Showing posts with label முத்தம். Show all posts
Showing posts with label முத்தம். Show all posts

Saturday, November 12, 2011

வரிகள் அழகு ...

என் 
கவிதை வரிகளைவிட
உன்
இதழ் வரிகள்
அவ்வளவு அழகு
என்று 

உன் 
இதழை படித்துவிட்டு 
என் இதழ்
என்னிடம் சொன்னது..♥

Wednesday, October 26, 2011

உன் வரவுக்காக..!

வார்த்தைகளால் மட்டும்
சொல்லாதே..!
அலைபேசியிலும்
குடுத்துவிடாதே,
காற்றலைகள் தான் 

அள்ளிக்கொள்ளும்..!
நீ
புரியும் வரை
ஊறி கிடக்கட்டும் இதழ்கள்
காத்திருக்கட்டும்
உன்
வரவுக்காக..!

Sunday, October 16, 2011

கன்னக்குழி...

எங்கள்
ஊரு வழக்கம்
புதைப்பதுதான்...
அதனால்  தான்
என்
முத்தங்களுக்கு
உன்
கன்னக்குழியில்
இடம்
கேட்கிறேன்...♥

Sunday, October 02, 2011

போற்றி போற்றி...♥

நீ வரசொல்லிதான் வந்தேன் ...
நான் வந்த பிறகுதான் தெரிந்தது
வர சொன்னது நீ இல்லை
உன் ஏமாற்றம் என்று...
உன் ஏமாற்றம் செய்த்த குற்றம்
சமாதானத்திர்க்காக நீ தந்த முத்தம்...
உன்
ஏமாற்றத்திற்கு
என்னுடைய
போற்றி போற்றி...♥

Friday, September 30, 2011

ஜாதி சண்டை ஒழிய...

முத்தச்
சண்டைக்கு
அனுமதி
கொடுங்கள்...
ஜாதி  சண்டை
ஒழிய வேண்டும்..♥

Wednesday, September 28, 2011

முத்தக்காவியம்...

முத்தக்காவியம் 
எழுதும் யாவருமே
முற்றுப்புள்ளி வைப்பது
இல்லை...♥

Monday, September 12, 2011

முத்தம்..♥

ஒரு
நாள் கனவில்
நமக்குள்
நடந்த சண்டைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முத்தம் வைத்து
சமாதானம் செய்தாய்..!
இன்றுவரை
அந்த
சமாதானத்திர்க்காகவே
சண்டைகளை
தொடர்கிறேன்..♥

Friday, September 09, 2011

முத்தம்...

என்ன கொடுமை
உன்
இரு இதழ்களை கொண்டு
ஒரு
நேரத்தில்,
ஒரு
முத்தம்தானே
குடுக்க முடிகிறது..♥