Showing posts with label காணவில்லை. Show all posts
Showing posts with label காணவில்லை. Show all posts

Tuesday, October 21, 2014

சாலையில் தவித்த 85 வயது பாட்டியின் உறவினர் கண்டுபிடிப்பு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
******************************************************************
(368 / 20-10-2014)

கடந்த 18/10/2014 அன்று கோவை B9 காவலர்கள் உதவியுடன் சரவணம் பட்டி பகுதியில் இருந்து சுப்பம்மாள் 85 என்ற பாட்டியை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் , அதனை தொடர்ந்து பாட்டியின் உறவினர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியை ஈரநெஞ்சம் மேற்கொண்டது ,

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/643014075796012/?type=1&theater

அதன் பலனாக வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்கள் மூலமாக கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் சுப்பம்மாள் பாட்டியின் மகன் முருகன் என்பவர் தொடர்பு கிடைத்து. உடனடியாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. , தகவல் அறிந்ததும் முருகன் உடனடியாக காப்பகத்திற்கு வந்து சுப்பம்மாள் பாட்டியை அழைத்துச் சென்றார்.
 




பாட்டியின் மகன் முருகன் கூறும்பொழுது :
அம்மாவிற்கு சற்று ஞாபகமறதி இருப்பதாகவும் சிங்காநல்லூரில் எங்களது வீட்டில் இருந்து கடந்த 16/10/2014 அன்று காலை முதல் காணவில்லை , எங்கெல்லாமோ தேடினோம் எங்கு தேடியும் கிடைக்காததால் இன்று 20/10/2014 அம்மாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றவேளையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் அம்மாவைப்பற்றிக் கூறி நேரடியாக வந்து அழைத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொண்டனர் , அதை கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம் , அம்மாவை நான்குநாட்களாக காணாமல் குடும்பத்தில் யாரும் சரிவர உணவுகூட உண்ணாமல் அம்மாவைத் தேடி அலைந்துக்கொண்டே இருந்தோம் இன்று அவர் கிடைத்ததும் பெரும் நிம்மதி அடைந்தோம் , அம்மாவை கண்டுபிடித்துக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் அம்மாவை பராமரித்துக் கொண்ட மாநகராட்சிக் காப்பகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறி தனது அம்மாவை அழைத்துச் சென்றார்.

மேலும் சுப்பம்மாள் பாட்டியை கண்டுப்பிடிக்க பெரிதும் உதவிய வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்களுக்கும் மற்றும் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த நண்பர்களுக்கும் , கோவை B9 காவல் நிலைய காவலர்களுக்கும், மாநகராட்சிக் காப்பகத்திற்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam?ref=hl

Due to those efforts and with the help of Mr. Senthaamarai kannan, Veermanallur police station Inspector, we can found her son Mr. Murugan, who is living in Singanallur. We informed to him and immediately he came to Coporation home and brought her with him to their home.

Mr. Murugan told that his mother Subbammaal is absent minded some times. Last 16-10-2014 she was missed from their home. They tried to find her in all places. When we decided to give complaint in police station today 20-10-2014, Eeranenjam trust people contacted us to bring our mother. We felt very happy, For past 4days we didn’t take even proper food too and continuously we were searching our mother. Now we feel very happy and peaceful. So we wish to say thanks to Eeranenjam trust for find out mother and Corporation home for taken care of her.

Our Eeranenjam trust giving our thanks to Police Inspector Mr, Senthamarai kannan, Veeramanallur station, and Eeranenjam trust people, B9 police station police officers, Friends and Corporation home for giving their helping hand to find Subammal family.

Thanks,

Eeranenjam.

Saturday, August 23, 2014

மனநலம் பாதித்த சிறுவன் மீட்பு ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
*******************************************************************
(347 / 21-08-2014)

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 11-08-2014 இரவு 16 வயது S. சிவபாரத் என்ற சிறுவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிவதை பார்த்த கோவை B9 காவல் காவலர்கள் பரிந்துரைக்க அந்த சிறுவனை தொன்போஸ்கோ சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர் . மேலும் சிவபாரத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலை கொண்டு அவனது பெற்றோரை தேடும் முயற்சியில் ஈரநெஞ்சம் அமைப்பு முயற்சித்து 18-08-2014 அன்று சிவபாரத்தின் தந்தை செந்தூர் பண்டி , தாயார் லலிதா இருவரையும் கண்டுபிடித்து கோவை உக்கடத்தில் உள்ள தொன்போஸ்கோ காப்பகத்தில் இருக்கும் சிவபாரத்திடம் அழைத்து சென்றபோது அவன் அங்கிருந்து அதற்கு முதல்நாள் காணாமல் போய்விட்டதாக தகவல் தெரிவித்தனர் .




https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/609563489141071/?type=1&theater

தங்கள் மகன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் வந்த சிவபாரத்தின் பெற்றோருக்கு அவன் மீண்டும் காணாமல் போனது தெரிந்து மிகுந்த வேதனை அடைந்தனர் . ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சிவபரத் காணாமல் போனதற்கு அமைப்பே பொறுப்பேற்றுக்கொண்டு சிவபாரத்தை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தனர்.

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/612734938823926/?type=1&theater

  


அதனை தொடர்ந்து மீண்டும் ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சியால் சிவபாரத் 21-08-2014 கண்டு பிடிக்கப்பட்டான். பின்னர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டான். உடனடியாக அவன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மகனை அழைத்துச் செல்ல உடனே வந்தனர். பெற்றோர்களை கண்டதும் சிவபாரத் ஓடி வந்து கட்டிக்கொண்டு முத்தமிட்ட காட்சி காண்பவர் விழிகளில் கண்ணீரை பெருக்கியது.
 



அவனது பெற்றோர் கூறும்போது தங்கள் மகனை பிரிந்து மிகவும் வேதனை அடைந்து வந்ததாகவும் , அவனைத் தேடி எங்கெல்லாமோ அலைந்ததாகவும் தெரிவித்தனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகன் கிடைத்து விட்டதாக தகவல் தெரிவித்த போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்ததாகவும் பின்னர் மீண்டும் மகனை காணவில்லை என்ற போது மிகவும் கவலை கொண்டதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் எல்லோருமே ஈரநெஞ்சம் அமைப்பினரின் முயற்சியில் கண்டிப்பாக உங்கள் மகன் கண்டிப்பாக கிடைத்து விடுவான் என்றும் இது போல் குடும்பத்தை விட்டு பிரிந்த பலரையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர் என்று கூறியது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதயது . அதேபோல ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகனை மீட்டுக் கொடுத்து தங்கள் மனதிற்கு நிம்மதியை கொடுத்துள்ளனர் என்று கூறி கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சிவபாரத் தனது பெற்றோருடன் சேர எடுத்துக்கொண்ட பெருமுயற்சியில் அமைப்புக்கு உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .
   




மீண்டும் ஒரு உறவை இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம்.

~ ஈரநெஞ்சம்.

Friday, March 01, 2013

கடவுளை காணவில்லை

****கடந்த சில நூற்றாண்டுகளாக கடவுளை காணவில்லை****


ஆகையால் கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளான்.
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவங்களுக்கு உள்ளாகி இருக்கிறான். கடவள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவ செயலுக்கு துணை போகிறான்,
கடவுள் காணமல் போனதனால் மனிதன், நானே கடவுள் என்று தலை கனத்துடன் இருக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மனிதனாக காட்சி அளிக்காமல் ஒரு ஜந்துவை விட கேவலமாக காட்சியளிக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் சட்டங்களையே சாட்சியாக கொண்டு கொலைகளை கூட புனிதமாக்குகிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதனுக்கு கல்லுக்கும் கடவுளுக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மலர்களை கூட நிம்மிதியாக மரணிக்க விடாமல் மலர்களை தூக்கில் இடுகிறான்,
கடவுள் இருக்கும் இடம் தெரியாமல் கடல், மலை, காடு ,கடுகு, தூண், துரும்பு , கண்டம், அண்டம் என தேடாத இடம் இல்லை கடவுள் கண்டு பிடிக்க முடியவில்லை.

கடவுளின் உட்பொருள் தெரியாமல் தேடுகிறான் மனிதன் .
கடவுள் இதன் உட் பொருள் கட+உள் அதாவது உன்னுள் ஊடுருவி பார் கடவுளை காணலாம் .

நீயே கடவுள் நீ உன்னை கண்டால், ஒவ்வொருவரிடமும் கடவுள் உட்கொண்டு இருக்கிறான் ,  கடவுளை காணும் அவசியம் அது  உன்னைத்தேட வேண்டி இருக்கட்டும் .

~மகேந்திரன்

Tuesday, February 05, 2013

சாமிநாதன் ஐயாவின் உறவை மீட்டுத்தந்த ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

சாமிநாதன் (வயது 85) தான் கொண்டு வந்த முகவரி தொலைந்த நிலையில், தன் மகளைக் காண இயலாததால், ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் 01/02/13 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். திரு. சாமிநாதன் அவர்கள் கூறிய விபரங்களைக் கொண்டு ஈர நெஞ்சம் அமைப்பின் உறுப்பினர்கள் செண்பகம், அருண்குமார் மற்றும் மகேந்திரன் கோவையில் பாரதி நகர் முத்து மாரியம்மன் கோயில் தெரு அருகில் அவரது மருமகன் ராதா கிருஷ்ணன் (ஆட்டோ டிரைவர்) அவர்களைத்தொடர்ந்து தேடிக் கண்டுபிடித்து திரு. சாமிநாதன் அவர்களைப் பற்றிய விபரத்தை தெரிவித்தனர் . உடனே அவர் விரைந்து வந்து திரு. சாமிநாதன் அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். தனது மாமனாரை பத்திரமாய் மீட்டுத் தங்களிடம் சேர்ப்பித்த ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் இந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த செண்பகம் மற்றும் அருண்குமார் இருவரையும் மனமாரப் பாராட்டுகிறது.

திரு சாமிநாதன் அவர்களின் மருமகன் ராதா கிருஷ்ணன் அவர்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதன் பதிவை இந்த கானொளியில் காணலாம் .
http://youtu.be/CEoVcqY6JQw

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (135/2012)
ஈரநெஞ்சம்

After knowing that Mr. Saminathan (Age 85) had lost his daughter’s address and so could not find her residence, Eera Nenjam helped himadmitted in the Coimbatore Corporation Home on 01/02/13. Based on the information he provided, Eera Nanjam members Senbagam, Arun Kumar and Magendran continued their search and found Mr. Rathakrishnan (auto driver), son-in-law of Mr. Saminathan near Muthu Mariamman Koil, Bharathi Nagar, Coimbatore and conveyed the message. On hearing this, Mr. Rathakrishnan came and took Mr. Saminathan with him to his house and also thanked Eera Nenjam for taking care of his father-in-law. Once again Eera Nenjam has helped another lost senior citizen to get reunited with his family and it appreciates wholeheartedly the timely help of both Senbagam and Arun Kumar.

Thanks(135/2013)
Eera Nenjam

Wednesday, May 16, 2012

நாகம்மாள் பாட்டிக்கு 24 மணிநேரத்திற்குள் உறவு கிடைத்தது ~மகேந்திரன்


(15 .05.2012) காலை, சுமார் 11 மணிக்கு, கோவை, ராமநாதபுரத்தில் ஒரு பாட்டி, தன் நிலையை மறந்து, சுற்றிகொண்டிருப்பதாக கேள்விப்பட்டதும், ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான திரு. Magi Mahendiran,(நான்) எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. நான் அங்கு சென்று, அந்த பாட்டியை பார்க்கையில், அவரிடம் ஆர். எஸ். புரம் சீத்தாலட்சுமி மருத்துவமனையின், மருத்துவரின் குறிப்பு சீட்டு ஒன்று இருந்தது. பாட்டியிடம் நான்விசாரிக்கும் போது எதுவும் நினைவுக்கு வரவில்லை என்பதை மட்டும் கூறினார் அதனால்

அந்த பாட்டிக்கு ஒரு பாதுகாப்பான தேவைப்பட்டதால், கோவை ,அல்வெனியா காப்பகத்தை அணுகியதில், அவர்கள், அந்த பாட்டிக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். இதனிடையில், அந்த மருத்துவரின் குறிப்பை, வைத்துக்கொண்டு, அந்த மருத்துவமனைக்கு சென்று விவரம் சேகரித்ததில், அவரது வயது 67 என்றும், பெயர் நாகம்மாள் என்றும் தெரியவந்தது.

மருத்துவமனை கொடுத்த, விவரங்களின் படி, அந்த பாட்டியின் வசிப்பிடம், சரவணம்பட்டி என்று தெரிந்தவுடன், கொடுத்துள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டதில், அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம் என்றும் அவர்கள், அந்த பாட்டியை, காலையில் இருந்து தேடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது. இப்போது, இரவு நேரம் ஆகையால், நாளை காலை, அந்த பாட்டியை அழைத்து செல்ல அந்த பாட்டியின் உறவினர்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று (16 .05.2012) காலை,அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம், மற்றும் நாகம்மாள் பாட்டியின் தங்கையின் மகன் அழகப்பன்  அவர்கள் நேரில் வந்து பாட்டியை சந்திக்கும் போது பாட்டிக்கு அவர்களை சற்று நேரம் கழித்துதான் நினைவு வந்தது மகன் அழகப்பனை கட்டித்தழுவி அழும்போது எங்களது
கண்ணும் கலங்கியது சற்று நேரத்தில் அவர்கள் பாட்டியை தன் வீட்டிற்கு, அழைத்து செல்ல ஏற்பாடு நடந்தது . மேலும் அந்த பாட்டியை அழைத்து செல்லும் போது ஜெயராம், மற்றும் அழகப்பன் கூறும்போது நாகம்மாள் பாட்டிக்கு மனநிலை சரி இல்லை என்பதும் , இனி நாங்கள் கவனமாக பார்த்து பராமரிதுக்கொல்கிறோம் என்பதையும் உறுதியளித்தார்கள் ,மேலும் அவர்கள் காப்பக நிர்வாகிக்கும் ,பாட்டியை பற்றி தகவல்தந்த எனக்கும் நன்றிய தெரிவித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.  பாட்டி காப்பகத்தை விட்டு செல்லும் போது அவர்களது கண்ணில் பெரும் நிம்மதி தெரிந்தது .
கொஞ்சம் கஷ்ட்டம் தாங்க ஆனா பாதிக்கப்பட்டவங்களின் சந்தோஷ படராங்கான எவ்ளோவேனாலும் கஷ்ட்டப்படலாம்ங்க...
~மகேந்திரன்
ஈரநெஞ்சம்

Sunday, March 25, 2012

அருண் அநாதை இல்லை ~மகேந்திரன்

இன்று மதியம் கோவையில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் அரசு பேருந்தில்
தனியாக பயணம் செய்த ஒரு சிறுவன் கணபதியில்
இறக்கி விடப்பட்டான் .யாருமற்று நின்ற அந்தசிறுவனை
எனது நண்பர்கள் கண்டு என்னிடம் சொல்ல நான் (மகேந்திரன்) அந்த
சிறுவனை அழைத்து யார் என்ன விபரம் கேட்டறிய முயன்ற
போது அவன் தனது பெயர் அருண் என்றும் தன் பாட்டி பெயர் சாந்தி
தாத்தா பெயர் வெள்ளியங்கிரி என்றும் தனக்கு அப்பா அம்மா இல்லை என்றும்
சொன்னான் .


அவன் எதற்காக தனியே வந்தான் என்பதும் அவன் எந்த ஊரில் இருந்து வந்தான் என்றும்
அவனால் சொல்ல இயலவில்லை.ஆனால்அவனது கையில் சூடு போடப்பட்டு இருப்பதால்
புண்ணான அவனது கைகளை டாக்டரிடம் காண்பித்து மருத்துவ உதவி
செய்து காவல் நிலையத்தில்



இந்த செய்தியை தகவல் அளித்து பின்னர் கார்னர் ஸ்டோன்
குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து வைத்துள்ளேன் .
அந்த சிறுவனை மேலும் விசாரித்தபோது அவன் கான்வென்ட் ப்ரைமரி  நர்சரி ஸ்கூல் என்று


அதை தொடர்ந்து எனது நண்பர்கள் ஸ்ரீ வசந்தா , முத்து ராம் , மற்றும் அருண் குமார் , இவர்களின் உதவியால் திருப்பூரில் உள்ள அந்த பள்ளிக்கு சென்று அருணை பற்றி  விபரம் கேட்டபோது அவன் இங்கு தான் படிக்கிறான் என்ற உண்மை தெரிந்தது அதன் மூலம் சிறுவன் அருண் வீட்டை கண்டு பிடிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று அருணின் விபரத்தை சொல்ல அருணின் அம்மா ஆனந்தி அவர்களை கோவைக்கு என்னை சந்திக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள் ,

அருணின் அம்மா 26/03/12 மதியம் ஒரு மணிக்கு என்னை சந்திக்க வந்தார்கள் ஆனால் அவர் முகத்தில் அருணை பற்றிய எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லை என்ன நிலையோ தெரிய வில்லை ஆனந்தி மகன் மீது எதோ ஒரு கோவம் மகன் அருணை  கூட சந்திக்காமல் என்னிடம் அவன் உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்ல, எனக்கு பகீர் என்று ஆனது நான் மற்றும் எனது நண்பர்கள்  எவ்வளவோ ஆறுதல் கூறியும் அருணை ஏற்பதாக இல்லை , காப்பகத்தில் இருக்கட்டும் என கூறி கொஞ்சநாள் கழித்து வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார் நண்பர்களே அந்த அம்மாவிற்கு அருண் மீது உள்ள கோவம் விரைவில் போக வேண்டும் தனது மகனை திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் தாய் பாசத்தை நிலை நிறுத்த வேண்டும் அதற்க்கு கடவுளை நாம் வேண்டிக்கொள்வோம்....
தற்சமையம் அருண் கோவையில் கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற காப்பகத்தில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான் ...


ஒரு உண்மை

அருண் அநாதை இல்லை .



வேதனையுடன்

~மகேந்திரன்





Thursday, September 29, 2011

பழனிக்கு உறவு கிடைக்கவேண்டும்... ~மகேந்திரன்

பழனி என்பவர்  ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க  முடியாமல் கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கிறார்  ,
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பழனிக்கு உணவு குடுத்து வந்தனர் , இன்று காலை  ஈரம் நிறைத்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரும்,எனது நண்பருமான பழனியப்பன் மூலம்  என்னை (மகேந்திரன்) அழைத்து இவரது நிலையை சொல்லி ஏதாவது ஒரு உதவி கிடைக்க கேட்டுக்கொண்டனர் ,
நான் நேரில் அவரை பார்க்கும் பொழுது அதிக முடியுடனும் பலவருடமாக குளிக்காமலும் மிகுந்த துர்னாற்றதுடன் நடக்க முடியாத நிலையில் பார்க்க பரிதாபமான நிலையுடன் இருந்தார் .
பிறகு ஹிந்துஸ்தான் மாணவர்கள் உதவியுடன் பழனி அவர்களுக்கு அதே இடத்தில் முடிவெட்டி ,குளிக்க வைத்து அங்கோம் அளவிற்கு வளர்ந்து இருந்த கை,கால் நகங்களை வெட்டிவிட்டு , வேறு உடை அணிவிக்கப்பட்டு தற்போது புதிய மனிதராக மாறியுள்ளார் ,


அதன் பிறகுதான் பழனி பேசத்துவங்கினார் அவர் சாலை பராமரிப்பு  பணிசெய்து வந்தவராம் , சத்தியமங்கலம் செலும் வழியில் உள்ள நம்பியூர் என்றும் மனைவி நான்கு வருத்திற்கு முன் இறந்து விட்டதாகவும் ஒரு விபத்தில் நடக்கமுடியாத நிலைக்கு வந்ததாகவும் ,ஒரு மகள் அவள் பெயர் விஜயலக்ஷ்மி திருமணம் ஆகிவிட்டது ,என்றார் , தனது மனைவியின் பெயர், மருமகன் பெயரும்  தெரியவில்லை என்றார், நம்பியூர் ADMK பிரசிடன்ட் ரங்கன் இவருக்கு தெரியும் என்றார் ,

கல்லூரி மாணவர்கள் இவரிடம் உங்களை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் அங்க உங்களை நல்லபடியாக பார்த்துகொல்வார்கள் என்றதற்கு  வரமறுத்துவிட்டார் , மேலும் பழனி கூறும் போது தான் இங்கு இருப்பது மகள் விகயலக்ஷ்மி க்கு தெரிந்தால் நேரில் வந்து தன்னை அழைத்து சென்று விடுவாள் நான் இங்கு இருப்பது அவளுக்கு தெரியாது ,
மாணவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பழனியின் மகள் விஜயலக்ஷ்மிக்கு விபரம் தெரிந்து வந்து அழைத்து போக மாட்டாளா என்ற எண்ணமே தூக்கத்தை கெடுக்கிறது...

ஹிந்துஸ்தான்  மாணவர்கள் மூலம் உருவாக்கிய இந்த புதிய மனிதருக்கு உறவு கிடைக்குமா...
~மகேந்திரன்