என்னுடைய முதல் மேடை ஸ்ரீ நேரு வித்யாலய NSS மாணவர்களுக்காக சிறப்பு சொற்பொழிவு ஆற்ற எனது நண்பர் பழனியப்பன் பரிந்துரைக்க மறுக்க மனம் இல்லாமல் சென்றேன் .


அங்கு 70 மாணவர்கள் படைக்கு முன்னாள் நான் என்ன பேச போகிரோமோ என்ற சிறு தயக்கம் , பேச என்னை ஒரு மாணவி அழைக்க மைக் முன்னாள் நான், எனக்கு முன்னாள் மாணவர்கள் , தயக்கத்துடன் உரையை துவக்கினேன் ,நான் பேசுவதை மாணவர்கள் கவனிப்பதை நான் கவனித்தபடியே உரையை தொடர்ந்தேன் . நான் செய்த சேவைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்
இதை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டேன் . அதனை தொடர்ந்து மாணவர்களிடம் முகத்தில் மாற்றம் காணமுடிந்தது , தாங்களும் மனிதகுலத்தை காக்கும் இந்த சேவைக்கு வருகிறோம் என்ற மாற்றம் அதில் கண்டேன் ,
இறுதியில் மனித நேயம் தினம் ஒன்றை உருவாக்குவோம் உலகமெங்கிலும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் மாணவர்களிடம் இருந்து விடை
பெற்றேன் .விடை பெரும் வேளையில் எனக்கு இராமாயணம் புத்தகம் ஒன்றும் மாணவர்கள் பரிசளித்தனர் ...