Tuesday, May 31, 2011

மாற்றங்கள் ○○○

இருண்டு விட்டது
என்று நினைக்க வேண்டாம்•••
மாற்றங்கள் இல்லை என்றால்
பொழுது கூட விடியாது•••

ஏன் வெட்கப்பட்டு சிரிக்கிறது ?

பூக்கள் எப்போதுமே
சிரித்து கொண்டுதான் இருக்கிறது ♥♥♥
அதுவும்
உனக்காக நான்
பறிக்கும் நேரத்தில் மட்டும்
ஏன்
வெட்கப்பட்டு சிரிக்கிறது ?
♥♥♥

காக்கை கூட்டின் மேல் என்ன கோவம் ?

மரத்தை
வேரோடு பிடுங்கி விட்டது...

காக்கை கூட்டின் மேல்
மழைக்கு என்ன கோவம் ?

இன்னிக்கி ஸ்கூலு லீவாம் (மழை)☺☺☺

மழை
பாடம் படிக்க
வருகிறதாம்
மாணவர்களுக்கு சிறப்பு விடுமுறை☺☺☺

என் காயங்கள் உனக்கு வலிக்க கூடாது♥♥♥

என்னை நீ ♥♥♥
எப்படி எல்லாம் காயபடுத்துகிறாய்
என்று
உனக்கு தெரியாது•••
என்
காயங்கள் உனக்கு
வலிக்க கூடாது என்று
உன் புன்னகையில் ஒளிந்து நிற்கிறேன்♥♥♥

நெருப்பானவளே ♥♥♥

நெருப்பானவளே
உன்னிடத்தில்
குளிர்
காய்வதில் எத்தனை  இன்பம்♥♥♥
♥முடுயுமா ?

முயன்றால் முடியும் !
யார் சொன்னது..?
முயன்றாலும் முடியாது
உன்னை மறக்க ♥♥♥

பாதுகாத்து வை☺☺☺

உன் 
அவமானங்களை 
பாதுகாத்து வை
அது
சில வெகுமானங்களை 
பரிசளிக்கும் •••

வெற்றி •••

பலவீனம் என்பது
மரணம்...
வாழ்வதே வலிமை•••

அக்கறை◘

கோவபடுவதும், மௌனமாகவும்
இருப்பதை தவிர வேறு
ஒன்றும் தெரியாத
என்று கேட்காதே..?
அதில் ஒருவித
அக்கறை இருப்பதை புரிந்துகொள் ♥♥♥

நீ ♥♥♥

அக்ஹய பாத்திரத்தில் கிடந்த
ஒரு துளி பருக்கை
நீ எனக்கு♥♥♥

வெற்றி •••

முயற்சி எடு
மற்றவர்களின் கை தட்டல்
உனக்காக
காத்து  இருக்கிறது•••

மட்டுமே அனுமதிப்பேன் ♥♥♥

நான்
கலைஞன் என்றால்
என்
மேடைக்கு
உன்னை மட்டுமே
ரசிகையாக இருக்க அனுமதிப்பேன் ♥♥♥

தாமதம் ♥♥♥

உனக்காக நான்
காத்திருக்கிறேன் என்று தெரிந்ததும் ♥♥♥

எனக்கு துணையாக
உனக்கு முன்னதாகவே
நீ சொன்ன பொழுதுகள் வந்துவிடுகிறது ♥♥♥

Monday, May 30, 2011

உனக்கு ரசிகர் மன்றம்

உன்
குரலை கேட்காத குயில்கள்
மேடை ஏறும் ♥♥♥

உன்
குரலை கேட்ட குயில்கள்
உனக்கு
ரசிகர் மன்றம் அமைக்கும் ♥♥♥

பிஞ்சு

மாலையில் கட்சி போது கூட்டம்,   
இரவுவோடு  உல்லாசம்
நடு இரவு நடு ரோட்டில் 
விழுந்து உறக்கம்
அதிகாலை 
குப்பைகளை 
பொறுக்க வரும் பிஞ்சு விழுந்த தொண்டன்,தந்தையையும் 
எழுப்ப வரும்•••

புதைந்து போகிறது •••

நீ
பிரிந்து போகிறாய் •••

உன்னை
பிரிந்த வேதனையில்
பாத சுவடுகள்
மண்ணில் புதைந்து போகிறது •••

என்னை போலவே...

நீ •••

நீ என் உயிர்
நான் போய்விட்டால் ?
நானாய் இருக்கும் உடல்
உடலை எரித்து விட்டால் ?
நீ என்னில் மிஞ்சிய சாம்பல்
சாம்பலை கரைத்து விட்டால் ?
நினைவாய் சுற்றும் காற்று •••

நேயம் ?

புத்தன் என்பான்
காந்தியம் என்பான்
கறிக்கடை வாசலில் 
வரிசையில்
நிர்ப்பான்...
மனிதன்•••

ஆயுதம் ♥♥♥

உன்
ஒவ்வொரு பார்வையும்
புது புது விதம்
ஆனால்
ஒரு ஒற்றுமை
எல்லா பார்வையுமே ஆயுதம் ♥♥♥

நிலை

உண்டியலில் இட்டவனுக்கு மட்டுமே
உண்ட பண்டம் தருகிறான்...
உள்ளதற்கே
வழி இல்லை

உண்டியலுக்கு எங்கு போக...


வானவில் தான் மிஞ்சும் ♥♥♥

எந்த ஓவியனாலும்
முழுமையாக
உன்னை வரைந்து விட முடியாது ♥♥♥

அப்படியே
வரைந்தாலும்
இறுதியில் வர்ணங்கள் சேர்ந்த
வானவில் தான் மிஞ்சும் ♥♥♥

பேரழகு உனக்கு ♥♥♥

கடலை கூட
அள்ளி தீர்த்து விடலாம் ,

உன்
அழகை சொல்லித்திராது...

அப்படி ஒரு
பிரம்மாண்டமான பேரழகு உனக்கு ♥♥♥


Sunday, May 29, 2011

ஓடி வருகிறது ♥♥♥

உன்
வாசம் நுகர
பூக்களிடம் கூட 
சொல்லாமல்
ஓடி வருகிறது நறுமணம் ♥♥♥

உன்னோடு ♥♥♥

பொழுதெல்லாம்
உன்
நியாபகம் ♥

இரவெல்லாம்
உன்
கனவு ♥

வாழ்நாளெல்லாம்
உன்
சுவாசம் ♥♥♥

என்னை மட்டும் பிடிக்கும்♥♥♥

எல்லோருக்கும்
என்
கவிதை பிடிக்கும்...

இந்த
கவிதைக்கு
என்னை மட்டும் பிடிக்கும்♥♥♥

புன்னகை கொடி

மழைக்கு கருப்பு(கொடி) குடை
பிடிப்பது போல... 


என்
வேதனைக்கு புன்னகை
பிடிக்கிறாய் ♥♥♥

நீ ♥♥♥

உன்
புன்னகை என்னை
பித்தனாக்குகிறது..♥

 
உன்
அழகு என்னை
அசிங்கமாக்குகிறது..♥

உனக்காகத்தான்♥♥♥

உனக்காகத்தான் 

இந்த வானவில் ஆடை 

வானம் நெய்தது ♥♥♥

எப்படி தூக்கம் வரும்..?

இரவெல்லாம் 
உன் 
கனவுக்காக 
காத்திருந்து, காத்திருந்து
விடியும் வரைக்கும் 
உன் 
கனவு வந்தாக இல்லை...
பிறகு எப்படி 
எனக்கு தூக்கம் வரும்..?

மழை கனவு...

காடுகளை அழித்து விட்டு
கழுதைக்கு கல்யாணம் பண்ணி
மழை கனவு காணும் மனிதா...

வெளிச்சத்தை துலைத்து விட்டு
இரவில் நிழலை காணவில்லை 
என்று தேடுகிறாயோ..?
பஞ்சாமிர்தத்தில் மிளகாய்
இருக்குமா..? 


அது போல தான்

உனக்கும், கோவத்துக்கும் பொருந்தாது 
அனாலும்...
நீ 
பஞ்சாமிர்தம் இல்லை
தேனாமிர்தம்...

Saturday, May 28, 2011

பயம்
 


உன்னிடம் 
மௌனம் 
இருந்தால்...

என்னிடம் 
மரண பயம் இருக்கும்...

கவிதை

கிறுக்கல்கள் கூட உன்னிடம்
கவிதையாகிறது...

சிறகுகள் இல்லை...

சிறகுகள் இல்லை
என்னிடம் 
உன்னை தேடிவர...

ஆனால் 
இதயம் இருக்கிறது 
என்றும் உன்னை நினைத்திட...

என்னோடு ராணிஇருந்தால்...

என்னோடு
ராணி(நீ) இருந்தால்...
யானையாக
இருந்தாலும்
சுண்டு விரலில் தூக்கி வீசுவேன்.!
சதுரங்கம் உனக்கு தெரியாதா...?

ஏன் புறக்கனிக்கிறாய்..?

ஏ விழியே  
உன் இமை நான்
என்னை 
ஏன் புறக்கனிக்கிறாய்..?

காதல்? காமம்?


உள்ளம்
பார்த்து வந்தால் காதல்;
உருவம்
பார்த்து வந்தால் காமம் ...

கட்டை வேகவேண்டாமா...?

கட்டை விரல்
கட்டி போகும் போதும்...
உன்
நினைவு வேண்டும்.
கட்டை வேகவேண்டாமா...?

என்ன சொல்ல போகிறாய்...?

என்னை விடு;

 
நீ
இல்லாத
என் 

பொழுதுகளுக்கு
என்ன 

பதில் சொல்ல போகிறாய்...?

பூ நான் ...

விடியற்காலையில் 
வரும் 
பனிச்சாரல் நீ...


உன்னிடம்
குளிர்காயவிருக்கும் 
பூ நான் ...

முகவரி..?


நான் 
உனக்காக எழுத பட்டு

உன் 
முகவரிக்காக 
காத்து இருக்கும் 
கடிதம் ...

பெண்மை

எந்த
பூவிலும்
இல்லாத மென்மை

உன் பெண்மை...

பித்தனாக வேண்டும்

இறைவன்
உனக்கு தெரியாமல்
கொடுத்த வரம் ஒன்று...

உன்னை 
கண்டவன் எல்லாம்
பித்தனாக வேண்டும் என்ற...

பயன் படுகிறது


எரிப்பதர்க்ககவே
பயன் படுகிறது எண்ணெய்...
என்னை
எரிப்பதர்காகவே பயன் படுகிறது
உன் விழிகள்...

Friday, May 27, 2011

உன்னை இழக்க கூடாது...

என் காதலை
உன்னிடம்
சொல்ல போவது இல்லை...

காதலை சொல்லி
என்
காதலை  ஏற்று கொண்டால்
நீ
எனக்கு கிடைப்பாய்....

ஒருவேளை;
நீ 
ஏற்க்கவில்லை என்றால்
உன்னை
இழந்து விட்டதாக அல்லவா என்ன தோன்றும்...

உன்னை இழக்க கூடாது...

என் காதலை பற்றி தெரியாது...

பூக்களுக்கு தெரியாது
வேர்களை பற்றி...

அது போல
என் காதலை பற்றியும்
உனக்கு தெரியாது...

வாடி போக கூடாது..!

உன் 
புன்னகை உதிர்ந்து 
கொண்டே இருக்க வேண்டும்...

ஆனால் வாடி போக மட்டும் கூடாது..!

எதிர் வினை


ஒவ்வொரு வினைக்கும்
அதற்க்கு சமமான
எதிர் வினை இருக்குமாம்...

உலகளாவிய அன்பு

உன் மேல் நான் வைத்தும்;
அனு அளவும்
அன்பு என்மேல் இல்லாதது...

உடைத்து விடாதே...

என்னை வைத்து
எப்படி வேண்டுமானாலும்
விளையாடு
அனால்
உடைத்து விடாதே...

நீ
விளையாட என்னை போன்ற
இன்னொரு உயிருள்ள பொம்மை
கிடைக்காது...

Thursday, May 26, 2011

சாத்தியமாகாது ...

பூமியே  
எடைக்கல்லாய் இருந்தாலும்  
சாத்தியமாகாது  ...
உன்
அன்பை எடை போட்டு சொல்ல...