Saturday, December 27, 2014

தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட இளைஞர்கள்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 400 / 26 - 12 - 2014 )
நேற்று 25/12/2014 கோபால் சுமார் 70 வயதிருக்கும் ஒருவர் தன்னுடைய தனிமை நிலை வெறுப்பின் காரணமாக மனம் உடைந்து செய்வதறியாது தான் வசிக்கும் நாமக்கல்லில் இருந்து ஊர் ஊராக சுற்றி இறுதியில் கோவை வந்த அவர் சாலையில் போகும் வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தார் . இதில் ஒரு வாகனத்தில் மோதி காலில் பலத்த காயம் வேறு ஏற்பட்டு காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்திருக்கிறது . இதையெல்லாம் கோவை தண்டுமாரியம்மன் கோவிலை சுற்றி உள்ளவர்களும் அந்தவழியாக சென்ற போலீசாரும் வேடிக்கை பார்த்தபடி சென்றுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக கோகுல்.A, லலித்ப்ரகாஷ்.U, சசிகுமார்.A ஆகிய மூன்று இளைஞர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த முதியவர் செய்யும் செயல்களை பார்த்துவிட்டு மனம் பரிதவித்து அவரை மீட்டு சமாதானம் செய்திருக்கிறார்கள் . அவர்களிடம் அம்முதியவர் தனக்கு யாரும் இல்லை என்றும் திருமணம் ஆகவில்லை, வேலைக்கு செல்ல உடல் நலம் ஒத்துவரவில்லை, கையில் பணமும் இல்லை, சாப்பாட்டிற்கு வழி இல்லை, பிச்சை எடுக்கவும் மனம் ஒப்பவில்லை, இதனால் எனக்கு மரணம் தான் தீர்வு என்றுக் கூறி புலம்பி இருக்கிறார்.
இதை கேட்ட அந்த மூன்று இளைஞர்களும் அந்த முதியவருக்கு காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு உதவும் நோக்கில் 108 ஆம்புலன்ஸ் அழைத்துள்ளனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு அம்முதியவருக்கு உதவும் படிக் கேட்டுக் கொண்டார்கள் .
அதனைத் தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெரியவரை நள்ளிரவில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் அவரை தற்காலிகமாக கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் பாதுகாப்பிற்கு சேர்த்து விட்டு வந்தனர்.
இளைஞர்கள் என்றால் இரவு நேரத்தில் ஊரை சுற்றிக் கொண்டும் நேரம் கழித்தும் வீடு திரும்புவதே வழக்கமாக கொண்டிருப்பர். அது போன்ற இளைஞர்கள் மத்தியில் கோகுல், லலித்பிரகாஷ், சசிகுமார் என்னும் இந்த மூன்று இளைஞர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
இப்படிப் பட்ட இளைஞர்களை நம்பியே நாளைய இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது என்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை அவர்களை உங்கள் சார்பாக அம்மூவரையும் பாராட்டுகிறது.
~ ஈரநெஞ்சம்

Monday, December 08, 2014

ஈரநெஞ்சம் சேவை ஆதரவற்ற பாட்டியின் தலையில் புழுக்களின் கூடு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 389 / 7-12-2014 )

இன்று 7-12-2014 கோவை, கணபதி, சத்தி சாலையில் ஆதரவற்ற நிலையில் செல்லம்மா 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது தலையில் பல காயங்கள் ஏற்பட்டு இருந்ததோடு அவற்றில் புழுக்கள் பிடித்து துர்நாற்றம் வீசிய நிலையிலும் இருந்தது. அதை சுத்தம் செய்து அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பாட்டி யார் எப்படி அங்கு வந்தார் என்ற தெரியாத நிலையில் தலையில் இப்படி காயத்துடனும் புழுக்களுடனும் இருப்பதைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருந்தது.

தன் உடல், பொருள், ஆவியை தியாகம் செய்து நம்மை கவனித்துக் கொள்ளும். பெற்றோர் இயலாமை நிலைக்குத் தள்ளப்படும் போது அவர்களை கவனித்துக் கொள்ளாமல் இப்படி தெருவில் ஆதரவற்ற நிலையில் விடுவதை பார்க்கும் பொழுது கல்லும் கூட கசிந்துருகி கண்ணீர் சிந்தும்.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 7-12-2014, an old lady chellamma, age 80 years was there in Coimbatore, Sathy road and no one care for her. Eeranenjam found and admitted her in Coimbatore corporation home. In her head there are some wounds and lot of worms in there with bad smell. Eeranenjam trust people cleaned all that and admitted her in Coimbatore GH for further treatment.

Parents sacrifice all their life things for taking care of their children. But in their old age no one taking care for her. This is really sorrowful and making tears in some body's eyes.

~thank you
Eera Nenjam






https://www.youtube.com/watch?v=4eQrJ8TKD-0&list=UUlItkV-aZwettjImLxCk7qw



 

https://www.youtube.com/watch?v=aez2Mj5alZE&index=4&list=UUlItkV-aZwettjImLxCk7qw