சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு மரங்களின் பங்கு மிக இன்றியமையாத ஒன்று அந்த மரங்களை பாதுகாப்பதும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான கடமை ஒன்றுங்க ,
அவரவர் வாசலை சுத்தம் செய்தாலே போதுமானதுங்க. ஊர் சுத்தமாகிடும் , ஆனாலும் தன் வாசலை கூட சுத்தம் செய்யாமல் இருப்பதால்தான் மாசுபாடு நிறைந்த ஊர்களில் முதல் ஐந்து இடங்களில் கோவை நகரமும் இடம்பிடித்து விட்டது , இதனை உணர்ந்த அச்சகதொளிலாளி திரு . M . ரகுநாத், கடந்த பல வருடமாக சிறுதுளி அமைப்போடு இணைந்து காணும் இடங்களில் எல்லாம் மரங்களை நட்டுவருகிறார் தான் வசிக்கும் கோவை காந்திபுரம் 2 வது வீதியில் அதன் அடுத்த அடுத்த வீதிகள் முழுவதும் இவர் ஒருவராகவே சாலையின் இருபுறமும் மரங்களை நட்டு அந்த பகுதி முழுவதும் நிழலை படரவைதுள்ளார்.
அதுமட்டும் இல்லைங்க இவர் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு திராட்சை தோட்டம் அமைத்து இருக்கிறார் , பொதுவாகவே திராட்சை சாகுபடியில் விதை நட்டு பழங்கள் கிடைக்க வேண்டுமானால் . நட்ட நாளில் இருந்து ஒருவருடம் நான்கு மாதங்கள் ஆகும் , ஆனால் M . ரகுநாத் தனது மொட்டை மாடியில் வளர்க்கும் திராட்சை தோட்டத்தில் ஒன்பது மாதங்களிலேயே திராட்சை பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்துள்ளது, அதுவும் சுமார் 200 சதுர அடியில் ஒன்பது மாதங்களில் திராட்சை 150 Kg சாகுபடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு . M . ரகுநாத் தனது வீட்டின் மாடியில் பயிரிட்டுள்ள திராட்சை தோட்டத்தை அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் வந்து பார்வையிட்டு தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர் இப்படி விளைந்த திராட்சை பழங்களை அனைவருக்கும் இலவசமாகவும் கொடுத்துவருகிறார்.
இவர் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அவருடைய கொள்கை விரும்பி என்பதால் இந்த திராட்சைகளை அண்ணா ஹசாரே அவர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.
மேலும் இவர் எதிர்பார்ப்பது எல்லாம் கோவை நகருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்த இயற்கையான குளிர்ந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதே ஆகுமாம்.
இப்படிப்பட்ட இயற்கை பாதுகாவலரை பாராட்டாமல் இருக்க முடியுமாங்க அதற்காகவே வருகின்ற 28/04/13 அன்று ஒரு அமைப்பு இவருக்கு கோவையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள் என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிகிறது. சுற்று சூழலை காப்பாற்ற நாமும் முயற்சி எடுப்போம் என்பதில் மாற்றம் இல்லைங்க.
~மகேந்திரன்
Tweet | ||||
5 comments:
திரு . M . ரகுநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...
அட நல்லது பண்றவருக்கு பாராட்டு . சூப்பர்.
அருமை ரகுநாத் சார் ,பாராட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள் .எங்களுக்கும் சொல்லி கொடுங்க ! நாங்களும் பயனடைகிறோம் !
நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும் .பரிசளிக்கவும் வேண்டும்
super,valthugal.
Post a Comment