Showing posts with label மனிதாபிமானம். Show all posts
Showing posts with label மனிதாபிமானம். Show all posts

Sunday, February 23, 2014

சாலையில் காயத்துடன் ஆதரவற்று இருந்தவருக்கு முதலுதவி ~ மகேந்திரன்

சில நாட்களுக்கு முன்பாக உக்கடம் பகுதியில் சாலையில் ஆதரவற்று ஒரு மூதாட்டி வலது கை இழந்த நிலையில் பரிதாபமாக இருந்தார், அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க அந்த மூதாட்டியை அழைத்துவந்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு அங்கு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அந்த அம்மாவின் தலையில் எதோ காயம் இருக்கும் போல தலை வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். முடி நிறைய இருந்ததால் காயம் தெரியவில்லை தலையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது அதிக துர்நாற்றம் வீச, தலையில் முடி வெட்டி விடலாம் என்று முடியை வெட்டும் போதுதான் தெரிந்தது அத்தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்தது, பாவம் அந்த அம்மா வலியை எப்படி பொறுத்துக்கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை , முடிதிருத்தம் செய்து காயத்தில் இருந்த புழுக்களை எல்லாம் எடுத்துவிட்டு காயத்திற்கு மருந்து போடப்பட்டு உள்ளது, இப்படி ஒரு வேதனை யாரும் அனுபவிக்க கூடாது. அந்த வயதான அம்மா விரைவில் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.







நன்றி...

Thursday, September 19, 2013

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

சக மனிதர்களிடம் குறிப்பாக துயரத்தில் சிக்கி தவிப்போரிடம் காட்டும் அன்பு,இரக்கம் போன்றவைகளை மனிதாபிமானம் எனக் கூறலாம்.விபத்தில் அடிபட்டு சாகக்கிடப்பவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால், அங்கே மனிதாபிமானம் வாழ்கிறது. இவ்வகையில் மனிதபிமானதிற்க்கு உதாரணமாக இருப்பவர்தான் 'கோவை ஆம்புலன்ஸ் முருகேசன்'.

தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் இவரும் ஒருவர்.கோவையில் அவசர ஊர்தியில் வாகன ஒட்டுனராக பணியாற்றி வரும் முருகேசன்,கடந்த செப்டம்பர் மாதம் 12 ம் தேதி இரவு வழக்கம் போல தன் பணியை முடித்துக்கொண்டு இரவு 8 மணியளவில் கோவை-தடாகம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாகியது.ஒரு இளைஞரை பத்துக்கும் மேற்பட்டோர் அடித்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் அந்த இளைஞர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போலத் தெரிந்தது.உண்மைதான் அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்தான்.அங்கிருந்தவர்களை பாவம் அவரை அடிக்காதிர்கள் இவரை அடிக்கிறீர்கள் என வினவ, அந்த இளைஞர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், அவ்வழியே செல்லும் ஆட்டோ போன்ற வாகனங்களை பிடித்து இழுப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

பிறகு மெதுவாக கோவை முருகேசன் அந்த இளைஞரிடம் பேசினார்.ஹிந்தி கோவை முருகேசனுக்கும் தெரியும் என்பதால் அந்த வாலிபரை கூட்டத்தில் இருந்து மீட்டு காவல் நிலையத்தில் சேர்த்தார் காவலர்கள் உதவியுடன் .பாதிக்கப்பட்ட இளைஞர் பின்பு R.S.புரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்தார்.பாதிக்கப்பட்ட நபர் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கோவை முருகேசனுக்கு உதவியாக அவரது நண்பர்கள் ஜோதிமணி
மற்றும் M.P.K.முருகேசன் உடனிருந்தனர்.பிறகு சகஜ நிலைக்கு வந்த அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் பெயர் சிண்டு என்றும்,வயது 28 ஆகிறது என்றும் திருமணமாகி மனைவியும்,4 வயதில் குழந்தையும் இருப்பதாக அந்த வாலிபர் கூறினார்.உடனடியாக கல்கத்தாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிந்துவின் அப்பாவும்,பக்கத்து வீட்டுக்காரரும் வரவழைக்கப்பட்டனர்.பின்னர் பத்திரமாக சிண்டுவை
அவர்கள் கரங்களில் ஒப்படைத்தனர்.

கோவை முருகேசன் கூறிய கருத்துக்கள் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன.ஈரநெஞ்சம் என்னும் சமூக சேவை அமைப்பின் செயல்பாடுகளும்,மனிதாபிமானச் செயல்களும் தன்னை வெகுவாகக் கவர்ந்து தன்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.மேலும் சமூகத்திற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறினார்.

ஒரு மனிதன் சமுதாயத்தில் கொலை,கொள்ளைப் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கூட சட்டப்படி தண்டிக்கின்றார்கள் .அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஏதோ தன் விதிவசத்தால் வீட்டை விட்டு
வெளியேறி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்வதறியாது செய்த குற்றத்திற்கு அவரை ஒன்று கூடி அடித்தல் முறையாகுமா? நாம் ஒவ்வொருவரும் முடிந்த வரையில்
மனிதபிமானதொடு வாழ்வோம்.மேலும் கோவை முருகேசனைப் போன்றோர் இருப்பதாலும்,இவர்களைப் போன்ற சாதாரண மனிதர்களையும் மனிதபிமானதோடு நடந்து கொள்ளச் செய்யும் தாக்கத்தை ஏற்படும் 'ஈரநெஞ்சம்' போன்ற சமுதாய அக்கறை கொண்ட அமைப்புகளாலும் 'மனிதாபிமானம் இன்னும் மரிக்கவில்லை' வாழ்ந்து கொண்டுதான் உள்ளது என்பதை கண்கூடாக காணமுடிகிறது.REAL லைப் HERO,கோவை முருகேசனுக்கும் அவர் நண்பர்களுக்கும் ஈரநெஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நேயத்தை வளர்ப்போம்..மனிதாபிமானத்தைப் போற்றுவோம்!

-எழுத்தாளர்,என்.டி.சரவணன்



Tuesday, May 14, 2013

ஆதரவற்று இருக்கவும் கூடாது , ஆதரவற்று இறக்க கூடாது. ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(159/2013)

செல்வி சுதா கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் தெருவில் ஒரு முதியவர் கிடந்ததாக அறிந்தோம். கடந்த 17/04/2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27/04/2013 அன்று சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். தெருவில் இருந்த போதும் இறுதி காரியங்களுக்காவது அவர் நல்ல இடம் வந்து சேர்ந்தது இறைவன் செயல்.

சம்பிரதாயங்கள் முடிந்து 12/05/2013 அவரது உடல் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த வைரமணி என்ற பெண் மயான தொழிலாளியின் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோவை B10 காவல் நிலையத்தினரும் ஈரநெஞ்சம் அமைப்பும் இணைந்து இறுதி காரியங்கள் செய்தனர். அவரது ஆத்மா சாந்தி அடைய ஈரநெஞ்சம் அமைப்பின் சார்பாக பிரார்த்திக்கிறோம்.

~நன்றி
ஈரநெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

Based on the information provided by Selvi Sudha about an old man, almost naked without enough clothes and injured on his legs and laid on the street near LIC Colony Bus Stop in Selvapuram, Coimbatore, he was admitted in the Government Hospital, Coimbatore, by Eera Nenjam on 17/04/2013. Unfortunately he died on 27/04/2013. Even though he lived on streets, at least he was at a better place at his last moment.
His body was cremated after the rituals with the help of Ms. Vairamani, a volunteer in Eera Nenjam and working in the Cremation center. B10 police station and Eera Nenjam joined hands with her. Let us all pray for his soul rest in peace.

~Thank You
Eeranenjam

Monday, March 25, 2013

மனித நேயம் மலராதா இந்த சமூகத்தில் ?

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். அதுபோல் இன்று ஒரு துயர சம்பவம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

"கோவையில் ஒரு கடை அருகே இருவர் குடி போதையில் கூச்சலோடு சட்டைய பிடித்து சண்டை போட்டு கொண்டு இருந்தனர். அங்கு ஏதோ சுவாரசியமான சம்பவம் நிகழ்வது போல அதை சுற்றி நின்று நூறு பேர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அவர் இடும் சண்டை அந்த கடை சொந்தகாரர் மட்டும் விலக்க முயன்று கொண்டு இருந்தார், அவருக்கு வயது 60 இருக்கும், அந்த வழியே சென்ற நான் அங்கு கூட்டம் இருப்பதை கண்டு அங்கே சென்று நிலமை அறிந்து சண்டைய விலக்க சென்றேன். அவர்கள் மிகவும் வேகமாக முட்டிக்கொள்ள அருகில் நின்று இருந்த கடை சொந்தகாரர் மயங்கி விழுந்தார். விழுந்தவரை தூக்கி விட கூட வேடிக்கை பார்த்த யாரும் முன் வரவில்லை.

பிறகு நான் சண்டை போடுபவர்களை தள்ளி விட்டு,, கிழே விழுந்த முதியவரை நான் தோலில் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தேன். அங்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சியான தகவல், மறுத்தவர் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. ஒரு அற்பமான சண்டைக்கு சமந்தமே இல்லாத ஒரு உயிர் பலியாவது மிகவும் வருந்ததக்கது. அங்கு வேடிக்கை பார்த்த ஒருவர் ஆரம்பத்திலேயே அந்த சண்டையை விலக்கி இருந்தால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்குமா.. ??????

மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் மனிதநேயம் அழிந்துகொண்டு வருகிறது. நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இது போன்ற சம்பப்வங்கள் நிகழ்ந்தால் தயவுசெய்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்..

~மகேந்திரன்

Tuesday, October 30, 2012

இளைஞர்கள் முன்வரவேண்டும் "ஈர நெஞ்சம் சேவைகள்"

"ஈர நெஞ்சம் சேவைகள்" / EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் நடக்க முடியாமல், வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பெற்ற பின்னர், போவதற்கு உற்றார் உறவினர் இல்லாத
நிலையில், கடந்த 10 நாட்களாக ஆதரவற்று இருந்த திரு.ஹுசைன் என்னும் 65 வயது முதியவரைக் கண்ட மனித நேயம் மிக்க, கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.கே.கோவிந்தராஜ் என்னும் இளைஞர் B3 காட்டூர் காவல் நிலையத்திற்கு விபரத்தைத் தெரிவித்தார்.

அதன் பின்னர் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் காட்டூர் காவல் நிலையத்தின் அனுமதியோடு திரு கே. கோவிந்தராஜ் அவர்களின் உதவியோடும் திரு ஹுசைன் அவர்கள், கோவை மாநகராட்சி காப்பகத்தில், 28.10.2012 அன்று சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஆதரவற்ற ஒரு முதியவருக்கு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர் திரு கே. கோவிந்தராஜ் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இதுபோல் இன்னும் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்துகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(97/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Hussain, (Age: 65), who was discharged from a hospital after getting the treatment for the paralysis attack, was found unattended near Cross-cut road, Coimbatore for the past ten days. A kind hearted person Mr K. Govindaraj, hailed from Tirunelveli reported this matter to B3 police station.

He came to know about our organization and informed us. Mr. Hussain was then admitted to "Coimbatore Corporation Home" after getting proper permission from the Kattur Police station on 28.10.2012.

We appreciate Mr. K. Govindaraj for his service and wish him.

We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks /(97/2012)
EERA NENJAM
Like · ·

Monday, September 17, 2012

யாருக்கும் இன் நிலை வரகூடாது...

யாருக்கும் இன் நிலை வரகூடாது...

காலத்தினால் செய்த " ஈர நெஞ்சத்தின் உதவி" / Timely help from "EERA NENJAM"
******
[For English version, please scroll down]
ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் கோவை அரசு மருத்துவமனையை ஒட்டிய சாலையை கடந்து செல்கிறார்கள். அந்த வழியில் கிடந்த ஒரு புண்பட்ட மனிதரை, யாரும் கவனிக்கவே இல்லை.ஆனால், சூலூரைச் சேர்ந்த "ஈர நெஞ்சம்" கொண்ட சம்பத் குமார் மற்றும் ரஞ்சித் இருவரும் அதனைக் கண்டவுடன், எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். இடது கால் தீக் காயம், அதில் ஈக்கள் மற்றும் புழுக்கள் மற்றும்
நினைவின்றி சரியான உணவோ தண்ணீரோ கிடைக்காமல் கிடந்த அவரை, "ஈர நெஞ்சம்" அமைப்பு உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அவருக்கு தக்க மருத்துவ சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

சூலூரைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் சம்பத்குமார் இருவருக்கும் ஈர நெஞ்சம் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. சரியான நேரத்தில் செய்த உதவியினால் ஒரு உயிர் இப்போது பாதுகாக்கப்பட்டமன நிறைவோடு எங்கள் அமைப்பு, இதுபோல் இன்னும் நிறைய நற்செயல்கள் நடைபெறுவதற்கு உங்களின் ஆதரவையும் இறைவனின் அருளையும் வேண்டுகிறது . பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்.

http://www.youtube.com/watch?v=u2JFad0uJ5U&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=oOqMG7AOGZQ&feature=youtu.be

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(77/2012)
ஈர நெஞ்சம்.
......
Thousands of people have been using roads leading to Coimbatore Government Hospital. No one noticed a unhealthy person who was lying down on the street except two kind hearted fellows, Sampath kumar and Ranjith, who hailed from Sulur. His left leg had fire-injury surrounded by flies and maggots with light-headedness and improper foods. We acted immediately after their information by calling 108 ambulance service and made arrangements to admit him to Government Hospital, Coimbatore. As of now he is under medication. We salute the noble service of Sampathkumar and Ranjith. We ourselves are satisfied that he is safe and given proper medication and care in the hospital.

We continue to seek your help and the almighty to perform such kinds of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks
EERA NENJAM (77/2012)
Like · ·

Monday, September 03, 2012

தெய்வமாய் வந்த குழந்தைகள் ~ ஈரநெஞ்சம்


[For English version, please scroll down]

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பார்கள். இளம் வயது முதல் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறை, நாளைய உலகைக் காக்கும் கரங்களாக வலுப்பெறும் என்பதில் வியப்பேதும் இல்லை. இதற்கு உதாரணமாக, கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆதரவற்ற நிலையில் உடல் நலமின்றி, உணவின்றி பரிதாபமாக, திரு. பரந்தாமன் என்னும் பெரியவர் இருப்பதைக் கண்டு, கோவையைச் சேர்ந்த
பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ம. பானு, அஜீத், ஷ்யாம் மற்றும் அவர்களின் தோழர்கள் இணைந்து, அவருக்கு முதலுதவி செய்து அவரைப் பராமரித்ததுடன், ''ஈர நெஞ்சம்'' உதவியுடன், B9. சரவணம்பட்டி காவல் துறை அனுமதியோடு சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு நல்லதொரு வாழ்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அந்த நல்லுள்ளங்களை ஈர நெஞ்சம் வாழ்த்தி பாராட்டுகிறது.

~நன்றி ஈர நெஞ்சம்
(67/2012)
https://www.facebook.com/eeranenjam
......
There is a saying that '' The quality of the crop can be determined from the seed itself''. Similarly the activity of the youth will reveal a good citizenship. There is no doubt that the present youth can help the needy people when need arises. To prove the above saying, twelfth standard students, Banu, Ajith, Shyam and their friends, found an elderly man, Mr Paranthaman, in the vicinity of Poonthottam, Ganapathy, Coimbatore. He had been unattended, unhealthy and without proper food for the past few days. These had helped him by providing a first-aid and made arrangements to admit him into Saibaba Homes with the help of Saravanampatti Police Station and our organization Eera Nenjam. We appreciate their services while we are also proud that the present younger generation is on the right track doing social services.
~Thanks
EERA NENJAM (67/2012)




Tuesday, March 13, 2012

மகனுடன் இணைந்த கண்ணம்மாள் பாட்டி...


வழக்கம் போல நான் (மகேந்திரன்) அன்னை தெரசா காப்பகத்திற்கு அங்கு இருக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கு சேவை செய்வதற்காக 12 /03 /12  சென்றிருந்தேன் .
அங்கு கண்ணம்மாள் (வயது 80 இருக்கும்) அவரை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து அழைத்து வந்தனர். இவர் யாரும் இல்லை என பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி ஒரு நல்ல மனிதர் பாட்டியை அழைத்துக்கொண்டு வந்து காப்பகத்தில் சேர்த்துவிட்டார்கள்.
அவரிடம் நான் ,
" நீ...ங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் ?" என கேட்க ,அவர் " என் சின்ன மகன் ராஜேந்திரன் அவன் என்னோடு சண்டை போட்டுக்கொண்டு கோவத்தில் வீட்டை விட்டு போய் விட்டான், என் மகன் பெரியவன் ராகவன் சென்னை சோழ மண்டலம். இதை தவிர வேறு தெளிவான முகவரியும் அலைபேசி எண்ணும் தெரியாது" என்றார்., ராஜேந்திரன் என்னை தகாதவார்த்தை சொல்லியதால் மனம் உடைந்து கோவையில் எனக்கு உறவினர் வீடு இருக்கிறது அவரை தேடி இங்கு வந்தேன் . ஆனால் இந்த ஊரில் எனக்கு அடையாளம் காணமுடியவில்லை , பசி பிச்சை எடுக்க மனம் இல்லை எங்காவது சாப்பாடு குடுப்பாங்களா என அலைந்தேன் பழைய சாதம் குடுப்பாங்க , அது எனக்கு ஒத்துவராமல் உடல் நலம் குன்றி போனது அரசு மருத்துவமனையில் யாரோ ஒருவர் சேர்த்துவிட்டு போனார் அதன் பிறகு நான் குணமாகி வெளியே வந்து எங்கு போவது என்று தெரியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து விட்டேன் , அதன் பிறகு எனக்கு பசி மயக்கம் , விளித்து பார்க்க நான் இங்கு இருக்கிறேன் , என் பிள்ளைகளை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என கண்ணீருடன் சொல்ல நான் உங்கள் மகன்களை தேடி தருகிறேன் பாட்டி என கூறி அவருடைய மகன்களை தேடும் முயற்சியில் இறங்கினேன் .தொடர்ந்து அவர் கூறிய சென்னையில் உள்ள சோழமண்டலம் பகுதியில் இருக்கும் அலைபேசி எண் ஒன்றை கண்டு பிடித்து அதன் மூலம் பல எண்களுடன் தொடர்புகொள்ள , ஒருக்கட்டதில் கண்ணம்மாள் பாட்டியின் மூத்த மகன் ராகவனின் தொடர்பு கிடைத்தது , அவரிடம் விசாரிக்க அவருடைய அம்மா தான் கண்ணம்மாள் பாட்டி என உறுதியானது , அலைபேசியில் ராகவன் அம்மா என அழுத அழுகை இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
தனது அம்மா காணாமல் போனதை தொடர்ந்து காவல் துறையில் புகார் செய்ததும் நாளிதழில் விளம்பரம் செய்ததும் , விடிய விடிய அவரை தேடி அலைந்ததும் என்னிடம் பகிர்ந்துக்கொண்டார் ,
பிறகு அவருக்கு சமாதானம் சொல்லி உடனே கிளம்பி வாருங்கள் என்று சொன்னதும் சென்னையில் இருந்து கிளம்பி இன்று 13/03/12 காலை கோவைக்கு வந்து என்னை சந்திக்க அவரை அழைத்துக்கொண்டு அன்னை தெரேசா காப்பகத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அங்கு இருக்கும் அவருடைய அம்மா கண்ணம்மாள் பாட்டியை சந்திக்கவைக்கும் போது மகன் ராகவனை சந்தித்த கண்ணம்மாள் பாட்டி கட்டித்தழுவி
அழுவதை பார்க்க அந்த நிகழ்வை பார்த்தால் கல்லும் கரைத்துவிடும் போல இருந்தது,
பாட்டி என்னை அழைத்து கையெடுத்து கும்டிட்டு நன்றி சொல்ல எனக்கும் கண்கலங்கியது பிறகு நான் பாட்டி உனக்கு சந்தோசம் தானே என்று சொல்ல பாட்டி அழுதும் சரித்தும் என்னை கட்டி அனைத்து முத்தம் தந்து ஆசீர்வாதம் வழங்கினார்,
பாட்டியின் மகன் என்னை பார்த்து உங்களுக்கு காலமெல்லாம் கடமை பட்டிருப்பேன் என்று சொல்லி , காப்பகத்தில் இருந்த கண்யச்திரிகளிடம் தனது அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சொல்லி அங்கு இருந்த அனைவரையும் வணங்கி நன்றி சொல்லி கிளம்பும் போது அந்த பாட்டி கண்களில் ஒரு நிம்மதியை காண முடிந்தது,
மகிழ்ச்சியோடு நான் இந்த நாளில் இது போல இருந்தது இல்லை எந்தநாளும் .
எதோ ஒரு நல்ல கடமை நிறைவேற்றியதுபோல இருந்தது.
~மகேந்திரன்