(இதை கிளிக் செய்தால் அந்த உருக்கமான காட்ச்சியை காணலாம்.)
நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா வயது 29 இருக்கும் என்பவரை கோவிந்தராஜ் மனிதநேயமுடயவர் சாலையோரம் பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி கோவை ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து உள்ளார்,
இதனை தொடர்ந்து நிர்மலாவை ஸ்ரீ அன்பாலயம் நல்லபடி பராமரித்து வந்தது ,இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார்,
அசோகன், சண்முகம், பெத்தாத்தால், இது போன்ற ஆதரவை தொலைத்த இன்னும் பலரை சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துவைத்தது குறிப்பிடத்தக்கது...
ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் வீடு இருக்கும், சொந்தங்கள் இருக்கும் பெத்தவங்க தான் பிள்ளைகளை தொலைத்துவிட்டு படும் அவஸ்த்தை மிக கொடியதுங்க, நிர்மலா, அசோகன் இதுபோன்றவர்கள் மனநிலை சரியில்லா காரணத்தால் தனது சொந்தங்களை தொலைத்துவிட்டு சாலையிலும், ஆதரவற்ற இல்லங்களிலும் நிறையப்பேர் இருக்கின்றார்கள், அவர்களுடைய பெற்றவங்களும் இவர்களை காணமல் தேடிக்கொண்டுதான் இருக்காங்க கண்ணீருடன்,
அவங்களுக்கும் உண்மையான மறுவாழ்வு கிடைக்கவேண்டும்,

--

P.Mahendiran
9843344991
Tweet | ||||

2 comments:
நல்ல விழிப்புணர்வூட்டும் பகிர்வு.இப்படியான நல்ல உள்ளங்களும் நம்மிடையே இருப்பது,மகிழ்ச்சி!
மனித வாழ்வில் சமுதாயமும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து, அனைவரும் இதைபோல் வாழ்வின் ஒரு சிறு பகுதி நேரத்தையாவது சமுதாயத்திற்காக செலவிட்டால். சொந்த வாழ்க்கை மன அமைதியோடு இருக்கும்.
Post a Comment