Showing posts with label கோவை. Show all posts
Showing posts with label கோவை. Show all posts

Thursday, August 02, 2018

20 வருட சாபம் மாற்றம்




சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அழுக்கு நிறைந்த உடுத்திய அதே உடையிலும் , சடை பின்னி ஓட்டி போன முடிகள் , சாலையில் கிடைப்பதை தின்றுக் கொண்டும் உற்றார் உறவினர் என எல்லோரும் கை விட்டதால் வந்த பரிதாபம்.


 

கோவை காரமடையில் சின்னம்மாக்கும், அழகர் சாமிக்கும் பிறந்த கிருஷ்ணசாமி(53), ஒரு அக்கா இரு அண்ணன் , கிருஷ்ணசாமி மூன்றாம் வகுப்பு மட்டும் படித்த நிலையில் , இறந்தவர்களின் வீட்டில் சடலங்களுக்காக செய்யும் சடங்குகளுக்கு சங்கு ஊதியும் பணி செய்து வந்தார். இதனால் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பிணத்திற்கு சங்கு ஊதுபவன் என்று ஒதுக்கி வைத்துள்ளனர். சில வருடங்களில் கிருஷ்ணசாமியின் தந்தை காணாமல் போக பிழைப்பை தேடி கோவை காந்திபார்கில் குடி ஏறினர் .
 

அங்கே ஒரு போட்டோ ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்த கிருஷ்ணசாமி நல்ல ஊதியத்துடன் வாழ்ந்து வந்தார். உடன் பிறந்தவர்களுக்கு எல்லோரும் திருமணம் ஆகி விட்டை விட்டு வெளியேறியதும் தன் அம்மாவை பாசத்துடன் நல்லபடியாக பார்த்துக் கொண்டார் . திடீர் என்று அம்மா வின் இறப்பும், அதன் அடுத்து தான் வேலை செய்து வந்த போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரின் இறப்பும் இவர் மனதை பெரிதும் பாதித்து உள்ளது.


இருந்த வேலையும் இல்லாமல் போக , தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்து கிருஷ்ணசாமியை வெளியேற்றி உள்ளார். உடன் பிறந்தவர்களும் இவரை கவனித்துக் கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் தனிமை மட்டுமே இவருக்கு துணையானது.

யாரிடமும் பிச்சை கேட்க மனம் இல்லை, பசிக்கு உணவு கிடைக்காமல் குப்பை தொட்டியில் தேடும் நிலை , காலப்போக்கில் இவர் தோற்றம் கண்டு அனைவரும் மனநிலை பாதித்தவர் என்றே இச் சமுதாயம் முத்திரைக் குத்தி இருபது வருடங்களாக தெருவோரம் அமர்த்திவிட்டது .
இந்நிலையில் கிருஷ்ணசாமி சாலை ஓரம் உள்ள குப்பை தொட்டியில் உணவை தேடுவதை கண்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை கிருஷ்ணசாமியை மீட்டு முதலுதவி வழங்கி ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பராமரிப்பில் ஏற்றுக்கொண்டது கொண்டது.



மேலே குறிப்பிட்ட அனைத்தும் கிருஷ்ணசாமி கூறியது , தான் மனிதர்களிடம் பேசியே 20 வருடம் ஆகிடிட்டது. பசிக்காக மனிதர்களிடம் அடிவாங்கியது தான் மிட்சம், இன்று உங்களால் மோட்சம் பெற்றேன் என்று கண்கலங்கும் போது சமுதாயத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது.
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
https://www.facebook.com/eeranenjam.organization




Monday, September 07, 2015

மின்சாரம், எரிவாயு , குடிநீர் என தனக்குதானே திட்டமிட்டு 'தன்னிறைவு பெற்ற மனிதர்' ஸ்ரீதர்

ஒரே முறை முதலீடு ..! ஆண்டு முழுதும் பெருகும் லாபம் ..!

மின்சாரம், எரிவாயு , குடிநீர் என தனக்குதானே திட்டமிட்டு
'தன்னிறைவு பெற்ற மனிதர்' ஸ்ரீதர் .
``````````````````````````````````````````````````````````````````````````````````````

 

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு சராசரியான குடும்பத்தில் தண்ணீர், மின்சாரம், எரிபொருள் போன்றவற்றின் சிக்கனம் மற்றும் சேமிப்பு என்பது தவிர்க்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. எரிபொருள் மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது முழுமையாக மக்களிடையே சென்றடைவது இல்லை. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமலும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்போது அவற்றின் விலை ஏற்றத்தின் காரணமாகவும் நாம் தவித்து வருகிறோம் .

இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கு வரம் போல ஒரு திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் கோவையை சேர்ந்த திரு.ஸ்ரீதர்.

வீட்டு உணவு பொருட்களின் கழிவுகளை மட்டுமே கொண்டு எரிபொருட்களை தயாரித்து பயன்படுத்தி வருகிறார். சூரிய சத்தியை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொள்கிறார். மழை நீரை முறையாக சேமித்து பல மாதங்களுக்கு குடிநீராகவும் பயன் படுத்திக் கொள்கிறார் . மாதம் முழுவதுமாக இதற்காக ஆகும் செலவு வெறும் 200 ரூபாய் மட்டுமே என்கிறார் இந்த இந்திய குடிமகன்.

பொருளாதார சிக்கனம் மற்றும் நாட்டின் மேம்பாட்டில் அக்கறையோடு எரிபொருள் , மின்சாரம் போன்றவற்றை இவர் வீட்டில் இருந்தபடியே வீட்டிலேயே உற்பத்தி செய்து அதன் மூலம் பெரும் பயன் பெற்று வரும் ஸ்ரீதர் . அது மட்டும் அல்லாமல் அவற்றை பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும்  கொடுத்துவருகிறார். இதை அறிந்து நேரடியாக நாமும் அவர் வீட்டிற்கு சென்று அவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் எம்மிடம் கூறியது அப்படியே உங்கள் பார்வைக்கு ...



1. வணக்கம் சார் சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்து பயன் படுத்த வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது , அதை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் ?

கடந்த ஆறேழு வருடத்திற்கு முன்பு தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு அனைவரும் அவதிப்பட்டு வந்தது யாராலும் மறக்க முடியாது.  UPS பொருத்திப் பார்த்தோம் ஆனாலும் அதில் சேமிப்பதற்கும் கூட போதிய மின்சாரம் கிடைக்காமல் தட்டுப்பாடாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்பொழுது மின்சார கட்டணம் உயர்ந்து வருவதும் பெரும் மன உளைச்சலாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் நண்பர்களின் ஆலோசனை படி சோலார் சிஸ்டம் மூலம் வீட்டிலேயே மின்சாரம் தயாரித்துக் கொள்ளலாம் என்பது பற்றி தெரியவந்தது . முதலீடு அதிகமாக இருந்தாலும் இப்பொழுது அதன் பயன் உணர முடிகிறது. இப்பொழுது அதன் முதலீடு மிகவும் குறைந்து விட்டது . எந்த நேரமும் மின்சாரம் வீட்டில் உபயோகிக்க முடிகிறது , அது மட்டும் இல்லாமல் இப்பொழுது வீட்டின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு கொடுத்து அதன் மூலம் ஒரு தொகையும் பெற்றுக் கொள்கிறோம்.



2. சூப்பர் சார் , மழை நீரை எப்படி சேகரிக்கிறீங்க ? பின் அதை எப்படி பயன் பயன்படுத்தறீங்க அதை பற்றி சொல்லுங்களேன் ?

'நீரின்றி அமையாது உலகு' என்ற கூற்று முற்றிலும் உண்மையானது. மழையின் அளவு மிகவும் குறைந்து கொண்டு வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானேங்க , குடி நீர் தட்டுப்பாடு என்பது நான் சொல்லியா தெரிய வேண்டும் . எங்க வீட்டு தரை மட்டத்தில் 15000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியும், வீட்டின் மாடியில் அதே அளவு கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டியும் வைத்து இருக்கின்றோம்,

மழை வரும் பொழுது ஒரு துளியும் வெளியேறி விடாமல், அப்படியே ஒரு இடத்திற்கு குழாய் மூலம் கொண்டுவந்து கூழாங்கற்கள், செங்கற்கள், கருங்கற்கள் (ஜல்லிக்கற்கள்), மரக் கரித்துண்டுகள், பாக்குஜல்லி, ஆற்று மணல், கல் உப்பு போன்றவற்றை கொண்டிருக்கும்  ஒரு தொட்டியில் அந்த நீரை செலுத்தி மெல்லிய துணி கொண்டு வடிகட்டி  கீழ் தொட்டியிலும் , மேல் தொட்டியிலும்  சேமித்து வைத்துகொள்கிறேன். பின்பு அதை குளிப்பதற்கும் , துணி துவைப்பதர்க்கும்  பயன்படுத்திக் கொள்கிறேன் . அது மட்டும் அல்ல   அதையே குடிப்பதற்கும் கூட பயன் படுத்திக் கொள்கிறேன்.

என்ன சார் யோசிக்கிறிங்க குழப்பமா இருக்கா . கண்தெரியாத தொலைவில் காட்டுக்குள் இருக்கும் நீர் அணையில் எவ்வளவோ மிருகங்கள் இறந்து விழுந்து அழுகிப்போய் கிடக்கிறது , துருப்பிடித்த குழாயில் தான் அந்த நீரும் வருகிறது. அதை கழுவவே முடியாத ராட்சச தொட்டியில் நிரப்பி அதைதான் நம் வீட்டிற்கு குடி நீர் பயன்பாட்டுக்காக வருகிறது . இப்போ சொல்லுங்க நாம் மழை நீரை சேமிப்பது எந்தவிதத்தில் குறை சொல்ல முடியும். நாங்கள் இப்பொழுது குடிக்கும் நீர் கூட கடந்த மூன்று மாதத்திற்கு முன் வந்த மழை நீர்தான். ஒரு விஷயம் சொல்லறேங்க நம் வீட்டிற்கு வரும் குடிநீர் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஒரு நாளைக்கு 3.50 ரூபாய் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றோம் , அதுபோக நாம் குடிப்பதற்கு உண்டான கட்டணம் தனி , இது எத்தனை பேருக்கு தெரியும் . ஆனால் நான் என் எல்லா தேவைக்கும் மழை  நீரை பயன் படுத்திக் கொண்டு  , அந்த மினிமம் கட்டணம் மட்டும் தான் கட்டிக் கொண்டு இருக்கின்றேன்.

நீங்க ஒன்னு கூட நினைக்கலாம் இந்த நீரை குடிப்பதற்காக பயன் படுத்துவதால் உடல்நல கேடு இருக்குமோ என்று. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பேர் சளி தொந்தரவு என்பது கூட இது நாள் வரை வந்தது இல்லை.



3. அருமை சார் நீங்க பயன்படுத்தும் எரிவாயு பற்றி சொல்லுங்க ?

வீட்டில் வீணாகும் உணவு கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் எரிவாயு தயாரித்து பயன்படுத்த முடியும்ங்க நூடுல்ஸ், உருளை கிழங்கு , வெங்காயத் தோள் பழைய சாதம் மற்றும் கெட்டுப்போன பேக்கரி உணவு பொருட்கள் இது போதும் நம் வீட்டிற்கு தேவையான எரிவாயு எளிதில் தயாரித்துக் கொள்ளலாம் , இந்த மூலபொருட்கள் எல்லாம் விலையில்லா பொருட்கள்தானே எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என் வீட்டில் இப்போதைக்கு எட்டு வருடத்திற்கு தேவையான எரிவாயுவிற்கு தேவையான  மூலப்பொருட்கள் சேமித்து வைத்து இருக்கிறேன். இதனால் சுற்றுப்புற சூழல் எந்தவிதத்திலும் பாதிப்பதும் இல்லை ; எரிவாயு தட்டுப்பாடு என்பதே இல்லை. அதுபோக கல்லூரி மாணவர்கள் வேதியியல் துறைக்கு தேவையான எரிவாயும் இலவசமாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

4. வாழ்த்துக்கள் சார் , உங்களது இந்த அரிய முயற்சியின் மூலமும் இதன் வெற்றியின் மூலமும் நீங்கள் பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் என்ன விழிப்புணர்வு அளிக்க விரும்புகிறீர்கள்?

இப்போது நான் செய்து வருவதை முழுமையாக அரசாங்கமும் செய்து வருமானால் தொடர்ந்து நீர்வளம், எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றில் நம் நாடு தன்னிறைவு அடைவதோடு பிற நாடுகளுக்கும் கொடுக்க முடியும் . . எரிபொருட்கள் மற்றும் மின்சாரத்தை சிக்கனம் செய்ய எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மிக அதிகமான தேவைகளின் காரணமாக சிக்கனம் என்பது சாத்தியமில்லாத ஒரு சூழ்நிலையில் குறைந்த செலவில் இவற்றை உற்பத்தி செய்வது தான் புத்திசாலித்தனமும் கூட , எரிபொருட்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. இது போன்ற இயற்கை முறைகளை கையாளும்போது மானியத் தொகை செலவிலேயே நமது மொத்த தேவைகளையும் அதற்கு மேலும் அடைந்து விட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் தன்னிறைவு மனிதர் திரு.ஸ்ரீதர்.

~மகேந்திரன்

Wednesday, May 07, 2014

ஒரே நாளில் மூன்று உறவுகளை குடும்பத்தினருடன் இணைத்து வைத்ததில் ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(303/07-05-2014)

கோவையில் 05/05/2014 நேற்று அரசு மருத்துவமனை ,ரயில் நிலையம் கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் பிச்சைக்காரர்கள் 12 பேரை போலீசார் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களிடம் விசாரித்தனர். அதில் சிலருக்கு வீடும் உறவினர்களும் இருப்பதை அறிந்து அவர்களது உறவினர்களை தேடும் முயற்சியில் இறங்கினர். அதன் தொடர்பாக போலீசார் அழைத்து வந்த 12 பேரில் ராஜன் (33) திருச்சி , வேலு (50) திருநெல்வேலி , தியாகராஜன் (60) முசிறி , மாரப்பன் (38) விஜயமங்கலம் , கோபால் (70) கோவை ஆகிய 5 பேர்களின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் . இவர்களைப்பற்றிய விபரம் கூறியதில் ,திருச்சியிலிருந்து ராஜனின் சகோதரர் தாமோதரன், திருநெல்வேலியில் இருந்து வேலுவின் சகோதரர் முருகன் , முசிறியில் இருந்து தியாகராஜன் அவர்களின் மருமகன் சுந்தரராஜன் ஆகியோர் உடனடியாக இன்று 06/05/2014 கோவைக்கு வந்தனர் அவர்களிடம் அந்த மூவரையும் மாநகராட்சி காப்பக ஆய்வாளர் கங்காதரன் ஒப்படைத்தார்.

ராஜனைப்பற்றி அவரது சகோதரர் தாமோதரன் கூறும்போது :
"தனது தம்பி ராஜனுக்கு அவ்வப்போது காக்காய் வலிப்பு வரும் அதனால் சற்று ஞாபகமறதி ஏற்பட்டது கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார் நாங்கள் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை நேற்று ஈரநெஞ்சம் அமைப்பு மூலமாக காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து தம்பி கோவையில் இருக்கிறார் என்று கூறினார்கள் அதனை தொடர்ந்து அவனை அழைத்துப்போக வந்துள்ளேன் " என்றுக் கூறினார் .
வேலுவின் சகோதரர் முருகன் கூறும்போது :
" எனது தம்பி வேலு டிரைவராக பணிபுரிந்து வந்தார் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றது இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வேலுவிற்கு எதோ விபத்து ஏற்பட்டு உள்ளது என்று திருச்சியில் இருந்து அலைபேசி மூலம் தகவல் வந்தது நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது வேலு அந்தபகுதியில் இல்லை, அதன் பிறகு நாங்கள் திருநெல்வேலி காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்தோம் ஆனால் இதுவரை வேலுவை கண்டுபிடித்து கொடுக்கவில்லை . இன்று ஈரநெஞ்சம் அமைப்பு மூலமாக கோவையில் தம்பி இருப்பதை அறிந்து அவரை அழைத்துப்போக வந்துள்ளோம்" என்றார்.
தியாகராஜன் அவர்களின் மருமகன் சுந்தரராஜன் கூறும்போது :
"எனது மாமாவின் குடும்ப சூழ்நிலை வறுமையானது அவரது மகன் அருண் குமார் MBA படித்து வருகிறார் அவரை நல்லபடியாக படிக்கவைக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறி கூலி வேலை செய்து அவ்வப்போது பணம் அனுப்பி வைப்பார் . ஆனால் கடந்த 3 மாதமாக பணம் அனுப்பவில்லை , அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை நாங்கள் எங்குதேடியும் கிடைக்கவில்லை எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை . நேற்று இரவு ஈரநெஞ்சம் அமைப்பினர் கொடுத்த தகவலின் படி உடனடியாக கோவைக்கு வந்துள்ளேன் " என்றார்.
மேலும் இவர்களை மீட்டு பத்திரமாக ஒப்படைத்ததற்கு உறவினர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் , கோவை காவல் துறைக்கும் , மாநகராட்சி காப்பகத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர்.
ஒரே நாளில் மூன்று உறவுகளை குடும்பத்தினருடன் இணைத்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்கிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Yesterday 05.05.2014 the police have rescued the mentally ill and the beggers from the government hospital, railway station and the collectors office where they disturbed the traffic and the general public. There were 12 of them rescued and admitted at Coimbatore City Corporation Home. Following that the members of the Eera Nenjam Trust questioned those helpless individuals. The members have found out that some of them had families and homes. The members started searching for the relatives and out of those 12 who were rescued by the police, Rajan (33) Trichy, Velu (50) Thirunelveli, Thiyagarajan (60) Musiri, Marappan (38) Vijayamangalam, Gopal (70) Coimbatore’s relatives were found and they were informed about their lost ones. When the members members of the Eera Nenjam Trust informed informed about these individuals, Rajan’s brother from Trichy, Velu’s brother Murugan from Thirunelveli, Thiyagarajan’s nephew Sundararajan came rushing down to Coimbatore today 06.05.2014. Citi Corporation Inspector Gengatharan handed those three over to their relatives.
When Rajan’s brother Thamotharan spoke, he said “my brother Rajan periodically suffered from epilepsy that caused him poor memory. He went missing three months ago. We searched for him everywhere but couldn’t find him. Yesterday through the Eera Nenjam Trust, the police came and informed that our brother was in Coimbatore. I came to bring him with me.”
When Velu’s brother Murugan spoke, “my brother Velu worked as a driver. He was married and have two children. Six months ago we received a cell phone message from Trichi that he had an accident. When we went to see him he wasn’t there. We reported a missing complaint at the Thirunelveli police station. But they haven’t found Velu . Today through the Eera Nenjam Trust we found that our brother Velu was in Coimbatore and came here to bring him with me.”
When Thiyagarajan’s nephew Sundararajan spoke, “my uncle’s family has financial difficulties. His son Arun Kumar is studying MBA. Just to support him in his studies uncle left home to earn labor job and sent money time to time. But the last 3 months money wasn’t sent by him and also there was news of his whereabout. We searched for him everywhere and couldn’t located him. Upon the messaged received last night from the members of the Eera Nenjam Trust I came to Coimbatore immedietly.”
They all thanked the Eera Nenjam Trust, Coimbatore police service, and the Coimbatore City Corporation Home for rescued them and handed over safely. They all left with their loved ones.
The Eera Nenjam Trust is very very pleased about the fact they have reunited three helpless individuals back with their families and happy to share that with you all.

~thank you
Eera Nenjam Trust

Tuesday, April 08, 2014

பெரியவர் திருவேங்கடம் உறவினர்கள் கிடைத்தனர் ஆனால் ..

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(289/08-04-2014)
பெரியவர் திருவேங்கடம் உறவினர்கள் கிடைத்தனர்.
திருவேங்கடம் என்ற முதியவர் 02-04-2014 அன்றுபொதுமக்கள் மற்றும் 108- ஆம்புலன்ஸ் ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு அளித்த தகவலின் பேரில் அம்முதியவரை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்த்தனர்.
அதனை அடுத்து எதிர்பாராத விதமாக 04-04-2014 அன்று பெரியவர் திருவேங்கடம் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது இறுதி காரியங்களை செய்து தருமாறு மாநகராட்சி காப்பக நிர்வாகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரநெஞ்சம் அமைப்பினர் சொக்கம்புதூர் மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.
பெரியவர் திருவேங்கடம் மீட்கப்பட்ட 02-04-2014 தினத்தில் இருந்து இன்னால்வரையிலும் அவரது உறவினரை தேடும் முயற்சியிலேயே ஈர நெஞ்சம் அமைப்பு இருந்தது .. இதனை தொடர்ந்து இன்று பெரியவர் திருவேங்கடம் அவர்களின் உறவினர்களான மனைவி பாரதி மகன் சத்யா ராஜேஷ் கிடைத்தனர் , அவர்களை உடனடியாக கோவை மாநகராட்சி காப்பகத்திற்கு வரவழைத்து கோவை மாநகராட்சி காப்பக ஆய்வாளர் கங்காதரன் மூலமாக அவர்களிடம் நடந்த விபரத்தை தெரியபடுத்தி ஆறுதல் கூறப்பட்டது , அதன் பிறகு பெரியவர் திருவேங்கடம் அவர்களது உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு உறவினர்களுடன் பெரியவர் திருவேங்கடம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரியவர் திருவேங்கடம் அவரது மனைவி பாரதி மற்றும் மகன் சத்யா ராஜேஷ் கூறும்போது :
" கோவை கோவைபுதூரில் வசித்து வருகிறோம் பெரியவர் திருவேங்கடம் நீண்ட வருடமாகவே மனநிலை பாதித்து இருந்ததாகவும் அடிக்கடி வீட்டை விட்டு காணாமல் போய் மீண்டும் வீடுதிரும்பி விடுவதாகவும் இருப்பார். கடந்த மாதம் 26-03-2014 அன்று இதேபோல காணாமல் போனவர் வீடு திரும்பவில்லை காவல் நிலையத்திலும் காணவில்லை என்று பதிவு செய்து இருக்கிறோம் . இது நாள்வரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை நேற்று கோவை மாலை மலர் காவல் துறை மூலமாக பத்திரிக்கையில் காணவில்லை என்ற தகவல் வெளியிட்டுள்ளனர் . இன்று ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்த நண்பர்கள் மூலமாக அப்பா திருவேங்கடம் பற்றி அறிந்துகொண்டு உடனடியாக இங்கு வந்தோம் அவர் எங்களை விட்டு போய் இருப்பார் என்று சிறிதும் நினைக்கவில்லை. இருப்பினும் எனது தந்தை ஆதரவற்று இறக்காமல் உங்கள் கையில் கிடைத்து அவரது இறுதி காரியங்களை உடன் இருந்து செய்ததற்கு நன்றி " என்று ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் , மாநகராட்சி காப்பகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
Relatives of the elderly man Mr. Thiruvengadam were found.
On 02.04.2014, the elderly man Mr. Thiruvengadam was rescued and admitted at Coimbatore City Corporation Charity Home by the Eera Nenjam Trust. The general public and the 108 ambulance service requested the Eera Nenjam Trust to do so. Following that the elderly man died unexpectedly on 04.04.2014 due to heart attack. The city corporation charity home requested the Eera Nenjam Trust to do the last rituals of Mr. Thiruvengadam and his body was buried with respect at the Sokkamputhur Cemetery by the trust.
The Eera Nenjam Trust has been conducting a search to find Mr. Thiruvengadam's relatives since he was rescued. In result of that, the members of the trust found the wife Bharathi and the son Sathya Rajesh of Mr. Thiruvengadam. The relatives were rushed to reach the Coimbatore City Corporation Charity Home. The inspector of the charity home Mr. Gengatharan told the relatives about what were happened to Mr. Thiruvengadam and consoled them. Later they were brought to the cemetery where the body of Mr. Thiruvengadam was buried, there the family paid their respect.
When Mr. Thiruvengadam's wife Bharathi and his son Sathya Rajesh spoke, they mentioned that "we live at Puthur in Coimbatore and my father was mentally ill for several years. Often he left home without informing any of us and came back. He left home again last month 26.03.14 and never came back. we informed the police about him missing. We also searched for him all these time and never found him. Yesterday we put an ad on the news paper about my father being missing through Coimbatore Malai Malar Police Service. Today we received information about our father from the members of the Eera Nenjam Trust and arrived here immediately. We never expected that he would have left us like this, any how it is better that he was under your care, than being dead as a helpless person. We thank you for doing his last rituals and the burial." They thanked the Eera Nenjam Trust and the Coimbatore City Corporation Charity Home.
We. the Eera nenjam Trust is pleased to share this with you all.
~thank you
Eera Nenjam



Friday, November 29, 2013

நலம் வாழ என் வாழ்த்துக்கள் ~ ஈரநெஞ்சம்



Eera Nenjam Charity/

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** 
[For English version, please scroll down]
(238/29-11-2013)

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், லக்ஷ்மி மில் அருகில் பல வருடங்களாக சுமார் 40 வயது மதிக்கத்தக்க, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையோரமாக இருந்து வந்தார். உடலில் மிக அழுக்கு, எண்ணை பிசுக்கு, கோரமாக, கிழிந்த உடையுடன் வெய்யிலிலும் மழையிலும் சாலையிலேயே இருந்து வந்தார். ஒரு சில முறை சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்பதற்கு பலமுறை ஈரநெஞ்சம் அமைப்பினர் அங்கு சென்றபோதெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. இன்று 28/11/13 அவர் தனியார் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு கோவை மாகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தேவையான அனைத்து முதலுதவியும் செய்து அவரை குளிக்க வைத்து சுத்தம் செய்து நல்ல உடை அணிவித்து உணவும் வழங்கப்பட்டது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

There was a mentally disabled person in his 40s lived on the streets of Coimbatore Pappanayakkan Palayam. He continued to live on the streets in the sun and rain with dirty, and oily body. He had torn clothes and looked horrible. He also had little accidents few times. Whenever Eera Nenjam went there to rescue him, he was missing in the area. Today 28.11.2013 Eera Nenjam rescued him and brought to admit at Coimbatore City Corporation Home by the private emergency vehicle. There he was given necessary first aid, bath, food and clean good clothes. Eera Nenjam is very pleased about the fact that one more homeless mentally disabled person is rescued from the streets to make a difference. We would like to share that with you all.

~Thank you
Eera Nenjam

Sunday, April 14, 2013

இவங்க என்ன பண்றாங்க முருகா..? ~மகேந்திரன்





இவ்வளவு கூட்டத்தில் இவங்க மட்டும்  கேமரா வைத்துக்கொண்டு எதை படம் பிடிக்கின்றார்கள் பார்க்கறிங்களா ...

கீழ போய் பாருங்க ....












கோவையில்  அமைனுள்ள முருகனின்  ஏழாவது படை என அழைக்கப்படும்  மருதமலை ராஜ கோபுரம் தாங்க கடந்த பத்து  ஆண்டுகளாக  கட்டப்பட்டு  கட்டுமானப்பணி நிறைவடைந்து தற்போது அழகிய தோற்றத்துடன் காணும் மருதமலை  ராஜகோபுரத்தை பக்தர்கள்  தங்களது  கேமராவில் படம் பிடிக்கிறார்கள் .









~மகேந்திரன்

Thursday, April 04, 2013

மாடியில் திராட்சை தோட்டம்



சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு மரங்களின் பங்கு மிக இன்றியமையாத ஒன்று அந்த மரங்களை பாதுகாப்பதும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான கடமை ஒன்றுங்க ,

அவரவர் வாசலை சுத்தம் செய்தாலே போதுமானதுங்க. ஊர் சுத்தமாகிடும் , ஆனாலும் தன் வாசலை கூட சுத்தம் செய்யாமல் இருப்பதால்தான் மாசுபாடு நிறைந்த ஊர்களில் முதல் ஐந்து இடங்களில் கோவை நகரமும் இடம்பிடித்து விட்டது , இதனை உணர்ந்த அச்சகதொளிலாளி திரு . M . ரகுநாத், கடந்த பல வருடமாக சிறுதுளி அமைப்போடு இணைந்து காணும் இடங்களில் எல்லாம் மரங்களை நட்டுவருகிறார் தான் வசிக்கும் கோவை காந்திபுரம் 2 வது வீதியில் அதன் அடுத்த அடுத்த வீதிகள் முழுவதும் இவர் ஒருவராகவே சாலையின் இருபுறமும் மரங்களை நட்டு அந்த பகுதி முழுவதும் நிழலை படரவைதுள்ளார்.


அதுமட்டும் இல்லைங்க இவர் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு திராட்சை தோட்டம் அமைத்து இருக்கிறார் , பொதுவாகவே திராட்சை சாகுபடியில் விதை நட்டு பழங்கள் கிடைக்க வேண்டுமானால் . நட்ட நாளில் இருந்து ஒருவருடம் நான்கு மாதங்கள் ஆகும் , ஆனால் M . ரகுநாத் தனது மொட்டை மாடியில் வளர்க்கும் திராட்சை தோட்டத்தில் ஒன்பது மாதங்களிலேயே திராட்சை பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்துள்ளது, அதுவும் சுமார் 200 சதுர அடியில் ஒன்பது மாதங்களில் திராட்சை 150 Kg சாகுபடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு . M . ரகுநாத் தனது வீட்டின் மாடியில் பயிரிட்டுள்ள திராட்சை தோட்டத்தை அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் வந்து பார்வையிட்டு தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர் இப்படி விளைந்த திராட்சை பழங்களை அனைவருக்கும் இலவசமாகவும் கொடுத்துவருகிறார்.

இவர் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அவருடைய கொள்கை விரும்பி என்பதால் இந்த திராட்சைகளை அண்ணா ஹசாரே அவர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.

மேலும் இவர் எதிர்பார்ப்பது எல்லாம் கோவை நகருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்த இயற்கையான குளிர்ந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதே ஆகுமாம்.

இப்படிப்பட்ட இயற்கை பாதுகாவலரை பாராட்டாமல் இருக்க முடியுமாங்க அதற்காகவே வருகின்ற 28/04/13 அன்று ஒரு அமைப்பு இவருக்கு கோவையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள் என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிகிறது. சுற்று சூழலை காப்பாற்ற நாமும் முயற்சி எடுப்போம் என்பதில் மாற்றம் இல்லைங்க.

~மகேந்திரன்


Monday, March 11, 2013

இப்படி பட்டவர்களுக்கும் உறவு இருக்குங்க ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி கிராஸ்கட் சாலையில் சுமார் 75 வயது பாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருபதாகவும், அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் 07/03/12 அன்று மாலை 7 மணி அளவில் ஈரநெஞ்சம் அமைப்பிற்குக் காட்டூர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து அவரைக் கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கபட்டது.
அந்த பாட்டியிடம் இருந்த சிறு ஆதாரத்தை கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் சேதுலட்சுமி , மற்றும் அவரது ஊர் செட்டிபாளையம் என்று நான்கு மணி நேரம் தேடலுக்குப் பிறகு தெரிய வந்தது. அவரது மகள் ராதாமணி கூறுகையில் தனது தாயை ஒரு வாரமாகக் காணாமல் காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து சேதுலட்சுமியின் மருமகன் சிவகுமார் அவர்களைக் கோவைக்கு வரவழைத்து பாட்டியை 08.03.2013 அன்று காலையில் அவரது மருமகனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தனது மாமியாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் அமைப்பு, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (145/2013)
ஈர நெஞ்சம்

Following a call from Kottur Police Station on 07/03/2013 around 7 PM about 75 years old lady in an unconscious state at Coimbatore Corporation Crosscut Road, Eera Nenjam got her admitted her at Coimbatore Corporation Home. With the little information she provided, we searched for about four hours and found out that her name is Sethulakshmi and her native place is Chettipalayam. Her daughter Radhamani informed us that her mom had been missing for a week and the local police station had already been contacted for help. Mr. Sivakumar, the son in law, was brought to Coimbatore on 08/03/2013 and his mother in law Ms. Sethulakshmi was handed over to him. He thanked Eera Nenjam for finding her. Eera Nenjam is happy for reuniting one more missing family and thanks everyone who helped in this task.

~ Thanks (145/2013)
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி கிராஸ்கட் சாலையில் சுமார் 75 வயது பாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருபதாகவும், அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் 07/03/12 அன்று மாலை 7 மணி அளவில் ஈரநெஞ்சம் அமைப்பிற்குக் காட்டூர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து அவரைக் கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கபட்டது.
அந்த பாட்டியிடம் இருந்த சிறு ஆதாரத்தை கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் சேதுலட்சுமி , மற்றும் அவரது ஊர் செட்டிபாளையம் என்று நான்கு மணி நேரம் தேடலுக்குப் பிறகு தெரிய வந்தது. அவரது மகள் ராதாமணி கூறுகையில் தனது தாயை ஒரு வாரமாகக் காணாமல் காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து சேதுலட்சுமியின் மருமகன் சிவகுமார் அவர்களைக் கோவைக்கு வரவழைத்து பாட்டியை 08.03.2013 அன்று காலையில் அவரது மருமகனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தனது மாமியாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் அமைப்பு, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (145/2013)
ஈர நெஞ்சம்

Following a call from Kottur Police Station on 07/03/2013 around 7 PM about 75 years old lady in an unconscious state at Coimbatore Corporation Crosscut Road, Eera Nenjam got her admitted her at Coimbatore Corporation Home. With the little information she provided, we searched for about four hours and found out that her name is Sethulakshmi and her native place is Chettipalayam. Her daughter Radhamani informed us that her mom had been missing for a week and the local police station had already been contacted for help. Mr. Sivakumar, the son in law, was brought to Coimbatore on 08/03/2013 and his mother in law Ms. Sethulakshmi was handed over to him. He thanked Eera Nenjam for finding her. Eera Nenjam is happy for reuniting one more missing family and thanks everyone who helped in this task.

~ Thanks (145/2013)
Eera Nenjam

Friday, September 21, 2012

அனாதையாக விட்டுவிடவில்லை ~ஈரநெஞ்சம்

[For English version, please scroll down]
நெருநல் உளனொருவன் இன்றில்லை.

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

 கோவை  உக்கடம் பகுதியில் 15 நாள்களுக்கு முன், மயக்கமடைந்த நிலையில் திரு நா. இராமசாமி என்பவர் காணப்பட்டார். அவரை யாரோ சில நல்லவர்கள், கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டுச் சென்றனர். அங்கு அவருக்குப் பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம் அமைப்பில் இருந்து, "ஈர நெஞ்சம்" அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு. மகேந்திரனுக்கு, நேற்று (19.09.2012) அவரது உறவினர்களைக் கண்டு பிடித்துத் தர உதவும்படி, தகவல் அளிக்கப்பட்டது. அந்த பெரியவர் கூறிய நெய்காரன்பட்டி துளசி ராஜன், 12 ஆம் வகுப்பு என்ற தகவலைக் கொண்டு "ஈர நெஞ்சம்" அமைப்பு, பள்ளி முதல்வர்களின் தொலை பேசி எண்களை விடா முயற்சியோடு தொடர்பு கொண்டது. அந்த முயற்சிக்குப் பலனும் கிடைத்தது. இன்று முழு கடை அடைப்பின் காரணமாக துர்க்கா தேவி பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையிலும் அந்த மாணவன் படிக்கும் பள்ளி முதல்வரின் முயற்சியால் அவரது வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துளசி ராஜனும் அவனது அம்மா திருமதி. ஜெயாவும், திரு. ராமசாமி அவர்கள் இருக்கும் இடம் தேடி விரைந்தோடி வந்தனர்.

ஆனால் காலன் அவர்களை முந்திக் கொள்ள அவர்களை காண்பதற்கு முன்னமே அவரது உயிர் பிரிந்தது. திருமதி. ஜெயா, பழனியில் சத்துணவு கூடத்தில் ஆயாவாக பணியாற்றும் சூழ்நிலையையும், அவரது மகன் 10 ஆம் வகுப்பு தேர்வில் 480 மதிப்பெண்கள் பெற்றவர் என்ற செய்தியும் அறிந்த எங்கள் அமைப்பு, இந்தக் குடும்பத்தை ஒன்று சேர்த்து பார்க்கத்தான் முடியாத நிலை என்ற போதும் அவரது நல்லடக்கமாவது அவரது குடும்பத்தார் முன்னிலையில் நடை பெற இறைவன் துணை செய்தாரே என்ற நினைப்போடு அந்த மனிதரின் இறுதிச் சடங்கை இன்று கோவை சொக்கம்புதூர் மயானத்தில் செய்து முடித்தது.

திருமதி. ஜெயா மற்றும் அவரது மகன் துளசி ராஜன் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு திரு. இராமசாமி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

https://www.facebook.com/eeranenjam

~ நன்றி /(81/2012)
ஈர நெஞ்சம்
......
No one lives forever.

Mr. N. Ramasamy, was admitted to "Coimbatore Corporation Home" by some well-wishers about fifteen days before due to his indisposed condition. He was given due care and medical treatment for those days. The said home requested, Mr.Mahendiran, the Managing Trustee of EERA NENJAM organization, to find out his address and his kith & kin on 19.09.2012. He just provided us minimum information such as Neikaranpatti, Thulasirajan, 12 standard. Based on this information, our organization acted immediately and tried that school principal continuously. Though, it was state's strike, the principal provided the address of Mr. Ramasamy based on Master. Thulasi Rajan, the said school student. After hearing the news, he and his mother Mrs. Jeya rushed to the home.

Unfortunately Mr.Ramasamy had passed away before they arrived. Though Mrs. Jeya is working as a Domestic helper [Ayah] in Noon-meals scheme programme, she has been educating her son. We came to know that her son Master Thulasi Rajan has scored 480 marks in his 10th standard state board examinations. We could satisfy ourselves that at least they could see him at the end and attend the final rituals. Our organization performed the final rituals in presence of her and son at Sokkamputhur burial ground, Coimbatore.

We consoled them and we request the almighty for his soul rest in peace.

~Thanks (81/2012)
EERA NENJAM

Friday, September 14, 2012

ஆதரவற்றோர் என யாரையும் உருவாக்க மாட்டோம் மாணவர்கள்~ ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சத்தின் உதவி / Help from EERA NENJAM''
******
[For English version, please scroll down]
......
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆதரவின்றி மயக்கமுற்ற நிலையில் ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக இருந்து வந்


தார். அதைக் கவனித்து வந்த கோவை ஒக்கிலியர் காலனி அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அந்த மூதாட்டிக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று யோசித்த போது கோவை கணுவாய் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் ''ஈர நெஞ்சம்'' பற்றி அறிந்தனர். அதன் பின்னர் மூதாட்டிக்கு முதலுதவி செய்து 13.09.2012 அன்று, B8 காவல் நிலைய அனுமதியோடு ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில் ''ஈர நெஞ்சம்'' அமைப்புடன் இணைந்து அவரைக் கொண்டு சேர்த்தனர். வீட்டை விட்டு துரத்தப்பட்டு சரிவர எதுவும் நினைவற்ற நிலையில் இருந்த அந்த மூதாட்டியை நல்லதொரு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கத் துணை செய்த மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் ''ஈர நெஞ்சம்'' வாழ்த்திப் பாராட்டுகிறது.

இந்த நற்செயலைச் செய்த மாணவ மாணவியர்கள், தங்களது கருத்தை இந்த காணொளியின் மூலம் சொல்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=iXYxSAdlBxQ&feature=youtu.be

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மாணவர்கள், தங்களைப் பெற்றெடுத்தவர்களைப் பிற்காலத்தில் பேணிக் காப்போம் என்ற உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

வரும் காலங்களில், இது போன்ற ஆதரவற்றவர்கள் இல்லாத ஓர் உலகம் படைப்பதை ''ஈர நெஞ்சம்'' தன் கடமையாகக் கருதுகிறது.

~நன்றி
ஈர நெஞ்சம் (75 /2012)
https://www.facebook.com/ஈரநெஞ்சம்
......
An old lady, unattended and under light-headedness, has been lying down in the streets near Corporation school, Okkliyar colony, Coimbatore for the past few days. By looking at the scenario, when the pupils and teachers of Government Higher Secondary School, Okkiliyar Colony, Coimbatore decided to do some good thing for her, they came to know about our organization ''EERA NENJAM'' through Government High School, Kanuvai, Coimbatore. The pupils and teachers have joined hands with our organization, gave first-aid to her, got permission from B8 police station and finally made arrangements to admit her into ''Sri Saibaba Old Age Home'' on 13.09.2012. We salute the pupils and the teachers for this noble service.

They expressed their views and feelings in the attached video. More over, they have also pledged to take care of their own parents in especially when they are old.

As per our vision, we want to have a better world without any orphan (s).
~Thanks
EERA NENJAM (75/2012)

Tuesday, September 11, 2012

ஆதரவற்றவர் என யாரும் இல்லை~ஈரநெஞ்சம்



"ஈர நெஞ்சத்தின் உதவி" / Help from EERA NENJAM"

[For English version, please scroll down]

"ஈர நெஞ்சம்" அமைப்பின் தொடர் சேவைக்காகக் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு பணிவிடை செய்ய 09.09.2012 அன்று ஈர நெஞ்சம் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்கள் சென்றபோது, காவல்துறையினரால், சுப்பம்மாள் என்னும் 70 வயது மூதாட்டியை ஆதரவு இல்லை என்ற காரணத்தினால் அன்னை தெரெசா காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவரிடம் விபரம் கேட்கும் போது தனக்கு முருகேசன், பொன்முடி, ராமன்,
ஈஸ்வரி, பேச்சியம்மாள் என ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும் ராமன் வீட்டில் இருந்த போது ஏதோ காரணத்தினால் விரட்டி விட்டதாகவும், மற்ற 4 பிள்ளைகளை தேடி அலைந்து கொண்டு இருந்த போது, அவர்களின் முகவரி தெரியாததால் பசியால் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானதாகவும் பின்னர், காவல் துறையினர் தன்னை அன்னை தெரெசா காப்பகத்தில் சேர்த்து விட்டதாகவும் கூறினார். ”எனது மரணத்துக்கு முன்னராவது நான் என் பிள்ளைகளைக் காண்பேனா?” என்று சுப்பம்மாள் கட்டிப் பிடித்து அழுதார். "ஈர நெஞ்சம்" மேற்கொண்ட பெரும் முயற்சியால், தூத்துக்குடி அருகில் உள்ள சுப்பம்மாள் அவர்களின் மகன் பொன்குட்டியின் முகவரியைக் கண்டு பிடித்து அவர்களின் மூலமாக அவர்களது மருமகன் திரு. சுந்தரராஜ் அவர்கள் நேரில் வந்து தன் மாமியாரை தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். ஓர் அன்னையை அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்த மகிழ்ச்சியில் ஈர நெஞ்சமும் அவர்களை மனதார வாழ்த்துகிறது. அவர்கள், ஈர நெஞ்சந்த்தின் சேவைகளைப் பற்றி பெருமைப்படுவதை, இந்தக் காணொளியில் பார்க்கலாம்.







~நன்றி
ஈர நெஞ்சம் (73/2012)
https://www.facebook.com/eeranenjam
......
When Mr Mahendiran, the Managing Trustee of our organization "Eera Nenjam", went to serve inmates of "Mother Teresa Home", Coimbatore on 09.09.2012, as their routine service, they came to know that Mrs. Subbammal (Age:70) was admitted there by the police with a reason that she had no one to support. She told us that she has five children namely, Murugesan, Ponmudi, Raman, Eswari and Petchiammal and she was sent out from Raman's house for an unknown reason. It appears that the other four children were searching for her whereabouts and in the meantime, she was forced by herself to beg for living and finally the police made arrangements to admit her in the home. She was in tears and looking for her children. By looking at this scenario, we have tried from our sources and finally identified her son's [Ponmudi] address. Her son-in-law Mr. Sundararaj came directly to the home and took her to their house. We are very happy that we could help an elderely lady to get reunited with her family. Please watch the attached video where they talk about our activities.
~Thanks
EERA NENJAM (73/2012)