Tuesday, January 14, 2014

மண்பாண்டம் ஒரு கண்ணோட்டம்


உலோகம்கண்டுபிடிப்பிற்கு முன்பேநாம் மண்ணால் செய்தபாண்டங்களைபயன்படுத்தி வருகிறோம் .பல்லாயிரக்கணக்கானஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள்களிமண்ணால் உருவானமண்பாண்டங்கள்செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்என்பதற்கு புதைபொருள்ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்த பலவகையானசாட்சியங்கள் உள்ளது.அக்காலத்தில் வீடுகள் கூடகளிமண்ணால் கட்டப்பட்டு அதில்வாழ்ந்தும் உள்ளனர்.

களிமண்ணால் செய்யப்படபாத்திரங்களில் சமைக்கப்படும்உணவுகள் தனி சுவைதரும்மேலும் அவ்வாறு செய்யப்பட்டஉணவுகளில் மருத்துவகுணம்நிறைந்து இருக்கும். மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்டஉணவுகளை உட்கொள்ளும்போது இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்றநோய்கள் கட்டுப்படுத்தப்படுகி­றது என்றும் மருத்துவர்கள்சான்றளித்துள்ளனர். மண்பானைகளில்சேமித்து வைத்து உபயோகிக்கும்தண்ணீர் சுவையாகவும்குளிர்ந்தும் இயற்க்கை மாறாமல்இருக்கும். இதனால் தான்மண்பானைகளை ஏழைகளின்குளிர்சாதனப்பெட்டி என்று சொல்றோம்.

தோண்டி,குடம்,தோசைக்கல் ,இட்லிப்பானை,குளிர் சாதனப்பெட்டி,சித்திரப்பானை,காய்கறிப்பானை, மண்சட்டி, கலையம், விளக்கு,முகூர்த்தப் பானை ,பூத்தொட்டி, அடுப்பு, அகல் மற்றும் பறவைகள்கூண்டு என்று பலவகையானபொருட்களையும் இந்தகளிமண்ணால்உருவாக்கப்படுகிறது .அக்காலத்தில்வீட்டில்அரிசி தானியங்களை சேமிப்பதற்கு மிகப்பெரியஅளவில் மண் தொட்டிகள் (குதிர்)உருவாக்கப்பட்டு அதில்தானியங்களை சேகரித்து வந்தனர்வறட்சிக்காலங்களில் குதிர்மிகப்பெரிய பயனுடையதாகஇருந்தது. . வீட்டை அலங்கரிக்கமண்ணால் செய்யப்படஅலங்காரப்பொருட்கள் மற்றும்தெய்வ சிலைகள் அம்மன் காளி,அய்யனார் போன்ற சிலைகளும்செய்யப்படுகிறது.தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன்செலுத்தவும் மண் சிலை,குதிரை , கால் பாதம்,வடித்து குலதெய்வத்தை வழிப்படுவது கிராமப்புறமக்களிடம் வழக்கமாக உள்ளது.நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்நோய் குணமடையவேண்டிக்கொண்டு நோய்குணமடைந்தவுடன்பாதிக்கப்பட்ட உடல் உறுப்பினைப்போன்று மண்ணால்செய்து அதனைத்தெய்வத்திற்குக்காணிக்கை ஆக்குகின்றனர்.

தாழி (பிணப் பானை) மண்ணால்செய்யப்படஒருவகை பானைவடிவம் இதில்ஒருவர் இறந்த பின்னர்அவரது உடலை அல்லது எலும்புகளை அவர்பயன்படுத்திய பொருட்களுடன்இதில் வைத்துப்புதைத்து விடுவது வழக்கம்.இவ்வாறு புதைக்கப்பட்டத்தாழிகள் தமிழ்நாட்டில் பலஇடங்களில் கிடைத்துள்ளன.அதுமட்டும்அல்லாது இசை வாத்தியங்களானகடம் , மத்தளம் போன்றவையும்தயாரிக்கப்படுகிறது .

இவ்வளவு சிறப்புகள் உள்ள இந்தமண்பாண்டங்கள்எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

இவ்வகை மண்பாண்டங்களை செய்பவர்களை"குயவர்கள்" என்கின்றோம்,குயவர்கள் குளங்களில்சேகரிக்கப்பட்ட மணலையும்களிமண்ணையும் ஒன்று சேர்த்து நன்றாககாயவைத்து அதனை அடுத்தநாள்சரிவிகிதத்தில் தண்ணீர்கலந்து பதப்படுத்தி வைக்கப்பார்கள்

மறுநாள், கை மற்றும் கால்களால்நன்றாகபிசைந்துஇரண்டு மணி நேரத்திற்கு பின்னர்களிமண்ணை சக்கரத்தில்வைத்துசக்கரத்தை சுற்றி சுற்றி கைகளால்வார்தெடுப்பார்கள்.இப்படி உருவாக்கப்பட்டபானைகளில் அடிப்பக்கத்தில்துளை இருக்கும் அந்ததுளையை அடைப்பதற்காகநிழலில் 4 முதல் 5 மணிநேரம்உலரவைத்த பின்னர் , கல்லாலும்மர அகப்பையாலும்தட்டி தட்டி துளைகள்அடைக்கப்படுகின்றனர் அதன்பின்னரே முழுமையானபானை வடிவம் கிடைக்கிறது.அதன் பின்னர் சூரிய ஓளியில்நாள் முழுவதும்உலரவைத்து அதற்கு வர்ணம்பூசி மீண்டும் பிறகு சூரியஓளியில் உலர வைக்கிறார்கள்.நன்கு உலர்ந்தபானைகளை சூளையில்அடுக்கி, விறகு, வைக்கோல்ஆகியவற்றின் மூலம்தீயிட்டு வேக வைக்கிறார்கள்.இப்படி வேகவைக்கப்படும்பானைகளுக்கு 800சென்டிகிரேட் வெப்பம்தேவைப்படுகிறது.சூடு குறைவாக இருந்தால்மண்பானைகள் வேகாது.அடுப்பு சூடு அதிகரித்தாலும்பானைகள் உடைந்து விடும்.எனவே இதில் முக்கிய கவனம்செலுத்த படுகிறது.பானைகளை வடிவமைப்பதில்பொறுமையும் நிதானமும்தேவை. ஒருநாள் முழுவதும்அடுப்பில் இருக்கும்பானைகளை மெல்லஎடுத்து அடுத்தநாள்விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள்.

(அகல் விளக்கு செய்யும் முறை  கானொளியில்  இங்கே
http://www.youtube.com/watch?v=qcMpTprlBXg&list=UUlItkV-aZwettjImLxCk7qw&feature=share )

பானைகளின்உருவாக்கத்தை தற்போதையநிலையைப்பற்றி கோவை கவுண்டம்பாளையம்சேர்ந்த குயவர் சேகர்கூறும்போது .

தற்போது நிலையற்ற பருவகாலம், ஏரிகளில் களிமண்எடுப்பதில் மாவட்ட நிர்வாகம்காட்டும் கெடுபிடி, மண்தட்டுபாடு,மண்பானை தயாரிக்க பயன்படும்உபகரணங்களின் விலை ஏற்றம்போன்ற காரணங்கள்தற்போது பெரும்சிரமமாக உள்ளது.ஒரு மண்பானை உருவாகமூன்று முதல் நான்கு நாட்கள்.ஆகிறது. அது மட்டுமில்லாமல்100 பானைகள்உருவாக்கும்போது அதில் 75பானைகள்மட்டுமே தேறுகிறது.மண்பாண்டங்களின்விற்பனை காலத்திற்கு ஏற்றார்போலமாறுபடுகிறது,கார்த்திகை மாதத்தில் அகல்விளக்கு, தை மாதத்தில்பொங்கல் பானை வெய்யில்காலங்களில் சாதாரண தண்ணீர்பானை எனதயாரிக்கப்பப்படுகிரது .ஒரு குடும்பத்தின்அடிப்படைதேவையை பூர்த்தி செய்வதற்கு தகுந்தவருமானம்மட்டுமே ஈட்டமுடியும்சேமிப்பு என்பது வெறும் கனவாகவே இருக்கிறது . மழைக்காலங்க­ள் வந்துவிட்டால் தொழில்முற்றிலும் முடங்கிவிடும் .குறைந்த வருமானம்கிடைபதால் நவீன இயந்திரங்கள்மற்றும் அச்சுக்கள் வாங்க இயலாதநிலையால் எங்களைப் போன்றகுயவர்கள்சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.பரம்பரை பரம்பரையாக இந்த தொழில்செய்பவர்களால்தான் இந்தமண்பாண்டங்கள் தயாரிக்கமுடியும் .ஆனால் இந்தகணினி காலத்தில் இதுபோன்றதொழில்களில் ஈடுபடவேஇளைஞர்கள் ஆர்வம்காட்டுவதில்லை, இந்தநிலை நீடித்தால் பிற்காலத்தில்மண்பாண்டகங்ள் செய்ய ஆள்இல்லாத அவல நிலை ஏற்படவும்வாய்ப்புண்டு. மேலும்தற்போதெல்லாம் பொங்கல் உட்படஉணவு தயாரிக்க உலோகபாத்திரங்களை பயன்படுத்துவதனால்வெகு விரைவில் இந்த தொழில்அழியும்நிலை ஏற்ப்பட்டுள்ளது . இந்தநிலை ஏற்ப்படாமல் இருக்ககுயவர்கள் பல பள்ளிகளிலும்கல்லூரியிலும் மண்பானை தயாரிக்கும்முறையை செய்து காட்டி விழிப்புணர்வையும்ஏற்ப்படுத்தி வருகிறோம்.

மேலும் அரசாங்கமும் நவீனஇயந்திரங்கள் மற்றும் அச்சுக்கள்வாங்க மானியம் வழங்கிஅழியும் இந்த குயவு தொழிலைகாப்பாற்ற வேண்டும் என்றார்.

~மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

சுந்தரா முத்து said...

சிறப்பான பதிவு.

இதுவரை அறியாத தகவல்களை மிக விளக்கமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி!

Post a Comment