Thursday, February 27, 2014

ஆதி லட்சுமி பாட்டியின் உறவினர் கண்டுபிடிப்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(273/26-02-2014)

ஆதரவற்றவர்கள் என்று யாருமே இருக்க கூடாது என்ற நிலையை உருவாக்க ஈரநெஞ்சம் அமைப்பு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஆதிலட்சுமி, வயது 80, இவர் நேற்று காலை கோவைக்கு தனது மகளை பார்க்க வந்துள்ளார். உளுந்தூர்பேட்டை, கொட்டையூர், சீமங்கலம் பகுதியில் தனியே வசித்து வருகிறார்.இவர் 4 வருடங்களுக்கு பிறகு தன் மகளை பார்க்க வருகிறார். இங்கு வந்த பிறகுதான் தன தனது மகளின் தொலைபேசி எண்ணை தொலைத்து விட்டதை அறிந்தார். மிகவும் பயமாகவும் பதட்டத்துடனும் தவித்து கொண்டிருந்த அவரை கோவை B8 காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கோவை மாகராட்சி காப்பகத்தில் சேர்த்து விட்டனர். நேற்று முழுவதும் தன் நிலையை நினைத்து அழுது கொண்டிருந்த அவரை பற்றி மாநகராட்சி காப்பகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் கொடுத்து அவரது மகளை கண்டுபிடித்து தருமாறு வேண்டினர். ஈரநெஞ்சம் அமைப்பினர் அவருடன் பேசி கவுன்சலிங் செய்த போது அவரது மகள் பெயர் வெள்ளையம்மாள் என்றும், ரெயின்போ தியேட்டர், குளம் பக்கத்தில் இருக்கும் மேலும் தனது மருமகன் செல்வராஜ், ஆட்டோ டிரைவராக இருக்கிறார் போன்ற தகவல்களை தெரிவித்தார். அவர் கூறிய தகவல்களை வைத்து இன்று முழுவதும் தேடி அவரது மகளை ஈரநெஞ்சம் அமைப்பினர் கண்டுபிடித்தனர். அவரது மகள் கூறும்போது தனது தாய் நேற்று காலையே ஊரிலிருந்து வருவதாக கூறியதாகவும் ஆனால் அவர் வந்தது தெரியாததால் அவரை காணாமல் மிகவும் தவித்து போய் நேற்று முழுவதும் தேடியதாகவும் கூறினார். தற்போது ஈரநெஞ்சம் அமைப்பினர் தன் தாயை தேடி கண்டுபிடித்து தந்துவிட்டது மனது நிம்மதியும் மகிழ்ச்சியும் தருவதாக கூறி, ஈரநெஞ்சம் அமைப்பிற்கும், காவல்துறையினருக்கும் கோவை மாநகராட்சி காப்பகத்தினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டு தனது தாயை தன்னுடன் அழைத்து சென்றார்.

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

The Eera Nenjam Trust has been striving to create a situation where there should be no helpless person on the streets.

Yesterday morning Aathiluxmy age 80 from Ulunthurpettai, Kottaiur, Seemangalam came to Coimbatore to see her daughter. She came to see her daughter after 4years. She only realized that she lost her daughter's phone number after reaching Coimbatore. Police from Coimbatore B8 Police station noticed the tensed and anxious Aathiluxmy amma and admitted her at Coimbatore City Corporation Charity Home. Workers from the Charity home contacted the Eera Nenjam Trust and informed about the elderly mother who was crying the whole day yesterday thinking about her situation. They also requested the members of the Eera Nenjam Trust to search for the elderly mother's daughter. When the members of the Eera Nenjam Trust spoke and counseled to the elderly mother, She told them that her daughter's name is Vellaiammal who lives at Rainbow Theater, Kullam side and her son in law Selvaraj is an auto driver. With all the information gathered from the elderly mother, the members of the Eera Nenjam Trust searched the whole day today and found her daughter. When the daughter spoke, she mentioned that her mother said she was going to come to visit her yesterday, but without knowing that she arrived the daughter was searching for her all day yesterday with upset. She also mentioned that she has peace of mind and very happy that the members of the Eera Nenjam Trust found her mother. She thanked the members of the Eera Nenjam Trust, The police service, and the Coimbatore City Corporation Charity Home with tears and took her mother home.

The Eera Nenjam Trust is pleased about the fact that they made a difference by reuniting a helpless lost person back with their family.

~thank you
Eera Nenjam

Sunday, February 23, 2014

சாலையில் காயத்துடன் ஆதரவற்று இருந்தவருக்கு முதலுதவி ~ மகேந்திரன்

சில நாட்களுக்கு முன்பாக உக்கடம் பகுதியில் சாலையில் ஆதரவற்று ஒரு மூதாட்டி வலது கை இழந்த நிலையில் பரிதாபமாக இருந்தார், அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க அந்த மூதாட்டியை அழைத்துவந்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு அங்கு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அந்த அம்மாவின் தலையில் எதோ காயம் இருக்கும் போல தலை வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். முடி நிறைய இருந்ததால் காயம் தெரியவில்லை தலையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது அதிக துர்நாற்றம் வீச, தலையில் முடி வெட்டி விடலாம் என்று முடியை வெட்டும் போதுதான் தெரிந்தது அத்தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்தது, பாவம் அந்த அம்மா வலியை எப்படி பொறுத்துக்கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை , முடிதிருத்தம் செய்து காயத்தில் இருந்த புழுக்களை எல்லாம் எடுத்துவிட்டு காயத்திற்கு மருந்து போடப்பட்டு உள்ளது, இப்படி ஒரு வேதனை யாரும் அனுபவிக்க கூடாது. அந்த வயதான அம்மா விரைவில் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.நன்றி...

Saturday, February 22, 2014

கோவையில் தவித்த கர்நாடக மூதாட்டி ~ ஒப்படைப்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(271/21-02-2014)
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த (16.02.2014) அன்று லெக்ஷ்மம்மாள் என்னும் 85 வயது மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிவதாகவும் , அவர் யார் எங்கிருந்து வந்துள்ளார் என்ற விபரம் சரிவர தெரியாத நிலையில் , அவருக்கு தற்சமயம் பாதுகாப்பு கொடுக்கும்படி கோவை காட்டூர் காவல் நிலைய (B 3) துணை ஆய்வாளர் நம் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க அந்த மூதாட்டி கோவை மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதி பெற்று எம் அமைப்பினரால் அங்கு சேர்க்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்த லெக்ஷ்மம்மாள் தனது உறவினர்கள் நினைவால் கவலையுற்று காணப்பட்டார். இதனால் லெக்ஷ்மம்மாளின் நலனில் அக்கரைக்கொண்டு,

https://www.facebook.com/photo.php?fbid=305391876252441&set=pb.100003448945950.-2207520000.1392977912.&type=3&theater
அவரின் உறவினர்களை கண்டறிய ஈரநெஞ்சம் அமைப்பினர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கர்நாடக மாநிலம் தும்கூர்(Tumkur), YN. ஹொச்கொட்(Hosakote) என்னும் ஊரில் லெக்ஷ்மம்மாளின் மகன் ஒபலெஷப்பா இருப்பதைக் கண்டறிந்தனர். அவரிடம் அவருடைய தாயார் பற்றி எடுத்துக்கூறி , உடனடியாக கோவை வரவழைத்து இன்று (21-02-2014) லெக்ஷ்மம்மாள் அவருடைய மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுபற்றி ஒபலெஷப்பா கூறும் போது "லெக்ஷ்மம்மாள் பேசுவது அவ்வளவு தெளிவாக புரியாது அதனாலேயே உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்கும் , கடந்த 12-02-2014 அன்று கோவையில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் என் தம்பி மணி என்பவரை காணவே என் தாயார் கோவை வந்தார். நீங்கள் அம்மாவைப்பற்றி தகவல் கொடுத்ததும் பெரும் அதிர்ச்சியடைந்தேன். தம்பியின் அலைபேசி வேலை செய்யாமல் உள்ளது, அவரது கம்பெனியில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, மணி வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருப்பதை அறிந்து கொண்டேன் . அம்மாவின் இந்த நிலை பெரும் கவலை அளிக்கிறது. அம்மாவை காப்பாற்றிக் கொடுத்ததற்கு கோவை காவல்துறைக்கும், ஈரநெஞ்சம் அமைப்பிற்கும், கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனமார்ந்த நன்றி " இவ்வாறு கூறிய ஒபலெஷப்பா அவரது தாயார் லெக்ஷ்மம்மாள் அம்மாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டுச் சென்றார் .

மீண்டும் ஒரு உறவை தேடித்தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் அமைப்பு, உறவை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டது ...
அந்த லெக்ஷ்மம்மாள் அவர்களுக்காக உதவிய அனைவருக்கும்
ஈரநெஞ்சம் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றி.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

On 16.02.2014 Luxmy Amma age 85yrs, an elderly lady was wandering around Gandhipuram bus station in Coimbatore. Without knowing who she is and where she is from, plus the safety of her, the B3 station sub-inspector requested Eera Nenjam Trust to get involved. Members of the Eera Nenjam Trust received admission from the Coimbatore corporation retirement home and the elderly lady was admitted there. Following that the members of Eera Nenjam trust often visited there and cared for her. Luxmy amma seemed to be very worried thinking about her family. The members of Eera Nenjam Trust concerned about Luxmy amma's health and began to search for her relatives.

As a result of that, Luxmy amma's son Obaleshappa's information was found. He lives in Hosakote, Tumkur Y.N. in Karnataka District. He was informed about his mother and brought to Coimbatore. The members of the Eera Nenjam Trust handed Luxmy amma over to her son Obaleshappa.When Obaleshappa spoke he mentioned "it is difficult to understand my mom's speech, because of that you might have gone through difficult time. Past 12.202014 My mom came to Coimbatore to visit my younger brother who is working here in Coimbatore for a private company. We were shocked when you gave our mom's information. My brother's cell phone is not working, when contacted the private company we came to know that my brother went out of station for work related purpose."

He continued to say "it is very upsetting to see my mother in this situation. my heartfelt thanks to Coimbatore Police Service, the Eera Nenjam Trust and Coimbatore corporation retirement home in their assistance to care and protect our mom". Obaleshappa left Combatore with his mother.

The Eera Nenjam Trust is very pleased about the fact that it could once again reunite another helpless person back with their family. The members of the trust is thanking everyone who have helped in this good deed.

~thank you.
Eera NenjamSunday, February 16, 2014

மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் ~மகேந்திரன்


" மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் " 
ரமேஷ் அதற்கு ஒரு உதாரணம் :

"ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்"

மனவலிமை இருந்தால் எந்த ஊனமாக இருந்தாலும் அதை வென்று விடலாம்

கோவையில் திரு. ரமேஷ், 33 வயது வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் இரண்டு மகளுக்கு அடுத்து மூன்றாவதாக பிறந்த செல்ல மகன் இந்த ரமேஷ் பிறக்கும்போதே இவரது காலில் குறைபாடு இருந்தது ஆனால் ரமேஷின் பெற்றோர்கள் அதனை பொருட்படுத்தாமல் ரமேஷை மிக செல்லமாக வளர்த்தார்கள் . ரமேஷ் காலில் நான்கு முழங்கால்கள் இருக்கும். இதனால் அவரால் நடக்கவோ மற்றவர்களை போல இயங்கவோ முடியாது. இந்த வேதனை அவருக்கு இருக்க கூடாது என்பதற்காகவே அவரை செல்லமாக வளர்த்தார்கள்.

பள்ளி செல்லும் பருவம் அடைத்தார் , ஆனால் இவரது குறைபாடு காரணமாக பள்ளி நிர்வாகம் இவரை பள்ளியில் சகமாணவர்களுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. அப்படியே செர்க்கவேண்டுமனால் ரமேஷ் ஒரு ஆதரவற்றவர் என்று சொன்னால் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்களாம் , அதற்கு ரமேஷின் பெற்றோர் என் மகன் அனாதை இல்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று ரமேஷின் அக்கா இருவரும் கணிதம் மற்றும் பொது பாடங்கள் கற்று கொடுத்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான குடும்பம் சொந்த வீடும் வசதியோடும் அன்போடும் வளர்ந்தவர் வாழ்க்கையில் முதல் சோதனையை தந்தது. திடீரென அப்பாவும் அம்மாவும் இறக்க .தந்தை விட்டு வைத்த கடனை வீட்டை விற்று அந்த கடனை அடைத்து மீதி இருக்கும் பணத்தில் தன் சகோதரிகளுக்கு திருமணம் நடத்தினார் . அதுபோக தன் எதிர்காலத்திற்கு கையில் சொற்ப பணமும் வைத்திருந்தார் .

அதன் பிறகோ இவரது சகோதரிகள் வீட்டில் சிலநாள் தங்கி இருக்கவே சகோதரிகளின் உறவினர்கள் இவரது ஊனத்தை பார்த்து அருவருப்பு பட்டு ரமேஷை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டனர். ரமேஷ் வைத்திருந்த சொற்ப பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டிருப்பதை அறிந்து அந்த பணத்தை உறவினர்கள் கேட்டு வற்புறுத்தியும் உள்ளார்கள் . அனால் அதை தர மறுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி கடந்த சில வருடத்திற்கு முன் ஈரநெஞ்சம் கொண்டவர்களின் துணையோடு இவர் ஒரு காப்பகத்தில் சேர்ந்து வாழ்கையை கழித்துவருகிறார். .

ஆனால் அங்கு தான் ஒரு அனாதைபோலவும் ஊனமுற்றவர் போலவும் பாவிப்பது அவருக்கு பிடிக்கவில்லை தனக்கு கால் குறைபாடாக இருக்கும் போதும் தன் வாழ்வை தன் சொந்தக் காலில் நின்று தான் வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு நண்பர்களின் சிறு உதவியோடு ஒரு காலணி விற்பனை கடையை துவக்கி நல்லமுறையில் நடத்திவருகிறார் .
கடந்த ஒருவருடமாக கடைக்கு வாடகை , உணவு, கவுண்டம்பாளையத்தில் இருக்கும் காப்பகத்தில் இருந்து சாய்பாபா காலனி யில் உள்ள அவரது கடைக்கு சென்று வருவதற்கு என மாதம் 8000 வரை அவரது கடையில் இருந்து வரும் லாபத்தில் சரிகட்டி வருகிறார் மீதம் சேமிப்பு என்று எதுவும் இல்லாத நிலை உள்ளது.

ஊனம் ஒரு பெரியதென்று வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதை துச்சமென தூக்கியெறிந்து ஓட ஆரம்பித்து இருக்கும் ரமேஷ் வாழ்வில் பல வெற்றிகள் காணவேண்டும் .

தற்போது மிகுந்த உற்சாகத்தில் காணப்படும் ரமேஷ் கண்களில் தனது காலணி கடையில் முதலீடு பற்றாக்குறை இருப்பது தெளிவாக தெரிகிறது.

யார் யாரையோ வங்கிகளும் பல முதலீட்டாளர்களும் ஓடி ஓடி கடன் கொடுத்தது ஊக்கப்படுத்துகிறார்கள்.
அனால் இவர்களை போன்ற பலரை மட்டும் தாமாகவே முன்னுக்கு வரட்டும் என ஏன் விட்டு விடுகிறார்கள்..?

#மகேந்திரன்

Friday, February 07, 2014

ஆடை இன்றி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services


" ****** 
[For English version, please scroll down] 
(266/07-01-2014)
இன்று 07/02/2014 காலை கோவை இரயில் நிலையம் அருகே மன நலம் பாதிக்க பட்ட 30 வயது மதிக்க தக்க உடலில் ஆடைகள் கூட சரியான முறையில் இல்லாமல் துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அந்த பெண்ணிற்கு பாதுகாப்பான இடம் தேடி தரும் படி ஈரநெஞ்சம் அமைபிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.அதனை தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு ஈரநெஞ்சம் அமைப்பினர் சென்று அந்த மனநிலை பாதிக்க பட்ட பெண்ணை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்திற்கு அழைத்து வரபட்டு அவரை குளிக்கவைத்து மாற்று உடை அணிவித்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு மீட்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர்.
தற்போது காப்பகத்தின் பொறுப்பில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் பேசுவதை வைத்துப்பார்க்கும் பொழுது பெண்ணிற்கு தாய் மட்டும் இருக்கலாம் எனவும் கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரியப்படுகிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07/02/14 morning, 30 years old mentally ill without proper dressing was roaming near Koavai Railway station. General public approach Eeraneanjam to protect that lady and requested to give proper shelter for her. Immediately Eeranenjam reached the spot and took her to corporation home and she was given a bath and new cloths and admitted in the home. Eeranenjam spoke to her regarding her family background, from her talk we guess she has a mother near Koavai Soakkamputhur area.

~Thank you
Eera nenjam

ஆதரவற்றவர் இறப்பு ஈரநெஞ்சம் நல்லடக்கம் ~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "


******
[For English version, please scroll down] (264-06/02/2014)

28/01/2014 அன்று பாப்பநாயக்கன் பாளையம் நியூ ஸ்கீம் சாலையோரமாக சரோஜினி என்ற 80 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி நடக்க முடியாத நிலையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் மீட்டு கோவை மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்
https://www.facebook.com/photo.php?fbid=521816107915810&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater தொடர்ந்து உடல்நலம் குன்றி காணப்பட்ட சரோஜினி பாட்டி நேற்று இரவு காலமானார் .
சரோஜினி பாட்டி இறுதி சடங்கினை ஈரநெஞ்சம் பொறுப்பேற்றுக்கொண்டு இன்று 06/02/2014 சரோஜினி பாட்டியின் உடலை கோவை சொக்கம்புதூர் மாநகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சரோஜினி பாட்டியின் ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் உங்களோடு சேர்ந்து பிரார்த்தனை செய்கிறது .
ஆதரவற்று யாரும் இருக்க கூடாது சாலையில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நிழல் தேடிக்கொடுப்பது மட்டும் இல்லாமல் அவர்களை உறவினர்களாகவே பாவித்து அவர்களது இறுதி காலத்தையும் ஈரநெஞ்சம் பொறுப்பேற்று கொள்வது அமைப்பின் கடமையாகிறது , அமைபிற்கு ஆதரவுதரும் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் .

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

28/01/14, Sarojini aged 80 was seen at New scheme road, Papanayakkan palayam by Eeraneanjam, she was sick and cannot able to walk, was admitted at Kovai corporation home by Eeraneanjam.Due to her illness and age, she passed away yesterday night. Eeraneanjam took incharge of her last rituals and today 06/02/14 she was buried at Koavai Sokkamputhur graveyard. Eeraneanjam prays for her and let her soul rest in peace.
Eeraneanjam wishes there should not be any orphan and eeraneanjam will treat as relative for orphans, until their last rituals. Eeraneanjam extends its heartfelt thanks to all supporters.

thank you 

eeranenjam

Wednesday, February 05, 2014

அமைப்பு சாரா தொழிலாளர்களின் காப்பாளன் பரமசிவம்

அரசாங்கம் மக்களுக்காக பல நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதை மக்களிடையே கொண்டு செல்ல விளம்பரங்கள், பிரசாரம் , விழிப்புணர்வு கூட்டம் என பல வழிகளை தேடி செயல்படுத்துகிறது. என்ன முயற்சித்தாலும் அந்த திட்டங்கள் பற்றிய முழு தகவல்களும், திட்டங்களும் முழுமையாக எல்லா மக்களுக்கும் சென்றடைவதும் இல்லை தெரிவதும் இல்லை . படிக்காதவர்கள் மட்டுமின்றி படித்தவர்களுக்கும் அது குறித்த போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே அதை அறிந்து பயன் பெறுகிறார்கள்.

என்ன என்ன நல திட்டங்கள் அதை எப்படி பெறவேண்டும் அதற்க்கான வழிமுறை என்ன என்பதை அலுவலகங்களுக்கு மக்கள் நேரடியாக சென்றாலும் அங்கு உள்ள வேலை பளுவின் காரணமாக யாரும் தெளிவாக எடுத்து சொல்ல முன்வரமாட்டார்கள் , அதற்காக அரசு அலுவலகங்களின் வாசலில் எப்போதும் பலர் அமர்ந்து இருப்பார்கள் அவர்கள் விண்ணப்பப் படிவங்கள் தபால்தலைகள் விற்றுக்கொண்டும் இருப்பார்கள். அவர்களிடம் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்வதற்காக சென்றால் மட்டுமே 100 ரூபாய் முதல் 200 ரூபாய்வரை வசூலிப்பார்கள் . ஆனால் பொதுமக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அரசு ஏற்றும் நலவுதவிகளை மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், என் மக்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள் என் தாய் மக்கள் என்று கருதி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாளில் முழுநேரமும் மக்களின் நலதிட்டங்களை தேடி அலைந்து யார் யாருக்கு எந்த உதவி தேவை அது எப்படி பெறவேண்டும் என்று கண்டறிந்து அதை முழுமையாக தேவைப்படும் மக்களுக்கு வாங்கித்தருகிறார்
கோவை 47 வயாதான K.பரமசிவம் A.G.K கல்லூரி பேருந்து ஓட்டுனர் .

கோவை மாநகர மக்கள் தங்களுக்கு கிடைத்த ஒரு வரமாகவே திரு K. பரமசிவம் அவர்கள் எண்ணுகின்றனர். பொது வாழ்வு, சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் கூட, கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வது எப்படி தங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்துவது எப்படி என்றுதான் யோசிப்பார்கள். ஆனால் கே. பரமசிவம் அவர்கள் மக்களுக்கு உழைப்பதற்காகவே அதிகநேரம் எடுத்துக்கொள்கிறார் .

காலை எட்டு மணிக்கு இவர் கிளம்பி, 60 பேர் கொண்ட அந்த கல்லூரி வாகனத்தை எடுத்துக் கொண்டு ஆங்காங்கே இருக்கும் அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து பத்திரமாக கல்லூரியில் சென்று விட்டு விட்டு வந்தால், இவருக்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது. கைகளில் காகிதங்களும், விண்ணப்ப படிவங்களும், அடையாள அட்டைகளும் வைத்துக் கொண்டு படித்தவர்கள் படிக்காதவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் இவருக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு தேவையான அரசின் நலத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கிறார். பலருக்கு வங்கி கணக்கு துவக்க வேண்டுமானாலும் சரி, மக்களுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களுக்கும் சரி விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து தருதல் முதல், முறையாக சந்திக்க வேண்டிய அரசு அலுவலரை பார்த்து அந்த திட்டத்தை பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார். நலத் திட்டங்கள் பெற தகுதி உடையவர்களுக்கு முழு உதவியும் பெற்று தருவது, நலவாரிய உறுப்பினர் நிலையை புதுப்பித்து தருவது முதல்க்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து முடித்து தருகிறார்.

இது போல் 4 மணிவரை வங்கிகளுக்கு செல்வது, நலவாரிய அரசு அலவலகத்திற்கு செல்வது , மாநகராட்சி அலவலகத்திற்கு செல்வதுமாக களைப்படையாமல் முடித்துக் கொண்டு மீண்டும் மாலை கல்லூரி விட்டதும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரவர் இடங்களுக்கு சென்று விட்டு வருகிறார். பின்னர் உடனடியாக வீடு திரும்பி அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளுக்கான ஆவணங்கள், விண்ணப்பங்கள் தயார் செய்தல் போன்ற வேலைகளை கவனிக்கிறார்.

இப்படி பரபரப்பாக தொடர்ந்து 7 நாட்களும் மக்களுக்கு சேர வேண்டிய உதவிகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயந்திர மனிதரிடம் நேரடியாக "நலவாரியம் என்றால் என்ன? நலத் திட்ட உதவிகள் என்னென்ன? எதற்க்காக இவர்களுக்காக இப்படி உழைக்கிறீர்கள்?" என்று கேட்க்கும் பொழுது,

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக தமிழக் அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் ஆகும். இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை, மற்றும் கண் கண்ணாடி அணிவதற்கான உதவித் தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.

கல்விக்காக பத்தாவது மற்றும் பிளஸ் 1 பயிலும் வாரிய உறுப்பினரின் பெண் குழந்தைக்கு 1000 ரூபாய், பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெறும் உறுப்பினரின் மகன் மற்றும் மகளுக்கு தலா 1000, பிளஸ் 2 பயிலும் பெண் குழந்தை, பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மகன், மகள் மற்றும் பட்டப் படிப்பு பயிலும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு தலா 1500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.தொழில்நுட்ப படிப்பு மற்றும் மேற்பட்ட படிப்புக்கு 2,000 ரூபாய், தொழில் நுட்ப மேற்படிப்புக்கு 4,000, திருமண உதவி ( ஆண்) 3,000, பெண் குழந்தைக்கு 5,000, மகப்பேறு உதவி 6,000, கண் கண்ணாடிக்கு 500 ரூபாய் வழங்கப் படுகிறது. உறுப்பினருக்கு ஓய்வூதியமாக 1,000 ரூபாய், குடும்ப ஓய்வூதியம் 400, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு செலவுக்கு 17 ஆயிரம் ரூபாய், விபத்து மரணத்திற்கு ஒரு லட்சத்து 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் அவர் கூறும்பொழுது, கந்தவேலு வயது 32  ஒரு ஆட்டோ டிரைவர் அவருக்கு திருமணம் ஆகவில்லை தாய், மற்றும் திருமணம் ஆனா தங்கை இருக்கிறார்கள் , கந்தவேலு அவர்களுக்கு   நலவாரியம் பற்றி எதுவும் தெரியாத நிலையில் நலவாரியம் பற்றிய பயன்களை எடுத்துக்  கூறி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் சேர காரணமாக இருந்தேன் , கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  அவர் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் காலமானார் அவரது குடும்பத்திற்கு இதுவரை விபத்து காப்பீடு கிடைக்கும்  என்பது தெரியாது கந்தவேலுவின் குடும்பத்திற்காக முயற்சி எடுத்து காப்பீடு தொகை ஒரு லட்சம் கிடைக்க வழிவகுதுள்ளேன்.


குடும்பத் ஒரே மகனை   இழந்த அந்த குடும்பத்திற்கு  அவரது இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும்,  இந்த உதவித் தொகை நிச்சயம் சிறு ஆறுதலாக ஒரு நல்ல உதவியாக இருக்கும். இது போலத்தான் நிறைய மக்களுக்கு அரசின் பல நல உதவித் திட்டங்கள் பற்றி தெரிவதில்லை. அரசு மக்களுக்கு நல்ல திட்டங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் அது மக்களுக்கு தெரியாததால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல உதவிகள் கிடைப்பதில்லை. எனவே தான் இது போன்ற திட்டங்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான உதவிகளின் பலனை அவர்கள் பெறவும் நான் ஒரு கருவியாக இந்த உதவிகளை செய்து வருகிறேன். இதன் பயனும் மகிழ்வும் அவர்களுக்கு என்னால் கிடைக்கிறது என்பதே எனக்கு மன திருப்தியாக இருக்கிறது . கடந்த 10 வருடங்களாக நான் பாடு பட்டதில் என்னால் சுமார் 15000 பேர் வரை பயன் அடைந்திருக்கிறார்கள். இதுவரை சுமார் ஒரு கோடி ருபாய் வரை நல உதவிகள் பெற்று தந்திருக்கிறேன் என்றார்.


 இதுபோல மக்களுக்காக தேடித்தேடி  உதவி செய்யும் மனம் எத்தனைபேருக்கு வரும் , மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடுபடும் இவர் ஆயிரத்தில் ஒருவன்.

~மகேந்திரன்