விசயம்.

இதுவரை கிட்டத்தட்ட அறுபதிற்கும் மேற்பட்டவர்களை  பாதுகாப்பாக காப்பகங்களில் சேர்த்து நல்வாழ்வு அமைத்துக்கொடுத்துள்ளார்.  அதோடு காப்பகத்தில் இருந்தும் சாலையோரமாக இருந்தும் ஆதரவற்று இருந்த பத்து பேரை அவர்களது வீடு தேடி அவர்களின் உறவினரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார்.

சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரன் அவர்கள்.



••••

Friday, December 16, 2011

வேணு தாத்தா அரசு மருத்துவமனையில் இருந்து காப்பகத்தில்~மகேந்திரன்





 
இந்த பெரியவர் பெயர் வேணு, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்  அடையாளம் தெரியாத ஒருவரால் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இதுவரை வந்து பார்க்க வில்லை, தற்போது இவருக்கு சிகிச்சை முடிவடைந்து அழைத்து செல்ல யாரும் இல்லாதநிலை, மேலும் இவரால் முதுகு தண்டு அடிபட்ட காரணத்தால் நடக்க முடியவில்லை, சிகிச்சை முடிவடைந்ததால் இவருக்கு கவனிப்பு குறைந்து விட்டது , இவருக்கு யாரும் துணையில்லை , இவரிடம் இவரை பற்றி கேட்க்கும்போது தனது பெயர் வேணு என்றும் ,திருவண்ணாமலை சேர்ந்தவர் ,தனக்கு யாரும் துணை  இல்லை வீடு , உறவினர் ஏதும் இல்லை  என்றும் கூறியுள்ளார் ,
 இன்று காலை ஒருவர் எனக்கு இந்த விபரத்தை சொல்லி இவருக்கு ஆதரவு கேட்க , நான்  மகேந்திரன்  எனது நண்பர் தபசுராஜ் உடனடியாக  அவரை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து RMO அனுமதியோடு டிஸ்சார்ஜ் செய்து , கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்து அவருக்கு மீண்டும்  அங்கு முதலுதவி செய்யப்பட்டது அதனைதொடர்ந்து ,நானும் எனது நண்பர் தபசுராஜும் அங்கிருந்து விடை பெற்றோம் .
மருத்துவமனையே ஆனாலும்  அங்கு மருத்துவரே  இருந்தாலும்

உறவினர் என்று ஒருத்தர் வேண்டுமே ,
எதோ மருத்துவமனை வரை இந்த பெரியவரை வந்து சிகிச்சைக்காக  செர்த்தவரை  வாழ்த்தவேண்டும் .
~மகேந்திரன்

மெரினாவில் நான் ~மகேந்திரன்

அழகானகடர்கரையில் ஒன்றான மெரினாவில் ( Dec 11 ) மாலை  சென்று இருந்தேன், தமிழகத்தில் பாதி மக்கள்தொகையை அங்கு காணநேர்ந்தது, அந்த  கூட்டத்து கிடையில் ஆங்காங்கே சில  பெண்மணிகள் உட்கார்ந்துக்கொண்டு அவர்கள் பக்கத்தில் ஒரு சாமி போட்டோவையும் சில சிலைகளையும் , சோழிகளையும் வைத்துக்கொண்டு ஜோசியம் பார்த்துக்கொண்டு இருக்க  , அவர்களில் ஒருவரை சந்தித்தேன் அவரிடம்  எல்லோரும் கை நீட்டுவதை போலவே நானும் கை நீட்ட முப்பத்தைந்து  ரூபாய் வைத்தாகவேண்டும் ஜக்கம்மாக்கு  அப்போது தான்  நீ கடந்து வந்த பாதை கடக்கபோகும் பாதை ஜக்கம்மாள் என் வாக்கில் சொல்லுவாள் என்றார்  இந்த அறுவது வயது அம்மா, சரி என்று என்னிடம் இருந்த ஒரே  ஒரு நூறுருபாயை பயத்துடன் நீட்ட அதை வாங்கி கொண்டு மீதம் அறுபத்தி ஐந்து ரூபாயை குடுத்ததும் மகிழ்ச்சி வந்தது,
ஜோசியம் பார்க்க கைநீட்ட அவர்
நீ யாருக்கும் பாரமா இருக்க மாட்ட,
உங்க அம்மா அப்பாக்கு நீ செல்ல பிள்ளையா இருக்க
இப்போ கொஞ்சம் குழப்பம் இருந்தாலும்
உனக்கு இருக்கும் கஷ்டம் எல்லாம் வர தை மாசத்தோட திறந்து   போயிடும் ,
மேலும் இது போன்ற நல்ல நல்ல  பலனாக  சொல்ல எனக்குள் சந்தோசம் நிறைந்தது ,
திருப்தியோட திரும்பும்போது கவலையே உருவான ஒரு தம்பதிகள் கண் கலங்கிய வண்ணம் இந்த அம்மாவிடம் வந்து நிற்க  கையையும், முப்பத்தி ஐந்து   ரூபாயையும்  நீட்ட  அதே என்னிடம் சொன்ன கதை அவர்களிடமும் , அப்போது  அவர்களின் முகத்தில் கவலை சற்று மறைந்து அவர்களிடம் ஆறுதல் தெரிந்தது இந்த அம்மாவின் வாக்கு ,
அந்த தம்பதிகள் மகிழ்ச்சியுடன் கடற்கரையில் விளையாட சென்று விட ,அந்த அம்மாவிடம் நான் உங்களை பற்றி சொல்லுங்கள்  "இந்த தொழிலில் எத்தனை வருடம் அனுபவம் இதில் ஒருநாளைக்கி எவ்வளவு வருமானம்" என்று கேட்க அவர் சற்று  கோவத்துடன் "இது தொழில் அல்ல  இது ஒரு மனத்திருப்த்தி எனக்கு அல்ல ,என்னிடம் வருபவர்களுக்கு , என் வயிற்ரை நிறைக்கவேண்டாமா அதற்குதான் இந்த தர்ச்சனை  என் பெயர் மீனாச்சி , சென்னை  KK நகரில் இருந்து வருகிறேன்  சொந்த வீடும் உள்ளது மூன்று மகள் உள்ளனர் அவர்களுக்கெல்லாம் திருமணதிற்கு   இந்த ஜோசியம் தான் கைகுடுத்தது , மெரினாவில் நாற்பது வருடமாக ஜோசியம் பார்த்துவருகிறேன்" என்று தன்னை என்னிடம் முடிவில் அறிமுகமானார் அந்த ஜோசியம் பார்க்கும் மீனாச்சி அம்மா,  மெரினாவில் இருக்கும் அனைத்து ஜோசியம் சொல்பவர்கள்  அனைவரிடமும் அவர்களிடம் கையும் முப்பத்தையும் குடுத்தால் இதே கதை கேட்கலாம் , எது எப்படியோங்க இவர்களின் வாக்கால் மனபாரத்தோடு வருபவர்களின் முகத்தில் ஆறுதல் காணமுடிகிறதுங்க...
அடுத்து கடற்கரை சென்று காலை நனைக்க போனேன் அப்போது ஒருவர்  ஐம்பது வயது இருக்கும் அரைகுறை உடையுடன் பார்பதற்கு ஒரு முநியவரை போல இருந்தார்  , அத்தனை கூட்டம்  அத்தனை நெரிசல் குழந்தைகள் சத்தம் இதற்க்கு இடையில் அவர் மௌனமாக கண்களை மூடிக்கொண்டு கடலை நோக்கி தவம் செய்வது போல இருந்தது,
அருகில் சென்றேன்  அவர் ஏதோ முனுமுனுதுக்கொண்டு இருந்தார் , இன்னும் அருகில் சென்று கவனித்தேன் அவர் "சாந்தம் சாந்தம்" என்றபடியே சுமார் மூன்று மணிநேரம் சொல்லி கொண்டே இருந்தார் ,
எனக்கு உடனே கடந்த சிலவருடதிர்க்கு முன் வந்த சுனாமி மீண்டும் வரக்கூடாது அதனால் தான்  "சாந்தம் சாந்தம்" என்று சொல்லி கொண்டு இருக்கிறாரோ என தோன்றியது அவரையும் நாம் எனது கேமராவில் பதிவு செய்துகொண்டு கோவைக்கு பேருந்து செல்ல நேரமானதால் மெரினாவில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன் ...
~மகி