Showing posts with label நினைவு. Show all posts
Showing posts with label நினைவு. Show all posts

Monday, November 14, 2011

அவ்ளோ அழகு

எந்த
பெண்ணை பார்த்தாலும்
உன்
நினைவுதான்...
உன்னை
மறக்கசெய்யும்
அழகு எந்த பெண்ணுக்கும்
இல்லை..♥

Saturday, November 12, 2011

எறிந்தால் என்ன..?

என்
இதயத்தை
உனக்காக
வெற்றிடமாக்கி விட்டேன்...

உன்
நினைவுகளை ஊற்றிவை,

அல்லது

உன்
நினைவுகளால் பற்றவை,

நீ
இல்லா இதயம்
இருந்தால் என்ன..?
எரிந்தால் என்ன..?

Wednesday, November 02, 2011

நிழலாக இருக்கிறேன்...

நீ
இருக்கும் இடத்தில்
நிழலாக இருக்கிறேன்...
நீ
இல்லாத இடத்தில்
நினைவை
சேகரிப்பவனாக
இருக்கிறேன்..♥


Thursday, October 20, 2011

நிழலா..? நினைவா..?

வீடுவரை வரும் நிழல்,
வீட்டினுள் வருவது இல்லை..!
நான்
உன்
நிழலா..?
நினைவா..?


Sunday, October 16, 2011

சாக்கலேட்டுக்கெல்லாம்

சாக்கலேட்டுக்கெல்லாம்
புரைபோகும்...
இனிப்பானவள்
நீ
நினைத்துக்கொண்டால்..♥

Monday, October 10, 2011

கைப்பிடி இதயம்...

ஒரு
கைப்பிடி
உள்ள
என் இதயத்தில்...
கடலளவு உள்ள
உன்
நினைவுகளை
எப்படி பூட்ட முடியும்..?
அதிலிருந்தது
வழிவதுதான்
இந்த கவிதைகள்..♥

Wednesday, October 05, 2011

கண் மூடும் சுகம்...

கோடை
வெயிலுக்கு
வேப்பமர நிழலில்
ஒதுங்கி கண் மூடும் சுகம்...
பிடித்தவளை நினைக்கும் போதெல்லாம்...♥

Monday, October 03, 2011

நினைத்துக்கொண்டு தான் இருப்பேன்...

அடிக்கடி
கேட்டுக்கொண்டே
இருக்கிறாய்
என்ன
செய்கிறாய் என்று..?
உன்னை
நினைத்துக்கொண்டு தான்
இருப்பேன்
என்று 

மறந்தா போயிரும்..?

Friday, September 30, 2011

மனம் சிறகடிக்க...♥

இறக்கைகள்
ஏதும் அவசியம் இல்லை...
உன்
புன்னகை ஒன்றே
போதும்...
என்
மனம்
சிறகடிக்க...♥