Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Saturday, December 24, 2011

அடங்க வில்லை உன் ஆழகு..♥

கண்கள்
கல்லாக இருந்தால்
கண்ணீருக்கு
அவசியம்
இருக்காதே..!



ஒரு
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன்
நினைவுகளுக்கு
முன்
நான்..♥

இது
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள்
வந்து விடாதே..!
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥

முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!


அணைக்குள்
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை
உன்
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!


பார்வை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
பார்த்து என்னைபோல
அவதி
பட தேவை இல்லையே ..♥




Monday, November 14, 2011

அவ்ளோ அழகு

எந்த
பெண்ணை பார்த்தாலும்
உன்
நினைவுதான்...
உன்னை
மறக்கசெய்யும்
அழகு எந்த பெண்ணுக்கும்
இல்லை..♥

Wednesday, November 09, 2011

அழகு இல்லை..♥

வாசலுக்கு வாசல் கோலம்
இருந்தாலும்...
என்
வாசலில் பதியும்
உன்
பாதசுவடிற்கு
இணையாக
எந்த கோலமும் அழகு இல்லை..♥


Friday, November 04, 2011

அழகை ரசிக்க வேண்டும்...

விழித்துக்கொண்டே
உறங்க கற்றுக்கொள்ள
வேண்டும்..♥
கனவுக்குள்
நீ
வரும்
அழகை ரசிக்க வேண்டும்
அதற்காகத்தான்..!

Tuesday, November 01, 2011

எனக்கு நீ...

கவிதைக்கு
பொய் அழகு..!
எனக்கு
நீ
அழகு..♥

Friday, October 21, 2011

அழகு சாதனா பொருளும் தேவை...

எந்த
அழகு சாதனா பொருளும்
தேவை இல்லை
உனக்கு..!
உன்
சிறு
புன்னகை போதும்..♥

Sunday, October 16, 2011

படைப்பு...

என்
கவிதை உன்னை விட
உன்னை
அழகாக படிக்கிறது...
உன்
வெட்கம்
என்
கவிதையை விட
உன்னை
அழகாக வரைகிறது..♥

Wednesday, October 12, 2011

பிரம்மாண்டமான அழகு..♥

கடலை
அள்ளி தீர்த்து
விடலாம்...!
ஆனால்
உன்
அழகை சொல்லி மாளாது 
அப்படி ஒரு
பிரம்மாண்டமான
அழகு..♥

Wednesday, October 05, 2011

அழகு பூஜை ...

எல்லா
ஆயுதத்திற்கும் பூஜை போட்டாயிற்று..!
என்னை
கொள்ளாமல் கொள்ளும்
உன்
கோபத்திற்கு
எப்போது
பூஜை போடுவது..?

பூவிற்கு அழகு ..♥

பூத்தால் செடிக்கு அழகு ...
நீ
சூடினால்
பூவிற்கு அழகு ..♥

Tuesday, October 04, 2011

அணை கட்டுவது போல...

அடங்காத
வெள்ளத்திற்கு
அணை கட்டுவது போல...
உன்
அடங்கா அழகுக்கு
ஆடை
கட்டியது போல இருக்கிறது..!

Sunday, September 25, 2011

அழகு...

மடங்குகளில்
கூடிக்கொண்டு போகும்
உன்
அழகை
கவிதைகளில்
எப்படி
எழுதி முடிப்பது...♥

Saturday, September 24, 2011

வேதனை நறுமணம்...

என்
வேதனை
நறுமணத்தை
உன்
மேனியில் பூசிக்கொண்டு
வளம் வருகிறாய்...
பொன்னும், பொருளும்
இல்லாமலேயே
நீ
அழகிதான்
இதில்
மேலும் மெருகேற்ற
வேண்டுமா...♥

Wednesday, September 21, 2011

அழகு...

உனக்கு
வரமாக  இருப்பது தான்
எனக்கு
சாபமாக வருகிறது
..♥
        ~அழகு~