Saturday, March 30, 2013

நான் கண்ட சிந்தனை ~மகேந்திரன்

"வாழ்க்கை ஒரு முறை ஒரு முறையாவது அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து பாருங்க சில பாவங்கள் கழிவதற்கு அது உதவும்"


"தினசரி நிகழ்வுகளில் நடக்கும் ஒருசில நகைச்சுவைகளை தேடுங்கள் வாழ்க்கையில் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்"
"குறைந்த மன அழுத்தத்தை உங்களால் உணரமுடியும்"


"நீங்கள் குற்றம் செய்யாவிட்டாலும்,
மற்றவர்களின் குற்றங்களை தேடி சுட்டிக்காட்டுவதும் குற்றம்தான்"
 


"துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார்.
இன்பத்தில் இருப்பவன் அழைப்பதற்கும் கொஞ்சம் யோசி"


"நீண்ட நாள் வாழவேண்டும் என்று ஆசைப்படுவதை விட
வாழும் நாளில் நல்லவனாய் வாழ ஆசைப்படலாம்"


"சாதிப்பது சாதனை இல்லைங்க எந்த இடத்தில இருந்து சாதிக்கின்றோம் என்பதுதான் சாதனை" 

"உங்களுக்கு ஓய்வு நேரம் நிறைய இருக்கின்றதா:
அந்த உங்களது ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், மற்றது எல்லாம் இயற்கையாகவே அது பயனுள்ள நேரமாக மாறிவிடும்"
 


"வாழ்கையில் யாரையும் சார்ந்து இருக்காதே என்னெனில்
உன் நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் உன்னுடன் துணைக்கு வரும் "
 

Friday, March 29, 2013

ஆதரவற்ற மூதாட்டிக்கு அடைக்கலம்~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை காட்டூர் பட்டேல் சாலை பகுதியில் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாத நிலையில் சாலையிலேயே பல மாதங்களாக இருப்பதாக காட்டூர் காவல் நிலைய போலீசாரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுத்து அந்த மூதாட்டியை ஏதேனும் காப்பகத்தில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரை 18/03/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மூதாட்டியை அழைத்துச் செல்லும் பொழுது உடைகள் இல்லாமல் இருந்த வேளையில் மாற்று உடை உடனடியாகக் கொடுத்துதவிய உறுப்பினர் தேவிகாவை ஈரநெஞ்சம் அமைப்பு பாராட்டுகிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (151/2013)
ஈர நெஞ்சம்

Kattur Police Station informed Eera Nenjam about a old lady, aged around 80, had been living on streets for months without anyone and requested us to help her to get admitted in any home. We got her admitted in Coimbatore Corporation Home on 18/03/2013. Eera Nenjam appreciates the timely help of its volunteer Ms. Devika who provided dress for the old lady who she did not have any extra dress to change,

~ Thanks (151/2013)
Eera Nenjam


Monday, March 25, 2013

மனித நேயம் மலராதா இந்த சமூகத்தில் ?

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். அதுபோல் இன்று ஒரு துயர சம்பவம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

"கோவையில் ஒரு கடை அருகே இருவர் குடி போதையில் கூச்சலோடு சட்டைய பிடித்து சண்டை போட்டு கொண்டு இருந்தனர். அங்கு ஏதோ சுவாரசியமான சம்பவம் நிகழ்வது போல அதை சுற்றி நின்று நூறு பேர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அவர் இடும் சண்டை அந்த கடை சொந்தகாரர் மட்டும் விலக்க முயன்று கொண்டு இருந்தார், அவருக்கு வயது 60 இருக்கும், அந்த வழியே சென்ற நான் அங்கு கூட்டம் இருப்பதை கண்டு அங்கே சென்று நிலமை அறிந்து சண்டைய விலக்க சென்றேன். அவர்கள் மிகவும் வேகமாக முட்டிக்கொள்ள அருகில் நின்று இருந்த கடை சொந்தகாரர் மயங்கி விழுந்தார். விழுந்தவரை தூக்கி விட கூட வேடிக்கை பார்த்த யாரும் முன் வரவில்லை.

பிறகு நான் சண்டை போடுபவர்களை தள்ளி விட்டு,, கிழே விழுந்த முதியவரை நான் தோலில் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தேன். அங்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சியான தகவல், மறுத்தவர் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. ஒரு அற்பமான சண்டைக்கு சமந்தமே இல்லாத ஒரு உயிர் பலியாவது மிகவும் வருந்ததக்கது. அங்கு வேடிக்கை பார்த்த ஒருவர் ஆரம்பத்திலேயே அந்த சண்டையை விலக்கி இருந்தால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்குமா.. ??????

மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் மனிதநேயம் அழிந்துகொண்டு வருகிறது. நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இது போன்ற சம்பப்வங்கள் நிகழ்ந்தால் தயவுசெய்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்..

~மகேந்திரன்

Sunday, March 24, 2013

கொள்ள வந்தாயா..? கொல்ல வந்தாயா..? ~மகியின் கவிதைகள்

நீ
காதல் கொள்வதற்கு வந்தாயா
காதலால் கொல்வதற்கு வந்தாயா

என புரியவில்லை...

அருகில் இருப்பாய்
பார்வைகளால் கொல்வாய்...

தூரத்தில் இருப்பாய்
ஞாபகத்தால் கொல்வாய்...

யாரடி நீ மோகினி..?

 

 

நட்பின்
இலக்கணம் அனைத்தும்
நிறைந்த காதலியடி
நீ...

உனக்கும் எனக்கும் போட்டி வரும்...
சண்டை வரும்...

எல்லாவற்றிக்கும்
உன்னை விட்டுக்கொடுத்து
என்னையே
ஜெய்க்க வைக்கிறாயடி
நீ..!

 

உன்னைவிட
நான்
ஒன்றும்
அவளவு அழகு இல்லை...

ஆனாலும்

உன்னோடு
நான்
இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இந்த
உலகிலேயே
நான் தான் பேரழகனாய்
தெரிகிறேன்..! 

 

உன்
துன்பங்களுக்கு
என்
தோள்களுக்கு மட்டுமே
பாரமாக இருக்க வேண்டும்
என்று
நீ
விண்ணப்பிக்கும் போது

இருந்த
துன்பங்கள் எல்லாம்
எங்குப்போய் தொலைந்ததோ..!?

 

 

 

உன்னுடைய
கோவங்கள் எல்லாவற்றையும்
எவனோ
ஒருவனுக்காக
சமாதானம் ஆகிறது...

அந்த
எவனோ ஒருவன்
நான் என இருக்கும் போது
உன்னை
நேசிக்காமல்
எப்படி அடி இருக்க
முடியும்..! 

 

உனக்கு
எதெல்லாம் பிடிக்காது
என்று
எனக்கு கற்றுத்தரும்
உன்
கோவம்
எனக்கு ரொம்ப பிடிக்கும்..!

 

சிலநேரம்
உன்னை நினைப்பதை கூட
நிறுத்திவிட்டு
துடிக்க பார்க்கிறது
என் இதயம்...

வெட்டியாக
எதற்கு துடிக்கனும்
என்று தெரியவில்லை...

உன்னை நினைத்தாலே
நூறுவருடம் வாழ்வேனே..! 

Friday, March 22, 2013

ஆறுமுகம் ஆத்மா சாந்தியடையட்டும் ~ஈரநெஞ்சம்




''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை டவுன் ஹால் பகுதியில் தாமஸ் தெருவில் சாலையோரமாக திரு. ஆறுமுகம் என்ற முதியவர் உடல்நலம் குன்றி இருந்த நிலையில் இருந்தார். அவரை 11/03/2013 அன்று 108 ஆம்புலன்ஸ் உதவியோடு கோவை அரசு பொது மருத்துவமனையில் ஈர நெஞ்சம் அமைப்பு சிகிச்சைக்காகச் சேர்த்தது. அவரது ஊர் மதுரை என்பது மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு. ஆறுமுகம் கடந்த 13/03/2013 அன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
பின்பு மருத்துவ அதிகாரிகள் இவரது இறப்பைப் பற்றி கோவை B8 காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, காவல்துறையினர் 20/03/2013 திரு. ஆறுமுகத்தைப் பற்றி பதிவு செய்து அவரது உறவினர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எந்த தகவலும் கிடைக்காததால் 20/03/2013 அன்று திரு. ஆறுமுகத்தின் உடலை ஈரநெஞ்சம் அமைப்பின் உதவியோடு சொக்கம்புதூர் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
முதியவர் திரு. ஆறுமுகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் இறைவனை வேண்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (150/2013)
ஈர நெஞ்சம்

Mr. Arumugam, an aged man was found unhealthy on the street near Kovai Town Hall area. Eera Nenjam got him admitted in the Government Hospital, Coimbatore, with the help of 108 Ambulance Service on 11/03/2013. When enquired, he was able to recollect only that he was from Madurai and nothing else.
While having treatment at the hospital, Mr. Arumugam died on 13/03/2013. When the doctors reported it to the B8 Police Station, they enquired about him and his relatives but could not get any information. Since no additional information was found, his body was buried in Chockampudhoor graveyard with the help of Eera Nenjam on 20/03/2013.
Eera Nenjam prays for his soul rest in peace.

~ Thanks (150/2013)
Eera Nenjam

Thursday, March 21, 2013

தன் செயலே தனக்கு உதவி நன்றி வைரமணி

தன் செயலே தனக்குதவி
ஆதரவற்றவர்கள் சாலையோரமாக உடல்நலம் இல்லாமல் சாலையில் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கோ அல்லது காப்பகங்களிலோ சேர்த்துவருகிறோம் .
அப்படி சேர்க்கப்படும் நபர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை நல்லடக்கம் செய்யும் பணி இங்குள்ள ஒரு அமைப்பின் உதவியுடன்நாங்களே அடக்கம் செய்கிறோம் ,இந்த நாள்வரை அப்படித்தான் செய்துவந்தோம் .
இப்படி இருக்க கடந்த சிலநாட்களுக்கு முன்னாள் எங்களால் சாலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த ஒரு பெரியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ,சிகிச்சை பலனின்றி காலமானார் , அவரது பிரேத உடலை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்ய அந்த அமைப்பை அணுகும் போது எப்போதும் அடக்கம் செய்யும் இடத்தில வெட்டியான் இல்லை ஆகையால் நீங்கள் வேறு வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்தார்கள் .
என்ன செய்வது என்று தெரியவில்லை , நாங்களாக மயானத்திற்கு பிரேத உடலை கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய வேண்டுமானால் , குழியை வெட்டுவதற்கே 2000 வரை கேட்கிறார்கள் , கையில் அந்த அளவிற்கு பணம் அப்போது இல்லை மயானம் செல்ல தயாராக பிரேத உடல் மருத்துவ மனை சவக்கிடங்கில் இருந்து வெளியே கொண்டு வந்தாயிற்று ,
தன் நல்ல செயலே தன்னை காக்கும் என்பதற்கேற்ப வைரமணி என்னும் ஒரு 30வயது பெண் வெட்டியானின் தொடர்பு சொக்கம்புதூர் மயானத்தில் கிடைத்தது , ஒரு பெண் மயானத்தில் தன்னந்தனியாக குழியை வெட்டி பிரேதங்கள் வந்தால் தனியாகவே குழிக்குள் இறக்குவதும் , இரவானாலும் பிரேதத்தை எரிப்பதும் தெரியவந்தது, அவரது அனுமதியோடு எனது நண்பன் பழனியப்பன் மூலமாக வைரமணியை, அவரது துணிச்சல் பற்றி பத்திரிக்கையின் மூலமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ,
இந்த இக்கட்டான சூழலில் அந்த வைரமனியின் ஞாபகம் வந்தது நாங்கள் (பிணத்துடன் இருப்பதும் அடக்கம் செய்ய வழிதெரியாமல் இருப்பதும்) உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு எங்களுடைய இக்கட்டான சூழ்நிலையை தெரிவித்தோம் . 
அதற்கு வைரமணி கவலையை விடுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் அந்த நபர் இறப்பிற்கான தகுந்த சான்றிதழை கொண்டுவாருங்கள் அதுபோதும் என்றார் , எங்கள் நெஞ்சில் பால்வார்த்த வைரமணிக்கு நன்றி சொல்லிவிட்டு உடனடியாக பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலமாக சொக்கம்புதூர் மயானத்திற்கு கொண்டு சென்று அந்த முதியவரை வைரமணி வெட்டிவைத்த குழியில் நல்லடக்கம் செய்தோம் . அடக்கம் செய்ததும் பணத்தை நாளை கொடுத்தால் போதும் அதுவும் மிக குறைந்த அளவுமட்டுமே போதும் என்ற ஈர மனது கொண்ட வைரமணி அப்போது எங்கள் கண்ணிற்குகடவுளைப் போல தெரிந்தார் .
அந்த வைரமணிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் இருகை கூப்பி வணங்கினோம் வெட்டியான் வைரமணிக்கு காலில் விழுந்து நன்றி சொல்லி இருந்தாலும் அது மிகை ஆகாது .
எனது வேண்டுகோளுக்கு இணங்க வெட்டியான் வைரமணியை பற்றி நாளிதழில் கட்டுரை எழுதிய எனது நண்பர் திரு . பழனியப்பனுக்கும் .
பிணத்தை கையில் வைத்துக்கொண்டு எங்கு , எப்படி அடக்கம் செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கும் வேளையில்உதவிய வைரமணிக்கும் காலம் முழுவதும் நன்றி செலுத்தக் கடமை பட்டுள்ளோம். இவர்கள் செய்த உதவிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை.
~மகேந்திரன்








Wednesday, March 20, 2013

மனநிலை பாதித்தவருக்கு அடைக்கலம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

(19/03/13) கோவை வ. உ. சி. பூங்கா அருகில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அகோரமான உருவத்துடன் சுற்றித் திரிந்த திரு. சுப்பிரமணி என்பவரைக் கண்ட ஈர நெஞ்சம் அமைப்பினர் அவருக்கு முடி திருத்தி உடல் சுத்தம் செய்து புதிய உடை அணிவித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து அவருக்கு புனர் வாழ்வு அளித்துள்ளனர்.
ஈர நெஞ்சம் அமைப்பு அவருக்கு உடல் சுத்தம் செய்வதை கண்ட அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ள திரு. ராஜேஷ் என்னும் மனித நேயம் மிக்க நண்பர் . அவர் திரு சுப்பிரமணிக்கு மாற்று உடை வழங்கி உதவி செய்தார். அவருக்கு ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (149/2013)
ஈர நெஞ்சம்

Eera Nenjam volunteers found Mr. Subramani, being mentally challenged, today (19/03/2013) near V. O. C. Park, Coimbatore and then gave him a haircut, a bath and new clothers and also got him admitted in Coimbatore Corporation Home. Mr. Rajesh who has a textile store in that area, after seeing our volunteers’ service, donated new clothes to Mr. Subramani. Eera Nenjam appreciates his help.

~ Thanks (149/2013)
Eera Nenjam

Sunday, March 17, 2013

ஈரநெஞ்சம் அமைப்பின் உதவி ~குட்டி அம்மாள்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை உடையாம் பாளையம் பகுதியில் சுமார் 90 மூதாட்டி ஒருவர் நடக்க கூட முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 08/02/2013 அந்த மூதாட்டியைக் கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைப்பு சேர்த்து இருந்த தகவல் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த மூதாட்டி 16/03/13 அன்று இறைவன் திருவடி அடைந்து விட்டார். அந்த தகவலை மாநகராட்சி காப்பகத்தினர் நமது அமைப்பிற்குத் தெரிவித்தும் அந்த மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை ஈர நெஞ்சம் பொறுப்பேற்று சொக்கம்புதூர் கோவை மாநகராட்சி மயானத்தில் நிறைவேற்றியது .
அந்த மூதாட்டி வாழ்ந்த உடையாம் பாளையம் மக்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கும்,
அந்த மூதாட்டியை நல்ல முறையில் பராமரித்து அவரது இறுதி காலத்தில் அன்போடு
பார்த்துக்கொண்ட கோவை மாநகராட்சி காப்பகத்துக்கும் ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (148/2013)
ஈர நெஞ்சம்

We all are aware that Eera Nenjam got a old lady, aged around 90 and could not even walk and orphaned in the area of Udayam Palayam, Coimbatore, admitted in the Coimbatore Corporation Home on 08/02/2013 as soon as the local people informed us. She passed away on 16/03/2013. As soon as the Corporation Home informed us, Eera Nenjam accepted the responsibility and performed the final rituals at the Chokkam Pudhoor, Coimbatore, Graveyard.
The people from Udayam Palayam where the old lady lived also participated in the last rituals and prayed for her sould rest in peace. Eera Nenjam appreciates them as well as the Coimbatore Corporation Home that took care of her at the last minute.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (148/2013)
Eera Nenjam

வைரமணி அவள் வீரமணி ~ மகேந்திரன்






பெண்கள் நாட்டின் கண்கள்!, மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,
முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன் கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!
இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன் மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்.
ஆம்!
நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!
நம்மை பெற்றவளும் பெண்தான்!
நம்மை தாங்குவதும் பெண்தான்!
பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?

பெண்கள் சாதிக்காத துறை எதுவும் இல்லை. எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சாதித்து வருகிறார்கள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பல சமயங்களில் பெண்கள் நிருபித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது .
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.

கோவையில் ஒரு மயானத்தில் வெட்டியானாக வைரமணி 30வயது என்னும் பெண்மணி தனது பத்துவயது முதலாக தனது தந்தை கருப்புசாமி பணி புரிந்த வெட்டியான் வேலையை அவரைத்தொடர்ந்து இருவது வருடமாக செய்துக்கொண்டு இருக்கிறார் .
இவருக்கு ரஜி என்னும் கணவரும் கட்டிடத் தொழிலாளி, இரண்டு மகள்களும் , ஒருமகனும் இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கும் வாழ்கையை நடத்துவதற்கும் கணவனின் சம்பாத்தியம் போக வைரமணியின் இந்த வெட்டியான் வேலையும் தான் கைகொடுக்கிறதாம்.

இதுவரை ஆயிரக்கணக்கான பிணங்களை அடக்கம் செய்துள்ளதாகவும் , அதற்கு குழிகளை வெட்டுவது பிணங்களை குழிக்குள் இறக்குவது மட்டும் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு இறந்தவர்களின் சமுதாயப்படி வெட்டியானின் சடங்குகள் என இந்த வைரமணியே பார்த்துக்கொள்கிறார். நேரம் காலம் பார்ப்பது இல்லை இரவு 10, 11 மணி ஆனாலும் தனியொருவராகவே சுடுகாட்டில் குழிகளை வெட்டி பிணங்கள் வந்தால் அதை அடக்கம் செய்வாராம் .

வைரமணி மேலும் கூறும்போது வெட்டியான் பணி நியமனம் ஆனாலும் அரசாங்கத்திடம் இருந்து எந்த சம்பளமும் இதுவரை வந்தது இல்லை. இப்போது மின் மயானம் வந்துவிட்டதால் பிணங்களை அதில் எரித்துவிடுகிறார்கள். ஆகையால் மாதத்திற்கு ஒருசில பிணங்கள் மட்டுமே புதைப்பதற்கு கொண்டுவருகிறார்கள், இப்படி வரும் ஒருசில பிணங்களை அடக்கம் செய்தவுடன் அடக்கம் செய்ததற்கு இறந்தவர்களின் உறவினர்கள் தரும் சிறுதொகை மட்டுமே சம்பளமாக உள்ளதாம். அதை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்கிறது .

எப்பேர் பட்ட விஷயம்ங்க வாழ்க்கை'யின் அர்த்தங்களை முழுமையாக தினந்தோரும் உணர்பவர் இந்த வெட்டியான் தான்.
இப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது பெண்கள் தெய்வமாக நினைப்பதுடன் .

~மேலும்  வைரமணி பற்றி தினமலரில் வெளியான காணொளி செய்தி இங்க http://www.dinamalar.com/video_inner.asp?news_id=19120&cat=32#.UVMSnr2HlMs.facebook
பெண்களை ஒரு போதை பொருளாக, நினைக்கும், அடிமையாக நடத்தும் சிலர் இந்த நாட்டிற்கு அவமான சின்னமாக இருக்கிறார்கள் .


~மகேந்திரன்.

Tuesday, March 12, 2013

தக்க நேரத்தில் குழந்தையை காப்பாற்ற உதவியவர்களுக்கு நன்றி ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் கல்வி உதவி பெற்று பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வளர்ந்து வரும் சிறுமி பவித்ரா குடல் வால்வு அறுவை சிகிச்சைக்காக அவரது மாமா இராவணன் அவர்களால் திருப்பூர் அரசுமருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு போதிய வசதி இல்லை என்பதால் சிகிச்சைக்குக் கோவை அழைத்து செல்ல வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்களின் அறிவுரைக்குப் பிறகு ஈரநெஞ்சம் வேண்டுகோளுக்கு இணங்க, கோவைக்கு அழைத்து வரப்பட்டாள். பவித்ராவைக் கோவை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தத் தலைமை மருத்துவர் பவித்ராவிற்கு மோசமான, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறவே அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று மாலை (05/03/13) சிறுமி பவித்ராவிற்கு குடல் வால்வு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டு உடல் நலம் தேறி வருகிறாள்.
அவளுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தனியார் மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய மருத்துவ கட்டணத்துக்கு
நிதி உதவி செய்த திரு அருண் குமார் அவர்களுக்கும், பழங்கள் மற்றும் மேல் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பாண்டிச்சேரியைச் சார்ந்த செல்விக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து அவளது காக்க உதவிய மருத்துவர்களை ஈர நெஞ்சம் வணங்குகிறது.
பெற்றோர் அற்ற அந்தக் குழந்தையை அருகில் இருந்து கவனித்து கொள்ளும் அவளது மாமா ஈர நெஞ்சம் அமைப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (146/2013)
ஈர நெஞ்சம்

Eera Nenjam is taking care of the educational expenses of Selvi Pavithra, who is living in the Prabhancha Peace Home. She was admitted in Government Hospital, Tiruppur, for appendicitis, by her uncle. Since there was not enough facility, the doctors advised him to take her to Coimbatore. The private doctors in Coimbatore recommended her to be admitted in the Government Hospital since her condition was very critical. The surgery was performed on 05/03/2013 at the Government Hospital, Coimbatore and she is recovering very well. We thank all the good souls that prayed for her health. We also appreciate the help of Mr. Arun Kumar who paid the fee to the private hospital, Ms. Selvi from Pondichery who helped to buy fruits and also the doctors at the Government Hospital, Coimbatore, who performed the surgery and saved her. Selvi Pavithra’s uncle thanked Eera Nenjam for our timely help.

~ Thanks (146/2013)
Eera Nenjam

Monday, March 11, 2013

இப்படி பட்டவர்களுக்கும் உறவு இருக்குங்க ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி கிராஸ்கட் சாலையில் சுமார் 75 வயது பாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருபதாகவும், அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் 07/03/12 அன்று மாலை 7 மணி அளவில் ஈரநெஞ்சம் அமைப்பிற்குக் காட்டூர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து அவரைக் கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கபட்டது.
அந்த பாட்டியிடம் இருந்த சிறு ஆதாரத்தை கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் சேதுலட்சுமி , மற்றும் அவரது ஊர் செட்டிபாளையம் என்று நான்கு மணி நேரம் தேடலுக்குப் பிறகு தெரிய வந்தது. அவரது மகள் ராதாமணி கூறுகையில் தனது தாயை ஒரு வாரமாகக் காணாமல் காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து சேதுலட்சுமியின் மருமகன் சிவகுமார் அவர்களைக் கோவைக்கு வரவழைத்து பாட்டியை 08.03.2013 அன்று காலையில் அவரது மருமகனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தனது மாமியாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் அமைப்பு, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (145/2013)
ஈர நெஞ்சம்

Following a call from Kottur Police Station on 07/03/2013 around 7 PM about 75 years old lady in an unconscious state at Coimbatore Corporation Crosscut Road, Eera Nenjam got her admitted her at Coimbatore Corporation Home. With the little information she provided, we searched for about four hours and found out that her name is Sethulakshmi and her native place is Chettipalayam. Her daughter Radhamani informed us that her mom had been missing for a week and the local police station had already been contacted for help. Mr. Sivakumar, the son in law, was brought to Coimbatore on 08/03/2013 and his mother in law Ms. Sethulakshmi was handed over to him. He thanked Eera Nenjam for finding her. Eera Nenjam is happy for reuniting one more missing family and thanks everyone who helped in this task.

~ Thanks (145/2013)
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி கிராஸ்கட் சாலையில் சுமார் 75 வயது பாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருபதாகவும், அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் 07/03/12 அன்று மாலை 7 மணி அளவில் ஈரநெஞ்சம் அமைப்பிற்குக் காட்டூர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து அவரைக் கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கபட்டது.
அந்த பாட்டியிடம் இருந்த சிறு ஆதாரத்தை கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் சேதுலட்சுமி , மற்றும் அவரது ஊர் செட்டிபாளையம் என்று நான்கு மணி நேரம் தேடலுக்குப் பிறகு தெரிய வந்தது. அவரது மகள் ராதாமணி கூறுகையில் தனது தாயை ஒரு வாரமாகக் காணாமல் காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து சேதுலட்சுமியின் மருமகன் சிவகுமார் அவர்களைக் கோவைக்கு வரவழைத்து பாட்டியை 08.03.2013 அன்று காலையில் அவரது மருமகனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தனது மாமியாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் அமைப்பு, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (145/2013)
ஈர நெஞ்சம்

Following a call from Kottur Police Station on 07/03/2013 around 7 PM about 75 years old lady in an unconscious state at Coimbatore Corporation Crosscut Road, Eera Nenjam got her admitted her at Coimbatore Corporation Home. With the little information she provided, we searched for about four hours and found out that her name is Sethulakshmi and her native place is Chettipalayam. Her daughter Radhamani informed us that her mom had been missing for a week and the local police station had already been contacted for help. Mr. Sivakumar, the son in law, was brought to Coimbatore on 08/03/2013 and his mother in law Ms. Sethulakshmi was handed over to him. He thanked Eera Nenjam for finding her. Eera Nenjam is happy for reuniting one more missing family and thanks everyone who helped in this task.

~ Thanks (145/2013)
Eera Nenjam

Friday, March 01, 2013

கடவுளை காணவில்லை

****கடந்த சில நூற்றாண்டுகளாக கடவுளை காணவில்லை****


ஆகையால் கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளான்.
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவங்களுக்கு உள்ளாகி இருக்கிறான். கடவள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவ செயலுக்கு துணை போகிறான்,
கடவுள் காணமல் போனதனால் மனிதன், நானே கடவுள் என்று தலை கனத்துடன் இருக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மனிதனாக காட்சி அளிக்காமல் ஒரு ஜந்துவை விட கேவலமாக காட்சியளிக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் சட்டங்களையே சாட்சியாக கொண்டு கொலைகளை கூட புனிதமாக்குகிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதனுக்கு கல்லுக்கும் கடவுளுக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மலர்களை கூட நிம்மிதியாக மரணிக்க விடாமல் மலர்களை தூக்கில் இடுகிறான்,
கடவுள் இருக்கும் இடம் தெரியாமல் கடல், மலை, காடு ,கடுகு, தூண், துரும்பு , கண்டம், அண்டம் என தேடாத இடம் இல்லை கடவுள் கண்டு பிடிக்க முடியவில்லை.

கடவுளின் உட்பொருள் தெரியாமல் தேடுகிறான் மனிதன் .
கடவுள் இதன் உட் பொருள் கட+உள் அதாவது உன்னுள் ஊடுருவி பார் கடவுளை காணலாம் .

நீயே கடவுள் நீ உன்னை கண்டால், ஒவ்வொருவரிடமும் கடவுள் உட்கொண்டு இருக்கிறான் ,  கடவுளை காணும் அவசியம் அது  உன்னைத்தேட வேண்டி இருக்கட்டும் .

~மகேந்திரன்