Showing posts with label நிலா. Show all posts
Showing posts with label நிலா. Show all posts

Friday, November 04, 2011

நிலாவை விட
நீதான் சிறப்புடையவள்...

நிலா நிழல்
நீரில் மட்டும் தான் தெரியும்...

உன் நிழல்
நிலத்திலும் தெரியுமே..♥

Tuesday, October 04, 2011

மூக்குத்தி மின்னும்...

நிலவில் 
நட்சத்திரம் மின்னுமா..?
உன் 
மூக்குத்தி மின்னும் 
அழகை 
பார்பவர்களுக்கு 
இந்த குழப்பம் இருக்கும்..!

Sunday, October 02, 2011

நிலா தோல்...

நீ
நிலா தோல்
போர்த்திய
பூ..♥

Friday, September 30, 2011

உடை அணிவது இல்லை...

வானம்
பகலில் ஒளி எனும்
உடை அணிந்துக் கொள்கிறது...
இரவில்
வானம் உடை
அணிவது இல்லை..!
அதனால் தான்
இரவினில் மட்டும்
வானுக்குள் இருக்கும்
நட்சத்திரங்களும்
நிலாவும்
தெரிகிறது..!

Monday, September 26, 2011

பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!

பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!
சூரியன் என்ற பெயரை பார்த்தால் ஒரு ஆண் போலதானே தெரிகிறது...
சூரியனின் குணத்தை வைத்து பார்க்கும் பொது ஒரு பெண் என்று சொல்லலாமா ...?
பெண்ணிற்கு அமைதி, தெளிவு, கோபம், வெட்கம் இவ்வகை குணம் இருக்கிறது ,
சூரியனை போலவே...!
விடியும் பொழுது சூரியன் எவ்வளவு அமைதியாக மலர்கிறது..!
விடிந்தபிறகு பாருங்க சூரியன் எவ்வளவு தெளிவா இருக்கும் என்று..!
மதிய நேரம் சூரியனின் கோபம் யாரால் தாங்க முடிகிறது..!
மாலை நேரம் சூரியனின் வெட்கப்படுவதை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு இல்லையா..!
இவையெல்லாம் பார்க்கும் பொது சூரியன் ஆண் பெயர் கொண்ட பெண் போலதானே தெரிகிறது...!


ஒருவகை நிலா..♥

நிலா என்பது நிலா அல்ல
ஒருவகை கல்...
நீ என்பது பெண் அல்ல
ஒருவகை நிலா..♥

Tuesday, September 13, 2011

காதலித்தாலே போதும்...

நிலவிற்கு
ராக்கெட்டில் தான்
போகவேண்டும்
என்பது
இல்லை...
காதலித்தாலே போதும்...♥


Saturday, September 03, 2011

குறை தீர்த்தால் என்ன..?

அமாவாசை
நாளில்
உன்
புகைப்படத்தை
வானத்தில் மாட்டிவைத்து...
நிலா இல்லா...
குறை
தீர்த்தால் என்ன..?