Thursday, April 26, 2012

சில அடி தள்ளி இருந்தும்

பல மைல்களுக்கு அப்பால்

இருந்தாலும் தன் துணையை

அடையாளம் கண்டுக்கொள்ளும்

பெண் பட்டாம் பூச்சி...

சில

அடி தள்ளி இருந்தும்

ஏனடி என்னை கண்டும் காணமல்

...நீ ?



Thursday, April 19, 2012

வெறும் சாதாரணமாக...

நீ
உயிரைவிட
உயர்ந்தவள்....
ஆனாலும்
வெறும் சாதாரணமாக
உன்னை
உயிரே என்றுதான்
அழைக்க முடிகிறது..♥

Wednesday, April 18, 2012

facebook நண்பர்கள் அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து ஆதரவற்றவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்


18/04/12 அன்று  முகநூல்  அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து , கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை,மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் படி அங்குள்ளவர்களுக்கு  18/04/12 காலை அரவிந்த் மருத்துவமனை மருத்துவர் dr. வித்யா தேவி தலைமையில் 11 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு நேரில் வந்து அங்கு இருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தினர் பலருக்கு கண் கண்ணாடி பொருத்தப்பட்டு  , அறுவை சிகிச்சைக்கு   தகுதியான கண்களில் குறையுள்ளவர்களை 7 பேரை தேர்வு செய்து மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டு .  அவர்களுக்கு  அறுவை சிகிச்சை 20/04/2012 அன்று அவர்களை நல்லபடியாக அன்னை தெரேசா காப்பகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் .
இந்த முகாமிற்கு முகநூல் அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் நண்பர்கள் ஏற்பாடு செய்ய நண்பர்கள் ஆடி தபசு, Yamidhasha Nisha , Madhu Alex. மற்றும் magi mahendran  கலந்துகொண்டு முகாம் சிறப்பாக நடக்க உதவினர்.
மேலும் இந்த முகாமிற்கு ஆதரவளித்த முகநூல் அன்னக்கொடை, புன்னகை தோட்டம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நாம  எல்லோரும்  இருக்கும்  வரை யாரும் அநாதை என்பது இல்லைங்க .... 

Tuesday, April 17, 2012

மனநிலை பாதித்த கோவிந்தராஜு குடும்பத்துடன் இணைந்தார்

கடந்த 18 / 12 / 11 அன்று  ஆம்பூர் (வேலூர்) ரயில்நிலையம் எதிரே  இவரை அரைகுறை ஆடையுடன்மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்ததை  நேரில் கண்டு அவரை ஏதாவது ஒரு காப்பகத்தில் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என  நானும் (மகேந்திரன்) நண்பர் சுதர்சனனும் முடிவு செய்தோம்  . திருபதூர் பகுதியில் உள்ள "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லைத்தை தொடர்புகொண்டு இவரை பற்றி தகவல் கொடுத்து அந்த இல்லைத்தை சேர்ந்தவர்கள் நேரில் அவரை அணுகி  பரிவுடன் அழைத்து சென்று அவர்களுடைய இல்லைதில் பராமரித்து வந்தார்கள் ,

அங்கு அவருக்கு மருத்துவ உதவி கொடுக்கப்பட்டு வந்தது அதனை தொடர்ந்து  கடந்த சில நாட்களாக அவரிடம் பெரும் மாற்றம் காணப்பட்டது அவர் பேச துவங்கினார் , அவருடைய பெயர் கோவிந்த ராஜு என்றும்  பெற்றோர் சீனி கவுண்டர், கோவிந்த அம்மாள் என்றும்  முகவரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் என்றும் கூறினார் , அதனை கொண்டு காப்பகத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜுவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைத்து கோவிந்தராஜு அவர்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.



மகிழ்ச்சியான விஷயம்ங்க இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்ன என்றால் கோவிந்தராஜு அவர்களது பெற்றோரை  பிரிந்து ஆறு வருடங்கள் ஆகியுள்ளது.

கோவிந்தராஜ் அவரகளது உறவினருடன் சேர்க்க உதவிய  "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தை எப்படி பாராட்டுவது வார்த்தைகளே இல்லை சாலையோரமாக கோவிந்தராஜுவை கண்டு எனக்கு தகவல் கொடுத்த  சுதர்சனனுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்...
~மகேந்திரன்

Saturday, April 14, 2012

திருநங்கை சண்முக ப்ரியா...

அரவாணிகள் என்றால் காமத்திற்கும் காசுக்கும் மட்டுமே உலாவும் ஒரு பிறப்பு என எல்லோர் மனதிலும் படிந்து விட்டது...
அவர்களைக்கண்டால் ஏளனமாய் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் என கேலிக்கூத்தாக்கி விட்டது சமுதாயம்.
ஆனால் கோவை சௌரிபாளையம் பகுதிக்கு திருநங்கை சண்முக ப்ரியா, 35 வயது,திருநங்கை சண்முக ப்ரியா திருநங்கைகளின் தாய் அறக்கட்டளை அமைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார உறுப்பினராகவும் செயல் படுகிறார், அதுமட்டும் அல்லாது சித்திரை வெயிலில் பாதசாரிகளின் தாகம் தணிக்க கம்மன்கூழும் மோரும் விற்று பிழைப்பை நடத்திவருகிறார் . அவர் தயாரிக்கும் கம்மங்கூழ் அவ்வளவு சுவையானதாகும் . அது மட்டும் அல்லாது
கடைக்கு வருபவர்களிடம் பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொள்கிறார். இவரை யாரேனும் கேலி செய்துவிட்டால் உண்டு இல்லை என ஆக்கி விடுவார்.
திருநங்கைகள் என்றால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர் என்பது இல்லாமல் சண்முகப்ரியா உயர்ந்து வருகிறார் இவருடைய லட்சியம் எல்லாம் சொந்தமாக ஒரு சிற்றுண்டி விடுதி வைக்க வேண்டும் என்பதே. கவலை வேண்டாம் சண்முக ப்ரியா உங்களது முயற்சி வென்று சிற்றுண்டி என்ன நட்சத்திர ஹோட்டலே வைக்க கூடும்...
வாழ்த்துக்கள் சண்முக ப்ரியா...
~மகேந்திரன்


Monday, April 02, 2012

யாரும் அநாதை இல்லை~மகேந்திரன்

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில்  சாலையோரமாக பரிதாப நிலையில்  புற்று நோயால்  பலகாலம் அவதிப்பட்டு வந்த பொன்னம்மாள் வயது 92  கடந்த 4/11/11 அன்று பொது மக்கள் உதவியுடன் அன்னை தெரேசா  காப்பகத்திற்கு நான்  அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களின் பராமரிப்பில் கவனித்து வரப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது...
கடந்த சில நாட்களாக பொன்னம்மாள் பாட்டிக்கு உடல் நிலை மோசமானது மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு  சிகிச்சை பலன் அளிக்காமல் 30/03/12 மாலை அவரது உயிர் பிரிந்தது,  31/03/12 அன்று காலை 11:15 அவரது உடலை  நான்  எனது நண்பர்கள் தபசுராஜ் ,அருள் ராஜ், மகேஷ் குமார், ஸ்ரீ வசந்தா மற்றும் அன்னை தெரேசா  காப்பகம் உதவியுடன் கோவை புலியகுளம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.


உண்மையான இன்பசுற்றுலா~மகேந்திரன்,

யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சந்தோசப்படுத்தலாம் அதுவும் ஆதரவற்றவர்களை  மனதார மகிழ்விப்பது என்பது கடவுளுக்கு செய்யும்  தொண்டாகும் , முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் கோவையில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை  சேர்ந்த நூறு குழந்தைகளை மகிழ்விக்க முடிவு செய்து  அதன்படி முகநூளின் உறுப்பினர் உமா தேவி அவர்கள் உதவியுடன் அந்த ஆஷரமத்தின்  குழந்தைகளை கோவை அருகே உள்ள திரு மூர்த்தி மலை , அமராவதி ஆணை இங்கு அழைத்து செல்ல முடிவெடுத்தது ,  இந்த குழு 30/03/12 அன்று ஆஷரமத்து  நிர்வாகி சிவா ஆதமா அவர்களின் அனுமதி பெற்று 31/03/12  இன்ப சுற்றுலா பயணம் முடிவானது.
31/03/12 அன்று விடியற் காலை 5 மணிக்கு பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தில் இருந்து இரண்டு பேருந்தில் 35 சிறுமி 50 சிறுவர்கள் ஆசரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் 8 பேர் மற்றும் முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்கள் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார் ,ஈஸ்வரி  மற்றும் உமா தேவி அவருடைய மகன் பிரவீன் , உட்பட  இன்ப சுற்றுலாவிற்கு பயணம் துவங்கியது  .
பேருந்தில் குழந்தைகளும் குழு நண்பர்களுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பேருந்து அமராவதி அணைக்கு சென்றது. ஆனால் அங்கு சின்ன ஏமாற்றம். என்னவெனில், அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால், குழந்தைகள் சிறிய ஏக்கத்துடன் காணப்பட்டார்கள். அங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தது அதில் காப்பக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் காலை உணவு அருந்தி விட்டு பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு ,ஊஞ்சல் விளையாட்டு ஓடி விளையாட்டு என குழந்தைகள் விளையாட அணையில் குளிக்க முடிய வில்லை என்ற கவலை மறந்தது . மதியம் 2 மணிக்கு  திரு மூர்த்தி மலைக்கு பயணம் செய்தனர் ,
அங்கு திரு மூர்த்தி  அணையில் தண்ணீர் இருப்பதை கண்டதும் குழந்தைகள் வண்டியை இங்கேயே நிறுத்த சொல்லி தண்ணீரில் ஆட அடம்பிடித்தனர் , ஆனால் மலை அடிவாரத்தில் சிவன் கோவில் இருப்பதால் கோவிலில் சாமி தரிசனம் முடித்து மதிய உணவு அருந்தி விட்டு குளிக்க உறுதி அளித்ததால் குழந்தைகள் சமாதானம் ஆனார்கள் ,
கோவிலில் குழந்தைகளுக்காக அர்ச்சனை தரிசனம்  நடந்தது , அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது . உணவு உண்டதும் குழந்தைகளின் முகத்தில் அளவில்லா புன்னகை மகிழ்ச்சி தண்ணீரில் ஆடபோகிறோம் என்று .
குழந்தைகள்  குளிப்பதற்காக தண்ணீரில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டது , நிர்வாகிகள் மற்றும் குழு நண்பர்கள் மேற்ப்பார்வையில் குழந்தைகள் தண்ணீரில்  விளையாட ஆரம்பித்தனர் , ஆஹா அவர்களின் மகிழ்ச்சியை காண்பதே மிக மகிழ்ச்சியாக இருந்தது , தண்ணீரில் ஓடி விளையாடுவது ஒருவரின் மேல் ஒருவர் ஏறி குதிப்பதும் நீச்சல் அடிப்பதும் ,அதுமட்டும் அல்லாது நண்பர்களோடு ஒன்றாய் இணைந்து  சகஜ மாய் விளையாட நாமும் குழந்தைகளாகி போனோம்.அந்த குழந்தைகள் தாம் ஆதரவற்றவர்கள் என்ற நிலை மறந்து , அதை மறக்க வைக்க செய்த நமது முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது.
குழந்தைகள் மாலை 5 மணி அளவில் எல்லோரும் குளித்து விட்டு தேநீர் குடிப்பதற்காக ஒரு பக்கம் ஒதுங்கி அங்கு  இனிப்பும் காரமும் தேநீரும் வழங்கப்பட்டு இன்பச்சுற்றுல  நிறைவு கூட்டம் நடந்தது .
அதில் கலந்துக்கொண்ட முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார், உமா தேவி அவருடைய மகன் பிரவீன் பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து


1 . பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், சிறந்த மாணவர் மாஸ்டர் மணிகண்டன், மற்றும் சிறந்த மாணவி குமாரி. தாரணி அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, 2 . இந்த மகிழ்ச்சியான பயணத்திற்கு உதவி செய்த திருமதி. உமா தேவிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
3 . இந்த பயணத்திற்கு, அன்னக்கொடை மற்றும் புன்னகைதோட்டம் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்த திருமதி. ஸ்ரீவசந்தாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
4 . இந்த சுற்றுலாவிற்கு வந்த அனைவருக்கும் இனிப்புகளை தயாரித்து கொண்டு வந்த திருமதி. நிஷாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
5 . குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொண்ட, திரு. சுதர்சன், திரு. மது, மற்றும் மாஸ்டர் பிரவீண் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
6 . இந்த சுற்றுலா விசியத்தை கேள்விப்பட்டு, உடனே நமக்கு உதவிக்கு வந்த திருமதி. ஈஸ்வரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
7 . சாலையோரம், பத்துவருடமாக ஆதரவை தொலைத்து பரிதாபமாக இருந்த பழனி என்பவரை அவரது குடும்பத்தை தேடி, சேர்க்க உதவிய திரு, மகேந்திரனுடைய நண்பர் ,திரு. மகேஷ் குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதோடு பயணப்  பேருந்தில் ஆடல் பாடலுடன்  கோவைக்கு திரும்பினோம் .
வழக்கமாக சொல்வது தாங்க ஆனாலும் அது தான் உண்மையானதும் கூட மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விப்பதில் தாங்க இருக்கிறது,
ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் இருக்கும் வரை அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த இன்ப சுற்றுலாவாகும்.
நன்றி
~அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம்
 ~மகேந்திரன்,