அகத்தின் அழகு
முகத்தில் தெரியும் சொல்வாங்க சலவை தொழிலாளர்கள் சமுதாயத்தில் உள்ள பலரது அகத்தின் அழுக்கை மறைக்கப்பட்டு
முகம் அழகாக உறுதுணையாக இருக்கிறார்கள் .அது என்னமோ தெரியலை இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கம்யூட்டர் உலகத்திலும் ஆங்காங்கே இந்த சமூகமானது
சலவை தொழிலாளர்களை கண்டால் தாழ்த்தப்பட்டவர்களாகவே
கருதப்படுகிறது. இவர்களை தனிமை படுத்துவது இவர்களுக்கு தண்ணீர் தருவதேன்றாலும் தனியொரு பாத்திரம் வைப்பது
வீட்டினுள் அனுமதிக்காமல் வாசலோடு அனுப்பிவிடுவது ஆங்காங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது வீட்டில்
வளர்க்கும் பிராணிகளுக்கு கிடைக்கும் மதிப்பு கூட மனிதர்களாகிய இவர்களுக்கு இந்த சலவை
மனிதர்களுக்கு சமூதாயம் கொடுப்பது இல்லைங்க . இந்த சலவை தொழிலாளர்கள் என்னும் வண்ணான் இனத்தவர் இல்லாமல்
எந்த ஒரு சாவு வீட்டிலும் பிணம் சுடுகாடு செல்வதில்லை. ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பின்னர் அவனது
ஈமக்காரிய சடங்குகளை செய்ய இந்த சலவை தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் . சமுதாயம் இவர்களை
தன்னுடைய பொலிவிற்கு பூச்சாக பயன்படுத்திக் கொள்கிறது ஆனால் இவர்களின்
பொலிவற்று நொலிவுற்றிருப்பதை கண்டுகொள்வதில்லை.
சலவை தொழிலாளர்களும் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்த சலவையாளர் காலனியில் சுமார் 75 வருடங்களுக்கு மேலாக மூன்று தலைமுறையினருக்கு மேல் 150 குடும்பங்களுக்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த சலவை தொழிலாளர்கள் தன்னுடைய மூதாதையர் காலத்தில் இருந்தே இச்சலவை தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள். இதன் மூலம் வரும் வருமானத்தையே நம்பி உள்ளனர். ஆகையில் இதில் பெரும்பாலானோர் படிப்பறிவின்றி காணப்படுகின்றனர். இவர்களின் ஒவ்வொரு நாள் வேலையும் அன்றைய வயிற்றுப் பசியை தீர்க்க மட்டுமே சரியாக இருக்கிறது. அதுவும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பாடுபட்டால் மட்டுமே. இந்த சலவை தொழிலாளர்களின் பிள்ளைகள் வறுமையின் காரணமாக இளம் வயதிலேயே தன்னுடைய குடும்ப தொழிலை செய்ய பழகிக்கொள்கிறார்கள். இதனால் சிறு வயதிலேயே பள்ளி படிப்பில் இருந்து இடையில் நின்றோரோ இவர்களில் அதிகம் காணப்படுகின்றனர். நாகரீகத்தின் வளர்ச்சியில் இந்த தலைமுறையில் தான் இவர்களில் சிலர் பட்டப்படிப்பை தொடுகின்றார்கள் .
தண்ணீரே
இவர்களுக்கு முதலீடு அதுவே இவர்களுக்கு சாபக்கேடும் கூட , தண்ணீரில் இறங்கி இவர்கள் துணிகளை சலவை செய்வதால்
இவர்களுக்கு உள்ளங்கால் வெடிப்பு , சேற்றுப் புண், சிரங்கு,
புண், மூட்டுவலி போன்ற தண்ணீரால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு
உட்பட்டு தான் தங்களுடைய தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தாங்கும் விடுதி ,
மருத்துவமனை போன்ற இடங்களில் இருந்து
கொண்டு வரும் துணிகளைசலவை எல்லாக்காலமும் சலவை செய்யவேண்டி இருக்கும் . வெயில் காலங்களில்
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்கி அல்லது
ஊரெல்லாம் அலைந்து தண்ணீர் கொண்டுவந்து சலவை செய்கிறார்கள் . மேலும் இப்படி
பாடுபடும் சலவை தொழிலாளர்களுக்கு என்று மத்திய அரசோ மாநில அரசோ எந்த ஒரு சலுகையோ நல திட்டங்களையோ
இதுவரை வழங்க வில்லை என்பது கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது , இவர்களுடைய ஏக்கங்கள் எல்லாம் படிப்புக்கும்
படித்தவர்களுக்கு என்ற வேலைவாய்ப்பு இட ஒதுக்கிடும் வீடு இல்லாதவர்களுக்கு
வீட்டுவசதியும் எதிர் நோக்கி வாழ்கிறார்கள்.
~மகேந்திரன்
Tweet | ||||
No comments:
Post a Comment