Showing posts with label மூதாட்டி. Show all posts
Showing posts with label மூதாட்டி. Show all posts

Wednesday, January 08, 2014

தொண்ணூறு வயது மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(250/07-01-2014)

கோவை அவினாசிசாலை அண்ணா சிலை அருகில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இன்று 07/01/2014 காலை முதல் சரிவர நடக்க முடியாமல் சாலையோரமாக சுருண்டு கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அந்த மூதாட்டியின் நிலையை அறிந்து உணவு கொடுத்து வந்தனர். யார் அவர் எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. மூதாட்டிக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற நிலையில் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த மூதாட்டியை ஒரு காப்பகத்தில் சேர்க்கும் படி கேட்டுக்கொண்டனர். ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் உடனடியாக அந்த பாட்டியை அப்பகுதியில் இருந்து மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் பாட்டியிடம் விசாரிக்கும் பொது அவர் பெயர் பச்சை அம்மாள் என்ற விபரம் மட்டும் கிடைக்கப்பட்டது. மேலதிக விபரங்கள் கிடைக்கப்படவில்லை. பாட்டியின் நிலையை கவனித்து உணவு கொடுத்து அவரது பாதுகாப்புக்காக உதவிய பொது மக்களுக்கு நன்றியை ஈர நெஞ்சம் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பாட்டியை உங்களில் யாருக்காவது அடையாளம் காண முடிந்தால் தயவு செய்து ஈர நெஞ்சம் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். 9080131500

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07.01.2014 an elderly lady about 90 years old was found curling down in hunger on the street near Anna Statue close to Avinashi Road in Coimbatore. Local citizens noticed her situation and provided food for her. Upon considering her safety, they contacted Eera Nenjam Trust and passed on the information of her situation. Members of Eera Nenjam Trust rushed to that location and rescued her. Later she was admitted at the Coimbatore City Corporation Charity Home. When the members of Eera Nenjam Trust questioned her about her background she could only tell them that her name is Pachchai Ammal. More information about her background cound't be collected from her. Eera Nenjam Trust is thanking the local citizens who helped the elderly lady with food and assisted her to find shelter.
If anyone of you can recognize this elderly lady and know any information about her, 
please contact Eera Nenjam trust. 9080131500

~Thank you
Eera Nenjam Trust

Sunday, December 22, 2013

ஆதரவற்ற மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை பொருக்கி  விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013 Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging.

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you.

~Thank You
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

 21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை போருக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013  Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging. 

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you. 

~Thank You
Eera Nenjam

Friday, March 29, 2013

ஆதரவற்ற மூதாட்டிக்கு அடைக்கலம்~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை காட்டூர் பட்டேல் சாலை பகுதியில் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாத நிலையில் சாலையிலேயே பல மாதங்களாக இருப்பதாக காட்டூர் காவல் நிலைய போலீசாரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுத்து அந்த மூதாட்டியை ஏதேனும் காப்பகத்தில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரை 18/03/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மூதாட்டியை அழைத்துச் செல்லும் பொழுது உடைகள் இல்லாமல் இருந்த வேளையில் மாற்று உடை உடனடியாகக் கொடுத்துதவிய உறுப்பினர் தேவிகாவை ஈரநெஞ்சம் அமைப்பு பாராட்டுகிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (151/2013)
ஈர நெஞ்சம்

Kattur Police Station informed Eera Nenjam about a old lady, aged around 80, had been living on streets for months without anyone and requested us to help her to get admitted in any home. We got her admitted in Coimbatore Corporation Home on 18/03/2013. Eera Nenjam appreciates the timely help of its volunteer Ms. Devika who provided dress for the old lady who she did not have any extra dress to change,

~ Thanks (151/2013)
Eera Nenjam

Sunday, February 10, 2013

ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை உடையாம் பாளையம்பகுதியில் சுமார் 90 மூதாட்டி ஒருவர் கடந்த 5 மாதமாக நடக்க கூட முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு அளித்த தகவலின் பேரில் இன்று (08/02/2013) அந்த மூதாட்டியை கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கேட்டு ஈரநெஞ்சம் அமைப்பு அங்கு சேர்த்துள்ளது .

இந்த மூதாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பு அழைத்து செல்லும் நிகழ்ச்சியை லோட்டஸ் தொலைக்காட்சி மற்றும் கேப்டன் தொலைக்காட்சி நேரடியாக பதிவு செய்து அதை செய்தியில் ஒளிபரப்பி மக்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியமைக்கு, ஈரநெஞ்சம் அமைப்பு பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

http://youtu.be/WS1ic327uoA

~ நன்றி (140/2013)
ஈரநெஞ்சம்

90 years old orphan lady who was staying at Udayampalayam was not able to walk for past 5 months. Well wishers from that area informed about her to Eeranenjam Trust. 08/02/13 Eeraneanjam admitted her in Corporation home.
Lotus TV telecasted this incident live to public to create awareness among public. Eeraneanjam extends heartfelt thanks to Lotus TV.

~Thanks (140/2013)
EERANENJAM