நீ 
 காதல் கொள்வதற்கு  வந்தாயா 
 காதலால் கொல்வதற்கு  வந்தாயா 
 
 என  புரியவில்லை... 
 
 அருகில் இருப்பாய் 
 பார்வைகளால் கொல்வாய்... 
 
 தூரத்தில் இருப்பாய் 
 ஞாபகத்தால் கொல்வாய்...
 
 யாரடி நீ மோகினி..?
நட்பின் 
 இலக்கணம் அனைத்தும் 
 நிறைந்த காதலியடி 
 நீ...
 
 உனக்கும் எனக்கும் போட்டி வரும்... 
 சண்டை வரும்... 
 
 எல்லாவற்றிக்கும் 
 உன்னை விட்டுக்கொடுத்து 
 என்னையே  
 ஜெய்க்க வைக்கிறாயடி 
 நீ..!
உன்னைவிட 
 நான் 
 ஒன்றும் 
 அவளவு அழகு இல்லை...
  
 ஆனாலும்  
 
 உன்னோடு 
 நான் 
 இருக்கும் 
 ஒவ்வொரு கணமும் 
 இந்த 
 உலகிலேயே 
 நான் தான் பேரழகனாய் 
 தெரிகிறேன்..! 
உன்
 துன்பங்களுக்கு
 என்
 தோள்களுக்கு மட்டுமே
 பாரமாக இருக்க வேண்டும்
 என்று
 நீ 
 விண்ணப்பிக்கும் போது
 
 இருந்த
 துன்பங்கள் எல்லாம்
 எங்குப்போய் தொலைந்ததோ..!?
உன்னுடைய 
 கோவங்கள் எல்லாவற்றையும்  
 எவனோ 
 ஒருவனுக்காக  
 சமாதானம் ஆகிறது... 
 
 அந்த 
 எவனோ ஒருவன்  
 நான் என இருக்கும் போது 
 உன்னை 
 நேசிக்காமல் 
 எப்படி அடி இருக்க 
 முடியும்..! 
சிலநேரம் 
 உன்னை நினைப்பதை  கூட 
 நிறுத்திவிட்டு 
 துடிக்க பார்க்கிறது   
 என்  இதயம்...
 
 வெட்டியாக 
 எதற்கு துடிக்கனும்  
 என்று தெரியவில்லை...
  
 உன்னை நினைத்தாலே 
 நூறுவருடம் வாழ்வேனே..! 
| Tweet | ||||



3 comments:
துன்பம் தொலைந்த கவிதை நன்று
நன்றிங்க பிரேம் :)
துன்பம் தொலைந்த கவிதையை எனது தளத்தின் கவிதை உலா பகுதியில் இணைத்துள்ளேன் நன்றி
Post a Comment