எனக்கு தெரிந்தவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்ததை அறிந்து நான் இன்று மருத்துவ மனைக்கு சென்று இருந்தேன்,
மருத்துவ மனை வளாகத்தில் உள்ள சுகாதாரத்தை காணும்போது முகம் சுளிக்கும் படி இருந்தது ,
கோவை மற்றும் கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து போகிறார்கள்,
அங்கு இருக்கும் சுகாதாரத்தை காணும் பொது நோயை தீர்க்க வந்தவர்கள் மேலும் நோய்வைபடக்கூடுமோ என்று பயம் கூடுகிறது,
அதுமட்டும் அல்லாமல் மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறை , கழிப்பிட வசதி இல்லாமலும் பொதுமக்கள் பெரும் அவதி படுவது தெரிகிறது , இருக்கின்ற ஒரு பொது கழிப்பிடமும் கட்டண வசுளிக்கபடுகிறது ,
அதெப்படிங்க
"மருத்துவத்திற்கு இலவசமாம்,
நோய்க்கும் இலவசமாம்,
கழிப்பிடத்திற்கு கட்டணமா?"
நோய்க்கும் இலவசமாம்,
கழிப்பிடத்திற்கு கட்டணமா?"
அதேபோல மருத்துவரும் பற்றாக்குறை நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்றுதான் மருத்துவரை காணவேண்டியுள்ளது,
"வருகின்ற நோய் முன்கூட்டியே வரக்கூடாத வரிசையில் நிர்ப்பவர்களுக்கு நின்று நின்றே உயிர் போய்விடும்போல இருக்கிறது "
மருத்துவமனை பிணக்கிடங்கின் அருகிலேயே தேநீர் விடுதி , அதற்க்கு அருகில் குளம் போல தேங்கி இருக்கும் சாக்கடை நீர் ,
பாவம் பொதுமக்கள் அவர்களுக்கு வேறு வழி இல்லை ,
ஒன்று தோன்றுகிறது மரணத்திற்கு முன்பே நரகம் என்பது இதுதானோ என்று,
ஒரு பகுதியில் செவியில் விழுந்தது செவிலியரின் சாடல் சாவு கிராக்கி எங்க உசுர வாங்கரதுக்காகவே வருதுங்க என்று,
ஒரு பகுதியில் செவியில் விழுந்தது செவிலியரின் சாடல் சாவு கிராக்கி எங்க உசுர வாங்கரதுக்காகவே வருதுங்க என்று,
செவிலியர்கள் வருவது நோயை குறைக்க வருகிறார்களா ,
அல்லது நோயாளிகளிடம் குரைக்க வருகிறார்களா?
எல்லாம் சலித்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது ஒருவர் இரத்த வங்கி எங்கு உள்ளது இந்த மருத்துவ மனையில் என்று கேட்டார்...
மருத்துவமனை வளாகத்தில் தகவல்பலகையில் தேடினேன் அதிலும் ஒரு அதிர்ச்சி ஆமாங்க
அரசு மருத்துவமனையில் மருத்துவ பிரிவுக்கான தகவல் பலகையில் இரத்த வங்கி என்பதற்கு பதிலாக இரத்த வாங்கி என்று எழுதப்பட்டு உள்ளது...
பாரதி எழுதிய பாடல் ,
நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?