Thursday, June 30, 2011

கோவை அரசு மருத்துவமனை.நல்லதோர் வீணை செய்தே

 எனக்கு தெரிந்தவருக்கு உடல் நலம் சரி இல்லாமல்  கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்ததை அறிந்து நான் இன்று மருத்துவ மனைக்கு சென்று இருந்தேன்,
மருத்துவ மனை வளாகத்தில் உள்ள சுகாதாரத்தை காணும்போது  முகம் சுளிக்கும் படி இருந்தது ,
கோவை மற்றும் கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து போகிறார்கள்,
அங்கு இருக்கும் சுகாதாரத்தை காணும் பொது நோயை தீர்க்க  வந்தவர்கள் மேலும் நோய்வைபடக்கூடுமோ என்று பயம் கூடுகிறது,
அதுமட்டும் அல்லாமல் மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறை ,  கழிப்பிட வசதி இல்லாமலும் பொதுமக்கள் பெரும் அவதி படுவது தெரிகிறது , இருக்கின்ற ஒரு பொது கழிப்பிடமும் கட்டண வசுளிக்கபடுகிறது ,
அதெப்படிங்க
"மருத்துவத்திற்கு இலவசமாம்,
நோய்க்கும் இலவசமாம், 
கழிப்பிடத்திற்கு கட்டணமா?"
அதேபோல மருத்துவரும் பற்றாக்குறை நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்றுதான் மருத்துவரை காணவேண்டியுள்ளது, 
பாவம், வராத டாக்டருக்காக வராண்டாவில் வறண்ட முகத்தோடு வரிசையில் நிற்கும் நோயவர் ...
"வருகின்ற நோய் முன்கூட்டியே வரக்கூடாத  வரிசையில் நிர்ப்பவர்களுக்கு நின்று நின்றே உயிர் போய்விடும்போல இருக்கிறது "
மருத்துவமனை பிணக்கிடங்கின் அருகிலேயே தேநீர் விடுதி , அதற்க்கு அருகில் குளம் போல தேங்கி இருக்கும் சாக்கடை நீர் ,
பாவம் பொதுமக்கள் அவர்களுக்கு வேறு வழி இல்லை ,
ஒன்று தோன்றுகிறது மரணத்திற்கு முன்பே நரகம் என்பது இதுதானோ என்று, 
ஒரு பகுதியில் செவியில் விழுந்தது செவிலியரின் சாடல் சாவு கிராக்கி எங்க உசுர வாங்கரதுக்காகவே வருதுங்க என்று,
செவிலியர்கள் வருவது நோயை குறைக்க வருகிறார்களா ,
அல்லது நோயாளிகளிடம் குரைக்க வருகிறார்களா?


எல்லாம் சலித்துக்கொண்டு  மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது ஒருவர் இரத்த வங்கி எங்கு உள்ளது இந்த மருத்துவ மனையில் என்று கேட்டார்...
மருத்துவமனை வளாகத்தில் தகவல்பலகையில் தேடினேன் அதிலும் ஒரு அதிர்ச்சி  ஆமாங்க
அரசு மருத்துவமனையில் மருத்துவ பிரிவுக்கான தகவல்  பலகையில் இரத்த வங்கி  என்பதற்கு பதிலாக இரத்த வாங்கி என்று எழுதப்பட்டு உள்ளது...
பாரதி எழுதிய பாடல்  ,
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

Wednesday, June 29, 2011

ஏக போட்டி ♥

நீ
இளநீர் குடித்து விட்டு
ஸ்ட்ரா வை
பத்திரப்படுத்திவை...
உள்ளங்குழல்
வித்வான்கள் மத்தியில்
ஏக போட்டி
இருக்கும்...♥

எடுத்தோ அல்லது எரித்தோ..♥

இதோ
என் இதயம்
உன்னால் 
புரியோஜனமற்று இருக்கிறது...!
எடுத்துப்போவதும்
எரித்துப்போவதும்
உன் விருப்பம்..♥

காதல் பயணிக்க ♥

ரயிலுக்கு
கிடைத்த தண்டவாளம்
போல
நீ நான் !
இந்த
காதல் பயணிக்க
நீயும் நானும்...♥
ரயிலுக்கு
கிடைத்த தண்டவாளம்
போல
நீ நான் !
இந்த
காதல் பயணிக்க
நீயும் நானும்...♥

உன் கையில் நான்..♥

ஒரு
குரங்கின் கையில் கிடைத்த
பூமாலை  போல...
உன் கையில்
நான்
கிடைக்க வேண்டும்...♥

விழி சுழலில்..♥

நீர்
சுழலில் இருந்து
தப்பித்தாலும் தப்பிக்கலாம்...
உன்
விழி சுழலில் இருந்து
தப்பிப்பவன் வெறும்
ஜடமாகத்தான் திரும்புவான்..♥

வலி...

பெண்களுக்கு வலி என்பது
பிரசவத்தின் பொது ...
ஆண்களுக்கு வலி என்பது
இதயத்தினுள் பெண்
பிரகாசிக்கும் முதல்...

Tuesday, June 28, 2011

தாமதம்•

சரியான
நேரத்திற்கு
ரயில் வந்து சென்றது...
பயணிகள் அனைவரும்
நம்பிக்கையோடு வந்ததால் 
ஏமாற்றம்..!

மறக்காமல்..♥

உன்னை
மறக்க வேண்டும்
என்ற
நினைப்பிலேயே
மறக்காமல் இருக்கிறேன்..♥

கொண்டு சேரும்வரை..♥

காடு வரை
என்னை
கொண்டு சேரும்வரை
உன்
நியாபகம்
என்னை கொன்றுக்கொண்டு தான்
இருக்கும் ...!

பார்த்தாலே இனிக்கும்..♥

கனி
பழுத்தால் தான்
இனிக்கும்...
கன்னி
நீ 
பார்த்தாலே இனிக்கும்..♥

Monday, June 27, 2011

குளிர் தென்றல் ..♥

வேப்பமரத்து
காத்தும் சரி!
நீ
வெட்கப்பட்டு
பார்க்கும் பார்வையும் சரி!
இரண்டும் ஒன்றுதான்
எனக்கு
குளிர் தென்றல் ..♥

உன் நியாபகம்தான் எடை அதிகம்..♥

உன்னை
விட
உன்
நியாபகம்தான்
எடை அதிகம்...
ஆமாம்
உன்
நியாபகத்தை சுமக்கும் போது
என்னால் அசைய கூட முடியலையே..♥

Sunday, June 26, 2011

உன் அழகு வாழ்க ♥

நான்
நல்லவன் என்று
எல்லோரும்
நினைத்து இருந்தார்கள்...
அந்த
நினைப்பை
பொய்யாக்கிப்போன
உன்
அழகு வாழ்க ♥

விடியல் விழிக்கிறது..♥

விடிந்த பிறகுதான்
நீ
கண் விழிக்கிறாய்...
ஆனால்
நீ
கண் விழித்த பிறகுதான்
என்
விடியல் விழிக்கிறது..♥

வார்த்தைகள் இல்லாவிட்டாலும்..♥

உதட்டை
திற
வார்த்தைகள் இல்லாவிட்டாலும்
புன்னகையாவது
எடுக்கலாம்...♥

இது மனித உருவம் கொண்டவைகளுக்கு•

அறம் என்னும்
சொல்லையே விரும்வதாக இல்லை...
இதில்
எங்கு
அறம் செய்ய விரும்புவது...

இது மனித உருவம் கொண்டவைகளுக்கு•

தேடலில் ♥♥♥

நீ ஒருபுரம்,
நான் ஒருபுரம்
வா...
தேடலில் சந்திப்போம் ♥♥♥

Saturday, June 25, 2011

யாரும் பார்கவில்லை.♥

கோவிலுக்கு உள்ளே
நம்மை சுற்றி
இருப்பவர்களுக்கு
தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்தோம்...
எந்த
பயமும் இல்லாமல்
வாசலில்
நம் ஜோடி செருப்பு
ஒன்றன் மீது
ஒன்றாக....
இருந்ததை  யாரும் பார்கவில்லை.♥

நீ தேவதையடி..♥

உன் உறக்கம்கலைக்க
அலாரம்
வைத்தால் கூட அடிக்காது...
உனக்கு
தொல்லை குடுக்க
எவருக்கு
மனசு வரும்..?
நீ
தேவதையடி..♥

அதுதான் காதல்..♥

பூவின்
அழகை மட்டும் அல்ல,
முட்களின் 
அழகை கூட ரசிக்க வைக்கும்
அதுதான் காதல்..♥

உணர்ந்தேன்..♥

நீ
என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
என்மீதான காதலை...

முத்த வைப்பு திர்மானம் தான்..♥

உன்
கோவம் ஆனாலும்  சரி...
என்
கோவம் ஆனாலும் சரி...
முடிவுக்கு
கொண்டுவருவது
முத்த வைப்பு திர்மானம் தான்..♥

விட்டு விட்டு வந்துவிட்டேனே...♥

என்ன செய்ய.?
உன்னை
சந்திக்க வரும் அவசரத்தில்
வார்த்தைகளை
வீட்டிலேயே
விட்டு விட்டு வந்துவிட்டேனே...♥

கானல் நீரா ?•

வானம் என்பது
நிஜம் அல்ல
அது
நிறம்.!
அது போலவா
உன்
புன்னகை..?

உறக்கம் இல்லை கனவுகள் உண்டு ♥

என் இரவுகளுக்கு
உறக்கங்கள் வருகிறதோ
இல்லையோ...
உன்
கனவுகள் வருவது
தவறுவது இல்லை...♥

Friday, June 24, 2011

மொட்டுக்கள் வாசம் தராதே...

உன்
இதழுக்கு
ஏன் இந்த மௌனம்
திறக்காத
மொட்டுக்கள் வாசம் தராதே...

ஆயுதம்.♥

ஒரு போராளியிடம்
ஆயுதம் போல...
இந்த
பேரழகியிடம் விழிகள்..♥

சந்தோசப்பட வேண்டிய விஷயம்...

சந்தோசப்பட வேண்டிய விஷயம்...
சிலர் பேர்
பல்துலக்கும் போதாவது
சிரிக்கறாங்க
என்ற காரணத்திற்கு...

Thursday, June 23, 2011

பனிக்கட்டி சுடுமா .....?

பனிக்கட்டி சுடுமா ...
உன்
வார்த்தைகள்
ஏன்
சுடுகிறது ?

வெட்ட வெட்ட..♦

வெட்ட வெட்ட
வழரும் நகம் போல •••
நீ
வெட்ட வெட்ட
வழர்கிறது காதல்•♥

கவிதைகாரன்... கவலைக்காரி...c

நான்
கவிதைகாரன்...
நீ
கவலைக்காரி...
நீ
ரசிக்க
நான் கவிதைகள் தருகிறேன்..!
நான்
அனுபவிக்க
நீ
கவலைகள்  தருகிறாய்..!

தலை குனிய மறுத்தால்••!

எழுதுகோல் தலை குனிய மறுத்தால்
கவிதைகள் பிறக்காது...
குனிந்து நடப்பது
என்பது
தாழ்ந்து போவது என்பதல்ல...

யாருக்கோ சொந்தம்..!

மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
அதிலாவது ஒன்றாய் மலருவோம்..
அன்பே...
இந்த ஜென்மத்தில்
நீ யாருக்கோ சொந்தம்..!
நான் யாருக்கோ சொந்தம்..!

அர்த்தம் புரிந்தது •!

நீ
குடுத்த வேதனைக்கு
பிறகுதான்
எனக்கும்
கண்ணீர்
இருப்பதன்
அர்த்தம் புரிந்தது •!

உன் அழகை...♥


கண்ணாடியில்
உன் அழகை
எவ்வளவு நேரம்தான்
பார்த்து கொண்டு இருப்பாய் ...
நான்
கண்ணாடி என்று சொன்னது
உன் அழகை...♥

என்னை காப்பாற்ற வருவாயா ?♥

அளவுக்கு 
அதிகமாக அதிகமாக
அமிர்தமும் 
நஞ்சு ஆகும்...
உன் 
நியாபகம் 
என்னை கொள்வதற்குள் 
என்னை  
காப்பாற்ற வருவாயா ?

விழி விழுந்து தவிக்கிறது..♥

உன்
நிழல் விழுந்த
இடம் எல்லாம்...
என்
விழி விழுந்து தவிக்கிறது
உன்
நிஜம் காணாமல்...
.

ஜனனம்...மரணம்•

சின்ன முள்ளும்
பெரிய முள்ளும்
உடல்லுறவு கொண்ட நேரம் ...
நாட்களில் ஒன்று ஜனனம்...
நாட்காட்டியில் ஒன்று மரணம் •

Wednesday, June 22, 2011

என் கரங்கள் சூட வாய்க்காதா ?♥

நீ
சூடும் பூக்களில்
ஏதேனும் 
ஒரு பூவையாவது
என் கரங்கள்
சூட வாய்க்காதா பாக்கியம் ♥

நெருப்பு தேவை இல்லை...♥

என்
சிதைக்கு நெருப்பு
தேவை இல்லை...
உன்
நினைவுகளே போதும்...•!

கோவத்தை கொஞ்சம் காட்டு...♥

நல்ல மழை
குளிருக்கு சூடாய்
ஏதாவது இருந்தால்
இதமாய்
இருக்கும் ♥♥♥
உன் கோவத்தை கொஞ்சம் காட்டு...

நினைவுகள் 1000 அடி வைத்து ••♥

எனக்குள் 
கோவம் 1 அடி எடுத்து
வைப்பதற்குள் ...
உன் 
நினைவுகள் 1000 அடி வைத்து
சமாதானம் செய்கிறது
பிறகு எப்படி 
உன் 
மீது கோவம் வரும்...

பிரிந்து இருந்தால் கூட ...

செயலிலும் சிந்தனையிலும்
ஒன்றாய் இருந்தால் ,
பிரிந்து
இருந்தால் கூட
சாதிக்கலாம் ...
புல்லாங்குழலின் துளையை பார்,
வீணை நரம்புகளை பார் ...♥

கவிப்புயல் •••

எனக்கு தெரிந்து
முதன் முதலில்
புயலுக்கு
பெயர் சூட்டப்பட்டது
எட்டய்யபுரத்தில் தான்...
மகாகவி சுப்ரமணிய பாரதி என்று !

கடல் •••

பொறுப்பில்லாத
பூமாதேவி வைத்த
மீன் குழம்பில்...
உப்பை அதிகம்
போட்டுவிட்டால்...!

Tuesday, June 21, 2011

காதல் போதை..♥

மது
அருந்துவதை போல
போதையானது இல்லை காதல்...
ஆனால்
காதலில் உள்ள
போதை எந்த மதுவுக்கும் இல்லை..♥