Tuesday, July 24, 2012

மனசு

 எவ்வளவு தான்
எச்சரிக்கையாக இருந்தாலும்
களவு போகும்
மனசை காப்பாற்ற
முடிவதே இல்லையே..!

Saturday, July 14, 2012

திருமதி. கண்ணம்மாள் அவர்களுக்கு உறவை தேடிகொடுத்தது ஈரநெஞ்சம் அமைப்பு / Mrs Kannammal reunited with her family

ஈர நெஞ்சம்- சேவைகள்" (38 /2012 - 11 .07 .2012 யின் தொடர்ச்சி) ******கடந்த இரண்டு நாட்களாக திருமதி. கண்ணம்மாள் அவர்கள், கோவையில் உள்ள அன்னை தெரேசா காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வந்தார்கள். அவரை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்த பொழுது தெரியவந்தது என்னவென்றால், அவர் எதையோ பறிகொடுத்து இருப்பது போல இருந்தார்கள். (திருமதி கண்ணம்மாள் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே ). இதற்கிடையில், 12/07/12 மதியம் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக திருமதி. கண்ணம்மாள் அவர்களின் நிலைமை பரிதாபமாக இருப்பதை அறிந்து அன்னை தெரேசா காப்பகத்தின் நிர்வாகத்தின் அனுமதியுடன் அவர்களை வாடகை காரின் மூலமாக அழைத்துக்கொண்டு சின்னதடாகம் சென்று பார்க்கலாம். இவரது உறவினர்கள் பற்றிய தகவல் கிடைக்குமா என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மதியம் மூன்று மணிக்கு மேற்கொள்ளப்பட்ட உறவினர் தேடும் பணி இரவு எட்டு மணிக்கு தடாகம் பகுதியில் ஒவ்வொரு வீடாக ஒவ்வொருவரையும் அணுகி புகைப்படத்தையும் அவரையும் காட்டி இவரை தெரிகிறதா? இவரது உறவினர்கள் இந்த பகுதியில் இருக்கின்றார்களா என்பதை கேட்டுக்கொண்டு இருக்க ஒரு பழம் வியாபாரம் செய்யும் ஒருவர் இவரை தெரியும் அவரது வீட்டுக்கு எங்களையும், அவரையும் அழைத்துக்கொண்டு சென்றார். "ஈர நெஞ்சம்" எடுத்த முயற்ச்சி வெற்றியை நோக்கி சென்றதை மகிழ்தோம். வீட்டை காட்டியதும் அதுவரை மௌனமாக இருந்த அவர், ஒரு பெண்மணி வீட்டில் இருந்து வருவதை கண்டதும் பாதி முகம் மலர்தது. அந்த பெண்மணி திருமதி. கண்ணம்மாள் அவர்களின் மகள் சாந்தாமணி. சாந்தாமணி அவர்கள் "அம்மா எங்கம்மா போன மூணு நாளா என அழுது கொண்டே ஓடி வந்து அவரை அழைத்து வீட்டினுள் சென்றார். அவரின், அப்போதுதான் மனதார மகிழ்ச்சியில் புன்னகைத்ததை பார்க்க முடிந்தது. " ஈர நெஞ்சம்" அமைப்பிடம் திருமதி. கண்ணம்மாள் அவர்களின் உறவினர்கள் இவரை காணமல் போனதை பற்றி கூறும் பொது, அவர் எப்படி போனார் என்று தெரியவில்லை நாங்கள் மூன்று நாட்களாக தேடி வருகிறோம் காவல் நிலையத்திற்கு தகவல் நாளை காலை கொடுக்க முடிவு செய்து இருந்தோம். எல்லா இடமும் குறிப்பாக அரசு மருத்துவமனை , மற்றும் கோவையில் உள்ள முக்கியமான இடங்கள் என அனைத்து இடங்களிலும் தேடிவிட்டோம். இவர் கோவையில் உள்ள சரவணம்பட்டிக்கு இங்கு இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரம் இருக்கும் அவளவு தூரம் எப்படி சென்று இருப்பார் என தெரியவில்லை. இவரை, (திருமதி. கண்ணம்மாள்) கண்டு பிடித்து எங்களிடம் குடுத்த " ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள். திருமதி.கண்ணம்மாள் அவர்களின் மருமகன், திரு. ஆறுமுகம், மகள். சாந்தாமணி, பேத்தி. சிலோக்ஷனா, பேத்தியின் கணவர் திரு.சுப்பிரமணி, திருமதி. கண்ணம்மாள் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த இருக்க அந்த மகிழ்ச்சிக்கு காரணம் "ஈர நெஞ்சம்" என்ற மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பு திருமதி. கண்ணம்மாள் அவர்களின் குடும்பத்தை விட்டு விடை பெற்றது. எங்களது சேவையை காவல் துறையும் பாராட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெற்ற சந்தோசத்தை இந்த கானொளியில் காணலாம்.

http://youtu.be/dmWUG0wmtdU

https://www.facebook.com/eeranenjam~நன்றிஈரநெஞ்சம்(40/2012)------------

“EERA NENJAM – Services (38/2012 – 11.07.2012 continuation) Though, Mrs Kannammal was well taken care by Teresa Home, Coimbatore for the past two days, it seems she was upset like homesick. By looking into her situation, we, “EERA NENJAM” and our volunteers have decided to take her into Thadagam area, Coimbatore through a private taxi with a permission from Tereasa Home authorities. We have started the journey at 3.00 p.m. We have almost knocked all the doors at Thadagam, Coimbatore area and asked the peoples about Mrs Kannammal by showing her and her photo. It was continued till 8.00 p.m. Fortunately, a shop-keeper (selling bananas) told us that he knew her and took us to her house. We were happy that the journey would be going to be ended soon in a pleasant manner. Mrs. Kannammal was starting smiling at a woman, who came out of that house. She was none other than Mrs. Santhaamani, daughter of Mrs Kannammal. She cried over her and took her into the house. They were in tears for the past three days on the whereabouts of Mrs Kannammal. When we asked, her daughter told us that they would not know how she left their house three days before. It seems they were searching for the past three days especially at places like Government hospital and important places and about to give police complaint. They were surprised to note that how she would have gone to a place which is about 25 km from her house. They thanked our organization. The peoples who joined in the joyous moments were her son-in law Mr Arumugam, daughter Mrs Santhamani, grand-daughter Sulochana and her husband Mr Subramani. The police have also applauded our work. The video in which they expressed their feelings and how they appreciated our work is available in the following video link.

ThanksEERA NENJAM(40/2012)








Monday, July 09, 2012

ஈரநெஞ்சம் சேவையால் முப்பத்தி ஒருவருடத்திற்கு பிறகு பார்வை கிடைத்தது


"ஈர நெஞ்சம் சேவைகள்"

******

இரண்டு மாதங்களுக்கு முன்பு, " ஈர நெஞ்சம்" அமைப்பின் தொண்டூழியர்கள் மற்றும் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை, மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி அங்குள்ளவர்களுக்கு, அரவிந்த் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் வித்யா தேவி தலைமையில் 11 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு நேரில் வந்து அங்கு இருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தினர். அதில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காளியம்மாள் (வயது எழுபத்தி எட்டு, இவருக்கு முப்பத்தி ஒரு வருடமாக முற்றிலும் பார்வை தெரியாமல் இருந்தார்) அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு, தற்பொழுது அவருக்கு பார்வை தெரிய வந்துள்ளது. காளியம்மாள் அவர்கள் அளவில்லாத மகிழ்ச்சியும் ஆனந்ததோடும் காணப்படுகிறார். அந்த காணொளி, உங்கள் பார்வைக்கு.

"ஈர நெஞ்சம்" நண்பர்கள் எடுத்த முயற்ச்சி வீண்போகவில்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுபோல், இன்னும் நிறைய நற்செயல்கள் எங்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம் நடைபெறுவதட்கு உங்கள் ஆதரவும், கடவுளின் அருளும் கிடைத்திட அனைவரும் பிராத்திப்போமாக.
~நன்றி.
ஈர நெஞ்சம் (35 /2012 )
https://www.facebook.com/eeranenjam


******
"EERA NENJAM Activities"
An eye camp was co-organized by "EERA NENJAM" organization and conducted at "Theresa Home", Coimbatore with the help of 'Arvind Eye hospital" for more than hundred unprivileged persons. A team of eleven persons from Arvind Eye hospital Coimbatore, led by Dr Vidhya Devi, have performed their check-ups on them. On that occasion, an elder woman, Mrs Kaliyammal (78), who had vision problem for about thirty one years , was operated and pleased to inform you that she is alright now and could visualize things. She is very happy now and wished our organization. The video clipping is attached herewith for your kind reference.

"EERA NENJAM" salutes "Arvind Hospital" and the volunteers on this occasion. We are proud of ourselves on this occasion to clear her vision problem.

We request your help and the almighty to perform these kinds of good activities through our "EERA NENJAM" Trust.
~ Thanks (35/2012)
EERA NENJAM

Wednesday, July 04, 2012

இலவசம் வேண்டாம் நண்பா

நானும் மற்றொருவரும் பேசிக்கொண்டு இருந்தோம் ,

அவர் என்னை பார்த்து -
"எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?"

அதற்க்கு நான் -
"கஷ்டப்படாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் "

அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே -
"என்னை பார் , இலவச அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் போரடித்தால் இலவசமாக கொடுத்த வண்ண தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிப்பேன், உழைக்காமல் நோய் வந்தால் இலவசமாக அரசு காப்பிடு அதில் உயர் சிகிச்சை பெறுவேன் "

நான் -
"உழைக்காமல் எப்படி இத்தனையும் முடியுமா ?"
அவர் சிரித்துக்கொண்டே -
"நாம் யார் தெரியுமா ?
"தமிழ் நாட்டு குடிமகன்"
நம் நாட்டில் உணவிற்கு அரிசி இலவசமாக தருகிறார்கள்,
சமையல் கேஸ் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்க வண்ண தொலைகாட்சி இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்,
எதற்கு உழைக்க வேண்டும்?"

நான்-
"உன் எதிர்கால சந்ததியர்களின் நிலை என்ன ?"

நமட்டு சிரிப்பில் அவர்-
"மனைவி பிள்ளை பெற்றால் இலவச சிகிச்சையுடன் ருபாய் 5000 , குழந்தைகளுக்கு இலவச படிப்பு மற்றும் சத்தான உணவு அதுவும் முட்டையுடன், பாட புத்தகங்கள் இலவசம் பள்ளிக்கு செல்ல மிதிவண்டி இலவசம் , பேருந்து கட்டணம் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம், ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்"
தேவை என்றால் மாப்பிள்ளை பார்க்க பேப்பரில் இலவச விளம்பரம், மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும், இவ்வளவு இலவ்காசம் இருக்க நாம் எதற்கு உழைக்கனும் "

வியப்பில் வியந்து போனேன் நான் -
"என் நண்பனே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?"
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது...
ஒன்று லஞ்சம்..!
மற்றொன்று பிச்சை..!
இதில் நீ எந்த வகை ? எதை நான் எடுத்துக்கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேறி ஆகிறாய் - ஒரு வேலை இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ????
கஷ்ட்டப்பட்டு உழைத்தவர்களிடம் களவாட நீ உள்ளாவாய்,
சரி இதே நிலை வளர்ந்தால் - அதாவது இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவான தமிழகம் கள்வர் பூமியாக மாறும் நிலை
வெகு தொலைவில் இல்லை .
நண்பனே விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமுலகத்தை தலை நிமிரசெய்திடு
நாளைய தமிழகம் நம் கையில் நண்பனே சிந்திப்பாயா இந்தியாவும் வல்லரசாக வேண்டும் அப்படி ஆகவில்லை என்றாலும் சரி ஒரு சோம்பேறியை பெற்ற தாய் இவள் என்ற உன் அன்னையை இழிவுபடாமல் பார்த்துக்கொள்"
என நான் கத்தி முடிப்பதற்குள் அவன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் ...!!!

Tuesday, July 03, 2012

ஆதரவற்ற பத்தாம்வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு ஊக்கதொகை,

"ஈர நெஞ்சம் பணிகள்"
******
ஆதரவற்றவர்களின் நலனுக்காக உருவானது  "ஈர நெஞ்சம்" என்ற அமைப்பு என்பதை  நிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் 1400 ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் பெற்றோர்கள் அற்ற மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில்  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கதொகை மற்றும் ஈரநெஞ்சம் அமைப்பின் ஊக்க சான்றிதல் வழங்க முடிவு செய்ததை 04 .06 .2012  அன்று ' ஈர நெஞ்சம்' அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை  150  ஆதரவற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதல்கள் கிடைக்கப் பெற்றன. இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. இதன், முதல் கட்டமாக  ஊக்கதொகை மற்றும் ஊக்க சான்றும் கொடுக்க கோவையை சுற்றி உள்ள ஆதரவற்ற காப்பகத்தில் உள்ள அதிக மதிப்பெண் எடுத்துள்ள 12  ஆதரவற்ற  மாணவர்களை நேரில் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கதொகை மற்றும் ஊக்க சான்றிதல்களும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி,  கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமத்தில் 30 .06 .2012 அன்று நடந்தது. இதனுடன், அந்த காப்பகத்தை சேர்ந்த  185 ஆதரவற்ற குழந்தைகளை மையமாக கொண்டு சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு "ஈர நெஞ்சம்", கோவை பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண்மருத்துவமனை  இணைந்து கண்பரிசோதனை  முகாம் நடத்தப்பட்டது.  மேலும், இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும்  மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று 30 /06 /12 அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 வரையிலும் நடந்தது. இந்த விழாவில் திருப்பத்தூரில்  சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில்  இருந்த ஒருவரை திருப்பத்தூரில் உள்ள அன்பு இல்லம் என்னும்  காப்பகத்தில் சேர்த்து அவருக்கு குணமாகி அவரது  உறவினர்களோடு இணைய காரணமாக இருந்த கோவையை சேர்ந்த சுதர்சனன், கோவையில் 90 வயதான ஒரு மூதாட்டி மூன்று நாளாக சாலையில் மயங்கி விழுந்த அவரை அவருக்கு மருத்துவ உதவி கொடுத்து அவரை அவரது வீட்டாருடன் சேர்த்துவைத்த மோகன சுந்தரம் இருவரையும் பாராட்டி  பொன்னாடை போர்த்தப்பட்டது. மற்றும், " ஈர நெஞ்சம்' அமைப்பின் சார்பில், 12 மரக்கன்றுகளும் நடப்பட்டது   என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த "ஈர நெஞ்சம்" தொண்டூழியர்களுக்கும் அனைவருக்கும் '"ஈர நெஞ்சம்" நினைவு படம் வழங்கப்பட்டது.இந்த  நிகழ்விற்க்காக உடல் உழைப்பையும், பொருள் உதவியும் நல்கிய அனைத்து உள்ளங்களையும் "ஈர நெஞ்சம்" இரு கரம் கூப்பி வணங்குகிறது. ******
நன்றி (31 /2012 )
ஈர நெஞ்சம்
......
“EERA NENJAM”  Activities
******
“EERA NRNJAM” had announced, educational sponsorship to the pupils, who have excelled in their 10th standard and +2 board examinations, from orphanages and homes of Tamil Nadu state on 04.06.2012. We have received about 150 requests from various homes of Tamil Nadu and still on going. In conjunction with that for a first phase, we have organized a function to give away the certificates and money to twelve children, hailed from Coimbatore vicinity. This function has been conducted along with the Free eye camp on 30.06.2012 from 09.00 a,m. to 05.00 p.m. at Universal Peace Foundation (UPF), Karumaththampatti, Coimbatore. There were about 200 children from various homes, in and around Coimbatore have been benefitted in this free eye camp, co-organized by EERA NENJAM, Coimbatore District Blindenss Control Society, Arvind eye hospital, Coimbatore and UPF,Coimbatore. Lunch was provided to all participants. On this occasion, Mr Sudarsan was honoured for reuniting a mentally–ill health person to his family with the help of Anbu Illam at Tirupattur. Mr Mohana Sundaram was honoured for reuniting an elder lady (90) who was unattended for three days at road-side. We have also planted 12 trees at UPF on this occasion. All the ‘EERA NENJAM volunteers have been honoured by memento of EERA NENJAM photos. Finally, Mrs Mani Megalai have given a vote of thanks.
“EERA NENJAM” Trust hereby salute all the persons who have given their time and services and the sponsors on this occasion.
~Thanks (31/2012)
EERA NENJAM

இலவச கண்பரிசோதனை முகாம் / Free Eye Camp Function

கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை திரு தபசுராஜ், "ஈர நெஞ்சம்" பொருளாளர் வழங்குகிறார். /"EERA NENJAM" Treasurer Mr Thabasuraj gave away the certificate and cheque to a student.

"ஈர நெஞ்சம்" பொறுப்பேற்ற இரு மாணவர்களுக்கு தலா, ரூபாய் 5 ,000 வழங்கப்பட்டது. /Two students were given Rs. 5,000 each for their educational expenses

திருமதி. மணிமேகலை அவர்கள் நன்றியுரை நவில்ந்தார்./Mrs Mani Megalai gave a vote of thanks.

மாணவ மாணவியர்கள், வரிசையில் நின்று கண் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். /Pupils were standing on a queue for their turn-Eye check up

கண் பரிசோதனை /Eye check up

கண் பரிசோதனை /Eye check up

கண் பரிசோதனை /Eye check up

மரக்கன்றுகள் நடுதல்/Tree plantation

"ஈர நெஞ்சம்" தொண்டூழியர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல் / Memento

மதிய உணவு வழங்குதல்/Lunch to all participants


திரு. சுதர்சனின் சேவை / Mr Sudarsan's service


திரு.மோகன சுந்தரத்தின் சேவை / Mr Mohan Sundaram's service
thanks to DC 
~மகேந்திரன் 
ஈரநெஞ்சம் 
9843344991