Wednesday, February 29, 2012

நெஞ்சை தொட்டவர்கள் (வட அமெரிக்க தென்றல் மாத இதழ் ) வெளியாகியுள்ளது.~ மகேந்திரன்



"செயல்திறனும் அர்ப்பணிப்பும், தேசபக்தியும் கொண்ட 
நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் இந்தியாவை 
வலிமையான தேசமாக்கி விடலாம்"  
என்று கனவு கண்டார் விவேகானந்தர். 
"தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே கடவுள் சேவை" 
என்றும் அவர் சொன்னார். 
அப்படிப்பட்ட பல இளைஞர்கள் மக்கள் சேவைக்குத் தம்மை 
அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரை 
இங்கே சந்திக்கலாம்....

மகி என்ற மகேந்திரன்

கோவை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மகி என்ற மகேந்திரன். 

இவர் சாலையில் சுற்றித் திரியும் மனநலம் குன்றியோர், 
ஆதரவற்ற முதியோர், 
தன்னுணர்வற்ற மனநோயாளிகள் என யாரைப் பார்த்தாலும் 
அவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கிறார். 
இப்பணியைத் தனது வாழ்நாள் லட்சியமாகவே கொண்டுள்ளார். 
மகியால் பலர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


ஒருமுறை மகேந்திரனின் சகோதரிக்கு பொது இடத்தில் 

திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது. மக்கள் 
பலரும் விலகிப் போக, ஓரிருவர் மட்டுமே வந்து  
உதவியிருக்கின்றனர். 
பலர் வேடிக்கைமட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அந்த 
இக்கட்டான சூழலே ஆதரவற்றோருக்குத் தன்னால் முடிந்த 
சேவையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவர் 
மனதில் உண்டாக்கியது. பிறரால் அணுகக் கூட முடியாத 
அளவுக்கு முகம் 
சுளிக்கக் கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு முடி திருத்துவது, 
உடலைத் தூய்மை செய்வது, நல்ல உடை அணியச் 
செய்வது, உணவளிப்பது, அதற்குப் பின் ஆதரவற்றோர் இல்லத்தில் 
சேர்ப்பது என்று இவற்றை மிக்க அன்போடு செய்து வருகிறார். 
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்களுடன் 
இணைந்து ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு அளிக்கிறார்.

நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் 

காணாமல் போன நிர்மலாவை, மகேந்திரன் ஒரு வருடகால 
பெரும் முயற்சிக்குப் 
பின் அவளுடைய பெற்றோர்களைக் கண்டறிந்து அவர்களோடு 
இணைத்து வைத்திருக்கிறார். அசோகன், சண்முகம் 
எனப் பலர் மகேந்திரனின் பெருமுயற்சியால் இழந்த தங்கள் 
சொந்தங்களை அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு 
காணாமல் 
போனவர்கள் கூட மகியின் உதவியால் தங்கள் சொந்த 
பந்தங்களோடு 
இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சேவை பற்றிய ஒளித்தொகுப்பைக் காண:


தனது கருத்துக்களை eerammagi.blogspot.com

பகிர்ந்து வருகிறார் மகி. அங்கே காணப்படும் வீடியோக்கள் மனதை 
நெகிழ்த்துவனவாக இருக்கின்றன. நாமும் 
இப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்  
என்ற எண்ணத்தை உண்டாக்குவதும் 
உண்மை. 
மகேந்திரனின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
http://www.tamilonline.com/thendral/contentnew.aspx?id=134&cid=32 



 ,


என்ற வலைப்பதிவில் 

காக்கும் கடவுளா ? காவு கேட்க்கும் கடவுளா ? ~மகேந்திரன்


அன்று 25/02/12 ஞாயிற்றுக்கிழமை நான் (மகேந்திரன் ) கரூரில் அருகே  உள்ள எங்களது குலதெய்வ கோவிலில் எனது உறவினர் வீட்டு காதுகுத்து திருவிழா அழைப்பு வந்ததால்  சென்று இருந்தேன்...
விழா நடந்து கொண்டு இருந்தது...
கோவில் வாசலில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அதனோடு விழாவிற்கு வந்திருந்த  சின்னசிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டு, அந்த அழகிய தருணத்தை 
ரசித்தபடியே நான்... 
நான் ரசித்துக்கொண்டு இருப்பதை பொறுக்காத உறவினர் ஒருவர்  என்னை அழைத்து விழா நடப்பதை புகைப்படம் எடுக்கச்சொல்லி கட்டளை இட்டார் சம்மதித்து புகை படம் எடுத்துக்கொண்டு பொழுதை கழித்துக்கொண்டு இருந்தேன் ...
காதுகுத்துக்காக குழந்தைகளை தயார் செய்து அந்த  மொட்டை அடித்து ,  மேடையில்  உட்கார வைத்தார்கள் குழந்தைகள்  கண்ணில் வலிக்கும் என்ற  பயம் என்பதே இல்லை மகிழ்ச்சி மட்டுமே இருந்தது ..
எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி விளையாடிக்கொண்டு இருந்தது. காது குத்து நடைபெற்றது...
கோவிலில் பூஜை நடந்தேறியது...
மதிய உணவுக்கு ஒரு குரல் உத்தரவிட்டது...
கோவில் கதவடைக்கப்பட்டது ,
கோவில் வாசலில், குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்த அந்த ஆட்டுக்குட்டியை, குழந்தைகளிடம் இருந்து பிரித்து இழுத்துக்கொண்டு பூசாரி ஒருவர் கோவிலின் அருகே இருக்கும் ஐயனார் சிலைக்குமுன் கொண்டு சென்றார் , குழந்தைகளிடம் இருந்து அந்த ஆட்டுக்குட்டியை பிரித்ததும் குழந்தைகளுக்கு முகம் வாடிப்போனது ,
ஐயனார் சிலைக்கு முன் கோவில் பூசாரி சாராயம் மற்றும் தேங்காய் பழத்துடன் பூஜை, ஏதோ உளறியபடி...
இழுத்து வரப்பட்டுக்கொண்டு இருந்தது அந்த வாயில்லா ஜீவன் அதனை பின்தொடர்ந்து குழந்தைகள் ஏக்கத்தோடு வந்துக்கொண்டு இருந்தார்கள்,
அய்யனார் முன் வாயில்லா ஜீவனை நிறுத்தி அதன் மீது கோவில் பூசாரி கலக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் நீர் ஊற்றினார்   , கூடி இருந்தவர்கள் எல்லோரும் "அய்யா உத்தரவு கொடுயா" என கோஷமிட  எனக்கு கண்கலங்க ஆரம்பித்தது,
அந்த வாயில்லா ஜீவன் மீது ஊற்றிய  தண்ணீர் அந்த   மேனியில் படவும் அந்த ஜீவனுக்கு உடல் சிலிர்த்தது.
உடனே சுற்றி இருந்தவர்கள் அந்த ஜீவனை இறுக்கி பிடிக்க , பூசாரி தனது கையில் இருந்த  கத்தியை அந்த வாயில்லா ஜீவன் கழுத்தில் பய்த்தார் , 
அந்த ஜீவனோடு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தெய்வங்கள் இந்த அகோர காட்சியை கண்டு கதற ஆரம்பித்தது....
என்கண்களில் கண்ணீர்பாய்ந்தது  , ஜீவனின் கழுத்தில் இருந்து இரத்தம் பீச்சிஅடித்தது. 
பக்தர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் முகத்தில் ஒரு முகசுழிப்பும் இல்லை..
பதிலாக நல்ல கடா நல்ல பசி என சீக்கிரம் ஆகட்டும் என கூத்தாட்டம் போட ஆரம்பித்தனர்.
அந்த வாயில்லா ஜீவன் தலை வெட்டப்பட்டு முண்டமாய் துடி துடித்து மண்ணில் உயிரை விட்டது,
அந்த ஜீவனுக்கும் உணர்வு இருப்பதால் தானே தலையை வெட்டியதும்  கதறியது...
இல்லாவிட்டால் மரம் போல மனிதனுக்கு இன்னொரு  தலையை  பரிசளித்து இருக்குமே...
குழந்தைகள் அழுகைக்கு கூட பதில் சொல்லதெரியாது பெற்றோர்கள் "கொஞ்சம் பொறு இப்போதான் வெட்டி இருக்காங்க சமையல் முடிஞ்சது கறி சோறு சாப்பிடலாம் என வாயடைதுவிட்டார்கள் .
மீண்டும் நான்  கோயிலுக்கு சென்றேன் மனம் விட்டு  கோவத்தில்  நீ காக்கும் கடவுளா ?   காவு கேட்க்கும் கடவுளா ?
இவர்கள் பக்தர்களா பாவிகளா ? என முனனேன்.
 அதுவும் கோவிலில் உயிர் பலி இட்டு தன் சுயனலதிர்க்காக வாழ்வது கடவுள் ஏற்குமா ?
எந்த கடவுள் உயிர்பலி கேட்கிறது ?
எந்த கடவுள் உயிர் பலிக்கேட்கிறதோ அதை கடவுளாக எண்ணுவதும் வணங்குவதும் நியாயமா ?

காலைமுதல் பசியோடு இருந்த எனக்கு  துயரத்தால் எதையும் உண்பதற்கு மனம் வரவில்லை கோவைக்கு திரும்பி விட்டேன் கோவத்தோடு...
என் கோவம் அந்த அகோரர்கள் மீதும் தான்...
நீங்கள் மனிதர்களானால் என் கோவம் ஞாயம்தானா ?
~மகேந்திரன் 

Monday, February 27, 2012

உயிரை வதைக்க வேண்டாம் ~மகேந்திரன்



இந்த காட்சியை காணும் இதயங்கள் இனியாவது மாமிசம் உண்ணாமல் இருக்குமா..?
மாமிசம் உண்பதே தவறு ,
அதிலும் ஒரு நல்ல விஷேச தினங்களில் , அதுவும் கோவிலில் உயிர் பலி இட்டு தன் சுயனலதிர்க்காக வாழ்வது கடவுள் ஏற்குமா ?
எந்த கடவுள் உயிர்பலி கேட்கிறது ?
எந்த கடவுள் உயிர் பலிக்கேட்கிறதோ அதை கடவுளாக எண்ணுவதும் வணங்குவதும் நியாயமா ?
~மகேந்திரன்

Friday, February 24, 2012

உன் நினைவாவது வேண்டும்

இதழ் இசை
நாடகம் அரங்கேற்ற
வேண்டும்..!
எப்போது
மேடை ஏறுவோம்..♥
 
கடிகாரத்திலும்
"லப் டப்"
சத்தம் கேட்க்கும்...
"லப் டப்"
சத்தம் கேட்பதனால்
 உயிர் இருக்கிறது
என்று அர்த்தம் இல்லை..
நடமாட
உன் நினைவாவது வேண்டும்..♥


Wednesday, February 22, 2012

வரவில்லையாம்...

ஆசையோடு
தவழ்ந்து வந்தது
நதி...
நீ
வரவில்லையாம்
கடலில் விழுந்து
தற்கொலை
செய்துக்கொண்டது..♥

Monday, February 20, 2012

வேதனை..!

உனக்காக
எழுதிய கவிதை..!
உன்னைத்தவிர
எல்லோரும் ரசிக்கிறார்கள்..♥

Friday, February 17, 2012

பச்சை அம்மாளுக்கு நல்ல நேரம்~மகேந்திரன்

இன்று காலை17/02/2012  எனக்கு அலைபேசியில் ஒரு அழைப்புவந்தது அதில் கோவை B9. காவல் நிலையத்தில் இருந்து சங்கரபாண்டியன் (ஏட்டு) (இவர் நல்ல நேர்மையான காவலாளர் )  என்பவர் "மகேந்திரன் நல்லா இருகிங்களா உங்களை பார்த்து நாட்கலானதே" என்று விசாரித்துவிட்டு தனக்கு ஒரு உதவி வேண்டுமென கேட்க்க நானும்  சரி என்ன உதவி சொல்லுங்கள் என்னால் முடிந்தது செய்கிறேன்  என்றேன்,

திரு சங்கரப்பண்டியன் கூறும்போது நேற்று16/02/2012 காலை முதல் கோவை நல்லாம் பாளையம் பகுதியில் சுமார்  90 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி சற்று புத்திசுவாதினம் இல்லாதநிலையில் சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் மாலை நேரம் மின்சாரம் இல்லதவேலையில் இருட்டில் கீழே விழுந்து அவரது மூக்கில் காயம் பட்டு மயங்கி இருப்பதாகவும் சொல்லி B.மகேந்திரன் (தேசிய மனித உரிமை போராளி அமைப்பின் மாநில தலைவர்) என்பவர் தகவல் கொடுத்தார் அதனைதொடர்ந்து நாங்கள் (சங்கரப்பண்டியன், மற்றும்  B.மகேந்திரன் ) அந்த மூதாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியிடம் எங்கு இருந்து வருகிறீர்கள் தாங்கள் யார் என்று கேட்டோம் அதற்க்கு அந்த மூதாட்ட்யை கோவை கணபதியில் இருக்கும் இமயம் பெண்கள் காபகத்தில் சரத்து விட்டு வந்துள்ளோம் , ஆனால் அந்த காப்பகத்தில் முதியவர்களை பராமரிப்பது இல்லை இரவு நேரம் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் பார்த்துக்கொள்கிறோம் நாளை வேறு எங்காவது சேர்த்துவிட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ,அதனால் உங்களது உதவியால் அந்த அம்மாவை வேறு ஏதாவது காப்பகத்தில் சேர்த்துவிட உங்களை கேட்டு கொள்கிறோம் என்று கூறினார் "
 இதனை தொடர்ந்து நான் மகி மகேந்திரன் (நான்) இமயம் காப்பகத்தில் இருக்கும் அந்த மூதாட்டியை சந்திக்க சென்றேன் , அங்கு அந்த மூதாட்டி சற்று தெளிவுடன் இருக்க அவரிடம்விபரம் கேட்க்க வயதான காரணத்தால் அவர் பேசுவது ஏதும் சரியாக புரியவில்லை ,நீண்டநேரதிர்க்கு பிறகு தனது பெயர் பச்சை அம்மாள் , மகன் ராஜேந்திரன், மருமகள் புஷ்பா ,கோவை சாய்பாபா கோவில் அருகில் என்று சொல்வது ஒரு அளவுக்கு புரிந்தது , அதனை வைத்துக்கொண்டு சுமார் மூன்றுமணிநேரம் நான் (மகேந்திரன்) மற்றும்  B.மகேந்திரன்  இருவரும் கோவையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் தேடி இந்த பாட்டியை பற்றி தெரிந்தவர்கள் யாரும் இல்லை ,ஆகையால் எங்களது முயற்சி சற்று தொய்வு ஏற்ப்பட்டு அந்த மூதாட்டியை கோவை அன்னைதேறேசா வில் சேர்த்துவிடலாம் என்று முடிவுக்கு வந்து அந்த்ச பாட்டியை  இமயம் பெண்கள் காப்பகத்தில் இருந்து அழைத்துக்கொண்டு என்னுடைய இருசக்கரவாகனத்தில் உட்க்காரவைது துணைக்கு B.மகேந்திரன் அவரையும் அழைத்தேன் நல்ல மனிதர் நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரும் வருகிறேன் என்று அந்த பச்சை அம்மாளை பிடித்தபடி எனது வாகனத்தின் பின்புறம் உட்கார்ந்து கொண்டார் , அன்னைதேறேசா காப்பகத்திற்கு  சென்று கொண்டு இருக்கும் வேளையில் 
பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு மூக்கில் அடிப்பட்டு இருந்ததற்கு மருந்திட்டு மீண்டும் சென்றோம் செல்லும் போது எனக்கு ஒரு யோசனை இந்த மூதாட்டி கூறும் அந்த சாய்பாபா கோவில் அருகில் அழைத்து போனால் ஒருவேளை தனது முகவரியை கூற வாய்ப்பு இருக்குமே என்று தோன்றியது , 
யாராக இருந்தாலும் சொந்தங்கலோடுதானே இருக்கவேண்டும் அந்த எண்ணம் தான்.
அதன்படியே அந்த மூதாட்டியை அழைத்துக்கொண்டு மூதாட்டி குறிப்பிட்ட சாய்பாபா கோவில் பகுதியில் சுற்றி வர அந்த பாட்டியால் அடையாளம் கூற முடியவில்லை , பாட்டியை பார்க்க பரிதாபமாய் இருந்தது வேறு வழி இல்லாமல் அன்னைதேறேசா காப்பகத்தில் சேர்க்க வாகனத்தை திருப்பினோம் சற்று தூரம் கன்னப்பநகர் வழியாக வரவும் அந்த மூதாட்டி ஒரு இடத்தை காட்டி இங்குதான் எனது வீடு இருக்கிறது என்றார் , எனகுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சி உடனே வாகனத்தை அவர் சொன்ன இடத்தில நிறுத்த இதுதான் எனது வீடு என்றார் ,
வீட்டினுள் மூதாட்டியை அழைத்து செல்ல மூதாட்டியின் மருமகள் புஷ்பா தனது பாட்டி வருவதை கண்டு மிகுந்த இன்பதிர்த்சியில் "பாட்டி... எங்க போன உன்னை காணாம மூணுநாள தேடிட்டு இருக்கோம் என்று கூற நாங்கள் நடந்ததை கூறினோம்  பாட்டி கிடைத்த மகிழ்ச்சியில் புஷ்பா  பாட்டியை அவரது சொந்ததொடு சேர்த்துவைத்த மகிழ்ச்சியில் நாங்கள், 
 அந்தபச்சை அம்மாள் பாட்டி கூறிய கோவில் பகுதிக்கு இந்த பாட்டியை அழைத்து போகலாம் என்ற யோசனை வராவிட்டால் இந்த பாட்டி இந்நேரம் ஆதரவு இல்லாதவர்கள் என்றோர் கணக்கில் சேர்ந்துவிடுவார் எனக்கு அந்த யோசனையை கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நன்றி...
நண்பர்களே இதுப்போல இன்னும் எத்தனையோ பேர் ஆதரவை பறிகொடுத்து கொண்டு இருக்கிறார்கள் நாம் சற்று முயற்சித்தால் ஏதோ ஒருவிதத்தில் அவர்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்கும் என்பது உண்மைங்க...

Monday, February 13, 2012

அவ்வளவு அழகு இல்லை..!

நீ
ஒன்றும் அவ்வளவு
அழகு இல்லை..!
ஆனாலும்
உன்னைவிட பேரழகு
ஒன்றும் இல்லை
இந்த உலகத்தில்
எனக்கு..♥



இப்பிறவியிலேயே
கட்டாயம்
என்னை
காதலித்துதான் ஆகவேண்டும்
என்ற கட்டாயம் எல்லாம்
ஒன்றும் இல்லை...
இப்பிறவியில்
இல்லை என்றால் என்ன
அடுத்தபிறவி இருக்கே...!
அது
போதும் எனக்கு..!
நான்
எடுக்கும் பிரவிஎல்லாம்
உன்னைத்தான்
காதலிக்க வேண்டும் என்ற
வரம் வாங்கி உள்ளேன் ..♥

Friday, February 10, 2012

தோற்கும் போது அனுபவிக்கிறேன்..!

பூ
இல்லாத வானம்
போல...
நீ இல்லாத தினம் வீண்..♥



நீ
முகம் துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டி இருந்தது
சில
முத்தங்கள்...
பொறாமையில்
போராடுகிறது
என்
கன்னங்கள்..♥


எனக்கு
சொந்தமான ஒன்றை
மற்றவர்கள்
பயன்படுத்தினால்
எனக்கு
பிடிக்காது.
அதனால்தான்
உன் ஆடைகளின் மீது கூட
எனக்கு கோபம்..♥


தோல்வியில்
கூட சுகம்
இருந்தது...
அது
அன்பு கொண்ட உன்னுடம்
தோற்கும் போது
மட்டும்தான்
அனுபவிக்கிறேன்..!


பல்லாக்கு..!

பல்லாக்கு
கோவிலுக்குள் வராது...
அதனால்தான்
என்னை
உன்
வாசலிலேயே
நிறுத்திவிட்டு போய்விட்டாயா..♥

Thursday, February 09, 2012

இளையபாரதம் நிகழ்ச்சிக்காக மகேந்திரன்

கடந்த மாதம் 24/01/2012 அன்று கோவை வானொலியில் இளையபாரதம் நிகழ்ச்சிக்காக மகேந்திரன் உரையாற்றிய பதிவு ..! ~மகேந்திரன்

Sunday, February 05, 2012

ஆறுதல் தரும் அவஸ்த்தை

ஒரு
முற்றுப்புள்ளிக்கூட
அழகான கவிதையாய்
இருக்கிறது...
உன்
நெற்றிப்பொட்டை
படித்ததில்
அதில்
அர்த்தம் புரிந்தது..♥


ஏதாவது
இருந்தால்தான்
திருடப்பட வேண்டும் ...
என்
இதையத்தை எதற்கு
திருடினாய்..♥


தலைமுறை தலைமுறைக்கா
சேர்த்துவைக்க போகிறாய்
கொஞ்சம்
சிந்திவிட்டு
போ...
உன்
புன்னகை பூக்களை..♥



என்
கண்ணே
எனக்கு பட்டுவிடும்
போலிருக்கிறது..!
என்
கண்ணில் உன் பின்பம்..♥


நீ
வரும் செய்தி
அறிந்ததும்
இதயம் விழிவரை
வந்து பார்க்கிறது..♥


எல்லா
நிழலிலும்
இருள் தான் இருக்கும்...
உன்
நிழலில் மட்டும்
ஒருவித
வெளிச்சம் இருக்கிறது..♥


நீ
செல்லும் இடமெல்லாம்
கம கம என
மல்லிகை வாசம் வீசுகிறது..!
உன்
பாத சுவடுகளில் எல்லாம்
வேலி போட்டு
பூங்கா அமைத்தால்
என்ன ..?


உன்னை
அலைட்சியப்படுத்த
முடியாது..!
நீ
ஆறுதல்
தரும்
அவஸ்த்தை..!


என்
தாய் மொழிக்கு
சந்தோசம்
நீ என்னோடு
தமிழில் பேசியதால்...
உன்
தாய் மொழிக்கு
கொடுப்பினை இல்லை
எனக்கு உன் மொழி தெரியாது..!