தன் செயலே தனக்குதவி
ஆதரவற்றவர்கள் சாலையோரமாக உடல்நலம் இல்லாமல் சாலையில் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கோ அல்லது காப்பகங்களிலோ சேர்த்துவருகிறோம் .அப்படி சேர்க்கப்படும் நபர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை நல்லடக்கம் செய்யும் பணி இங்குள்ள ஒரு அமைப்பின் உதவியுடன்நாங்களே அடக்கம் செய்கிறோம் ,இந்த நாள்வரை அப்படித்தான் செய்துவந்தோம் .
இப்படி இருக்க கடந்த சிலநாட்களுக்கு முன்னாள் எங்களால் சாலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த ஒரு பெரியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ,சிகிச்சை பலனின்றி காலமானார் , அவரது பிரேத உடலை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்ய அந்த அமைப்பை அணுகும் போது எப்போதும் அடக்கம் செய்யும் இடத்தில வெட்டியான் இல்லை ஆகையால் நீங்கள் வேறு வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்தார்கள் .
என்ன செய்வது என்று தெரியவில்லை , நாங்களாக மயானத்திற்கு பிரேத உடலை கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய வேண்டுமானால் , குழியை வெட்டுவதற்கே 2000 வரை கேட்கிறார்கள் , கையில் அந்த அளவிற்கு பணம் அப்போது இல்லை மயானம் செல்ல தயாராக பிரேத உடல் மருத்துவ மனை சவக்கிடங்கில் இருந்து வெளியே கொண்டு வந்தாயிற்று ,
இந்த இக்கட்டான சூழலில் அந்த வைரமனியின் ஞாபகம் வந்தது நாங்கள் (பிணத்துடன் இருப்பதும் அடக்கம் செய்ய வழிதெரியாமல் இருப்பதும்) உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு எங்களுடைய இக்கட்டான சூழ்நிலையை தெரிவித்தோம் .
அதற்கு வைரமணி கவலையை விடுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் அந்த நபர் இறப்பிற்கான தகுந்த சான்றிதழை கொண்டுவாருங்கள் அதுபோதும் என்றார் , எங்கள் நெஞ்சில் பால்வார்த்த வைரமணிக்கு நன்றி சொல்லிவிட்டு உடனடியாக பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலமாக சொக்கம்புதூர் மயானத்திற்கு கொண்டு சென்று அந்த முதியவரை வைரமணி வெட்டிவைத்த குழியில் நல்லடக்கம் செய்தோம் . அடக்கம் செய்ததும் பணத்தை நாளை கொடுத்தால் போதும் அதுவும் மிக குறைந்த அளவுமட்டுமே போதும் என்ற ஈர மனது கொண்ட வைரமணி அப்போது எங்கள் கண்ணிற்குகடவுளைப் போல தெரிந்தார் .
அந்த வைரமணிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் இருகை கூப்பி வணங்கினோம் வெட்டியான் வைரமணிக்கு காலில் விழுந்து நன்றி சொல்லி இருந்தாலும் அது மிகை ஆகாது .
எனது வேண்டுகோளுக்கு இணங்க வெட்டியான் வைரமணியை பற்றி நாளிதழில் கட்டுரை எழுதிய எனது நண்பர் திரு . பழனியப்பனுக்கும் .
பிணத்தை கையில் வைத்துக்கொண்டு எங்கு , எப்படி அடக்கம் செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கும் வேளையில்உதவிய வைரமணிக்கும் காலம் முழுவதும் நன்றி செலுத்தக் கடமை பட்டுள்ளோம். இவர்கள் செய்த உதவிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை.
~மகேந்திரன்
Tweet | ||||
2 comments:
வைர(பெண்)மணிக்கு நன்றிகள் .
vaazththukkal.
Post a Comment