Friday, June 28, 2013

"...சாகரின் மறு பிறப்பு கிடைத்தது உறவு...""...சாகரின் மறு பிறப்பு கிடைத்தது உறவு..."

தன் குடும்பம் மனைவி மக்கள் நலனுக்காக வறுமையைப் போக்க கால்வயிற்று கஞ்சிக்காக பிழைப்பைத் தேடி உறவினர்களை விட்டுப் பிரிந்து ஊர்விட்டும் கூட இல்லை, நாடு விட்டு நாடு வந்தவர் தான் சாகர். அப்படி வந்த சாகர் இரண்டு வருடத்திற்கு முன்னர் காவல்துறையினரால் ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப் பட்டிருந்தார். காரணம், சாலையோரமாக மனநலம் பாதித்து சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் இவர் யார் என்ன விபரம் என்று தெரியவில்லை என்றும் இவருக்கு பாதுகாப்பு கொடுக்கவும் அழைத்துவந்து சேர்த்ததாகத் தெரிந்தது.

ஆரோக்கியமான ஒருவருக்கு அடுத்த மூன்று நாளில் கூட மனநலம் பாதிக்க நேரிடும். அதற்க்குத் தூக்கமின்மையொரு காரணம். இப்படித்தான் சாகருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். காப்பகத்தில் உள்ள அன்பும் அரவணைப்புமே சாகருக்கு பாதி வைத்தியமாக இருந்தது. அதுபோக காப்பகதிற்கென வரும் மருத்துவரின் சிகிச்சையிலும் மூன்று மாதத்திற்குள்ளாக சாகர் சகமனிதரைப் போல மாறினார், ஆனால் அவருக்கு நேப்பாள மொழி மட்டும் தான் தெரிந்திருந்தது, அதனைக்கொண்டு அவர் நேப்பாளி என்பது தெரியவந்தது, சாகர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மனநிலை பாதித்தவர்களுக்கு நல்ல பணியாளராக இருந்து வந்தார், காலப்போக்கில் அவருக்கு தனது குடும்பத்தின் நியாபகம் வரத் தொடங்கியது. ஓரளவிற்கு தமிழ் கற்றுக்கொண்ட சாகர் காப்பகத்தின் ஆய்வாளரிடம் நான் ஊருக்கு போக வேண்டும், எனக்கு மனைவி மக்கள் தாய்தந்தை சகோதரர் என உறவுகள் இருக்கிறது என்றார், ஆனால் சாகர் இந்தியர் இல்லாத காரணத்தினாலும், நேப்பாளி என்ற தக்க ஆவணம் இல்லாததாலும், மனநோய் பாதிக்கப்பட்டு இருந்தமையாலும் இவரை விடுவிக்க முடியாத நிலை காப்பக நிர்வாகத்திற்கு இருந்தது.

தனது நாட்டிற்கு போக முடியாத சூழலில் தான் எங்கு இருக்கிறோம் என்ற நிலை அறியாது, இந்த காப்பகத்திலேயே காலம் போய்விடும் என்ற முடிவில் வாழ்கையை நகர்த்த துவங்கிவிட்டார். அப்போது தான் மகி மகேந்திரனுக்கு (எனக்கு) சாகரின் தொடர்பு கிடைக்க நேர்ந்தது. நான் சாலையோரமாக ஆதரவு இல்லாத முதியவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலரைக் காப்பகத்திற்கு அழைத்து வருவதையும், அழைத்து வந்தவர்களை அவர்களின் உறவினர்களைத் தேடிக் கண்டு பிடித்து குடும்பத்துடன் இணைத்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதையும் பார்த்து சாகர் என்னிடம் வந்து தனக்கென்று உறவுகள் இருப்பதைக் கூறி தன்னையும் தனது உறவினருடன் சேர்த்து வைக்குமாறு கேட்டபோது காப்பகத்தின் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அவ்வப்போது காப்பக ஆய்வாளரிடம் சாகர் ஊர்திரும்பிச் செல்ல என்ன வழி என்பதைக் கேட்டும் வந்தேன், ஆனால் சாகருக்கு எந்த ஒரு சரியான ஆவணமும் இல்லாமல் ஊருக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஆவணங்களாக நேப்பாளி என்ற அடையாள அட்டை அல்லது நேப்பாளத்தில் உள்ள காவல்துறை ஒப்புதல் கடிதம் இருந்தால் தான் சாகரை விடுவித்து விடலாம், வேண்டுமானால் அந்த ஆவணம் கிடைக்க நீங்கள் முயற்சி எடுங்கள் நாம் சாகரை நேப்பாளம் அனுப்பிவிடலாம் என்றார். அதுமட்டும் அல்லாது காப்பகத்தின் முயற்சியால் ஒரு ஆங்கில நாளேட்டில் சாகரை பற்றியும் வெளி இட்டு அதில் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுக் கூறினார். சாகரிடம் என்னால் முடிந்ததை செய்கிறேன் கலங்கவேண்டாம் என்று ஆறுதல் கூறி வந்தேன். காலம் செல்லச் செல்ல காப்பகத்தில் இருப்பவர்கள் இறந்ததும் அந்த சடலத்தை நான் எடுத்து சென்று அடக்கம் செய்து வருவதையும் பார்த்து சாகருக்குப் பெரும் கவலை, எங்கே தானும் தனது குழந்தையை மனைவி, பெற்றோர்களைக் காணாமல் இறந்துவிடுவேனோ என்று என் கையை பிடித்து கலங்கும்போது அவரது மன வேதனையை என்னால் அவ்வப்போது உணரமுடிந்தது.

காப்பக ஆய்வாளர் அளித்த சம்மதத்தில் சாகருக்கு உறவை தேடும் முயற்சியில் இறங்கினேன். சமூக வலைத்தளமான முகனீல் உட்பட அனைத்து வழிகளிலும் சாகரைப் பற்றி அவர் கூறிய அந்த அரை குறை முகவரியை பதிவு செய்து, நண்பர்களிடம் சாகருக்கு உறவைத் தேடும் முயற்சி, இயலுமானவரை பகிர்ந்து கொண்டு உதவி செய்யுங்கள் என வேண்டினேன். அத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள முகவரி யாருக்கேனும் தெரிந்தால் எனது அலைபேசி எண்ணுடன் என்னிடம் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தேன். தொலைத்த உறவைத் தேடுகிறார், மனவேதனையில் அவர் மீண்டும் மனநோயாளி ஆகிவிடுவார் போல இருப்பதால் முடிந்த அளவு உதவுங்கள் எனவும் குறிப்பிட்டேன். இப்படிக் கேட்டதன் நொடியில், சாகரின் உறவைத் தேடித்தர நல்லுள்ளங்கள் அனைவரும் சுமார் ஆயிரக்கணக்கானோர் முகநூலில் தங்கள் பக்கத்தில் பகிர்ந்துக்கொண்டார்கள். அதன் பயனாக பதிவிட்ட சில நாட்களிலேயே நேப்பாளத்தில் இருந்து ஒரு காவல் அதிகாரி என்னுடன் தொடர்புக்கொண்டார். ஆனால் அவர் பேசிய பாஷை புரியவில்லை. என்னுடைய நண்பர்கள் செல்வி மாறன் மற்றும் சுதர்சனின் உதவியால் நேப்பாளத்துக் காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி, சாகரின் புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் காட்டி சாகருக்கு உறவு அங்கு இருப்பதை உறதி செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சாகர் இரண்டுவருடமாக காணவில்லை எனவும், அவரைத் தேடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது.

சாகரின் உறவினருடைய புகைப்படங்களை நேப்பாளத்துக் காவல்துறையிடம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் அவற்றை மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு சாகரிடம் காட்டிய போது சாகருக்கு அலாதி சந்தோசம். தனக்கு உறவு கிடைக்க பட்டது, ஊருக்குப் போகக்கூடிய வாய்ப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்தார். அடுத்தநாளே சாகரின் உடன் பிறந்த சகோதரர் சாகருடன் அலைபேசியில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. சாகர் சந்தோசத்துடன் பேசத் தொடங்கினார். நான் அதைக் கவனித்துக்கொண்டிருந்தேன் , ஆனால் அந்த சந்தோசம் சற்றுநேரத்திலேயே சுக்கலானது. முகம் வாடிப்போனது சாகருக்கு. காரணம் கேட்டபோது இடைப்பட்ட காலத்தில் சாகரது தந்தை சாகர் காணாமல் போன ஏக்கத்தில் இறந்துவிட்டதாகவும், குடும்ப வறுமையின் சூழ்நிலையில் சாகரது மனைவிக்கு மறுதிருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிந்தது. அதனை அடுத்து சாகர் மிகுந்த மன வேதனையில் மூழ்க, மீண்டும் உடனடியாக நேப்பாளம் காவல்துறையுடன் தொடர்புகொண்டு, சாகரை பற்றிய விபரங்கள் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைக்க தாங்களிடம் இருந்து ஒரு ஒப்புதல் கடிதமும் சாகருக்கு உண்டான ஏதேனும் ஒரு அடையாள அட்டையையும் அனுப்பும் படியும் கேட்டபோது, உடனடியாகக் காவல்துறையினர் சாகரின் சகோதரிடம் அவற்றைக் கொடுத்து கோவைக்கு அனுப்பி வைத்தார்கள்.

கோவைக்கு வந்த சாகருடைய அண்ணனை அழைத்துக்கொண்டு போய் சாகர்முன் நிறுத்தியதும் சாகருக்கு உயிர் பிச்சை கிடைத்த பூரிப்பு. அண்ணனும் தம்பியும் கட்டித்தழுவிய காட்சி அரியது. தனக்கு வாழ்க்கை இங்கேயே போய்விடும் என்ற முடிவில் இருந்த சாகருக்கு அண்ணனைக் காட்டியதும் இருந்த அந்த மன நிறைவான நிகழ்வைக் காண கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு காட்சியாய் இருந்தது. உறவை தேடிக் கொடுத்த என்னையும் சாகர் கட்டித்தழுவி முத்தமழையில் நனையவைத்து விட்டார். அதனைத் தொடர்ந்து சாகரின் அண்ணன் கொண்டுவந்த ஆவணங்களைக் காப்பக ஆய்வாளரிடம் ஒப்படைத்த பிறகு, காப்பக ஆய்வாளர் சாகரை விடுவிக்க ஒப்புதல் அளித்தார். சாகர் மனநிறைவுடன் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முறையில் இரண்டுவருடமாக பணிவிடை செய்துவந்ததை நினைவில் நிறுத்தி அங்கு இருப்பவர்கள் மனதார வாழ்த்தி வழி அனுப்பினார்கள். காப்பக ஆய்வாளரின் ஆசிர்வாததுடன் விடைபெற்ற சாகர் தனக்கு உயிர் தந்த தாயைப் போல எண்ணி என்னையும் வணங்கி என்னிடமிருந்தும் விடை பெற்றார்.

இன்னும் பல்லாயிரம் பேர் உறவைத் தொலைத்து விட்டு மீண்டும் சேர மாட்டோமா என்னும் ஏக்கத்துடன் தான் இருக்கின்றார்கள். நாம் சற்று முயற்சி எடுத்தோமானால் மீண்டும் கிடைக்காமல் போய்விடாது அவர்கள் வாழ்க்கைகளும்.

~மகேந்திரன்


Sunday, June 23, 2013

நேப்பாளில் உள்ள உறவை சாகருக்கு தேடித்தந்த ஈரநெஞ்சம்''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(174/2013)

சில தினங்களுக்கு முன் சாகர் என்பவரை பற்றி https://www.facebook.com/photo.php?fbid=250600318398264&set=pb.100003448945950.-2207520000.1371817365.&type=3&theater இந்த லிங்கில் தகவல் கொடுக்கப்பட்டது. அவரது முகவரி வைத்து அவரை அவரது உறவினர்களுடன் சேர்க்க ஈரநெஞ்சம் பல வழிகளில் முயற்சி செய்து வந்தது. அதனைதொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவரது சகோதரர் Mr. Kalbhadarthapa அவர்கள் நேபால் காவல் துறை உதவியுடன் ஈரநெஞ்சம் தோலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு அவர் தனது சகோதரர் என்றும் கடந்த இரண்டாண்டாக காணவில்லை என்றும் தகவல் கொடுத்தார், பின்னர் அவரை நேராக வரசொல்லி 21.06.13 அன்று சாகரை அவரது சகோதரர் கையில் ஈரநெஞ்சம் ஒப்படைத்தது என்பதை மகிழிசியுடன் தெரிவித்துகொள்கிறது. தொலைந்த தனது தம்பியை மீட்டுகொடுத்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு திரு. Kalbhadarthapa அவர்கள் அவர்களின் குடும்பத்தின் சார்பாக தனது மனமார்ந்த நன்றியை தெரிவிதுகொண்டார்.
கடந்த இரு வருடமாக சாகரை பராமரித்து வந்த கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும், சாகரின் சகோதரரை தொடர்புகொள்ள உதவிய கனடாவை சேர்ந்த திருமதி.செல்விமாறன் மற்றும் கோவையை சேர்ந்த திரு. சுதர்சன் அவர்களுக்கும் ஈரநெஞ்சம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறது, மேலும் இதற்கு உதவிய காவல் துறையினருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் நன்றியை தெரிவித்துகொள்கிறது.
மற்றுமொரு பிரிந்த உறவினை தங்கள் குடும்பத்திடம் சேர்த்து வைத்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மனநிறைவு அடைகிறது

( நேபாளி சாகர், நேப்பாளில் இருக்கும் அவரது மனைவி ரீட்டா அவர்களுடன் இரண்டு இரண்டு வருடத்திற்கு பிறகு பேசும் காட்சி.
http://www.youtube.com/watch?v=5PuyZReyab8&feature=share

இந்த லிங்கில் உள்ளது.)


https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

. Few days ago, information about Sagar was posted on this link https://www.facebook.com/photo.php?fbid=250600318398264&set=pb.100003448945950.-2207520000.1371817365.&type=3&theater Eera Nenjam tried to reunite Sagar with his family in many ways using just his address, in result of that Sagar's brother Mr. Kalbhadarthapa contacted Eera Nenjam by telephone with the help of the Nepal Police. He had mentioned that Sagar is his brother and has been missing for the last two years. Eera Nenjam requested him to come in person and he arrived Coimbatore on 21.06.13. Eera Nenjam is very happy to announce that Sagar has been reunited with his brother. Mr. Kalbhadarthapa thanked Eera Nenjam on behalf of his family for finding and handing their long lost brother back to them.
Eera Nenjam is thanking the Coimbatore city home where Sagar was kept and cared for the last two years. Magi Mahendran, Sudarsan Rajendran and Selvi Maaran from Canada were teamed up and succeed to contact Sagar's Brother. Eera nejam is also thanking this team, the police department, and the facebook friends for their effort on this matter. Eera Nenjam is very pleased and content about the fact that they had reunited another lost person back with his family.

~Thanks
EERANENJAM

ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக, தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(173/2013)

சமுதாயத்தில் ஓர் உயர்ந்த நல்ல நிலை அடைய மாணவர்கள் கல்வியை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. இளம் பருவத்திலேயே அவர்களுக்குக் கல்வியோடு அதற்கும் மேலாக தனித்திறமை, தன்னார்வம், அக்கறை, சுய அனுபவம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும். கோவையில், விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு, ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக, தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் பூர்ணிமா அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வகுப்புகள் இந்த வருடம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைசி வகுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. ஈரநெஞ்சம் உறுப்பினர்கள், வாழ்வில் உழைத்து உயர்ந்தவர்கள் , தனித்திறமை கொண்டவர்கள் என யாவரும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கக் கலந்து கொள்வார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

Students cannot depend on the education to reach a good position in the society. In addition to education, they need individual talents, motivation, and self-experience from young age. In order to give that to students, Eera Nenjam has selected a Government High School in Vilangurichi, Coimbatore and Ms. Poornima, a volunteer in Eera Nenjam is heading this project.
We are happy to inform you that this class will be offered during the last period on every Friday. The members of Eera Nenjam, entrepreneurs and specialists in various fields would come and motivate the students.

~Thanks
EERANENJAM

ஆதரவற்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(172/2013)

தங்கம் என்ற 30 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்மணி கணவரால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டு, பார்வை சரி இல்லாத நிலையில் கோவையில் ஒரு காப்பகத்தில் சேர்க்கபட்டிருந்தார். 16/06/13 அன்று அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு அனுமதி கிடைக்காததால், காப்பகத்தினர் அவரை கோவை PSG மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகபிரசவம் ஆகாத நிலையில் , மருத்துவர்கள் தங்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பட்டது. அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவினை ஈரநெஞ்சம் அமைப்பே பொறுப்பேற்றது. சிகிச்சைக்கு பின்னர் 17/06/13 அவருக்கு ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது.
பிறந்த அந்த குழந்தையின் எதிர்காலம் நல்லமுறையில் அமைந்திட அனைவரும் இறைவனை வேண்டுவோம்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

Thangam, a 30 year old pregnant woman who was abandoned by her husband was taken care by a trust in kovai. She has been suffering with mental illness and has poor eye vision. She had labor pain on 16.6.13. Since there were no proper facility to give her treatment in government hospitals and few private hospitals, she was finally taken to PSG hospital in kovai. It was found that she could not have a normal delivery and she had to undergo a Caesarean section (c – section). So the trust contacted Eera nenjam for help and Eera Nenjam trust willingly accepted to bear the medical expenses for Thangam. After the operation on 17.6.13 Thangam delivered a beautiful boy baby. Eera nenjam is happy to share the good news that both the mother and the son are fine now.
Let us all pray to god to bless the new born baby with the bright future.

~Thanks
EERANENJAM
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(172/2013)

தங்கம் என்ற 30 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்மணி கணவரால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டு, பார்வை சரி இல்லாத நிலையில் கோவையில் ஒரு காப்பகத்தில் சேர்க்கபட்டிருந்தார். 16/06/13 அன்று அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு அனுமதி கிடைக்காததால், காப்பகத்தினர் அவரை கோவை PSG மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகபிரசவம் ஆகாத நிலையில் , மருத்துவர்கள் தங்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பட்டது. அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவினை ஈரநெஞ்சம் அமைப்பே பொறுப்பேற்றது. சிகிச்சைக்கு பின்னர் 17/06/13 அவருக்கு ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது.
பிறந்த அந்த குழந்தையின் எதிர்காலம் நல்லமுறையில் அமைந்திட அனைவரும் இறைவனை வேண்டுவோம்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

Thangam, a 30 year old pregnant woman who was abandoned by her husband was taken care by a trust in kovai. She has been suffering with mental illness and has poor eye vision. She had labor pain on 16.6.13. Since there were no proper facility to give her treatment in government hospitals and few private hospitals, she was finally taken to PSG hospital in kovai. It was found that she could not have a normal delivery and she had to undergo a Caesarean section (c – section). So the trust contacted Eera nenjam for help and Eera Nenjam trust willingly accepted to bear the medical expenses for Thangam. After the operation on 17.6.13 Thangam delivered a beautiful boy baby. Eera nenjam is happy to share the good news that both the mother and the son are fine now.
Let us all pray to god to bless the new born baby with the bright future.

~Thanks
EERANENJAM

தந்தை இழந்த சிறுவர்களுக்கு ஈரநெஞ்சம் அடைக்கலம் தேடித்தந்தது.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(171/2013)

திருப்பூரில் காளிமுத்து (வயது 14), சமயதங்கம் (வயது 12) இருவரும் ஒன்பதாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்க வேண்டியவர்கள். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை. இவர்களின் தந்தை மகாலிங்கம் பத்து வருடங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். அம்மா, திருமதி. சுந்தரவள்ளி, திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்க்கிறார். கணவர் இல்லாத நிலையில் வறுமையால் இவர்களது படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயம், நம் ”ஈர நெஞ்சம்" செய்யும் சேவைகளைக் கேட்டு, அறக்கட்டளையை நேரில் அணுகி, தம் மகன்களைப் படிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காளிமுத்து, சமயதங்கம் இருவரையும் ஈர நெஞ்சம் அமைப்பு கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் சேர்த்து படிப்பைத் தொடர வழி செய்துள்ளது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

Both Kalimuthu (age 14) and Samayathangam (age 12) from Thiruppur were supposed to study in ninth and sixth standard respectively. But they are from a poor family and his father left family about 10 years ago and his whereabouts is unknown. Ms. Sundaravalli, their mother, works as a daily wager in a private company in Thiruppur. Without her husband’s support, Sundaravalli was unable to send their two children to school and they were sent to work to support the family. When she came to know about the various services of our Eera Nenjam, she contacted us and requested to help with her children’s education. We got both Kalimuthu and Samayathangam admitted in Coimbatore Prabhancha Peace Ashramam and they are continuing their education.

~ Thanks
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(171/2013)

திருப்பூரில் காளிமுத்து (வயது 14), சமயதங்கம் (வயது 12) இருவரும் ஒன்பதாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்க வேண்டியவர்கள். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை. இவர்களின் தந்தை மகாலிங்கம் பத்து வருடங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். அம்மா, திருமதி. சுந்தரவள்ளி, திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்க்கிறார். கணவர் இல்லாத நிலையில் வறுமையால் இவர்களது படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயம், நம் ”ஈர நெஞ்சம்" செய்யும் சேவைகளைக் கேட்டு, அறக்கட்டளையை நேரில் அணுகி, தம் மகன்களைப் படிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காளிமுத்து, சமயதங்கம் இருவரையும் ஈர நெஞ்சம் அமைப்பு கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் சேர்த்து படிப்பைத் தொடர வழி செய்துள்ளது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

Both Kalimuthu (age 14) and Samayathangam (age 12) from Thiruppur were supposed to study in ninth and sixth standard respectively. But they are from a poor family and his father left family about 10 years ago and his whereabouts is unknown. Ms. Sundaravalli, their mother, works as a daily wager in a private company in Thiruppur. Without her husband’s support, Sundaravalli was unable to send their two children to school and they were sent to work to support the family. When she came to know about the various services of our Eera Nenjam, she contacted us and requested to help with her children’s education. We got both Kalimuthu and Samayathangam admitted in Coimbatore Prabhancha Peace Ashramam and they are continuing their education.

~ Thanks
Eera Nenjam

Saturday, June 22, 2013

சாலையோரம் இருந்த பெண்மணிக்கு பாதுகாப்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(168/2013)

நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதமாக நடைபாதையில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு அங்கு இருக்கும் பொது மக்கள் உண்ண உணவும், முடிந்த உதவிகளையும் செய்துள்ளனர். அவருக்குத் தன் பெயர், ஊர் எதுவும் தெரியவில்லை. அவர் பேசும் மொழியும் புரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு இருக்கும் சில நல்ல உள்ளங்கள் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டு அந்த பெண்ணிற்கு ஏதேனும் ஒரு பாதுகாப்பு கொடுக்கும் படி ஈரநெஞ்சம் அமைப்பைக் கேட்டுக்கொண்டனர் . அதனைத் தொடர்ந்து,12.06.2013 அன்று அந்தப் பெண்ணை ஈர நெஞ்சம் அமைப்பு மீட்டு, கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

A middle aged lady around 40 years old, mentally challenged, was living on the pavement in Narasimmanayakkan Palayam, Coimbatore. The people living closer fed her and also helped in all possible ways. She did not even know her name and native place and nobody could understand the language she spoke. Under these circumstances, few people, after knowing about Eera Nenjam, contacted us and requested if we could do any help to the lady. Eera Nenjam rescued her and got her admitted in the Coimbatore Corporation Home.

~ Thanks
Eera Nenjam
 

Monday, June 17, 2013

சாலையில் ஆதரவற்று இறந்தவரை நல்லடக்கம் செய்தது ஈரநெஞ்சம்
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(167/2013)


கோவை செல்வபுரம் அருகில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த சுமார் 75 வயதான ஒருவர் நோய்வாய் பட்டு 10.06.2013 சாலையோரம் இறந்து கிடந்தார். ஒருவர் இறந்து கிடக்கிறார் என்பதை கூட அறியாத நிலையில் பலர் இருக்க இளகிய உள்ளம் கொண்ட ஒருவரால் B10 காவல் துறைக்கு தகவல் கொடுக்க பட்டது .அதனை தொடர்ந்து காவல் துறை விசாரணைக்கு பிறகு அந்த முதியவருக்கு யாரும் இல்லை அவர் ஆதரவற்றவர் என்று நிலையில் ஈரநெஞ்சம் அமைபிற்கு B10 காவல் துறையுனரால் அந்த பெரியவரின் பிரேத உடலை நல்லடக்கம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈர நெஞ்சம் அந்த பெரியவரின் உடலை 11.06.13 அன்று சொக்கம்புத்துர் மயானத்திற்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்தது . உடலை நல்லடக்கம் செய்ய துணை இருந்த B10 துணை ஆய்வாளர் திரு. முருகையன் , அமைப்பின் நண்பர் சுப்பு , மயான தொழிலாளி வைரமணி அவர்களுக்கு ஈரநெஞ்சம் மனதார நன்றி தெரிவித்துகொள்கிறது. இறந்த பெரியவருக்கு துணையாக உறவுகள் இல்லாவிட்டாலும், அவரின் இறுதி காலத்தில் ஈர நெஞ்சம் துணையானது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் உங்களோடு சேர்ந்து நாங்களும் வேண்டுகிறோம்.

https://www.facebook.com/eeranenjam
ஈர நெஞ்சம்
~ நன்றி

An old man, aged around 75, who had been sick and begging on the streets in Selvapuram, Coimbatore, was found dead on 10.06.2013. When many people ignored his body on the street, a kind person informed the B10 Police Station about it.
After the proper medical processes, the Police Station requested Eera Nenjam to do the last rituals for him. We, along with Mr. Murugaiyan, Sub Inspector, Mr. Subhu, a good friend of Eera Nenjam and Mr. Vairamani, the cemetery worker, helped to bury his body.
Eera Nenjam appreciates their help. Even though the old man had none when he was alive, he had many friends to take care of his final rituals. May his soul rest in peace.

Eera Nenjam
~ Thanks

Tuesday, June 11, 2013

"வாழ்க்கை என்பதும் உயிர் என்பதும் சாதாரண விஷயம் இல்லைங்க"

உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டாக வேண்டிய வினோத நோயால் அவதியுறும்  டிஸ்கி என்னும் இளம் பெண்"


மருத்துவர்களாலேயே கண்டறிய முடியாத விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், அமெரிக்காவை சேர்ந்த இந்த 21 வயது  டிஸ்கி , இவருடைய தற்போதைய எடை வெறும் 25.4 கிலோகிராம் மட்டுமே . இத்தனைக்கும்  ஒரு நாளில் 60 முறை  உணவு எடை கூடுவதாக இல்லை .
டிஸ்கி இவருக்கு கிரிஸ் என்ற  இளைய சகோதரரும், ,மரினா என்ற சகோதரியும் இருக்காங்க, இவங்க  இருவரும் மற்றவர்களை போல நலமுடன் தான் இருக்காங்க .
டிஸ்கி இவங்க அம்மா  சொல்றாங்க ''மருத்துவர்கள் சொன்னார்கள் இந்த பெண் உயிர்வாழ்வதே மிகபெரும் கேள்விகுறி அப்படியே பிழைத்தாலும் மற்ற குழந்தைகளை போல் நடக்கவோ பேசவோ செய்வாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்றனர்'' என்றார் .
ஆனாலும் அந்த அம்மா  மனம் தளராமல் டிஸ்கி  யை  நம்பிக்கையுடன் பாசத்துடனும் வளர்த்து வந்தாங்க.
டிஸ்கி க்கு குழந்தை பருவத்தில் உடை எடுக்கும் போது விளையாட்டு பொம்மைகளுக்கு உடை தைக்கும் இடத்தில தான்  உடைகளை வந்குவாங்கலாம் என்ன காரணம் என்றால் மற்ற சிறுவர்களுக்கு உண்டான  உடைகள் இவருக்கு பொருந்தாது என்பதாலாம்.
மரணத்தை வென்று வாழும் இந்த டிஸ்கி டாக்டர்களுடைய கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தற்போது மற்றவர்களை போலவே இயல்பான  வாழ்கை வாழ்ந்து வருகிறார் .
டிஸ்கி  கூறும்போது ''நான் இரண்டுமுறை மரணத்தின் விழும்பில் இருந்து மீண்டு வந்துள்ளேன் ,  தினமும் என் உடல் எடையை அளவிட்டு வருகிறேன் ஒரு பவுண்ட் எடை கூடி இருந்தாலும் எனக்கு ஆச்சரியமே என் எனெர்ஜி குறையாமல் இருக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நொறுக்கு தீனிகள் , ஐஸ் க்ரீம் , கேக் வகைகள் ,என சாப்பிட்டு கொண்டே இருப்பேன் என்னுடைய உடல் தோற்றம் கோரமாக இருந்தாலும் இருக்கும் நோய்  பற்றியும் கவலை படாமல் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் தன்னம்பிக்கையோடு சாவோடு  போராடி வருகிறேன்  ''என்கிறார் .
மனிதனாகப் பிறந்த இந்த வாழ்க்கை வாழ்வதற்குத்தான். பல இன்னல்கள் வரலாம். பிரச்சினைகளைச் சந்திக்கலாம். தோல்விகள் கிடைக்கலாம் இவற்றை எல்லாம் சந்தித்து, போராடி, இவற்றையும் கடந்து வாழும் போது இதுதான் வாழ்க்கை என்று புரியும். எப்படி நாம் பிறப்பது கடவுள் செயலோ அதுபோல  நமது  வாழ்கையும் கடவுளுடைய செயல்தான் என்பதை டிஸ்கி எல்லோருக்கும் புரிய வைக்கிறார்.

நண்பர்களே   எவ்வளவோ கவலைகள் இருக்கலாம் ,  அல்லது வேதனைகள் இருக்கலாம் . அப்படி  பட்டவர்கள் சிலர் தவறான முடிவுகளை  எடுக்கிறார்கள் அவர்களுக்காங்க  ஒரு  விழிப்புணர்வு
 தேடலை உங்களுக்காக  பதிவிடுகிறேன்
நன்றி .

~மகேந்திரன்

Friday, June 07, 2013

ஆதரவற்ற சுசிலா அம்மா~ ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(165/2013)

கோவை உப்புளி பாளையம் பகுதியில் வயதான சுசிலா என்னும் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாமல் மயங்கிய நிலையில் உண்பதற்கு உணவும் கிடைக்காமல் சாலையிலேயே பல நாட்களாக இருப்பதை கண்டு ஈரநெஞ்சம் , B4 காவல் நிலையம் அனுமதியுடன் அவரை 04/06/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் யார் என்ன விபரம் என தெரியவில்லை இவரைப்பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தால் ஈரநெஞ்சம் 9843344991 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

An old desolate woman of age 80, named Suseela was found on the roadside of uppilipalayam in kovai in very bad health condition even without having food to eat for many days. On knowing this Eeranenjam trust, with the permission of B4 police station took her to the corporation maintained trust on 04/06/2013 and entrusted her there. There is no information about this respected old woman.
If anyone knows any information about her kindly call the Eera nenjam trust in the number 9843344991.

~Thank you.
EERANENJAM

Thursday, June 06, 2013

தேவி அம்மாக்கு உறவு கிடைசாச்சு ~மகேந்திரன்
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(166/2013)

கடந்த 13/07/2010 அன்று கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் 55 வயதுள்ள ஒரு பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், உடலில் உடைகூட இல்லாமல் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்தார் . இவரை ஈரநெஞ்சம் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக கோவை அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் தேவியை நல்ல முறையில் பராமரித்து வந்த நிலையில், ROBERT BOSCH கம்பெனி உதவியுடன் மருத்துவர் ரமணி அவர்களின் சிகிச்சையில் , கடந்த மூன்று வருடத்திற்கு பிறகு தேவிக்கு சுயநினைவு திரும்பியது . அதனை அடுத்து அவருக்கு தான் யாரென்றும், தன் மகன் யாரென்றும் நினைவு திரும்பியது. தான் தேவி , தன்னுடைய மகன் கணேஷ் என்கின்ற ரகு என்றும் அவர் கோவை செல்வபுரம் பகுதியில் வசிப்பவர் என்று இருந்த இடத்தையும் கூறினார். இதன் மூலமாக தேவியின் மகன் ரகுவை அழைத்து கேட்கும் போது தேவி என்பவர் என்னுடைய தாயார் தான் நானும் என் அம்மாவும் மட்டும் தான் எங்கள் வீட்டில் இருந்து வந்தோம் கடந்த 5 வருடங்களாக அவர் காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை , போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார் தனது அம்மா கிடைத்த மகிழ்ச்சியில் திரு.ரகு மூன்று வருடமாக அம்மாவை பராமரித்து வந்த அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்திற்கும், சாலையில் பரிதாபமாக இருந்த தனது அம்மாவை காப்பகத்திற்கு அழைத்து வந்து சேர்த்த ஈரநெஞ்சம் அமைப்பிற்க்கும் , மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ROBERT BOSCH கம்பெனி மற்றும் Dr. ரமணி அவர்களுக்கும் மனதார ரகு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதனை அடுத்து தேவி அம்மாவை இன்று 05/06/2013 துடியலூர் காவல் நிலையத்தின் முன்னிலையில் அவருடைய மகன் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த தேவி அம்மாவிற்கு உறவு கிடைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

On 13.07.10, an old woman was found near the Thiruvallore bus stop at Gandhipuram in Kovai. She was mentally disturbed and did not even have a dress to cover her body. She was taken to the ‘Anbalayam rehabilitation centre’ by Eera Nenjam Magendran and his friends. With great care for the past 3 years at the ‘Anbalayam’ like proper medical treatment by Dr. Ramani and with medical aid from ROBERT BOSCH Ms. Devi regained her conscious. She was able to recognize herself and also her son. She mentioned that her name is Devi and her son’s name is Ganesh (a) Raghu and she is a resident of selvapuram in Kovai. Based on the information received from Mrs. Devi, Mr. Raghu was found and when asked about the details Mr. Raghu said that Ms. Devi is his mother and only they both lived together in a house. He also mentioned that his mother was lost for the past 5 years and all the efforts made in search of her including filing a complaint in the police station was in vain. Mr. Raghu was over whelmed with joy on seeing his mother after 5 years. He extended his sincere thanks to Anbalayam who took care of his mother for the past 3 years, to eera nenjam trust which took pity on his mother who was on the road side and entrusted her to the anbalayam , for the medical help from ROBERT BOSCH company and Dr. Ramani for the good treatment. Mrs. Devi was handed over to her son Mr. Raghu today (5.06.13) at the Thudiyalur police station. Eera nenjam wishes to share this happiness that Ms. Devi who was on the road side in a pitiful state is now safe in the hands of her son.

~ Thank You
Eera NenjamMonday, June 03, 2013

மனநலபிரச்சினைகள்


மனநலபிரச்சினைகள்
நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின்சவால்களை யாருடைய துணையும்இன்றிதாங்களே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள் என நம்பினாலும், சில நேரங்களில்மற்றவரிடம் உதவி பெறுவது என்பது நடைமுறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதைஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது” என்பது ஒரு தனிமனிதனின் பலம் என்று சொன்னால் அதுமிகையாகாது. பின்வரும் தருணங்களில், உளவியல் பூர்வமான உதவியை நாடுவது மிகவும் அவசியம்.
 • அளவுக்கு அதிகமான மன உளைச்சல் இருந்து, அது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் போது
 • மனதை சூழ்ந்து கொள்ளும், கட்டாயப்படுத்தும், எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத, முறையற்ற எண்ணங்கள் எழும் பொழுது
 • மன அழுத்தத்துடன் சமாளிக்க இயலாமை
 • மணவாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் ஆகியவற்றில் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படும்போது
 • படிப்பு/வேலையில் பிரச்சனைகள்/குழப்பம்
 • நீடித்த மனச்சோர்வு, பயம்/கவலை
 • தூக்கமின்மை/அதிக தூக்கத்தால் வேலைத்திறன் பாதிக்கப்படும்போது
 • வாழ்க்கை வாழ விருப்பம் குறையும்போது
 • நினைப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும்போது
 • விருப்பம், திறன்கள், நீதி நெறிகளில் குழப்பம் ஏற்படும்போது
 • தற்கொலை, தற்காயப்படுத்தும் எண்ணங்கள் ஏற்படும்போது
மற்றும் சிலவற்றை விரிவாக பார்ப்போம் .


மன அழுத்தம்

சாதரணமான பல மனநலபிரச்சினைகள் :

பொதுவாக மனிதர்களுக்கு ஏற்ப்படும் மனநல பிரச்சனைகள்...

Depression : மனக்கவலை , ஆர்வமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு , வேளையில் கவனமின்மை, இழத்தல் , தன்னை மற்றவரைவிட தாழ்வாக எண்ணுதல் , குற்ற உணர்ச்சி , எதிர்க்காலம் பற்றிய பயம், பசியின்மை, தூக்கமின்மை ஞாபகமறதி தேவை இல்லாமல் கோவப்படுவது, தற்கொலை எண்ணங்கள்.

Anxiety / Phobia : மனதில் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும் , அவற்றை கட்டுப்படுத்த முடியாமை இருப்பது,தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ கெடுதல் ஏற்ப்படும் என பயப்படுவது, தனக்கு எதோ ஒரு நோய் வந்துவிடுமோ என பயம்.(Anxiety Disodre)

திடீரென பயம்,படப்படப்பு, பதட்டம்,நெஞ்சடைப்பு, மயக்கமேர்ப்படுதல், அந்த நேரத்தில் தான் இறந்து விடுவோமோ தனக்கு எதோ ஆகப்போகிறதோ என்று பயந்து பதட்டமாக இருப்பது, (Panic Disodre)

Phobia : தனியாக வீட்டில் இருக்க பயம் , கூட்டமான இடங்களுக்கு செல்ல பயம், வெளியூர்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்ய , இறந்த வீடிற்கு செல்ல பயம் , சிலருக்கு நோயாளிகளை பார்ப்பதில் கோடா பயம் இருக்கும். மற்றும் இரத்தம் விபத்துகளை பார்த்தால் பயம் இன்னும் சொல்ல போனால் இருட்டை பார்த்தால் கூட பயம் இருக்கும்.


 Obsession Compulsion (OCD) :தனிமையாகஇருக்கும் போது தேவையில்லாமல் ஒரே எண்ணமோ  சிந்தனையோ, அல்லது தோற்றமோ, நம் கட்டுபாட்டை மீறிதிரும்ப திரும்ப வருவது அதை நினைத்து படபடப்பு, பயம் அடைவது,

Adjustment Disorder : ஒரு புதியசூழ்நிலையில் மனிதர்களை சமாளிக்க முடியாமல், அதனால் டென்ஷன், எரிச்சல், கவலை, மற்றும் குழப்பம் அடைவது,

Somato From
Disorder : உடல்ரீதியாக எந்தகாரணமும் இல்லாமல் மனதில் ஏற்படும் பிரச்சனைகளால் நமக்கு மாதகணக்கில் ஏதாவது உடல் தொந்தரவுகள்(வாந்தி, பசியின்மை,தலைவலி)

Dissociative Conversion Disorder :  பிடிவாதமானவர்கள் தங்களின் கோபம், ஏமாற்றம், வருத்தம், விரக்தி போன்ற உணர்வுகளை மனதில் அடைத்துவைத்தல், அப்படிஅடைத்து வைக்கப்பட்ட உணர்வுகள், பின் உடல் நோயாக வெளிப்படும்.
எ.கா : திடிரெனபள்ளி அல்லது வீட்டில் மயக்கமாவது , உடல் வலி, உடல் மரத்து போகுதல்  போன்றவை...

 Hypochondriacal Disorder : உடலில்ஏற்படும் பெரிய தொந்தரவுகளை வைத்து தனக்கு ஏதோ ஹார்ட்- அட்டாக் அல்லது கேன்சர் போன்ற எதோபெரிய வியாதி வந்து விட்டது என எண்ணி மனதை தேவை இல்லாமல் வருத்திகொள்வது.
Avoidant Personality Disorder : தனக்கு மற்றவர்களை போல அழகு இல்லை, திறமை இல்லை தன்னை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்என் தன்னை தானே தாழ்த்திக் கொள்ளுதல் அதனால் பொது இடங்களில் போககூச்சப்படுதல்.

இப்படி இருக்ககூடிய மனநிலையை சாதரணமாக முதல் நிலை பிரச்சனை என கூறுவர்.. இப்படிஇருக்கும் போதே  மன நல மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனைகளை பெறுவது அடுத்தகட்டத்திற்க்கு அதாவது தீவிரமான மன நலப்பிரச்சனைக்குஎடுத்துச் செல்லாது.


பிரச்சனைகள்

தீவிரமான பல மனநலபிரச்சினைகள்:

Psychosis :தனக்கு யாரோ கெடுதல் பண்ணுவதாகவோ அல்லது செய்வினை வைத்து விட்டதாக கற்பனைசெய்தல்
, வெளியில் யாரோ ஏதாவதுபேசினால் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று எண்ணுவது,

 தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டதாக கற்பனை
, மனைவி மீது சந்தேகப்படுதல், தன்னை யாரோ கொலை செய்வதாகவும், தனக்கும் தன குடும்பத்திற்கும்கெடுதல் பண்ணுவதாகவும் நினைத்து அழுதல், புலம்புதல், பயப்படுதல்....
Mania : அளவுக்கதிகமாக சந்தோஷம் அதிகமான சுறுசுறுப்பு, அதிகமாக பேசிக் கொண்டிருப்பது, தனக்கு ஏதோ சக்தி இருப்பதாகவும், பிறக்கும் போதே தான் சக்தியுடன்பிறந்ததாகவும், எனஎண்ணி கொள்ளுதல்,  அளவுக்கதிகமாக தன்னம்பிக்கை கொள்வது, தன்னை தானே உயர்த்தி பேசுவது, தேவையில்லாமல் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவது, அவர்கள் கேட்காவிட்டால்சண்டையிடுவது, குறைந்தஅளவு சாப்பாடு,குறைந்த அளவு தூக்கம் இருந்தாலும் சோர்வு இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பு இருப்பது,
Hallucination :தனக்குள் ஏதோ குரல் கேட்பதாக கற்பனை பண்ணிக் கொண்டு அதனுடன் பேசுவது, தானாக சிரிப்பது, ஏதோ உருவம் கண்ணுக்கு தெரிகிறது, யாரோ தொடுகிறார்கள், யாரோ தன்னை அமுக்கவதாக கற்பனைபண்ணி கொள்ளுதல்,
 அடுத்தவர் திறமை மேல் பொறாமை கொள்வது,  அதை தடுக்கும் நோக்கில்  செயலில்இயங்குவது 

இது போன்ற பிரச்சனைகள் ஒருவருக்குள் தெரிகிறது என்றால் நிச்சயமாக கவனிக்கபடவேண்டியஒன்று. அப்படி கவனிக்கபடாவிட்டால்
 அதுவே அவர்களை குணப்படுத்த முடியாத மனநல நோயாளியாக மாற்றிவிடும்.குழந்தைகள்
குழந்தைகளுக்கான மனநலபிரச்சினைகள்:

 பள்ளிக்கு செல்ல பயப்படுதல்
, படிப்பில் கவனக்குறைவு, நியாபக மறதி, படிப்பில் ஆர்வமின்மை, பிடிவாதம், சொல் பேச்சு கேளாமை, கவலை சோர்ந்த முகம், பயம், கூச்சம், போன்ற குணங்கள் அதிகமாக தெரிவது,
நாள் முழுவதும்துறுதுறுவென ஓடிக் கொண்டேயிருப்பது, (ADHD) மற்ற குழந்தைகளுடன் சேராமல் இருப்பது,(Autism)
தூக்கத்தில் இருக்கும்
 பொழுது சிறுநீர் கழித்தல், தவறி எழுதல், தூக்கத்தில் பேசுவது, நடப்பது, பற்களை கடிப்பது, தூக்கத்தில் கிணற்றில் விழுவது போல் பிரம்மை 

குழந்தைகளுக்கு இப்படி பலவாறாக மன குழப்பங்கள் தென்பட்டால் கண்டிப்பாக பெற்றோர்கள்
 கவனிக்கபட வேண்டும்.குழந்தைகளிடம் அன்பாக நடந்து அவர்களுடைய பிரச்சனைகளை அறிந்து அதற்கு தகுந்தார் போலநாம் நடந்து கொண்டு அவர்களை பிரச்சனைகளிருந்து மீட்டு எடுத்து வர வேண்டியது பெற்றோரின் கடமை. பிள்ளைகளின்மனநல பிரச்சினைகள் தொடர்பாக பெற்றோர் கவனம் செலுத்தாமையானது இளம் வயதில் அவர்கள்கடும் மனநல பாதிப்புக்களுக்கு இலக்காக நேரிடும் என தேசிய மனநல சுகாதார ஆய்வுநிறுவனம் குறிப்பிடுகின்றது.


முதியோர்

முதியோர்களுக்கான  மனநலபிரச்சினைகள் :
நியாபக மறதி, பாதை மறந்து போகும் குழப்பம், உறவினர்கள் பெயரை மறந்து போகுதல், கவலை, பயம், சந்தேகம், தீராத தொந்தரவுகள், உடல் வலி, தூக்கம் போன்ற பிரச்சினைகள் 
முதியோர்களை மிகவும் அன்பாக உபசரித்து அவர்களை குழந்தை போல தான் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ மிகவும் சோர்வடைந்து இருப்பதாகதோன்றினால் தக்க சமயத்தில் அவர்களை கவனிக்கப்படவேண்டும்.


உறக்கம்

தூக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
தூக்கமின்மை, பயம், கவலை, அன்றாட பிரச்சனைகளை  நினைத்து தூங்க ஆரம்பித்தல், பிரச்சினையால் தூக்கத்தில்நடுவில் விழிப்பது, அதிகாலைசீக்கரமாக அழுவது, நிம்மதியில்லாததூக்கம், புத்துணர்ச்சி இல்லாமல் முகம் வீக்கம், அதிகமாக தூக்கம், காலை நேரத்தில் தூக்கம், கட்டுபடுத்த முடியாமல் படிக்கும்நேரத்தில் தூக்கம் வருதல்.

மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு நாளைக்கு சராசரியாகமனிதன் 6 மணி முதல் எட்டு மணி நேரம் வரை தூங்கலாம். அப்படி குறைவான தூக்கத்தால்அதிகமான பிரச்சனைகள் நேரிடும். எனவே தூக்கம் சம்பத்தப்பட்ட பிரச்னைகளையும் முதலில்கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்

பிரச்சனை வந்த பின் அதனைத் தீர்க்க முற்படுவதும் தீர்ப்பதும் திறமை. அத்திறமைவாய்க்கப் பெற்றாலே போதுமானது. ஆனால் தற்கால உளவியலில் சிறந்த ஆளுமையினர்பலரிடம் நடத்தப்ப்பட்ட ஆய்வுகளில் புதிய ஆளுமைப் பரிமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.அது பிரச்சனை வருமுன்னே பிரச்சனைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆளுமைப்பண்பாகும். இவ்வாறு அடுத்த பிரச்சனை எப்போதும் வரலாம் என்று ஒன்றைத்தீர்த்து விட்டு அடுத்ததை எதிர்பார்த்து காத்திருக்கும் மனநிலைகொண்டவர்கள் எப்போது பிரச்சனை வந்தாலும் கலங்குவதில்லை.இவர்களிடம் அவசர காலத்தில் சிக்கலை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் மன ஆற்றலும்காணப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனை எப்போது வந்தாலும் அதனை சுலபமாகமுடித்துவிட்டு அடுத்ததை எதிர்கொள்ள காத்திருங்கள்.

~மகேந்திரன்