Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Wednesday, October 12, 2011

"கடவுளாலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை"

"கடவுளாலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை"

இயற்கையை ரசி இயற்கையை ரசி என்று ஒரு உழைப்பாளியை பார்த்து காட்டுக்கத்து கத்தினார் இறைவன் ...

உழைப்பாளிக்கு கோபம் வந்தது....

கடவுளின் சட்டையை பிடித்தான் உழைப்பாளி, சட்டை கிளியா கத்தினான் ...

அடக்க முடியாத சிறுநீரை அடிக்கி கொண்டு தலையாட்டிக்கொண்டு முதலாளிமுன் நின்று இருக்கியா...என்றான் கடவுளிடம் உழைப்பாளி..,

கையில் குமட்டும் டீசல் நாத்ததுடன் ஒரு நாலாவது சாப்புட்டு  இருக்கியா ?,

பிஞ்சு போன செருப்புக்காக வச்சுருந்த காசில் குழந்தைக்கி மிட்டாய் வாங்கி தந்து இருக்கியா ?
அடுத்தசம்பலம் வரும் வரைக்கும் அறுந்து போன செருப்பையே இழுத்து இழுத்து நடந்து இருக்கியா ?,

ஸ்கூல் போற என் பையன் டாட்டா சொல்லி போகும் பொது கிழிஞ்ச டிரௌசரை பார்த்து இதயம் என்னைக்காவது அழுது இருக்கா ?

ஒரு கரும்பு   சக்கை போல பிழிந்து கொண்டு இருக்கும் அலுவலக நேரத்தில் கழிவறையில் களைப்பு தீர்க்க ஒதுங்கி இருக்கியா ?

தான் மகன்  வயதுள்ள முதலாளிக்கு  சோத்து மூட்டை தூக்கி கொண்டும், டம்ளர் களிவிக்கொண்டு  என்றாவது நீ இருந்து இருக்கியா ?

கொதிக்கும் தார் சாலையில் தன மகன் நடந்துவர , எஜமானின் மகனை சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு, அந்த பிஞ்ச செருப்பையும் , இழுத்துக்கொண்டு நடந்து இருக்கியா..?

முதலாளி வீட்டுக்காக கறிக்கடையில் கறிவாங்கும் பொது , தன் வீட்டுக்கு சமைக்க அரிசி கடன் வாங்க வந்த மனைவியின் முகம் காணாமல் ஒளிந்து கொண்டு இருந்து இருக்கியா ?

இறைவன் படைத்த மழையின் வானவில் வந்தது,
இறைவை பார்த்தான்
அவமானத்தில் ரசிக்க முடியாமல் தலை கவிழ்ந்து போனான் ...!

Thursday, September 29, 2011

காகம்...

குயில்
பாடும்,
அதை ரசிக்கும் மனமே...
காக்கையை போல
தன்
உறவு முறையை
சொல்லி அழைக்கும் பறவை
எது...?

Wednesday, September 28, 2011

தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, எத்தனை பேருக்கு தெரியும் ...

ஒரு உண்மை தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, இது யாருக்கு, எத்தனை பேருக்கு தெரியும் ..
மும்தாஜ் மரணம் ,சாஜகான் துயரத்தில்...
மும்தாஜ் கல்லறை அருகே மன்னர் சாஜகான் கல்லாய்...
கல்லறைக்கு தன் உயிரை மாலையாக்கி கொண்டு இருந்தார் ...
சாஜகான் மீண்டும் நடமாடவேண்டுமானால் மும்தாஜ் நேரில் வரவேண்டும்,
மும்தாஜ் இல்லை அவளை போன்ற அழகின் உருவம் வேண்டும் ஒரு மாளிகை வேண்டும் , இதனால் மட்டுமே மன்னர் நடமாட முடியும் ,

ஹரின் மன்னர் அவையின் கட்டிட வடிவமைப்பாளர் புதியதாய் திலோதினா வைமனம்முடித்தவர்...
ஹரிணியை அழைக்கப்பட்டு மும்தாஜை போன்று மாளிகை வடிவமைக்க சொன்னார் மன்னர் ,
தொடர்ந்து ஐந்தாறு முறை வடிவமைத்து எல்லாமும் அழகாக் இருந்தது, ஆனால் மும்தாஜின் உருவம் இல்லை எனநிராகரிக்கப்பட்டது,

இறுதியில் ஒரு வடிவம் தரவேண்டும் ,அது மும்தாஜை போன்று இருக்க வேண்டும் ,இல்லையென்றால் ஹரிணியின் தலை துண்டிக்கப்படும் என்று கட்டளை வந்தது...

சிறகடித்து பரந்த இளம் பறவைகள் சிறகொடிக்கப்பட்டது போல இருந்தது...
மன்னரிடம் வந்தால் திலோதி மன்னரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்க ஒரு மாதம் கழித்து வரைபடம் வரவில்லை என்றால் ஹரிணியின் தலை துண்டிக்க உத்தரவிட்டார்..
ஆண்பறவை சிறகு ஒடிந்த நிலையில் விறகாய் , புன்னகை முகத்தோடு ஹரிணியை பார்த்து மன்னர் கட்டளையை நிராகரித்து விட்டார் இனி நாம் சுதந்திரமாக பறக்கலாம் என்று இரு பறவைகளும் பறக்க இன்பம் இன்பம் எல்லாம் அவளவும் அன்பின் படையலில் , ஹரிணிக்கு ஓவியம் வரைவதும் கூட மறந்தாய்ற்று ,
மாத இறுதி வந்தது...
ஒருநாள் திலோதினாவை காணாமல் தேடினான் ஹரிணி எங்கு தேடியும் கிடைக்கவில்லை, தன் ஓவிய அறைக்குள் நுழைந்து தேடினான் , தூசி படிந்த ஓவிய பலகையில் படபடத்தது ஒரு காகிதம் அதில் திலோதினா எழுதி இருந்தால் , மன்னர் அழகான ஓவியம் கேட்க்க வில்லை ,சோகமான அழகை கேடிருந்தார், நான் இருந்தால் உங்களுக்கு சோகம் உங்களுக்கு எங்கிருந்து வரும் , கடிதத்தில் நீங்கள் படிக்கும் நேரத்தில் இந்த பூ யமுனையில் உயிர் துறந்து இருக்கும் நீங்க மன்னருக்காக ஓவியம் வரைய வேண்டாம் என்னை நினைத்து என் உருவத்தில் வரையுங்கள் என்று , அதை படித்ததுமே ஹரின் உடைந்தான் தூள் தூளாய் போனான் ,தூரிகையை எடுத்தான் திலோதினாவால்  உருவான பிரம்மாணடமான கண்ணீர் துளியினை வரந்தான் மன்னனிடம் அனுப்பினான் ,ஓவியம் மன்னனிடம் வந்தது.. மன்னம் இதைதான் கேட்டேன் எங்கே அந்த திலோதினா  அழைத்து வாருங்கள் மும்தாஜை என்முன் நிறுத்திய  வரசொல்லுங்கள் சொன்னதை செய்துகாட்டினால் , திலோதினா இப்பொது இல்லை யமுனாவில் வாழ்கிறாள் என்று ,மன்னர் எங்கே அந்த ஓவியன் என்று பூ எங்கு இருக்குமோ அங்குதானே வண்டும் இருக்கும் என்றான்,
  மன்னர் முடிவெடுத்தார்

இந்த பறவைகளுக்காக யமுனை நதி ஓரமாக தாஜ் உருவாக்க படவேண்டும் இது மும்தாஜி மேல் ஆணை
எல்லா நதியும் புன்னகையோடு ஓடுகிறது ...
யமுனை மட்டும் கண்ணீரோடு ஓடுகிறது ...
~மகி

Wednesday, September 21, 2011

அழகு...

உனக்கு
வரமாக  இருப்பது தான்
எனக்கு
சாபமாக வருகிறது
..♥
        ~அழகு~

Saturday, September 17, 2011

எங்க போனாங்களோ பழனியம்மாள்

நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
இன்று மாலை கோவை ஆவரம்பாளயம் சோபா நகரில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது,
அதில் அவர்களுடைய அலுவலக வாசலில் சாலையோரமாக
ஒரு பெண் உடல் நலம் சரியில்லாமல் படுத்திருக்கிறாள் மகேந்திரன் சார் நீங்கள் வந்து அந்த பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று,
உடனே நான் அந்த பகுதிக்கு சென்று அந்த பெண் இருந்த நிலையை பார்த்தேன் ஏதோ பழைய துணிகளை சுருட்டி ஓரத்தில் போட்டது போன்று இருந்தார் , மேலும் அந்த பெண் சற்று மயங்கிய நிலையில் இருந்தார் , அதுமட்டும் அல்லாது அவருடைய வலது கழுத்து பகுதியில் ஒரு பெரிய கட்டி உடைத்து அதில் இருந்து சீல் (ஜாலம்) வந்து அவருடைய உடையெல்லாம் நனைந்து பெரும் துர்நாற்றம் அடித்துக்கொண்டு இருந்தது ,
அதை பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தொட்டு நீ யார் , எங்கிருந்து வருகிறாய் என்றதற்கு சிரம்மப்பட்டு பழனியம்மாள் என்று மட்டும் சொல்லி மயங்கிவிட்டாள்,  பிறகு 108 ஆம்பலான்ஸ் வரவழைத்து அந்த பழனியம்மாளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எனக்கு மிகவும் உறுதுணையாக நண்பர் கென்னடி துணைக்கு வந்தார்.
GH அழைத்து சென்றோம் அங்கு அந்த பழனியம்மாள் யார் என்றார்கள் நடந்ததை சொன்னேன் , ஆனால்  GH ல் இவருக்கு துணைக்கி யாரேனும்  இருந்தால் தான் பழனியம்மாளுக்கு வைத்தியம் செய்வோம் என்றார்கள் அதற்க்கு நான்  அவர்களிடம்
மிகவும் போராடி  இன்று இரவு உங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது உங்கள் வைத்தியம் முடிந்ததும் நான் நாளை வந்தது ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறேன் அதற்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர் ஆனால் அதன் உள்ளருத்தம் எனக்கு புரியவில்லை கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வெளியே வந்து , எனக்கு தெரிந்த இரண்டு காப்பகத்தில் பழனியம்மாளுக்காக இடம் கேட்க ஒரு காப்பகத்தில் நிர்வாகி  ஊரில் இல்லை என்றும் மற்றொன்றில் மாதம் மாதம் பணம் வேண்டும் என்று கேட்க எனக்கும் நண்பர் கென்னடிக்கும் பழனியம்மாளை பற்றி கவலை அதிகமானது , என்ன செய்யபோகிறோம் என்று யோசிக்கும் போது நினைவுக்கு வந்தது பாரத அன்னை இல்லை ஒன்று அவர்களை தொடர்பு கொண்டு பழநியம்மாவை பற்றி சொல்ல அதற்க்கு பாரத அன்னை நிர்வாகி நாளை காவல் துறை அனுமதியோடு அழைத்து வாருங்கள் என்றார்கள்.
பெரும் நிம்மதியோடு காப்பக நிர்வாகிக்கு நன்றி சொல்லிவிட்டு நம்பிக்கையோடு வீடு திரும்பினோம் நானும் எனது நண்பர் கென்னடியும்.
நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
~மகேந்திரன்
 இன்று  என்னுடைய இன்னொரு நண்பர் கண்ணன்  அவரை தொடர்புகொண்டு மருத்துவமனைக்கு சென்று பலனியம்மாவை பார்த்து மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்தது பாரத அன்னை இல்லை இல்லத்தில் சேர்த்துவிட்டு வரலாம் என்று சொன்னதும் கண்ணன் உடனே வந்து விட்டார்,
மருத்துவனை சென்று நேற்று  பழநியம்மாவை அனுமதித்து இருந்த வார்டிற்கு சென்று பார்த்தோம் பெரும் அதிர்ச்சி...
அந்த வார்டில் பழநியம்மாவை காணவில்லை அங்கு இருந்த GH முழுவதும் தேடிப்பார்த்து விட்டு நேற்று நேற்று அவர் இருந்த வார்டில் உள்ள மருத்துவ உதவியாளரை பழநியம்மாவை பற்றி கேட்டபோது அந்த பழனியம்மாள் யார் அது போன்று ஒருவரும் இங்கு அனுமதிக்க வில்லையே என்று அங்கு இருக்கும் கோப்புகளை பார்த்துவிட்டு என்ங்களை வெளியே அனுப்பிவிட்டார் மீண்டும் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டு , அந்த உடல் நோய்வாய் பட்ட பழனியம்மாள் எங்கு போனார்களோ இப்போது எங்கு , எப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை மீண்டும் யாராவது கண்ணில் அவர் தேன் பட்டால் மறக்காமல் 9843344991 மகேந்திரன் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்...

கோவில் போல எண்ணித்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள், நேரில் வராத கடவுள் மருத்துவராய் வருகிறார் என்று தான் மருத்துவரை நம்புகின்றனர், இந்த எண்ணத்தில் தான் பழநியம்மாவை GH ல் விட்டு வந்தேன் , ஆனால் இப்போது பழனியம்மாள் 
எங்கே... கடவுள் என்ன செய்தது ?????
பாவம் பழனியம்மாள்

Thursday, September 15, 2011

பெற்றோருடன் இணைந்த நிர்மலா ...

நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா, சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் 1/09/11 அன்று நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார்,  நேற்று 14/09/11 நிர்மலாவை  நண்பர் கண்ணன் சந்தித்து வந்தார் , அவள் பேசியதை பதிவு செய்து வந்துள்ளார், நிர்மலா கூறியதை இதில் பதிவு செய்வதில் மகிழ்கிறேன் .

பத்தினி...

நெருப்பை போல
பத்தினி
யார்
இருக்க முடியும் ?
ஒன்று தெரியுமா...
நெருப்பு
தண்ணீரை தவிர
வேறு
யாரையும்
அனைக்கவிடாது..♥


Wednesday, September 14, 2011

கலைவாணியை வீதியில் விட்டுவிடக்கூடாது -மகேந்திரன்

இவர் பெயர் சிவகுமார் நல்ல கலைஞர்
ஊர் கும்பகோணம் பிழைப்பைத்தேடி கோவையில் சாலையோரம் காணப்பட்டார்,
அவரிடம்...

 
விதி இப்படி சாலைக்கி தள்ளிவிட்டது, ஒருவர் தான் முன் நிற்கவைத்துவிட்டு அவரை பார்த்தபடியே களிமண்ணை கொண்டு ஒருசில நிமிடங்களில் தான் முன்னர் நிற்பவரின் உருவத்தை செய்து  முடிப்பார் ,
 
சிவகுமாரை போன்ற கலைஞர்கள் தற்போது வயிற்று பிழைப்பிற்காக கலையை சாலையில் தவம் கிடக்கின்றன...
சிலசமயம் இவர்களை பார்க்கும் போது சாலையில் கலைவாணி கையில் திருவோடு இருப்பது போல மனதில் இடி விழுகிறது...
சிவகுமார் இவர் செய்யும் குருவி, யானை, குதிரை ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்று வயிற்றை கழுவிக்கொண்டு இருக்கிறார்,இவரை பற்றி நண்பர் V. பழனியப்பன் இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுய கட்டுரை பிரசுரமானது, அதை படித்த  SRI KRISNA WOODEN ART நிறுவனர் N. விகயகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸ்  தொடர்புகொண்டு சிவகுமார் அவருக்கு தகுந்த வேலை தான் ஏற்படுத்தி தருவதாக சொல்லி உறுதி அளித்து சிவகுமார் வாழ்வில் வசந்தத்தை காட்டியுள்ளார்,

N. விகயகுமார் அவருக்கு சிவக்குமாரை அடையாளம் காட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ் V.பழனியப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இன்னும் இது போன்ற நல்ல கலைஞர்கள் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் அவரளுக்கு 

N. விகயகுமார், V. பழனியப்பன் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் கிடைக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...
~மகேந்திரன் 

Tuesday, September 06, 2011

மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா ஒரேநாளில் குணமடைந்த அதிசயம்




இன்று 29/08/11 மாலை நிர்மலாவீட்டிர்க்கு சென்று இருந்தேன் அபோது நான் பார்த்த நிர்மலா "வாங்க அண்ணா சாப்பிடலாம் "
நல்லா இருக்கிங்களா, சாப்பிடுங்க " இன்னும்பல என்னோடு பரிமாரிக்கொண்டால்...
ஒன்றை ஆண்டுகாலம் மனநிலை பாதிக்கப்பட்டு அன்பாலயத்தில் இருக்கும்போது பேசாத நிர்மலா நேற்று வீடுதிரும்பியது சகஜமாக பேசுவதை கண்டு சிலிர்த்துபோனேன்...

நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா வயது 29 இருக்கும்  என்பவரை கோவிந்தராஜ் மனிதநேயமுடயவர் சாலையோரம்  பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி கோவை ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து உள்ளார்,இதனை தொடர்ந்து நிர்மலாவை ஸ்ரீ அன்பாலயம் நல்லபடி பராமரித்து வந்தது ,இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார், 



அசோகன், சண்முகம், பெத்தாத்தால், இது போன்ற ஆதரவை தொலைத்த  இன்னும் பலரை சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துவைத்தது குறிப்பிடத்தக்கது...

ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் வீடு இருக்கும், சொந்தங்கள் இருக்கும் பெத்தவங்க தான் பிள்ளைகளை தொலைத்துவிட்டு  படும் அவஸ்த்தை மிக கொடியதுங்க, நிர்மலா, அசோகன், சண்முகம்  இதுபோன்றவர்கள் மனநிலை சரியில்லா காரணத்தால் தனது சொந்தங்களை  தொலைத்துவிட்டு சாலையிலும், ஆதரவற்ற இல்லங்களிலும் நிறையப்பேர் இருக்கின்றார்கள், அவர்களுடைய பெற்றவங்களும் இவர்களை காணமல் தேடிக்கொண்டுதான் இருக்காங்க கண்ணீருடன்,
அவங்களுக்கும் உண்மையான மறுவாழ்வு கிடைக்கவேண்டும்,

Monday, September 05, 2011

மற்றவர்களை மகிழ்விப்பதில் தாங்க உண்மையான சந்தோசம் இருக்கிறது

தேதி 21/06/11 அன்று cornierstone என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு நான் (மகேந்திரன்), அருள்ராஜ், மற்றும் கனகராஜ் ஆகியோர் பாடபுத்தகங்கள் நன்கொடையாக குடுக்க முடிவுசெய்து அதன் படி cornierstone ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கு உள்ள 40 குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள் நன்கொடையாக குடுத்தோம் .
அங்கு சென்று இருந்த போது அந்த குழந்தைகளிடம் ஒற்றுமையும் சந்தோசமும் ஆஹா ஆஹா நாங்களும் அங்கேயே தங்கிவிடலாமா என்ற ஆசை பெருக்கெடுத்தது . மனதை சமாதானப்படுத்தி அந்த குழந்தைகளிடம் இருந்த மனம் இல்லாமல் விடைபெற்றோம் .
வாசலில் வந்து கையசைத்து திரும்பும் வேலை ,
கௌரிசங்கர் வயது 5 இருக்கும் "அண்ணா ஏங்க பெயரை எல்லாம் கேடிங்கல்லா உங்க பெயரை சொல்லவே இல்லை" என்றான் ,
என்ன அழகு .
என் நபர்களுடன் அந்த சமயம் தான் பேசிக்கொண்டு இருந்தேன் ,"பாருங்க பசங்க நம்ம பெயரை கேட்கவே இல்லை" என்று . மலைத்து போய் கெளரிசங்கரை கொஞ்சலில் மூழ்கிவிட்டேன்.
அதன் பிறகு நாங்கள் அவனாசி சாலை வழியாக வந்து கொண்டு இருந்தோம் அப்போது ஒரு 15 வயது இருக்கும் ஒரு சிறுவன் சைக்கிளில் ஒற்றை சக்கரத்தில் மிக சர்வசாதாரணமாக சாகச பயணத்து கண்டு இருந்தான் நான் vaiththu இருந்த கேமராமூலம் படம் பிடித்துகொண்டேன் .
அவனை விசாரித்தோம் அவன் பெயர் அருண் என்று அத்தோடு அவனுடைய அலைபேசி எண் வாங்கிகொண்டு வந்து விட்டோம்.
வீடிற்கு வந்ததும் எனக்கு தெரிந்த விகடன் நிருபரிடம் அருணை பற்றி எடுத்துரைத்தேன்
உடனே வரும் ஞாயிற்றுக்கிழமை 26/06/11 அருணின் சாகசத்தை பதிவு செய்யல்லாம் என்றார் .
அதனை தொடர்ந்து எனது உறவினருடைய குழந்தைக்கி பிறந்தநாள் ஆகையால் அதே ஞாயிற்றுக்கிழமை அன்று மதிய உணவு உங்களுக்கு தெரிந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்க ஏற்பாடு செய்ய சொன்னார்.
சரி என்று சொல்லி விகடன் நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை 26/06/11, 3pm cornierstone ஆதரவற்ற குழந்தைகள் முன்னிலையில் அருணின் சாகசத்தை பதிவு செய்ய கேட்டுக்கொண்டேன் ,
உறவினரின் வீடு அன்னதானம் cornierstone குழந்தைகளுக்கு வழங்க கேட்டுக்கொண்டேன் .
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை 26/06/11 மதியம் cornierstone குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு.
அந்த குழந்தைகளின் முன்னிலையில் அருணின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது , இதை விகடன் பதிவு செய்தது.
 


அப்போது பாக்கணும் அந்த குழந்தைகளின் ஆனந்தத்தை அளவிட முடியவில்லை .
அருணின் முதல் மேடை இன்றுதான் அரங்கேறியது . அவனுடைய பூரிப்பையும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது .
-மகேந்திரன்
திறமை எங்கு இருந்தாலும் வெளிக்கொண்டு வரவேண்டும் உண்மையான விஷயம் தானங்க...
வாழ்த்துக்கள் அருண்
நன்றி -விகடன் -நன்றி indian express



Friday, July 01, 2011

மாலா...

மாலா என்ற இந்த உடல் ஊனமுற்ற பெண்ணை இந்த  நிலையில் தான் கண்டேன்.
மாலா தான் மகள் கிருத்திகா மற்றும் மகன் சந்தோஷ் மிதிவண்டியில்
மாலாவின் வீட்டிற்கு பின்தொடர்ந்து சென்றேன் , அங்கு இன்னும் ஒரு கொடுமை
நடக்க முடியாத மாலா தான் மகன் மகளுடன் வறுமையில் வாடுவதை, பார்பதற்கு  கண்ணில் இரத்தமே வந்துவிடும் போல இருந்தது . கணவர் ஒரு குடிகாரனாம்.
பிறகு (நான்) மகேந்திரன் ,ரபிக் மற்றும் பழனியப்பன் முயற்ச்சியில் 25000 ருபாய் அரசிடம் இருந்து நிதி உதவியும் , மற்றும் மாதமாதம் ருபாய் 1000 ஊக்கதொகைக்கு வழிவகுத்தோம்,


அது  சரி இந்த நிலையில் எங்க வேகமா போறங்கனு பாக்கறிங்களா  ?
என்னதான் உதவினாலும் பசி என்று ஒன்று இருக்கே !
சந்தைக்கு சென்று அப்பளம் விற்று தன் குடும்பத்தின் பசியை போக்கத்தான்.
-மகேந்திரன்