Thursday, May 23, 2013

பெற்றவள் தான் அன்னையா அன்னையர் தினம்~ மகேந்திரன்

பெற்றவள் தான் அன்னையா
பிள்ளைகளால் தொலைக்கப்பட்டவர்களும் நமக்கு அன்னைதான்...
அன்னையர்களோடு அன்னையர் தினத்தில்...
விழிப்புணர்வுக்காக
~மகேந்திரன்

நன்றி
லோட்டஸ் தொலைகாட்சி

Wednesday, May 22, 2013

"திண்டுக்கல்லின் முதல் பெண்மணி பரிமளாதேவி" ~ மகேந்திரன்



திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்பறிவு அதிகம் இல்லாத சின்னாளப்பட்டியில் உள்ள மேலகோம்பை என்னும்  குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் திருமதி. பரிமளா தேவி.வயது 43  மற்ற சராசரி பெண்களை போல் குடும்பத்தையும் , குழந்தைகளையும் மட்டும்உலகம் என இருக்காமல் , தன்னால் இயன்ற அளவு சமுதயாத்திற்கு உதவ வேண்டும் என உள்ளம் கொண்ட பெண்மணி . படித்தது பத்தாவது என்றாலும் இவரிடம்இருக்கும் திறமைகள் ஏராளம் .

கவிஞர் , எழுத்தாளர் , கைவினை கலைஞர் , சமுக சேவகி என இவரை பற்றிசொல்லி கொண்டே போகலாம் . சமீபத்தில் "மிதக்கும் சிற்பங்கள்" என்ற ஒரு அழகானகவிதை தொகுப்பினை  எழுதி வெளியிட்டுள்ளார் .  அதுமட்டுமில்லாமல் வீட்டில் தேவை இல்லாத பொருட்களை கூட அழகான உபயோகமான கைவினைபொருட்களாக மாற்றுவதில் வல்லமை படைத்தவர் . இவர் மட்டும் இதை செய்யாமல் வீட்டில் இருக்கும்பெண்களுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும் , கல்லூரி  கல்லூரிகளிலும் சென்று  கைவினைபொருட்கள் செய்யும் பயிற்சியை  கற்று தருகிறார் . இதன் மூலமாகபயனடைந்தோர் ஏராளம். இவருடைய  சேவைகளுக்காக   இவரின் கணவர் ராஜாராம் , மகன் கார்த்திக் (இன்ஜினியரிங்இரண்டாமாண்டு)  இவருக்குமிகுந்த உறுதுணையாக உள்ளனர். 


அதுமட்டும் இல்லாமல்
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் பயில இறந்தவர்களின் உடல்கள்தான் மிகிந்த அவசியம் தேவை என்பதை திருமதி. பரிமளா தேவி புரிந்து கொண்டு பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரிக்கு பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி தன்   கணவரின்  ஆதரவுடன் உடல் தானம் செய்ய   பதிவு  செய்துள்ளார் .இது  திண்டுக்கல் மாவட்டத்தில்முதல் உடல் தானம் செய்தவரும் இவரே என்னும் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் பெண்மணியாக  திகழ்கிறார்  திருமதி. பரிமளா தேவி. இதன் மூலமாக  இவர் உடல் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி தனது குடும்பத்தில் உள்ள  ஏழு பெறாது உடல்களையும் தானத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குரிப்புடதக்கது. மேலும் உடல்தானத்தை பற்றி  பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி பலபேர்  உடல்தானம்  செய்ய முன்வந்து பதிவு செய்துவருகின்றனர்   .


அதுமட்டுமில்லாமல்தன்னுடைய 12ஆம் வயதிலேயே தன்னுடைய உறவினர் ஒருவருக்கு விபத்தினால் அடிபட்டு இரத்தம் தேவை பட்ட பொழுது மற்ற உறவினர்கள் கூடபயத்தினால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இரத்த தானம் பற்றி  அறிந்து கொண்டு அது   விலைக்கு  வாங்கும் திரவம் அல்ல என்று உணர்ந்து ,    அன்று முதல் இன்று வரை இரத்த தானம் பற்றிய  விழிப்புணர்வு பிரசாரம் மற்றும்  தேவைபடுபவர்களுக்கு இரதம் சேகரித்து கொடுப்பதும்  திருமதி. பரிமளா தேவி தனது கடமையாக செய்து வருகிறார். . இவருடைய இத்தகையசேவை மனப்பான்மையை பாராட்டி திண்டுக்கல் ரோட்டரி கிளப் சார்பில்சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் பரிமளா  தேவிக்கு சாதனைபெண் என்ற பாராட்டு  கிடைத்தது இவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தி  இருப்பதாக கூறினார்.


பாராட்டுக்களும் ஊக்கங்களும் மட்டுமே இவர் போன்றோருக்கு ஒரு உந்துதல் சக்தி...
எனவே இப்படி சமுகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளைசெய்து வரும் அவருக்கும் , அவருடைய குடும்பத்திற்க்கும் நம்
வாழ்த்துக்களைதெரிவிப்போம்  !!!


~மகேந்திரன்

Tuesday, May 14, 2013

ஆதரவற்று இருக்கவும் கூடாது , ஆதரவற்று இறக்க கூடாது. ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(159/2013)

செல்வி சுதா கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் தெருவில் ஒரு முதியவர் கிடந்ததாக அறிந்தோம். கடந்த 17/04/2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27/04/2013 அன்று சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். தெருவில் இருந்த போதும் இறுதி காரியங்களுக்காவது அவர் நல்ல இடம் வந்து சேர்ந்தது இறைவன் செயல்.

சம்பிரதாயங்கள் முடிந்து 12/05/2013 அவரது உடல் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த வைரமணி என்ற பெண் மயான தொழிலாளியின் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோவை B10 காவல் நிலையத்தினரும் ஈரநெஞ்சம் அமைப்பும் இணைந்து இறுதி காரியங்கள் செய்தனர். அவரது ஆத்மா சாந்தி அடைய ஈரநெஞ்சம் அமைப்பின் சார்பாக பிரார்த்திக்கிறோம்.

~நன்றி
ஈரநெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

Based on the information provided by Selvi Sudha about an old man, almost naked without enough clothes and injured on his legs and laid on the street near LIC Colony Bus Stop in Selvapuram, Coimbatore, he was admitted in the Government Hospital, Coimbatore, by Eera Nenjam on 17/04/2013. Unfortunately he died on 27/04/2013. Even though he lived on streets, at least he was at a better place at his last moment.
His body was cremated after the rituals with the help of Ms. Vairamani, a volunteer in Eera Nenjam and working in the Cremation center. B10 police station and Eera Nenjam joined hands with her. Let us all pray for his soul rest in peace.

~Thank You
Eeranenjam

Sunday, May 12, 2013

ஈரநெஞ்சம் பயனுள்ள நாள் ~மகேந்திரன்


"வாழும் நாட்களில்  எல்லா நாட்களிலும் உண்மையான மகிழ்ச்சியை தரும் நாட்கள் நாம் பயனுள்ள வகையில் கழிக்கின்ற நாட்கள் தான்"
அப்படி நான் கழித்த நாட்களில் ஒன்றுதான் நமது ஈரநெஞ்சம் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில்  கழித்த அந்த ஒரு நாள்.

கடந்த 23-4-2014 உடன் ஈரநெஞ்சம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அதை பயனுள்ள வகையில் கொண்டாட ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் முடிவு செய்தோம். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் துப்புரவு பணி  மேற்கொள்ள முடிவு  செய்து , அதன்படி அந்த கட்டிடத்துக்கு வெள்ளை அடித்தல், கழிப்பறை சுத்தம் செய்தல், மற்றும் அங்கே  உள்ள முதியவர்களுக்கும் மாநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  முடி திருத்துதல், நகம் வெட்டுதல் குளிக்கவைதல்  போன்ற செயல்களை செய்தோம். மேலும் மரங்கள் நட்டோம், அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல் போன்றவையும் நடந்தது.

இதில் நானும் எனது நண்பர்களும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களுமான எண்ணற்றோர் கலந்துக்கொண்டோம் .

அவர்களுக்கு கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. அது மட்டும்  இன்றி கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக எழுத்தாளர்கள்  அகிலா ,  கோவை சரளா, திரு. கலாகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கே இருந்த முதியவர்களுடன் கழித்த அந்த ஒருநாள் உண்மையாகவே மனம் நிம்மதியாக இருந்த ஒரு நாள். ஆம்.. ஆதரவற்றோருக்கு அரவணைப்பு  தரும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி, நிம்மதி  இருக்கிறதே அதை விட பெரியதுங்க,அதை நாம் காண்பது. அந்த மகிழ்ச்சியை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். இது போல் முதியோர் காப்பகல் இல்லமால் இருக்க வேண்டும். நம்மை பெற்று போற்றி பாதுகாத்து வளர்த்த அவங்களை மிக கஷ்டமான ஒரு சூழ்நிலையில் வாழ விடக்கூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் இது போல் முதியோர் இல்லங்கள் இருக்கவே இருக்காது.

எங்களது இந்த செயலுக்கு அனுமதி தந்த கோவை மாநகராட்சி ஆணையாளருக்கும், காப்பக பொறுப்பாளர் , உதவி புரிந்த பத்திர்க்கை துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Thursday, May 09, 2013

காயம் ~ கதை

“ரொம்ப வலிக்கிது அம்மா”.

கண்களில் கண்ணீர் மல்கத் தன் காலில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் கூறினாள் அமுதா.
"கொஞ்சம் பொறுத்துக்கோ செல்லம். சீக்கிரம் ஆறிடும்" என்று மகளைத் தேற்றினாள் அம்மா.
அப்போது வீட்டு  வாசலில் வந்து நின்ற நண்பரை வரவேற்றார் அப்பா. உபசரிப்பை ஏற்ற நண்பர்  “வீடு ரொம்ப சுத்தமா இருக்கு. பிள்ளைகளும் ரொம்ப மரியாதையா நடந்துக்குறாங்க. பிள்ளைகளை ரொம்ப நல்லா வளர்த்திருக்கிறீங்க சார்” என்று பாராட்டினார்.
அப்பாவின் கண்களில் பெருமிதம். “ஆமாம் சார்...    என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்சைத் தட்டவே மாட்டாங்க. நான் அவங்களை ரொம்ப ஒழுக்கமா வளர்த்திருக்கேன்” என்று கூறினார்.
தன் வளர்ப்பின் சிறப்பினை மேலும் எடுத்துரைக்க அமுதாவை அழைத்தார் அப்பா. " அமுதா... இங்கே வா" என்று கூப்பிட்டார். அப்பாவின் குரல் கேட்டதும் வேகமாய் அவர் முன் தோன்றினாள் அமுதா. “பாத்தீங்களா சார்... கூப்பிட்ட குரலுக்கு உடனே என் பிள்ளைங்க வந்து நிப்பாங்க” என்று பெருமையாய்க் கூறினார் அப்பா. மேலும் அவளிடம் 'போய்  உன்னோட இங்கிலீஷ் நோட்ட எடுத்துக்கிட்டு வா” என்று கூறினார். அப்பாவின் கட்டளையை கேட்டதும் காற்றாய்ப் பறந்தாள்  அமுதா. உடனே தன் அறைக்கு வேகமாய் சென்று தன் புத்தகங்களை புரட்டி அப்பா கேட்ட ஆங்கில நோட்டு புத்தகத்தை தேடினாள். “இப்போ ஏண்டி இப்படி அவசரப்படுற? பொறுமையா தேடு. ஏன் என் புக்ஸ் எல்லாம் கலைக்கிற?” என்று அக்காவை திட்டினாள் இலக்கியா. அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் மீண்டும்  வேகமாய் சென்று அப்பாவின் முன் நின்றாள் அமுதா.
புத்தகங்களை வாங்கி புரட்டி பார்த்த நண்பர்.. "அடடா... கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கே" என்று அமுதாவை பாராட்டினார். “இருக்காத பின்ன .. என் வளர்ப்பு அப்படி”  என்று நண்பரிடம்  பெருமையாக சொன்னார் அப்பா. சிறிது  நேரம் பேசிவிட்டு நண்பர் விடை பெற்றுக்கொண்டார். அப்பாவும் தன் அறைக்குள் சென்று விட்டார்.
வீட்டில் நிசப்த்தம் நிலவியது. மெதுவாக  மீண்டும் அம்மாவிடம்    வந்தால் அமுதா. "அம்மா... வலிக்கிது மா".. என்று அழுதுகொண்டே கூறினாள். "ஆமாம்.. இப்படி  கூப்பிட்ட உடனே விழுந்து அடிச்சி ஓடினா  அப்படித்தான் வலிக்கும். உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?" என்று திட்டினாள் அமுதாவின் அக்கா கவிதா.


 "இல்ல அக்கா... கூப்பிட்ட உடனே போகலான அப்பா அடிப்பார். என்னால வலி தாங்க முடியாது.
நேற்றைக்கு கால்ல வச்ச சூடு இன்னும் வலிக்கிது... 
 என்னலே தாங்க முடியல. அப்பாவுக்கு கோபம் வந்தா இன்னும் அடிப்பார். அதான் அக்கா வேகமாப்  போனேன்" என்று அழுதுகொண்டே கூறினாள் அமுதா. "இப்படிச் சின்னப் பிள்ளைகளை மிரட்டி, அடிச்சி பயத்தினாலே  
கிடைக்கிற மரியாதையைத்  தான்உன் புருஷன் ஊரெல்லாம்  
பெருமையா நான் நல்லா புள்ள வளர்த்திருக்கேன்னு சொல்லிக்கிட்டு  
திரியிறாரு. ஆண்டவன் என்னைக்கு தான் இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பானோ" என்று மருமகனைக் கடிந்து கொண்டாள் பாட்டி.  
அதைக் கேட்டவுடன் அமுதா " பாட்டி... எங்க அப்பாவைத் திட்டாதே.  
உன்னையா அடிச்சாரு? எனக்கு தானே சூடு வச்சாரு. பேசாம இரு". என்று பாட்டியை அதட்டினாள். "ஆமாம் இதுல  ஒன்னும்   
குறைச்சல்  இல்ல. இப்படியே  நீ  காலம்  முழுக்க  அடி வாங்கிகிட்டே  இரு "  என்று கூறினாள் பாட்டி. 
"பரவாயில்லை  நான் பாத்துக்கறேன்   என் அப்பாவைத் திட்டாதே".  
என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காயத்திற்கு மருந்து தடவினாள்  
அமுதா.  
பக்கத்து அறையில் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் கண்களின்  ஓரம் கண்ணீர்த் துளி கசிந்தது.  
தன் மகளின்  காலில்  தான்  வைத்த  சூடு இதயத்தில்  உரைத்தது  அவருக்கு!

~தமிழ் செல்வி

Sunday, May 05, 2013

இப்போ உனக்கு நிம்மதியா...

உனக்கு என்ன
உன்
நினைவுகளை
எனக்கு அனுப்பிவிட்டு
நீ
நிம்மதியாக உறங்க
போய்விட்டாய்...

இங்கு
உன் நியாபகங்கள்
என்னை
படுத்தும்பாடு
உனக்கு
எங்க தெரியபோகிறது..!

-மகி

Thursday, May 02, 2013

"சாதாரணமாய் இருந்து சாதனை படைத்தவர்கள்"~ஈரநெஞ்சம்

"சாதாரணமாய் இருந்து சாதனை படைத்தவர்கள் "

28-04-13 அன்று கோவையில் உள்ள நேசம் என்ற அமைப்பு "சாதாரணமாய் இருந்து சாதனை படைத்தவர்கள் " என்று, வாழ்வில் சாதனை படைத்த சிலருக்குப் பாராட்டு விழாவை நடத்தினார்கள். அவர்களில் நமது ஈரநெஞ்சம் அமைப்பும் ஒன்று என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்களை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, நோய் வாய்ப்பட்டு ஆதரவற்றவர்களைக் காப்பங்களிலும் மருத்துவமனைகளிலும் சேர்த்து பராமரித்தல், அவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இறுதி காரியங்கள் செய்தல், குடும்பத்தை விட்டுத் தவறுதலாகப் பிரிந்து விட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவி தொகை வழங்குதல், மேலும் அவர்களுக்குத் தேவையானப் பொருட்களை வழங்குதல், இரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல், இலவசக் கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், உடல் தான விழிப்புணர்வு முகாம்கள், வாரம் தோறும் காப்பங்களுக்கு உணவு வழங்குதல், மளிகைப் பொருட்கள் வழங்குதல், ஆதரவற்ற மகளிருக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் வசதி செய்து கொடுத்தல் போன்ற பல்வேறு சேவைகளுக்காக ஈரநெஞ்சம் அமைப்பிற்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டு நேசம் அமைப்பின் இயக்குனர் திரு. ஆனந்த் அவர்கள் மூலம் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஈரநெஞ்சம் அமைப்பின் அறங்காவலர் திரு. மகி மற்றும் உறுபினர்கள் திரு. அன்பு, திரு. பரணி, திரு. அருண், திரு. தபசு ராஜ், திரு. ஜெகதீசன், திரு. கண்ணன், திருநங்கை. வைஷ்ணவி, திருநங்கை. பிரியா, திருமதி. அஸ்மிதா, திருமதி. வசந்தா, செல்வி. சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

~நன்றி
ஈரநெஞ்சம்

“Ordinary People Achieving Extraordinary Tasks”


On 28/04/2013, ‘Nesam’, an organization in Coimbatore, conducted an appreciation function to felicitate few people under the banner “Ordinary People Achieving Extraordinary Tasks”. We are happy to inform you that our Eera Nenjam was also selected for that.
Mr. Anand, Director of ‘Nesam’ presented a memento to our organization for our extraordinary services that include taking care of the abandoned old people on streets, mentally challenged people and sick people and admitting them in hospitals or Homes, doing the final rituals if anyone of them died, reuniting some of them with their families if they have, taking care of the education of the orphaned children in Homes, conducting blood donation, tree plantation camps, organ donation and eye checkup camps, giving various help to the inmates of the Homes including meals and groceries, giving tailoring machines, training and job opportunities to women.
Eera Nenjam President Mr. Magi and other members Mr. Anbu, Mr. Bharani, Mr. Arun, Mr. Thabasu Raj, Mr. Jegadeesan, Mr. Kannan, Thirunangai Vaishnavi, Thirunangai Priya, Mrs. Asmitha, Mrs. Vasantha, Miss. Sudha attended this function.

~Thank You
EERANENJAM