Monday, March 25, 2013

மனித நேயம் மலராதா இந்த சமூகத்தில் ?

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். அதுபோல் இன்று ஒரு துயர சம்பவம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

"கோவையில் ஒரு கடை அருகே இருவர் குடி போதையில் கூச்சலோடு சட்டைய பிடித்து சண்டை போட்டு கொண்டு இருந்தனர். அங்கு ஏதோ சுவாரசியமான சம்பவம் நிகழ்வது போல அதை சுற்றி நின்று நூறு பேர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அவர் இடும் சண்டை அந்த கடை சொந்தகாரர் மட்டும் விலக்க முயன்று கொண்டு இருந்தார், அவருக்கு வயது 60 இருக்கும், அந்த வழியே சென்ற நான் அங்கு கூட்டம் இருப்பதை கண்டு அங்கே சென்று நிலமை அறிந்து சண்டைய விலக்க சென்றேன். அவர்கள் மிகவும் வேகமாக முட்டிக்கொள்ள அருகில் நின்று இருந்த கடை சொந்தகாரர் மயங்கி விழுந்தார். விழுந்தவரை தூக்கி விட கூட வேடிக்கை பார்த்த யாரும் முன் வரவில்லை.

பிறகு நான் சண்டை போடுபவர்களை தள்ளி விட்டு,, கிழே விழுந்த முதியவரை நான் தோலில் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தேன். அங்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சியான தகவல், மறுத்தவர் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. ஒரு அற்பமான சண்டைக்கு சமந்தமே இல்லாத ஒரு உயிர் பலியாவது மிகவும் வருந்ததக்கது. அங்கு வேடிக்கை பார்த்த ஒருவர் ஆரம்பத்திலேயே அந்த சண்டையை விலக்கி இருந்தால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்குமா.. ??????

மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் மனிதநேயம் அழிந்துகொண்டு வருகிறது. நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இது போன்ற சம்பப்வங்கள் நிகழ்ந்தால் தயவுசெய்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்..

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment