Friday, September 30, 2011

மனம் சிறகடிக்க...♥

இறக்கைகள்
ஏதும் அவசியம் இல்லை...
உன்
புன்னகை ஒன்றே
போதும்...
என்
மனம்
சிறகடிக்க...♥

கனவு காணமுடியுமா ?

உறங்கினால் தான்
கனவு
காணமுடியுமா ?
என்
கனவே நீதானடி
நான்
உறங்கினால்
உன்னை
எப்படி
காணமுடியும்..♥

கனவு பயிற்சி ...

என்
இரவுகளில்
நடக்கும்
உன் கனவு
பயிற்சி தான்
என்னை உறங்க வைக்கிறது...!

நட்புக்காக காத்திருக்கிறது...!

இந்த உலகம்
அதற்குள் அழிந்துவிட கூடாது...
இது
நட்புக்காக காத்திருக்கிறது...!

தேடல்...

ஒரு புறம்
நான்
ஒரு புறம்
வா தேடலில்
சிந்திப்போம்..♥

ஜாதி சண்டை ஒழிய...

முத்தச்
சண்டைக்கு
அனுமதி
கொடுங்கள்...
ஜாதி  சண்டை
ஒழிய வேண்டும்..♥

தெரிந்தும் தொடர்கிறேன்...

என்னை
ஏற்க்க மாட்டை
என்று தெரிந்தும்
தொடர்கிறேன்...
மரணம் வாழ்வினில் 

நிகழ்வது
சகஜம் தானே..!

தனி சுவை...

கரும்பு
சுவை போல
உன்
குறும்பிலும்
தனி சுவை...♥

தெரிந்தும் தெரியாதது போல

என் காதலை
மென்னு முழுங்கி
சொல்லதெரியாமல்
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்...
தெரிந்து கொண்டே
தெரிந்தும் தெரியாதது போல
காட்டிக்கொல்கிறாலோ...


உடை அணிவது இல்லை...

வானம்
பகலில் ஒளி எனும்
உடை அணிந்துக் கொள்கிறது...
இரவில்
வானம் உடை
அணிவது இல்லை..!
அதனால் தான்
இரவினில் மட்டும்
வானுக்குள் இருக்கும்
நட்சத்திரங்களும்
நிலாவும்
தெரிகிறது..!

கப்பலாக நீ...

படைப்பின் விந்தையை 
பார்...
கடலையே மூழ்கடிக்கும்
கப்பலாக 

நீ
இருக்கிறாய்...♥

Thursday, September 29, 2011

கவனம்...

கல் தடுக்கினால்
காயம் விழும்..!
காதல் தடுக்கினால்
கல்லறையில் தான் விழவேணும் ..!
கவனம்

நமகேற்றபடி இல்லை...

உனக்கேற்றபடி நான்..!
எனக்கேற்றபடி நீ..!
நமகேற்றபடி இல்லை
காதல் !

பழனிக்கு உறவு கிடைக்கவேண்டும்... ~மகேந்திரன்

பழனி என்பவர்  ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க  முடியாமல் கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கிறார்  ,
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பழனிக்கு உணவு குடுத்து வந்தனர் , இன்று காலை  ஈரம் நிறைத்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரும்,எனது நண்பருமான பழனியப்பன் மூலம்  என்னை (மகேந்திரன்) அழைத்து இவரது நிலையை சொல்லி ஏதாவது ஒரு உதவி கிடைக்க கேட்டுக்கொண்டனர் ,
நான் நேரில் அவரை பார்க்கும் பொழுது அதிக முடியுடனும் பலவருடமாக குளிக்காமலும் மிகுந்த துர்னாற்றதுடன் நடக்க முடியாத நிலையில் பார்க்க பரிதாபமான நிலையுடன் இருந்தார் .
பிறகு ஹிந்துஸ்தான் மாணவர்கள் உதவியுடன் பழனி அவர்களுக்கு அதே இடத்தில் முடிவெட்டி ,குளிக்க வைத்து அங்கோம் அளவிற்கு வளர்ந்து இருந்த கை,கால் நகங்களை வெட்டிவிட்டு , வேறு உடை அணிவிக்கப்பட்டு தற்போது புதிய மனிதராக மாறியுள்ளார் ,


அதன் பிறகுதான் பழனி பேசத்துவங்கினார் அவர் சாலை பராமரிப்பு  பணிசெய்து வந்தவராம் , சத்தியமங்கலம் செலும் வழியில் உள்ள நம்பியூர் என்றும் மனைவி நான்கு வருத்திற்கு முன் இறந்து விட்டதாகவும் ஒரு விபத்தில் நடக்கமுடியாத நிலைக்கு வந்ததாகவும் ,ஒரு மகள் அவள் பெயர் விஜயலக்ஷ்மி திருமணம் ஆகிவிட்டது ,என்றார் , தனது மனைவியின் பெயர், மருமகன் பெயரும்  தெரியவில்லை என்றார், நம்பியூர் ADMK பிரசிடன்ட் ரங்கன் இவருக்கு தெரியும் என்றார் ,

கல்லூரி மாணவர்கள் இவரிடம் உங்களை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் அங்க உங்களை நல்லபடியாக பார்த்துகொல்வார்கள் என்றதற்கு  வரமறுத்துவிட்டார் , மேலும் பழனி கூறும் போது தான் இங்கு இருப்பது மகள் விகயலக்ஷ்மி க்கு தெரிந்தால் நேரில் வந்து தன்னை அழைத்து சென்று விடுவாள் நான் இங்கு இருப்பது அவளுக்கு தெரியாது ,
மாணவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பழனியின் மகள் விஜயலக்ஷ்மிக்கு விபரம் தெரிந்து வந்து அழைத்து போக மாட்டாளா என்ற எண்ணமே தூக்கத்தை கெடுக்கிறது...

ஹிந்துஸ்தான்  மாணவர்கள் மூலம் உருவாக்கிய இந்த புதிய மனிதருக்கு உறவு கிடைக்குமா...
~மகேந்திரன்

என்னை எப்போது..?

காயப்போட்டிருந்த
துணிகளை
எல்லாம்
அள்ளி அனைத்து
எடுத்துப் போகிறாய்...
உன்னால் தான்
காய்ந்து கிடக்கிறேன்...
என்னை
எப்போது..?

கல்லை செதுக்கினேன்...

ஒரு
கல்லை செதுக்கினேன்...
செதுக்க ,செதுக்க
கல்
காதல் சிற்பமானது...
சிற்பம் அதை
நீ
உடைக்கவே...
கல்லாகிபோனேன்
நான்..♥


காகம்...

குயில்
பாடும்,
அதை ரசிக்கும் மனமே...
காக்கையை போல
தன்
உறவு முறையை
சொல்லி அழைக்கும் பறவை
எது...?

Wednesday, September 28, 2011

என்னவளே...

என்னவளே
என்
மீது கோபம் என்றால்
கொன்று
விட்டு போ...
விட்டு விட்டு
போகாதே...♥

தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, எத்தனை பேருக்கு தெரியும் ...

ஒரு உண்மை தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, இது யாருக்கு, எத்தனை பேருக்கு தெரியும் ..
மும்தாஜ் மரணம் ,சாஜகான் துயரத்தில்...
மும்தாஜ் கல்லறை அருகே மன்னர் சாஜகான் கல்லாய்...
கல்லறைக்கு தன் உயிரை மாலையாக்கி கொண்டு இருந்தார் ...
சாஜகான் மீண்டும் நடமாடவேண்டுமானால் மும்தாஜ் நேரில் வரவேண்டும்,
மும்தாஜ் இல்லை அவளை போன்ற அழகின் உருவம் வேண்டும் ஒரு மாளிகை வேண்டும் , இதனால் மட்டுமே மன்னர் நடமாட முடியும் ,

ஹரின் மன்னர் அவையின் கட்டிட வடிவமைப்பாளர் புதியதாய் திலோதினா வைமனம்முடித்தவர்...
ஹரிணியை அழைக்கப்பட்டு மும்தாஜை போன்று மாளிகை வடிவமைக்க சொன்னார் மன்னர் ,
தொடர்ந்து ஐந்தாறு முறை வடிவமைத்து எல்லாமும் அழகாக் இருந்தது, ஆனால் மும்தாஜின் உருவம் இல்லை எனநிராகரிக்கப்பட்டது,

இறுதியில் ஒரு வடிவம் தரவேண்டும் ,அது மும்தாஜை போன்று இருக்க வேண்டும் ,இல்லையென்றால் ஹரிணியின் தலை துண்டிக்கப்படும் என்று கட்டளை வந்தது...

சிறகடித்து பரந்த இளம் பறவைகள் சிறகொடிக்கப்பட்டது போல இருந்தது...
மன்னரிடம் வந்தால் திலோதி மன்னரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்க ஒரு மாதம் கழித்து வரைபடம் வரவில்லை என்றால் ஹரிணியின் தலை துண்டிக்க உத்தரவிட்டார்..
ஆண்பறவை சிறகு ஒடிந்த நிலையில் விறகாய் , புன்னகை முகத்தோடு ஹரிணியை பார்த்து மன்னர் கட்டளையை நிராகரித்து விட்டார் இனி நாம் சுதந்திரமாக பறக்கலாம் என்று இரு பறவைகளும் பறக்க இன்பம் இன்பம் எல்லாம் அவளவும் அன்பின் படையலில் , ஹரிணிக்கு ஓவியம் வரைவதும் கூட மறந்தாய்ற்று ,
மாத இறுதி வந்தது...
ஒருநாள் திலோதினாவை காணாமல் தேடினான் ஹரிணி எங்கு தேடியும் கிடைக்கவில்லை, தன் ஓவிய அறைக்குள் நுழைந்து தேடினான் , தூசி படிந்த ஓவிய பலகையில் படபடத்தது ஒரு காகிதம் அதில் திலோதினா எழுதி இருந்தால் , மன்னர் அழகான ஓவியம் கேட்க்க வில்லை ,சோகமான அழகை கேடிருந்தார், நான் இருந்தால் உங்களுக்கு சோகம் உங்களுக்கு எங்கிருந்து வரும் , கடிதத்தில் நீங்கள் படிக்கும் நேரத்தில் இந்த பூ யமுனையில் உயிர் துறந்து இருக்கும் நீங்க மன்னருக்காக ஓவியம் வரைய வேண்டாம் என்னை நினைத்து என் உருவத்தில் வரையுங்கள் என்று , அதை படித்ததுமே ஹரின் உடைந்தான் தூள் தூளாய் போனான் ,தூரிகையை எடுத்தான் திலோதினாவால்  உருவான பிரம்மாணடமான கண்ணீர் துளியினை வரந்தான் மன்னனிடம் அனுப்பினான் ,ஓவியம் மன்னனிடம் வந்தது.. மன்னம் இதைதான் கேட்டேன் எங்கே அந்த திலோதினா  அழைத்து வாருங்கள் மும்தாஜை என்முன் நிறுத்திய  வரசொல்லுங்கள் சொன்னதை செய்துகாட்டினால் , திலோதினா இப்பொது இல்லை யமுனாவில் வாழ்கிறாள் என்று ,மன்னர் எங்கே அந்த ஓவியன் என்று பூ எங்கு இருக்குமோ அங்குதானே வண்டும் இருக்கும் என்றான்,
  மன்னர் முடிவெடுத்தார்

இந்த பறவைகளுக்காக யமுனை நதி ஓரமாக தாஜ் உருவாக்க படவேண்டும் இது மும்தாஜி மேல் ஆணை
எல்லா நதியும் புன்னகையோடு ஓடுகிறது ...
யமுனை மட்டும் கண்ணீரோடு ஓடுகிறது ...
~மகி

முத்தக்காவியம்...

முத்தக்காவியம் 
எழுதும் யாவருமே
முற்றுப்புள்ளி வைப்பது
இல்லை...♥

பசிக்கு உணவு...

சத்யா யுகம் முதலான பொற் காலங்களிலும் பசிக்கொடுமை இருந்து வந்துள்ளது, தற்போது நடந்து வரும் கலியுகத்தில் எல்லாக்கொடுமைகலோடும் பசிக்கொடுமையும் அதிகரித்து வருகிறது, இக்கொடுமைக்கு பணமில்லாத ஏழை மட்டுமின்றி மாடி வீட்டு ஏழையும், உயர்கல்வியில் சிறந்த ஜீவிகளும் ஆளாகிறார்கள், அதனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதின்றி இந்த ஜென்மத்திலேயே  எல்லா நலன்களையும் அடையலாம், இத்திட்டத்தில் உணவருந்துவோர்களும் ஆண்டவனின் அருளால் பூர்வ ஜென்ம வினைகளிலிருந்து விடுபட்டு அவர்களும் நல்வாழ்வை அடையலாம்.
பகவான் அருளுரையை ஏற்று தற்சமயம் தினந்தோறும் 100 முதல் 150   பேருக்கு மதியம் மட்டும் பசிக்கு இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது, 
இதன் ஒரு பகுதி தான் ஞாயிறுகிழமை தோறும்  மதியம் நாம் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உணவு வழங்குவது.
பசிக்கு உணவு பயன் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால் இத்திட்டத்தை பல இடங்களிலும் விரிவு படுத்த இருக்கிறோம் . மேலும் பகவானின் கட்டளைப்படி இலவச மருத்துவமனை மூலம் மருத்துவ சேவைகளையும் தொடங்க இருக்கிறோம், இச்செவைககில் பலரும் முன்வந்து பங்கு பெற்று பகவான் சத்யா சாய்பாபாவின் அருளை பெற்று எல்லா நலன்களையும் பெற உங்களையும் அழைக்கிறோம் . இதற்க்கு ஆதரவளிப்போருக்கு வருமான வரிச்சட்டம் 80 (G) -ன் படி விளக்கு உண்டு.
                                                                         இப்படிக்கு
                                                                    ஸ்ரீ ரங்கா டிரஸ்ட்
                                                                            கோவை

                                                                                                              9843344991

என்ன செய்வது...?

காதலை மறுத்தல் 
என்ன 
செய்வாய் என்று 
கேட்காதே...
காதலை தவிர 
என்ன செய்வது...?

உணர்வாயா...?

வருத்த படமாட்டேன்,
வருதப்படவைக்கிறாய்  என்று...
வருத்தப்படாமல்  வைக்கிறாயே...
என்று வருத்தப்பட வைக்கும்
நீ
இதை உணர்வாயா...?

Tuesday, September 27, 2011

மனங்களும் உருமாறும்...

சிர்ப்பியின்
கையில் போகும் கல்
என்னவாகுமோ...
அது
போலதான்
காதலை தேடும்
மனங்களும்
உருமாறும்..♥

கவிதைகள் தொடரும்...♥

நிலா முற்றுப்புள்ளி
வானத்தில்
இருக்கிறது...
அதுவரை தொடரும்
உனக்காக
என்
கவிதைகள்...♥

சிற்பம்...

கல்லை காயப்படுத்தினால்
சிற்பம்
கிடைக்கும்...
நான்
கல்
என்னை செதுக்கியவள்
நீ
கல்லை காயப்படுத்திவிட்டு
கல்லாகவே இருக்கிறாய்..♥

Monday, September 26, 2011

எதிர் பார்த்த நேரம்...

நீ
என்
கவிதைகளை
எதிர் பார்த்த
நேரம்...
முகம் பார்க்கும்
கண்ணாடியை
பார்த்திருக்கலாம்
என்
கவிதையைவிட,
உன்
பின்பம் இன்னும் ரசிக்கும்படி
இருக்கும்..♥

தேவதை வாழ்கிறாள் ...

நீ
முகம் பார்க்கும்
கண்ணாடிக்கும்
என்னை
போலவே ஒரு
நம்பிக்கை...
பூமியில்
தேவதை வாழ்கிறாள்
என்று..♥

காதல் செயல்...

எல்லாம் இறைவன் செயல்
என்றா சொல்வது..?
எல்லாம் காதல் செயல்
என்று சொன்னால் என்ன..?
இறைவன் சோதித்து பார்ப்பான்..!
காதல் சேர்த்துவைத்து பார்க்கும்..♥


பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!

பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!
சூரியன் என்ற பெயரை பார்த்தால் ஒரு ஆண் போலதானே தெரிகிறது...
சூரியனின் குணத்தை வைத்து பார்க்கும் பொது ஒரு பெண் என்று சொல்லலாமா ...?
பெண்ணிற்கு அமைதி, தெளிவு, கோபம், வெட்கம் இவ்வகை குணம் இருக்கிறது ,
சூரியனை போலவே...!
விடியும் பொழுது சூரியன் எவ்வளவு அமைதியாக மலர்கிறது..!
விடிந்தபிறகு பாருங்க சூரியன் எவ்வளவு தெளிவா இருக்கும் என்று..!
மதிய நேரம் சூரியனின் கோபம் யாரால் தாங்க முடிகிறது..!
மாலை நேரம் சூரியனின் வெட்கப்படுவதை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு இல்லையா..!
இவையெல்லாம் பார்க்கும் பொது சூரியன் ஆண் பெயர் கொண்ட பெண் போலதானே தெரிகிறது...!


ஒருவகை நிலா..♥

நிலா என்பது நிலா அல்ல
ஒருவகை கல்...
நீ என்பது பெண் அல்ல
ஒருவகை நிலா..♥

ஜடம்...

என்னை விட
என்
இதயம் நம்பிக்கை
அதிகம் கொண்டுள்ளது...
நான்
ஜடமானாலும்...
உன் மேல்
உள்ள
நம்பிக்கையில்
இன்னும்
துடிக்கிறது...♥

வெகுளித்தனம்...

சரியும் உன்
முந்தானையை
சரிசெய்ய சொல்லும்
என்
ஜாடையை
வெகுளியாய்
பார்க்கிறது
உன்
விரல்கள்...♥

Sunday, September 25, 2011

அதற்க்கு பெயர் காதல்...♥

என்னை பற்றி நான்
அறிந்ததைவிட நீயும் ...
உன்னை பற்றி நீ
அறிந்ததைவிட நானும் ...
அறிந்து கொள்ள
ஆசை பட்டால்
அதற்க்கு பெயர்
காதல்...♥

கனிமரம்...

மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், கனி, பூ,
இவைகள் இருக்கும்...
உன் மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், பூ
இவையெல்லாம்
கனியாகவே இருக்கும் 

கனிமரம்...♥

நீ காத்திருந்தால்...

உன்
காதலிக்காக
நீ
காத்திருந்தால்
என்ன
செய்திருப்பாய்,
தரையை
உதைத்திருப்பாய்...
கடிகாரத்தை பார்வையாலேயே
கடிதிருப்பாய்...
நான்
என்னவளுக்காக
ஒரு ஆயுள்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..♥

அழகு...

மடங்குகளில்
கூடிக்கொண்டு போகும்
உன்
அழகை
கவிதைகளில்
எப்படி
எழுதி முடிப்பது...♥

Saturday, September 24, 2011

எப்படி இருதவள் எப்படி ஆகிவிட்டால் -மகேந்திரன்

நான் மகேந்திரன் வழக்கம் போல பேட்மிண்டன் விளையாடிவிட்டு வீடு திரும்பும் பொது  ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சந்தித்தேன்...  ,
தலை முடி முழுவதும் ஒட்டிபோய் ஆளுக்கு அண்டி அரைகுறை உடையுடன் காணப்பட்டால்,
பார்பதற்கு பரிதாபமாக இருந்தது,
பார்பதற்கு இந்த நிலையில் இருந்தால்

எனது நண்பர் சியாம் அவருடன் இணைந்து ,  அருகில் இருந்த கடையில் ப்ளேடு, சோப்பு, மற்றும் ஒரு வீட்டில் அவளைகுளிக்க வைக்க தண்ணீரும் வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு முடி வெட்டி விட்டு குளிக்கவைத்து வேறு உடையை அணிவித்து வந்தோம் ,
இப்போது அந்த மனநலம் சரியில்லாத பெண்

அதனை தொடர்ந்து
நாங்கள் இத பணியை செய்வதை ஒருவர் கவனித்துக்கொண்டு இருந்தார் , அவர் என்னிடம் வந்து என்னை மன்னித்து விடுங்கள் என்றார் ,
எதற்கு என்றேன் ,
நேற்றைய தினம், தன் கடைக்கு முன் நின்றதால் அந்த மனநலம் பாதித்த பெண்ணை கல்லைக்கொண்டு அடித்து விரட்டிவிட்டாராம் , இப்போது நீங்கள் இந்தப்பெண்னின் மீது காட்டிய அக்கறையை பார்க்கும் பொது எனக்கு நானே வெட்கப்படுகிறேன் என்றார். இதற்க்கு நான் "பரவாலை விடுங்க இனி இப்படி யாரையும் துன்புறுத்த வேண்டாம் " என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன்...
அந்த  மனிதர் மனம் திருந்தியது நம் மனம் மகிழ்ந்தது ...
~மகேந்திரன்

வேதனை நறுமணம்...

என்
வேதனை
நறுமணத்தை
உன்
மேனியில் பூசிக்கொண்டு
வளம் வருகிறாய்...
பொன்னும், பொருளும்
இல்லாமலேயே
நீ
அழகிதான்
இதில்
மேலும் மெருகேற்ற
வேண்டுமா...♥

வாழ்க்கையே இல்லை...!

காதலினால்
வாழ்க்கை
இல்லை...
காதல்
இல்லையெனில்
வாழ்க்கையே இல்லை...!

குடும்பம்...

சண்டை இல்லாத
குடும்பம்
இல்லை...
சண்டை இல்லை
என்றால்
குடும்பமே
இல்லை..!


அதிசயம்...

கண்ணில்லாத ஒருவனின்
கையில் உருவான
சிர்ப்பம் போலதான் ...
காதல்
இல்லாத
என்
கையில் உருவான
இந்த
கவிதைகளும்
அதிசயம்..!

முந்தானை

உன்
முந்தானைக்கு
ஆசைப்பட்டு
குடையை
மறந்து வந்தேன்...
மழையின்
சகியாமை
சதிசெய்துவிட்டது...♥