Sunday, March 25, 2012

அருண் அநாதை இல்லை ~மகேந்திரன்

இன்று மதியம் கோவையில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் அரசு பேருந்தில்
தனியாக பயணம் செய்த ஒரு சிறுவன் கணபதியில்
இறக்கி விடப்பட்டான் .யாருமற்று நின்ற அந்தசிறுவனை
எனது நண்பர்கள் கண்டு என்னிடம் சொல்ல நான் (மகேந்திரன்) அந்த
சிறுவனை அழைத்து யார் என்ன விபரம் கேட்டறிய முயன்ற
போது அவன் தனது பெயர் அருண் என்றும் தன் பாட்டி பெயர் சாந்தி
தாத்தா பெயர் வெள்ளியங்கிரி என்றும் தனக்கு அப்பா அம்மா இல்லை என்றும்
சொன்னான் .


அவன் எதற்காக தனியே வந்தான் என்பதும் அவன் எந்த ஊரில் இருந்து வந்தான் என்றும்
அவனால் சொல்ல இயலவில்லை.ஆனால்அவனது கையில் சூடு போடப்பட்டு இருப்பதால்
புண்ணான அவனது கைகளை டாக்டரிடம் காண்பித்து மருத்துவ உதவி
செய்து காவல் நிலையத்தில்



இந்த செய்தியை தகவல் அளித்து பின்னர் கார்னர் ஸ்டோன்
குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து வைத்துள்ளேன் .
அந்த சிறுவனை மேலும் விசாரித்தபோது அவன் கான்வென்ட் ப்ரைமரி  நர்சரி ஸ்கூல் என்று


அதை தொடர்ந்து எனது நண்பர்கள் ஸ்ரீ வசந்தா , முத்து ராம் , மற்றும் அருண் குமார் , இவர்களின் உதவியால் திருப்பூரில் உள்ள அந்த பள்ளிக்கு சென்று அருணை பற்றி  விபரம் கேட்டபோது அவன் இங்கு தான் படிக்கிறான் என்ற உண்மை தெரிந்தது அதன் மூலம் சிறுவன் அருண் வீட்டை கண்டு பிடிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று அருணின் விபரத்தை சொல்ல அருணின் அம்மா ஆனந்தி அவர்களை கோவைக்கு என்னை சந்திக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள் ,

அருணின் அம்மா 26/03/12 மதியம் ஒரு மணிக்கு என்னை சந்திக்க வந்தார்கள் ஆனால் அவர் முகத்தில் அருணை பற்றிய எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லை என்ன நிலையோ தெரிய வில்லை ஆனந்தி மகன் மீது எதோ ஒரு கோவம் மகன் அருணை  கூட சந்திக்காமல் என்னிடம் அவன் உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்ல, எனக்கு பகீர் என்று ஆனது நான் மற்றும் எனது நண்பர்கள்  எவ்வளவோ ஆறுதல் கூறியும் அருணை ஏற்பதாக இல்லை , காப்பகத்தில் இருக்கட்டும் என கூறி கொஞ்சநாள் கழித்து வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார் நண்பர்களே அந்த அம்மாவிற்கு அருண் மீது உள்ள கோவம் விரைவில் போக வேண்டும் தனது மகனை திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் தாய் பாசத்தை நிலை நிறுத்த வேண்டும் அதற்க்கு கடவுளை நாம் வேண்டிக்கொள்வோம்....
தற்சமையம் அருண் கோவையில் கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற காப்பகத்தில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான் ...


ஒரு உண்மை

அருண் அநாதை இல்லை .



வேதனையுடன்

~மகேந்திரன்





Thursday, March 22, 2012

இதில் ஒரு கவலை

எத்தனையோ
உன்
நினைவுகளை நான் சுமக்கிறேன்...
அதில்
ஒன்று கூட சுமையாகவே இல்லை...
இதில் ஒரு கவலை
உன்
நினைவுகளில் ஒன்று கூட
எடை மதிப்பிட முடியவில்லையே..!

Sunday, March 18, 2012

இப்படி கூட உதவலாமே.! ~மகேந்திரன்

ஆதரவற்ற இல்லங்களுக்கு நாம் போகிறோம், உணவு வழங்குகிறோம், ,துணி வகைகளை வழங்குகிறோம் ,அதற்கும் மேலாக அங்கு இருக்கும் உடல் நோய் வாய் பட்டவர்களை குளிப்பாட்டுவதும் ,தன்னால் உண்ண முடியாதவர்களுக்கு ஊட்டிவிடுவதும், மருந்திடுவதும் , இப்படி கூட செய்யலாமே...!

~மகேந்திரன்
9843344991

Tuesday, March 13, 2012

மகனுடன் இணைந்த கண்ணம்மாள் பாட்டி...


வழக்கம் போல நான் (மகேந்திரன்) அன்னை தெரசா காப்பகத்திற்கு அங்கு இருக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கு சேவை செய்வதற்காக 12 /03 /12  சென்றிருந்தேன் .
அங்கு கண்ணம்மாள் (வயது 80 இருக்கும்) அவரை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து அழைத்து வந்தனர். இவர் யாரும் இல்லை என பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி ஒரு நல்ல மனிதர் பாட்டியை அழைத்துக்கொண்டு வந்து காப்பகத்தில் சேர்த்துவிட்டார்கள்.
அவரிடம் நான் ,
" நீ...ங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் ?" என கேட்க ,அவர் " என் சின்ன மகன் ராஜேந்திரன் அவன் என்னோடு சண்டை போட்டுக்கொண்டு கோவத்தில் வீட்டை விட்டு போய் விட்டான், என் மகன் பெரியவன் ராகவன் சென்னை சோழ மண்டலம். இதை தவிர வேறு தெளிவான முகவரியும் அலைபேசி எண்ணும் தெரியாது" என்றார்., ராஜேந்திரன் என்னை தகாதவார்த்தை சொல்லியதால் மனம் உடைந்து கோவையில் எனக்கு உறவினர் வீடு இருக்கிறது அவரை தேடி இங்கு வந்தேன் . ஆனால் இந்த ஊரில் எனக்கு அடையாளம் காணமுடியவில்லை , பசி பிச்சை எடுக்க மனம் இல்லை எங்காவது சாப்பாடு குடுப்பாங்களா என அலைந்தேன் பழைய சாதம் குடுப்பாங்க , அது எனக்கு ஒத்துவராமல் உடல் நலம் குன்றி போனது அரசு மருத்துவமனையில் யாரோ ஒருவர் சேர்த்துவிட்டு போனார் அதன் பிறகு நான் குணமாகி வெளியே வந்து எங்கு போவது என்று தெரியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து விட்டேன் , அதன் பிறகு எனக்கு பசி மயக்கம் , விளித்து பார்க்க நான் இங்கு இருக்கிறேன் , என் பிள்ளைகளை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என கண்ணீருடன் சொல்ல நான் உங்கள் மகன்களை தேடி தருகிறேன் பாட்டி என கூறி அவருடைய மகன்களை தேடும் முயற்சியில் இறங்கினேன் .தொடர்ந்து அவர் கூறிய சென்னையில் உள்ள சோழமண்டலம் பகுதியில் இருக்கும் அலைபேசி எண் ஒன்றை கண்டு பிடித்து அதன் மூலம் பல எண்களுடன் தொடர்புகொள்ள , ஒருக்கட்டதில் கண்ணம்மாள் பாட்டியின் மூத்த மகன் ராகவனின் தொடர்பு கிடைத்தது , அவரிடம் விசாரிக்க அவருடைய அம்மா தான் கண்ணம்மாள் பாட்டி என உறுதியானது , அலைபேசியில் ராகவன் அம்மா என அழுத அழுகை இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
தனது அம்மா காணாமல் போனதை தொடர்ந்து காவல் துறையில் புகார் செய்ததும் நாளிதழில் விளம்பரம் செய்ததும் , விடிய விடிய அவரை தேடி அலைந்ததும் என்னிடம் பகிர்ந்துக்கொண்டார் ,
பிறகு அவருக்கு சமாதானம் சொல்லி உடனே கிளம்பி வாருங்கள் என்று சொன்னதும் சென்னையில் இருந்து கிளம்பி இன்று 13/03/12 காலை கோவைக்கு வந்து என்னை சந்திக்க அவரை அழைத்துக்கொண்டு அன்னை தெரேசா காப்பகத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அங்கு இருக்கும் அவருடைய அம்மா கண்ணம்மாள் பாட்டியை சந்திக்கவைக்கும் போது மகன் ராகவனை சந்தித்த கண்ணம்மாள் பாட்டி கட்டித்தழுவி
அழுவதை பார்க்க அந்த நிகழ்வை பார்த்தால் கல்லும் கரைத்துவிடும் போல இருந்தது,
பாட்டி என்னை அழைத்து கையெடுத்து கும்டிட்டு நன்றி சொல்ல எனக்கும் கண்கலங்கியது பிறகு நான் பாட்டி உனக்கு சந்தோசம் தானே என்று சொல்ல பாட்டி அழுதும் சரித்தும் என்னை கட்டி அனைத்து முத்தம் தந்து ஆசீர்வாதம் வழங்கினார்,
பாட்டியின் மகன் என்னை பார்த்து உங்களுக்கு காலமெல்லாம் கடமை பட்டிருப்பேன் என்று சொல்லி , காப்பகத்தில் இருந்த கண்யச்திரிகளிடம் தனது அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சொல்லி அங்கு இருந்த அனைவரையும் வணங்கி நன்றி சொல்லி கிளம்பும் போது அந்த பாட்டி கண்களில் ஒரு நிம்மதியை காண முடிந்தது,
மகிழ்ச்சியோடு நான் இந்த நாளில் இது போல இருந்தது இல்லை எந்தநாளும் .
எதோ ஒரு நல்ல கடமை நிறைவேற்றியதுபோல இருந்தது.
~மகேந்திரன்



Friday, March 09, 2012

இதழ் திறப்புவிழா...

நீ
இனிக்கும்
பனி மழை...
நான் குடிப்பேனா .?
குளிப்பேனா.?
தலைகால் புரியாமல்
இருக்கிறேன்..♥

 
உன்னை விட
உன் கோவம் எனக்கு பிடிக்கும்...
அது தான்
மற்றவர்களை அழகாக
காட்டுகிறது..♥
 
உனக்கு
இதழ் திறப்புவிழா
நடத்தினால்தான்
என்னோடு பேசுவாய..!
 

Thursday, March 08, 2012

சர்மிளா சாதனைக்கு உரிய பார்வை அற்ற பெண்மணி ~மகேந்திரன்


சர்மிளா மிகவும் அதிசயமான தைரியமான பெண்மணி வயது 26, பார்வை இல்லை  . அது இல்லை என்ற கவலையும் இவருக்கு இல்லை. இவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் ,வறுமையாலும் இவரது முன்னேற்றத்திற்காகவும் தன் குடும்பத்தை பிரிய நேர்ந்தது.
பிரிந்தவர் ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் தஞ்சமானார் அங்கு இருந்தபடியே படிப்பை தொடர்ந்தார் . என்ன படிக்கிறார் என்று கேட்கிறீர்களா நாட்டில் நீதி நிலைக்க, அநீதி ஒழிக்க சட்டம் இறுதி ஆண்டு பயில்கிறார்.
இரண்டு கண்களை திறந்துக்கொண்டு நாம் நடந்தாலே தடுக்கி விழுகிறோம் , இந்த சர்மிளா கோவை கணபதி அருகே மணியகாரன் பாளையத்தில் இருக்கும் இமயம் பெண்கள் காப்பகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலை கழகத்திற்கு இரண்டு பேருந்துகள் மாறி பயணிக்கிறார் , பக்கத்துக்கு தெருவுக்கு போவதற்கே நமக்கு துணை தேவைப்படுகிறது ஆனால் பார்வையற்ற சர்மிளா இதுவரை நடப்பதற்கு எந்த உபகரணமும் பயன்படுத்தியது இல்லை.
இதைவிட முக்கியமான ஒன்று பார்வையற்றவர்கள் படிப்பதற்கான எழுத்துமுறை (braille) பயன்படுத்துவது இல்லை . சாதாரணமாக நாம் படிக்கும் எழுத்துமுறையே இதுவரை படித்து  கொண்டு இருக்கிறார் .
  இவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று இவர் கல்லூரிக்கு செல்ல பேருந்தில் பயணிக்கும் சமயம், நடத்துனர் இவரை தகாதவார்த்தை சொல்லி தள்ளிவிட சர்மிளா கீழே விழுந்தார், சர்மிளா தனது முதல் வழக்காக அந்த நடதுனர்மிது குற்றப்பிரிவுன் கீழ் வழக்கு தொடர நடத்துனர் பார்வையற்ற சர்மிளா இருக்கும் காப்பகத்தை தேடி நேரடியாக வந்து அவரிடம் மன்னிப்பு கேட்க ,நடத்துனரை மன்னித்து வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார்.இந்த சம்பவம் இவரது மன உறுதியையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் காட்டுகிறது.
மேலும் சர்மிளா அவருக்காக கோவையில் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வருடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்மிளா மேலும் பல சாதனைகளை பெற்று நமது நாட்டிற்கு பெருமை தேடித்தர மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 
அதோடு இல்லாது இன்று மகளிர் தினமான இன்று, இவரைப்பற்றி இங்கு பதிவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
~மகேந்திரன்

இவர்களது இந்த சேவை பலகோடி கொடுத்தாலும் அதற்க்கு ஈடாகாது. ~மகேந்திரன்

கடந்த 26/02/2012 நான் (மகேந்திரன்) எனது குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தேன், அப்போது கோவையில் இருக்கும் எனது நண்பர் பர்கத் ( இவர் சாதாரண இருசக்கர பழுது பார்க்கும் தொழிலாளி)  இரத்தினபுரி பகுதியில் பேச்சியம்மாள்  எனும் பாட்டி பசிமயக்கத்தில் தள்ளாடி கொண்டு இருக்கிறது அவர் பேசுவதும் புரிவது இல்லை , பாவமாக இருக்கிறது அவர் எதோ பிரச்சனையில் இருப்பதாக தெரிகிறது என்ன செய்யலாம் என கேட்க்க , நான் , அந்த பாட்டிக்கு ஏதாவது உண்பதற்கு வாங்கிக்கொடுங்கள் பிறகு அவரை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுங்கள் உங்களுக்கு துணையாக நான் ஒருவரை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி நண்பர் மோகன சுந்தரம், அவர் (ஒரு தனியார் கம்பனியில்  கனி பொறியாளராக  பனி புரிபவர்)  அவரை அழைத்து பர்கதின் நம்மரை கொடுத்து விபரம் சொல்லி அந்தப்பகுதிக்கு சென்று அந்த பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி அனுப்பினேன், அதனை தொடர்ந்து இருவரும் அந்த பாட்டியை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்து ஒரு காவலாளி அந்தபாட்டி யை விசாரிக்க எந்தவிபரமும் அவருக்கு கிடைக்கவில்லை ,ஆகையால் காவல் துறை சேர்ந்த காவலாளி என்னிடம் இந்த பாட்டியை  என்ன செய்வது என்று தெரியவில்லை  ஏதாவது காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் எதோ வலி தவறி வந்தது போல இருக்கிறது என அலை பேசியில் கூற , காவல் துறை அனுமதியோடு அந்த அம்மாவை மோகனசுந்தரத்தை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள், நான் நாளை கோவை வந்ததும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற , அதன் படி அந்த அம்மாவை மோகன சுந்தரம் ஆட்டோவில் வைத்து காப்பகத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப்பாட்டிக்கு  அங்கு  முதலுதவி கொடுக்கப்பட்டது அந்தில் அந்த பாட்டிக்கு நினைவு வர அந்தப்பாட்டி காப்பகத்தில் தங்குவதற்கு விருப்பம் இல்லாமல் அடம்பிடித்து கொண்டு தான் உடையாம்பாளையம் போகணும் என்று கூறிக்கொண்டு இருக்க காப்பகத்தில் அவரை ஏற்க்க மறுத்தனர் . மோகனசுந்தரம் அதை கவனித்து என்னை அழைத்து விபரம் சொல்ல, நான் நண்பர் ஆடி தபசுவை (இவர் தினசரி தள்ளுவண்டியில் சிற்றுண்டி விற்பவர்) அழைத்து மோகனசுந்தரம் ஒரு பாட்டியை அழைத்து வருவார் அவரோடு பர்கத் என்பவரும் வருவார், நீங்கள் மூவரும் அந்த பாட்டியை அழைத்துக்கொண்டு அந்தப்பாட்டி குறிப்பிட்ட உடையாம்பாளையம் அழைத்து போய் அவர் முகவரி தெரிந்தால் அவரது உறவினருடன் சேர்த்துவிடுங்கள், ஆனால் கவனம் என்று சொல்லி , மோகனசுந்தரத்துடன் அந்த பாட்டி செல்ல வழியில் பர்கத் மற்றும் ஆடி தபசு இணைந்து கொண்டனர், பாட்டியை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஆடி தபசு மற்றும் மோகனசுந்தரம் உடையாம்பாளையம்  கூட்டிச்செல்ல அந்தபகுதியில்  அங்கு சென்றதும் பாட்டிக்கு வீட்டிற்கு செல்ல அடையாளம் தெரிந்தது , வீட்டிற்கு சென்றதும் பாட்டி இவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்லி மூவருக்கு காப்பி போட்டுகொடுக்க, மூவரும் எனக்கு அலைபேசியில் அழைத்து பாட்டியின் வீடு கண்டுப்பிடிக்கப்பட்டது என்று கூற எனக்கு எனது குலதெய்வமே நேரில் வாழ்த்தியது போல இருந்தது...
ஆடித்தபசு, பர்கத், மோகனசுந்தரம் இவர்கள் மூவருமே சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள்தான்   ஆனால் இவர்களது இந்த  சேவை பலகோடி கொடுத்தாலும் அதற்க்கு  ஈடாகாது.
ஆடித்தபசு, பர்கத், மோகனசுந்தரம் இவர்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
~மகேந்திரன்

Wednesday, March 07, 2012

கண்களில் அல்ல..♥

உன்னை
என் கண்களில்
வைக்க வில்லை..!
கண்களாக
வைத்திருக்கிறேன்..♥