ஆதரவற்றவர்கள் நாங்க
, எங்களை வைத்துதான் எல்லோரும் பயனடைவாங்க,

எங்களாலும் பல பயனுள்ள செயல்கள் செய்ய முடியும் என்பது என்னும் போது சந்தோசமா இருக்கு,

elsie matriculation school sanganoor இந்த பள்ளியில் மரம் நடுவதற்காக மகேந்திரன்
elsie matriculation school அங்கு 24/07/11 sunday morning அழைத்துக்கொண்டு சென்றார்...
பள்ளி சென்று படிப்பதற்கே வழியில்லாத நாங்கள் ஒரு பள்ளிகூடத்தில் மரங்கள் நடப்போகிரோமா..

என்று என்னும் போது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பதுபோல இருந்தது,
ஒரு இனம் புரியாத சந்தோசம் மனதில் ,
சினிமாவிற்கு சென்று இருக்கிறோம், பூங்காவிற்கு சென்று இருக்கிறோம், கோவிலிக்கு சென்று இருக்கிறோம், ஏதாவது அமைப்புகள் நடத்தும் கூட்டம் விளையாட்டுப்போட்டி யில் கலந்து கொண்டு இருக்கிறோம், மகேந்திரன் அண்ணா மற்றும் அவருடைய விஸ்வகர்மா நண்பர்கள் பரிந்துரையின் பேரில் முதன் முதலில் ஆதரவற்ற நாங்கள் மரங்கள் நடுவது மிக சந்தோசமாக இருக்கிறது,

elsie matriculation school முழுவதும் நாங்கள் 25 குழந்தைகள் 30 மண்ணில் குழிகள் வெட்டி விஸ்வகர்மா நண்பர்கள் கொண்டுவந்த 30 மரங்களை அதில் நடவைதோம்,

பிறகு மரங்களுக்கு மூங்கில் கூடைகளை பாதுகாபிர்க்காக வைத்தோம்,

அந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் 40,50 வயதுடையவர்கள் இறகு பந்து விளையாடி கொண்டு இருந்தனர்,
அவர்கள் 5,10 வயதுடைய எங்களின் இந்த மரம் நாடும் செயலை பார்த்து அவர்களுடைய விளையாட்டை போலவே சிறப்பாக பாராட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்,

பிறகு அந்த பள்ளியின் கரஸ்பாண்டன் திரு.ராஜேந்திரன் அவருடைய சார்பாக காலை உணவுக்கும் ஏற்பாடு செய்து குடுத்தார்.
பிறகு திரு.ராஜேந்திரன் அவர் எங்களிடம் எங்களால் நடப்பட்ட மரங்களை நாங்கள் நல்ல படியாக பார்த்து பராமரித்து கொள்கிறோ என்று வாக்கு கொடுக்கும் சமயம் எங்களை மிகவும் உயர்ந்தநிலைக்கு கொண்டு சென்றது போன்று இருந்தது.

பிறகு அவர்களுடைய உற்ச்சாகமான பாராட்டுகளுடன் எங்களது கார்னர் ஸ்டோன் இல்லத்திற்கு சென்றோம்,
ஒரு விஷயம் இந்த நாளை போல வேறு எந்த நாளும் இல்லைங்க .!

நன்றி.
மகேந்திரன்
Tweet | ||||

No comments:
Post a Comment