Thursday, December 20, 2012

கண்ணன் அநாதை இல்லைங்க

"ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
[For English version, please scroll down]
******
13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள், காலை அலுவலகம் செல்லும் வழியில் கோவை செஞ்சுலுவைச்சங்கம் அருகே ஒரு நபர் உடல்நலம் கு...ன்றிய நிலையில் தள்ளாடியபடி சென்று கொண்டு இருப்பதை கண்டார். பின்னர், அவரது பணி முடிந்து திரும்புகையில் அதே நபர் மயங்கி கிடப்பதைக் கண்டதும், எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தார். உடனே அங்கு சென்ற "ஈர நெஞ்சம்" அமைப்பினர் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவரைப் (படத்தில் இருப்பவர்) பற்றியத் தகவல் தெரிந்தோர் ஈர நெஞ்சம் அமைப்பைத் தொடர்பு கொள்ள (7200099400 /eeranenjam@gmail.com) வேண்டுகிறோம்.
நன்றி (117/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Kannan, working for Hello FM Radio Station, found an unhealthy person at Coimbatore Red cross, when he was going to his work on 13.12.2012. He saw the same person fainted at the same place while he returned from his work in the evening and contacted our organization. We made arrangement to admit him in a hospital. We request you to contact us (7200099400/ eerannejam@gmail.com) if you know any information about him (in the picture)
~Thanks (117/2012)
EERA NENJAM 


######################################################

 இந்தனை  தொடர்ந்து ...

 ######################################################






''ஈர நெஞ்சம் சேவைகள் / EERA NENJAM Services''
******
[For English version, please scroll down]
13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள் சொன்னதன் பேரில், எங்கள் அமைப்பால், கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சற்று உடல்நலம் தேறிய நிலையில், தனது பெயர் கண்ணன் என்றும், லாரி ஓட்டுனராக பணி புரிவதாகவும், தனது ஊர் கோவை சரவணம்பட்டி என்றும், தனது தம்பி பெயர் நடராஜ் என்றும் எங்களிடம் தன்னைப்பற்றிய சில விவரங்களைத் தெரிவித்தார். அ...தைத் தொடர்ந்து அவரது தம்பி நடராஜ் அவர்களை ஈர நெஞ்சம் அமைப்பு தேடிக் கண்டுப்பிடித்து அவரது அண்ணன் பற்றிய தகவலை சொன்னதன் பேரில் அவர் 17.12.2012 அன்று தனது அண்ணனை அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

திரு நடராஜ், எங்கள் அமைப்பிடம் அடிக்கடி, தனது அண்ணன் வெளி ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று வருவார் என்றும், அவர் இந்த முறை அதுபோல சென்ற போது எதிர்பாராமல் நடந்துள்ள விபத்தின் காரணமாக இப்படி ஆகிவிட்டது என்றும், அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் தான் தேடிக்கொண்டு இருந்தபோது ஈர நெஞ்சம் அமைப்பு தனது அண்ணனை கண்டு பிடித்து தன்னிடம் சேர்த்து உள்ளது என மனம் நெகிழ்ந்து நமக்கு நன்றி தெரிவித்தார் .

திரு.கண்ணன் ( ஹலோ எஃப்.எம்) அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் .இந்த உலகத்தில் ஆதரவற்றோர் என யாருமே இல்லை. தொலைந்த உறவை மீட்டுக் கொடுத்த மகிழ்வில் ஈர நெஞ்சம் திரு. கண்ணனன் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இது போல இன்னும் பலருக்கு உதவத் துணை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.
~நன்றி (120/2012)
ஈர நெஞ்சம்
......
You may know that an unidentified person was admitted to Coimbatore Government Hospital by our organization with the help of Mr. Kannan (working for Hello FM) on 13.12.2012. As he was getting better, he told us his personal information. His name is Kannan, working as a lorry driver and hailing from Saravanampatty, Coimbatore and his brother's name is Mr. Nataraj. Based on the information provided, we contacted Mr Nataraj and he got admitted him in some other hospital. Mr. Nataraj told us that Mr. Kannan used to visit temples often and this time he got lost due to the accident he had. He also added that though they were searching for him and found him finally through EERA NENJAM. He thanked Mr. Kannan (Hello FM).
As we always say, no one is orphan in this world, and we are happy and proud ourselves that Mr. Kannan got reunited with his family through our organization. We thank Mr. Kannan (Hello FM) and wish him to help many other needy people.
~Thanks(120/2012)
EERA NENJAM
Photo: ''ஈர நெஞ்சம் சேவைகள் / EERA NENJAM Services''

******

[For English version, please scroll down]

13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள் சொன்னதன் 
பேரில், எங்கள் அமைப்பால், கோவை அரசு பொது மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சற்று உடல்நலம் தேறிய 
நிலையில், தனது பெயர் கண்ணன் என்றும், லாரி ஓட்டுனராக பணி புரிவதாகவும், 
தனது ஊர் கோவை சரவணம்பட்டி என்றும், தனது தம்பி பெயர் நடராஜ் என்றும் 
எங்களிடம் தன்னைப்பற்றிய சில விவரங்களைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து 
அவரது தம்பி நடராஜ் அவர்களை ஈர நெஞ்சம் அமைப்பு தேடிக் கண்டுப்பிடித்து 
அவரது அண்ணன் பற்றிய தகவலை சொன்னதன் பேரில் அவர் 17.12.2012 அன்று தனது 
அண்ணனை அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் என்பதை
 மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.



திரு நடராஜ், எங்கள் அமைப்பிடம் அடிக்கடி, தனது அண்ணன் வெளி ஊர்களில் உள்ள 
கோவில்களுக்குச் சென்று வருவார் என்றும், அவர் இந்த முறை அதுபோல சென்ற போது
 எதிர்பாராமல் நடந்துள்ள விபத்தின் காரணமாக இப்படி ஆகிவிட்டது என்றும், 
அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் தான் தேடிக்கொண்டு இருந்தபோது ஈர நெஞ்சம் 
அமைப்பு தனது அண்ணனை கண்டு பிடித்து தன்னிடம் சேர்த்து உள்ளது என மனம் 
நெகிழ்ந்து நமக்கு நன்றி தெரிவித்தார் .



திரு.கண்ணன் ( ஹலோ எஃப்.எம்) அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் 
தெரிவித்துக் கொண்டார் .இந்த உலகத்தில் ஆதரவற்றோர் என யாருமே இல்லை. 
தொலைந்த உறவை மீட்டுக் கொடுத்த மகிழ்வில் ஈர நெஞ்சம் திரு. கண்ணனன் 
அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இது போல இன்னும் பலருக்கு உதவத்
 துணை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.

~நன்றி (120/2012)

ஈர நெஞ்சம் 

......

You may know that an unidentified person was admitted to Coimbatore 
Government Hospital by our organization with the help of Mr. Kannan 
(working for Hello FM) on 13.12.2012. As he was getting better, he told 
us his personal information. His name is Kannan, working as a lorry 
driver and hailing from Saravanampatty, Coimbatore and his brother's 
name is Mr. Nataraj. Based on the information provided, we contacted Mr 
Nataraj and he got admitted him in some other hospital. Mr. Nataraj told
 us that Mr. Kannan used to visit temples often and this time he got 
lost due to the accident he had. He also added that though they were 
searching for him and found him finally through EERA NENJAM. He thanked 
Mr. Kannan (Hello FM). 

As we always say, no one is orphan in this world, and we are happy and 
proud ourselves that Mr. Kannan got reunited with his family through our
 organization. We thank Mr. Kannan (Hello FM) and wish him to help many 
other needy people.

~Thanks(120/2012)

EERA NENJAM

Monday, December 17, 2012

கோவை சிறப்பு பேரூர்...

நாயன்மார்கள் 64 பேர் இவர்களை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆமாம்க, பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் பார்த்திங்கனா வரிசையா குட்டி குட்டி சாமிங்களா இருப்பாங்க இல்லையா அவங்களைத்தான் நாயன்மார்கள் என்று சொல்றாங்க ,

கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகில் சுப்புராயர் பிள்ளை 1927 ஆண்டு நாயன் மார்களில் முதல் நால்வரான மாணிக்க வாசகர் , திருநாவுக்கரசர் , திருஞானசம்மந்தர் , சுந்தரர், ஆகியோருக்கு நால்வர் மடாலயம் கட்டி 1929 ஆம் ஆண்டு இக்கோவிலை பிரதிர்ஷ்டை செய்தார் .

இதன் சிறப்பு பார்த்திங்கனா இங்கு மட்டுமே இந்த நால்வர் உள்ளனர் , அது மட்டும் அல்லாது நாயன் மார்களின் மிக உயர்ந்த சிலை இங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









கோவை பேரூர் நால்வர் மடாலயம் அருகில் ஒரு பனை மரம் உள்ளதுங்க , இந்த பனை மரத்தை பற்றி சொல்றேன் , இந்த பனை மரம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர் .

அம்மக்கள் அந்த பனை மரத்திற்கு இறவாபனை என்று வைத்திருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது இந்த மரத்தின் சிறப்பை சேக்கிழார் புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது , 







கோவை பேரூர் அருகே இன்னும் ஒரு இடம் இருக்கீங்க அந்த இடத்திற்கு திருநீர் மேடு என்று அழைக்கிறார்கள் .

அந்த இடத்தில பிரம்மனின் சாப விமோசனம் கிடைக்க இந்த பகுதியில்தான் சிவனுக்கு யாகம் வளர்தியதாக கூறுகின்றனர்.

தொல்பொருள் அராய்ச்சி இங்கு ஆய்வுசெய்து வருகிறார்கள் , அந்த இடம் முழுவதும் மண் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது, பொது மக்கள் அதனை சாம்பல் என்றும் அந்த இடத்தில மண் பவளங்கள், மண்ணுக்குள் உள்ளதாகவும் கூறிவருகிறார்கள் .

இந்த இடம் இப்போது புதர் மண்டி கிடக்கிறது , அந்த மக்கள் சொல்வது போல அந்த இடம் தரை மட்டத்தில் இருந்து சற்று உயர்வாக ஒரு மேடு போல காட்சியளிப்பதும் தெரிகிறது .

கோவையிலும் இதுப்போன்ற இடமெல்லாம் இருக்கிறது என்பது நேற்றுதான் நண்பர் அருண் மூலமாக தெரிந்துக்கொண்டேன்.





~மகேந்திரன்

Sunday, December 09, 2012

வரி வரியாக எழுதுகிறேன்..!

விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும்
வேரோடு பிடிங்கினால்
உயிர் போகும்
வலியடி..!


விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி 
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும் 
வேரோடு பிடிங்கினால் 
உயிர் போகும் 
வலியடி..!
~மகி 

வரி வரியாக
எழுதுகிறேன்..!

என்

காதல்

ஒரு வரியில்
உனக்கு புரியாதா
என்று..!


வரி வரியாக 
எழுதுகிறேன்..!

என் காதல் 

உனக்கு 
ஒரு வரியில் 
உனக்கு புரியாதா 
என்று..!
~மகி

Friday, December 07, 2012

காதல் வானிலே

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த 
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!
~மகி 
 
ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!

ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!
~மகி 
 
 
உன்
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும்
வசந்த காலம் தான் ..!

உன் 
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம் 
இலை உதிர்காலம் என்றெல்லாம் 
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும் 
வசந்த காலம் தான் ..!
~மகி 
 
வரம்
தருவதால் மட்டும்
தெய்வமாகி விட முடியாது.
உன்னை
போல பாசமும் காட்ட
தெரிந்திருக்க வேண்டும்..!

வரம் 
தருவதால் மட்டும் 
தெய்வமாகி விட முடியாது.
உன்னை 
போல பாசமும் காட்ட 
தெரிந்திருக்க வேண்டும்..!
~மகி
 
 

Monday, December 03, 2012

மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள லக்ஷ்மி காம்ளக்ஸ் முன் சாலையோரமாக கீசெய்ன் , மொபைல் கவர் விற்று கொண்டு இருந்த பார்வை இழந்த R. விஜயகுமாரை சந்தித்து பேசியதும் , அவர் M.Phil பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதை கேட்டதும் பத்தாம் வகுப்பிற்கே தா
ளம் போட்ட என் பழைய நியாபகம்
என்னுள் என்னை கேலி செய்துக்கொண்டது,
ஒரு மாற்றுத் திறனாளிக்கு உதவவேண்டும் என்ற விருப்பம் என்னை அன்று அவரை பற்றி முகநூலில் நான் எழுதியதன்
https://www.facebook.com/photo.php?fbid=439543019436102&set=a.156690734388000.32695.100001412246659&type=3&theater
தொடர்ச்சி இன்று 03/12/12 மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி கோவை ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா என்னை தொடர்பு கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு விபரத்தை கூறி அதற்க்கு ஒருவர் வேண்டும் என்று கேட்டு கொண்டதும் R.விஜயகுமாரை பரிந்துரைத்தேன். இன்று அவர் ரேடியோ மெர்சி நிலையத்தில் நேரடியாக சென்று விஜயகுமார் மக்களுக்கு "மாற்று திறனாளிகளும் மனிதர் தாங்க , எங்களை புறக்கணிக்காதீர்கள் நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்" என்ற உரை உங்களுக்கு எப்படியோங்க என்னை இன்னும் தெளிவுபட வைத்துள்ளது,
நிகழ்ச்சியில் விஜயகுமார் பாடிய பாடல் " ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி" உண்மையில் நாம் அனைவருமே தொளிலாளிதானங்க .. , உயர்வு என்ன தாழ்வு என்ன மண்ணுக்குள் போகும் மனிதனுக்கு....?
திரு , R.விஜயகுமாருக்கு இந்த வாய்ப்பளித்த ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் .
மாற்று திறனாளிகள் தினமான இன்று ஒன்னு சொல்றேங்க , நமக்கு எல்லாம் இருக்கு என்று நினைக்காதிங்க எந்த நேரமும் எதுவும் ஆகலாம் .
மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.
ஒன்னு சொல்ல மறந்துட்டேங்க திரு R.விஜயகுமார் நல்ல பலகுரல் மன்னரும் கூட, இதை நான் நிகழ்ச்சியை கேட்க்கும் பொது தெரிந்து கொண்டேன் .
~மகேந்திரன்

Friday, November 30, 2012

நாணயம் எங்கு தயாரிக்கிறாங்க தெரியுமா ?


நம்ம இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது உங்களுக்கு எப்போதோ தெரிஞ்சுருக்கலாம் ஆனா இப்போதான் எனக்கு தெரிஞ்சதுங்க,
ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியலைனா நான் சொல்கிறேன் , எனக்கு காசு தருவிங்களா ஹ ஹ ஹ அதெல்லாம் வேண்டாம் சொல்றேன் பரம ரகசியமாக யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்லதான் தயாரிக்கிறாங்கலாம்,
ஆனா எந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்படுகிறது என்பது அந்த
நாணயதிலேயே ஒரு குறிப்பிட்டு இருக்காங்க அது எங்கே என்று அதையும் சொல்றேன் நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கேன் ஏதாவது கொஞ்சம் போட்டு கொடுங்க.
~மகேந்திரன்
Photo: நம்ம இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது உங்களுக்கு எப்போதோ தெரிஞ்சுருக்கலாம் ஆனா இப்போதான் எனக்கு தெரிஞ்சதுங்க,
ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியலைனா நான் ச
ொல்றேன் எனக்கு காசு தருவிங்களா ஹ ஹ ஹ அதெல்லாம் வேண்டாம் சொல்றேன் பரம ரகசியமாக யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்லதான் தயாரிக்கிறாங்கலாம்,
ஆனா எந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்படுகிறது என்பது அந்த நாணயதிலேயே ஒரு குறிப்பிட்டு இருக்காங்க அது எங்கே என்று அதையும் சொல்றேன் நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கேன் ஏதாவது கொஞ்சம் போட்டு கொடுங்க.
~மகேந்திரன்

Wednesday, November 28, 2012

கம்போடியாவில் தமிழனின் படைப்பு~மகேந்திரன்

கம்போடியா நாடு எங்கு இருகின்றது என்று தெரியுமா ?
சத்தியமா எனக்கு தெரியாதுங்க.
ஆனால் அந்த நாட்டில் உள்ள ஒரு விஷயம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோசபடறேங்க...
என்னனு சொல்லவா...
அந்த நாட்டு தேசிய கோடியில் நம்ம தமிழன் கட்டிய கோவில்தான் பொறிக்கப்பட்டு உள்ளதுங்க.
என்ன அதிசயமா பாக்கறிங்களா..?
உண்மைதானுங்க...
கம்போடியா நாட்டில் நம் தமிழன் ஒருவன் கலை திறமையை உலகிற்கே காட்டி உள்ளார்.
அவர் பெயர் "சூர்யா வர்மன்" கம்போடிய மாகாணத்தில் ஒரு பகுதியை கைப்பற்றிய போது அதன் நினைவாக விஷ்ண

ு பகவானுக்கு கோவிலை கட்டினாராம்,
அந்த கோவில் தான் தற்போது கம்போடியா நாட்டின் தேசிய கோடியில் பொறிக்கப்பட்டு உள்ளது ,
அந்த கோவிலின் பெயர் "அங்கோர் வாட்"
இந்த கோவிலுக்கு இன்னொரு சிறப்பு இருக்குங்க,
உலகிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவில் இதுதாங்க , சும்மா இல்லைங்க 402 ஏக்கர் பரப்பளவு நினைச்சே பாக்க முடியாது இல்லைங்களா...
நமக்கு "சூர்யா வர்மன்" என்று ஒருத்தர் இருந்தாரா என்றே சந்தேகமா இருக்குங்களா ?
உண்மைதாங்க.
தமிழன் தமிழன்தாங்க.
~மகேந்திரன்

Sunday, November 25, 2012

வழி என்னும் விழி... ~மகேந்திரன்


இவர் பெயர் R.விஜயகுமார் வயது 25 (9095599719) திருப்பூரை சேர்ந்தவர் இவருடைய அப்பா ராமன், அம்மா கண்ணம்மாள் இவங்க இரண்டுபேருமே கூலி வேலைக்கு போறாங்க, விஜயகுமாருக்கு ஒரு தங்கை ஒரு அக்கா தங்கை இறந்துட்டாங்க அக்காவிற்கு திருமணமாகி குன்னதூ
ர்ல இருக்காங்க , விஜயகுமாருக்கு நான்கு வயது இருக்கும் போது ஏற்ப்பட்ட உடல் நலம் குறைவில் பார்வை பறிபோனது, மருத்துவ பரிசோதனையில் விழிக்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டதினால் மாற்று விழியும் பொறுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

"கைரேகை பார்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் வேளையில் கைகளே இல்லாதவனுக்கும் எதிர் காலம் உள்ளது என்பதற்கு ஏற்ப ."விழி இல்லை என்றாலும் வழி எனும் விழி உள்ளது" என்று கூறுகிறார் திரு விஜயகுமார் ,
ஆமாங்க இவருடைய அம்மா அப்பா கூலிவேலைக்கு போய் வரும் சம்பாதனையில் என்ன செய்ய முடியும் அதனாலேயே இவர் சிறு வயதில் இருந்தே பார்வை இல்லை என்றாலும் அதற்க்கு தகுந்த பாதையை பார்த்து சுயமாக பக்குவமாய் முன்னேறி தற்போது M.Phil பட்டப்படிப்பு கோவை அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார் , சாலையோரமாக கீசெய்ன் , மொபையில் கவர், இது போன்ற பொருட்களை விற்று வரும் லாபத்தில் தற்போது படிப்பு செலவுக்கு ஈடுகட்டுகிறார். எல்லாம் இருக்கின்றவர்களே கடன ஒடன வங்கி பகட்டை காட்டும் இந்த காலத்தில் பார்வை இல்லை என்பதை பொருட்படுத்தாமல் சுயதொழில் செய்து முன்னேறிவரும் விஜயகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் போதாதுங்க நீங்க யாராவது அவரை சந்தித்தால் விஜயகுமாரிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்குங்க அது போதும்.

இவரை சந்தித்தபோது நான் இவரிடம் உங்களது லட்சியம் என்னங்கனு கேட்டேன் . அதற்க்கு அவர் சொன்னது "நான் நல்லா பாடுவேன் நிறைய பாட்டு போட்டியில் கலந்து பரிசு பெற்று இருக்கிறேன். நல்ல பாடகனாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது" என்றாருங்க. விஜயகுமார் ஆசைப்படி ஒரு இசை குழுவில் சேர்ந்து மக்கள் மத்தியில் வளமும் பெயரும் வளர வேண்டும் என்று விஜயகுமாரது நன்னம்மிக்கையை உங்களோடு நானும் வாழ்த்தி தலை வணங்குகிறேன்.
நன்றி
~ மகேந்திரன்

உங்களுக்கு தெரியுமா ?~ மகேந்திரன்

உங்களுக்கு தெரிஞ்ச விஷயம்
மைனா படம் எடுத்தது "பிரபு சாலமன்"
இந்த மைனாவை படம் பிடித்தது "மகி" நான் தான்.

ஆனால்
உங்களுக்கு தெரியாத விஷயம் மைனாக்கள் பிறப்பிடம் "இந்தியா"

Photo: உங்களுக்கு தெரிஞ்ச  விஷயம்  
மைனா  படம் எடுத்தது "பிரபு சாலமன்"
இந்த  மைனாவை படம் பிடித்தது  "மகி" நான்  தான்.

ஆனால் 
உங்களுக்கு தெரியாத  விஷயம் மைனாக்கள் பிறப்பிடம் "இந்தியா"
~மகேந்திரன் 
உங்களுக்கு தெரியுமா ?
ஒருவர் ஆஸ்திரேலியா காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு வினோதமான விலங்கினை கண்டு அந்த காட்டில் இல்ல காட்டு வாசிகளிடம் இது என்ன விலங்கு என்று கேட்டாராம் அதற்க்கு அந்த காட்டுவாசி "கங்காரு" என்றாராம் . அதனை thodarnthu இந்த நாள்வரை அந்த வினோத விலங்கிற்கு கங்காரு என்றே பெயரிட்டு அழைத்து வருகின்றோம்.
உண்மையில் கங்காரு என்றால் "தெரியாது" என்று அர்த்தமுங்க.

Photo: உங்களுக்கு  தெரியுமா ?
ஒருவர் ஆஸ்திரேலியா  காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது  ஒரு வினோதமான   விலங்கினை  கண்டு அந்த காட்டில் இல்ல  காட்டு வாசிகளிடம் இது என்ன விலங்கு என்று கேட்டாராம் அதற்க்கு  அந்த  காட்டுவாசி  "கங்காரு" என்றாராம் . அதனை thodarnthu   இந்த நாள்வரை  அந்த வினோத விலங்கிற்கு கங்காரு என்றே பெயரிட்டு அழைத்து வருகின்றோம்.
உண்மையில் கங்காரு என்றால் "தெரியாது" என்று அர்த்தமுங்க. 
~மகேந்திரன் 
இணையதளம் பயன் படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில உள்ளதுங்க.
இரண்டாம் இடம் அமெரிக்கா , முதல் இடத்தில சீனா. மிக விரைவில் நம்ம இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் வகிக்க உள்ளதாக ஒரு கருது கணிப்பு கூறியுள்ளது.
சூப்பர் இந்தியா.

Photo: இணையதளம்  பயன் படுத்தும்  நாடுகளில் இந்தியா   மூன்றாவது இடத்தில உள்ளதுங்க.  
இரண்டாம்  இடம் அமெரிக்கா  , முதல் இடத்தில  சீனா.  மிக  விரைவில் நம்ம  இந்தியா  அமெரிக்காவை  பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் வகிக்க உள்ளதாக ஒரு கருது கணிப்பு கூறியுள்ளது. 
சூப்பர் இந்தியா.
~மகேந்திரன்

Wednesday, November 21, 2012

ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சி ~தீரத்சிங்

''ஈர நெஞ்சம் சேவைகள்'' / ''EERA NENJAM Services''

******
[For English version, please scroll down]


கோவை ரத்தினபுரி புது பாலம் பகுதியில், 17.11.2012 அன்று, உடல்நலம் சரியில்லாத நிலையில் ஒருவர் உடலில் சிறுநீரகப்பை (சிறுநீரகம் சேமிக்கும் பை) உடன் மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும், அவருடன் மனைவியும் கடும் குளிரில் அவதிப்பட்டு கொண்டு இருப்பதாகவும் சிலர் ''ஈர நெஞ்சம்'' அமைப்பை அணுகி அவர்களுக்கு தக
ுந்த உதவி செய்ய கேட்டுக்கொண்டனர்.

உடனடியாக ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர், அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பொதுமக்கள் சொன்னதுபோல, திரு.தீரத்சிங் (வயது 55), உடலில் சிறுநீரகப்பை இருந்தது. மற்றும் அவரது மனைவி லட்சுமி அவருடன் இருந்தார். அவரிடம் விபரம் கேட்டபோது "தனது கணவர் தீரத்சிங். அவருக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது. முடிந்தவரை சிகிச்சை கொடுத்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை இவ்வளவுதான்.ஆகையால், தீரத்சிங் அவரை டிச்சார்ஜ் செய்கிறோம் என்று கூறி எங்களை டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றிவிட்டனர். ஆனால், இவருக்கு கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை. எங்களுக்கு, வீடு வாசல் ஏதும் இல்லை. ஆகவே, இரவு முழுவதும் கொட்டும் பனியில் இங்கேயே தங்கிவிட்டோம். பனியில் இருந்ததால், இன்று காலை எனது கணவருக்கு மேலும் உடல்நலம் பாதித்து வருகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார். இதற்க்கு இடையில், தீரத்திங் அவரை ''அன்பு மலர்'' காப்பகத்தில் சேர்க்க ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர் முயற்சி செய்தனர். ஆனால், தீரத்சிங் சிறுநீரகப்பையுடன் இருப்பதால், காப்பகத்தில் கொஞ்சம் தயக்கம் காட்டினர்.மேலும், இரவு முழுவதும், பனியில் இருந்ததால், அவரது உடல் மோசமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு அவரை மீண்டும் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று RMO டாக்டர். P.சிவப்ரகாசம் அவரை வேண்டி கேட்டுக்கொண்டு, அவரது அனுமதியோடு ஈரநெஞ்சம் அரசு மருத்துவ மனையில் தீரத்சிங்கை சேர்த்தது. தற்சமையம் தீரத்சிங் நல்ல முறையில் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதற்காக மருத்துவர் RMO P.சிவப்ரகாசம் அவர்களுக்கு "ஈர நெஞ்சம்" நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது .

மேலும் தீரத்சிங், மற்றும் அவரது மனைவி லட்சுமி அவர்களின் பரிதாபமான நிலையை பார்த்த கோவை ரத்தினபுரி புது பாலம் பொதுமக்கள் அனைவரும், அந்த தம்பதியினருக்கு கோவை அரசு மருத்துவமனை RMO, P.சிவப்ரகாசம் மற்றும் "ஈர நெஞ்சம்" அமைப்பினர் முன்னிலையில் நன்கொடையாக Rs. 3,400 வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட திருமதி.லட்சுமி அவர்கள், அரசு மருத்துவமனை RMO . P.சிவப்ரகாசம் அவருக்கும், ''ஈர நெஞ்சம்'' அமைப்பிற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மனதார நன்றியினை தெரிவித்துக்கொண்டார். தீரத்சிங் உடல்நலம் விரைவில் குணமடைய உங்களோடு சேர்ந்து ஈரநெஞ்சம் இறைவனை பிரார்த்திக்கிறது. இந்த தகவல்களை, வெவ்வேறு நாளிதழ்களில் வந்துள்ளது. அவைகள் உங்கள் பார்வைக்கு.
நன்றி
ஈரநெஞ்சம் /(111/2012)



https://www.facebook.com/eeranenjam
......

''EERA NENJAM'' organization received a call from public that there was a person with Kidney bag and lying down on the streets of Puthuppalam, Rathinapuri area, Coimbatore on 17.11.2012 and asked us to help him. He and his wife were also struggling in cold. When we visited the place, Mr Theerathsingh (Age: 55) was having kidney-bag on his body and his wife informed us that his two kidneys have been spoiled and hospital authorities discharged him as it would be difficult to cure his case. She continued that there were homeless and as no one for them to take care and had been struggling. Our organization was thinking of admitting him at ''Anbu Malar'' Home, Coimbatore but due to his body and health condition, they were hesitating to admit him and hence we requested the RMO Dr.Sivaprakasam of Coimbatore Government Hospital, Coimbatore, to help him to get admitted back. He generously agreed and as of now he is getting the treatment at the hospital.

By looking at his condition, public from Rathinapuri area have generously donated Rs.3,400 (Rupees three thousand four hundred only) to her in presence of RMO, Dr. Sivaprakasam and EERA NENJAM Organization. She thanked the doctor, public and our organization for the timely help. This information was published in many daily newspapers and their clipping are attached herewith for your reference.
~Thanks
EERA NENJAM / (111/2012)


Monday, November 05, 2012

ஈரநெஞ்சம் நூறாவது சேவை...

"ஈர நெஞ்சம் உதவி" /"EERA NRNJAM Help"
******
[For English version, please scroll down]
கோவை பிரபஞ்ச அமைதி சேவை ஆசிரமத்தில் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பவித்ரா, ரஞ்சித், பூபதி, சிவப்ரகாஷ், தாரிணி என்ற பிள்ளைகளுக்கும் மற்றும் ஆத்மிகா, முரளி என்னும் சிறுவர்களுக்கும் வரப்போகும் தீபாவளிக்காக புதிய உடைகளை இன்று கோவையைச் சேர்ந்த நண்பர் திரு. முனியசாமி அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக வழங்கி உள்ளார்.

சின்ன சிறு வயதில் பண்டிகையைப் புத்தாடை உடு
த்திக் கொண்டாட நினைக்கும் பிஞ்சு உள்ளங்களின் ஆசையை நிறைவேற்ற உதவிய அன்பு நண்பர் திரு.முனியசாமி அவர்களுக்கு ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு,அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(100/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mr. Muniyasamy of Coimbatore, has sponsored new clothes/dresses for the forthcoming auspicious day Deepavali through our organization to the unprivileged children, Pavithra, Ranjith, Boopathy, Sivaprakash, Dharani who were admitted into Universal Peace Foundation, Coimbatore with the help of our organization and Aathmika and Murali at the same home.
We thank Mr. Muniyasamy and his family wholeheartedly for this help and wish them a very happy Deepavali too.
~Thanks / (100/2012)
"EERA NENJAM"
Photo: "ஈர நெஞ்சம் உதவி" /"EERA NRNJAM Help" 
******
[For English version, please scroll down]
கோவை பிரபஞ்ச அமைதி சேவை ஆசிரமத்தில் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பவித்ரா, ரஞ்சித், பூபதி, சிவப்ரகாஷ், தாரிணி என்ற பிள்ளைகளுக்கும் மற்றும் ஆத்மிகா, முரளி என்னும் சிறுவர்களுக்கும் வரப்போகும் தீபாவளிக்காக புதிய உடைகளை இன்று கோவையைச் சேர்ந்த நண்பர் திரு. முனியசாமி அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக வழங்கி உள்ளார்.

சின்ன சிறு வயதில் பண்டிகையைப் புத்தாடை உடுத்திக் கொண்டாட நினைக்கும் பிஞ்சு உள்ளங்களின் ஆசையை நிறைவேற்ற உதவிய அன்பு நண்பர் திரு.முனியசாமி அவர்களுக்கு ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு,அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(100/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mr. Muniyasamy of Coimbatore, has sponsored new clothes/dresses for the forthcoming auspicious day Deepavali through our organization to the unprivileged children, Pavithra, Ranjith, Boopathy, Sivaprakash, Dharani who were admitted into Universal Peace Foundation, Coimbatore with the help of our organization and Aathmika and Murali at the same home. 
We thank Mr. Muniyasamy and his family wholeheartedly for this help and wish them a very happy Deepavali too. 
~Thanks / (100/2012)
"EERA NENJAM" 
 -----------------------------------------------------------------------------------------
இந்த பதிவோடு

"ஈர நெஞ்சம்" அமைப்பு ஆரம்பித்த இருநூறு நாட்களில், இரண்டு நாட்களுக்கு ஒரு நிகழ்வு என, நூறு நட்செயல்களை நடத்தி முடித்திருக்கிறோம். உங்களின் கருத்துக்களை eeranenjam@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தயவு செய்து அனுப்பி வைக்கவும்./We have accomplished one hundred activities in two hundred days which is an activity in every two days. Please send us your feedback to eeranenjam@gmail.com * "ஈர நெஞ்சம்" அமைப்பின் சேவைகள் / செயல்பாடுகள் பற்றிய உங்கள் கருத்து: / Your feedback on "EERA NENJAM Services.

https://www.facebook.com/questions/328763563887733/

 

Sunday, November 04, 2012

ரேக்காவின் மறுவாழ்வுக்கு ஈரநெஞ்சம்

"ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வ
ேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012.

Mrs. Rekha thanked us for our timely help.
~Thanks / (99/2012)
"EERA NENJAM"
Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார். 
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012. 

Mrs. Rekha thanked us for our timely help. 
~Thanks / (99/2012) 
"EERA NENJAM"

Tuesday, October 30, 2012

இளைஞர்கள் முன்வரவேண்டும் "ஈர நெஞ்சம் சேவைகள்"

"ஈர நெஞ்சம் சேவைகள்" / EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் நடக்க முடியாமல், வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பெற்ற பின்னர், போவதற்கு உற்றார் உறவினர் இல்லாத
நிலையில், கடந்த 10 நாட்களாக ஆதரவற்று இருந்த திரு.ஹுசைன் என்னும் 65 வயது முதியவரைக் கண்ட மனித நேயம் மிக்க, கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.கே.கோவிந்தராஜ் என்னும் இளைஞர் B3 காட்டூர் காவல் நிலையத்திற்கு விபரத்தைத் தெரிவித்தார்.

அதன் பின்னர் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் காட்டூர் காவல் நிலையத்தின் அனுமதியோடு திரு கே. கோவிந்தராஜ் அவர்களின் உதவியோடும் திரு ஹுசைன் அவர்கள், கோவை மாநகராட்சி காப்பகத்தில், 28.10.2012 அன்று சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஆதரவற்ற ஒரு முதியவருக்கு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர் திரு கே. கோவிந்தராஜ் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இதுபோல் இன்னும் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்துகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(97/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Hussain, (Age: 65), who was discharged from a hospital after getting the treatment for the paralysis attack, was found unattended near Cross-cut road, Coimbatore for the past ten days. A kind hearted person Mr K. Govindaraj, hailed from Tirunelveli reported this matter to B3 police station.

He came to know about our organization and informed us. Mr. Hussain was then admitted to "Coimbatore Corporation Home" after getting proper permission from the Kattur Police station on 28.10.2012.

We appreciate Mr. K. Govindaraj for his service and wish him.

We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks /(97/2012)
EERA NENJAM
Like · ·

Friday, October 26, 2012

மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா


மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா யாரும் வெட்ட மாட்டார்களோ...
"மே பிளவர்" மரம் இல்லைங்க இது விநாயகர் மரம்
கோவை ராம் நகர் பகுதியில்...
~மகி

Monday, October 15, 2012

"ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மகாத்மா காந்தி விருது.


 இது என்னுடைய ஆயிரமாவது பதிவு


"ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மகாத்மா காந்தி விருது / Mahatma Gandhi Award to "EERA NENJAM" Organization
******
[For English version, please scroll down]
தேசிய மனித உரிமை இயக்கங்கள் சார்பில், சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி 12.10.2012 மற்றும் 13.10.2012 ஆகிய நாட்களில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில், ''ஈர நெஞ்சம்'' அமைப்பு செய்த பல சேவைகளைப் பாராட்டி (சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பங்களில் சேர்த்து பராமரித்தல், குடும்பத்தை விட்டு தவறுதலாகப் பிரிந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், இரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்வுகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், காப்பங்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளை மிகச்சிறிய காலகட்டத்தில் செய்துள்ளமைக்காக) மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை ''ஈர நெஞ்சம்'' அமைப்பின் சார்பாக, நிர்வாக அறங்காவலர் திரு.மகேந்திரன் அவர்களுக்கு தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு கழக தலைவர் உயர் திரு. கஸ்மா. ராஜேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
~நன்றி. (தேசிய மனித உரிமை இயக்கம்)
(93/2012)

https://www.facebook.com/eeranenjam
......
National Human Rights Movements organized the ''First State Level Conference'' for appreciating ''Non-Government organizations'' on 12.10.2012 and 13.10.2012 at Omalur, Salem District, Tamil Nadu. We are pleased to inform you that EERA NENJAM Organization has received the Mahatma Gandhi Award for our various services such helping old and mentally challenged people who were left on streets, for uniting people who were separated for unknown reasons with their families, for giving educational scholarships to pupils from orphanages and homes, for conducting free blood donation camp, tree-plantation camp and eye camp to the unprivileged and public and providing food sponsorship to the homes.

Mr. P. Mahendiran, Managing Trustee of EERA NENJAM, received the award on behalf of our organization from Mr. Kasma Rajendran, Head, National Human Rights Protection Council.
~Thanks (National Human Rights Movements)
(93/2012)

Monday, October 01, 2012

நல்லா பாத்துக்கோங்க...~ஈரநெஞ்சம்


******
[For English version, please scroll down]
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆதரவின்றி மயக்கமுற்ற நிலையில் இருந்த ஒரு மூதாட்டிக்கு, கோவை ஒக்கிலியர் காலனி அரசு
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ''ஈர நெஞ்சம்'' உதவியோடு, முதலுதவி செய்து 13.09.2012 அன்று, B8 காவல் நிலைய அனுமதியோடு, ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 27.09.2012 அன்று, ஒரு பெண்மணி தனது பாட்டியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு, கோவை மாநகராட்சி காப்பகத்தில் விசாரித்த போது, அது போல யாரும் அங்கு இல்லை என்பதால், அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பில் விசாரிக்கும்படி கூற, எங்கள் அமைப்பைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் கூறிய விபரம், ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில், எங்கள் அமைப்பால் சேர்த்த பாட்டியை நினைவுபடுத்தவே, நாங்கள், அவர்களை நேரில் வரச்சொல்லி பாட்டியைக் காண்பித்தோம். இறைவன் அருளால், அவர்கள் தேடி வந்த பாட்டி அவர்தான் என்று அறிந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் இருந்து, அந்த பாட்டி நினவு சரி இல்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியில் வர நேர்ந்த நிலையில் 15 நாட்களில் அந்த பாட்டி பத்திரமாகத் தன் வீடு போய்ச் சேர்ந்துள்ளார். அவரைப் பத்திரமாக அவரது மகன் சண்முகத்திடம் ஒப்படைத்த ஈர நெஞ்சத்திற்கு அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர். இதுபோல், இன்னும் நிறைய நற்செயல்கள் எங்கள் அமைப்பின் மூலம் நடைபெறுவதற்கு உங்கள் ஆதரவும், கடவுளின் அருளும் கிடைத்திட அனைவரும் வேண்டுவோம்.

https://www.facebook.com/eeranenjam

~ நன்றி /(88/2012)
ஈர நெஞ்சம்
......
You may recollect that an old lady was admitted to Sai Baba Home by us on 13.09.2012 with the help of pupils and teachers from the Government Higher Secondary School, Okkiliyar colony, Coimbatore. A lady was searching for another old lady in the Corporatiom Home. Since there was no person with that idendity, they asked her to contact our organization. Based on the description, we took her to show the old lady at the Sri Saibaba home. We were so happy when we found out that the old lady who has been searched for is the same as in Sri Saibaba home. We found out that the old dady hailed from Variety Hall road, Coimbatore and was found missing. We are also happy that she got reunited with her family within fifteen days from the day she found missing. Her son Mr. Shanmugam and his family thanked us and praised our organization.

We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks (88/2012)
EERA NENJAM
Like · ·

Monday, September 24, 2012

பாண்டிச்சேரியில் மரம் நடுவிழா ~ ஈரநெஞ்சம்


[For English version, please scroll down]
"ஈர நெஞ்சம்" அமைப்பின் சார்பில் பாண்டிச்சேரியில் எம்பலம், மறைமலை அடிகளார் அரசு மேல் நிலைப்பள்ளியில் 22.09.2012 அன்று மரம் நடு விழா நடை பெற்றது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஈர நெஞ்சத்தின் தொண்டு ஆர்வலருமான திரு. அன்புதாசன் அவர்களின் முயற்சியினால், இந்த மரம் நடு விழா இனிதே நடைபெற்றது.

காலை ஒன்பது மணிக்கு, பள்ளியின் துணை முதல்வர் திரு. இரகோத்தமன் அவர்கள் தலைமை தாங்கி, முதல் மரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர், ”இன்று இங்கே நிழல் தரும் மரங்கள் மட்டும் நடப்படவில்லை; தான் படித்த பள்ளிக்குத் தன்னால் முடிந்தவற்றைச் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து மாணவர்கள் மனதில் விதைக்கக் காரணமாய் இருந்த முன்னாள் மாணவர் அன்புதாசனை வாழ்த்துகிறேன்” என்று பேசினார். அது மட்டுமின்றி ஈர நெஞ்சத்தின் தொடர் சேவைகளையும், அனைத்து நிர்வாகிகளையும், தொண்டு ஆர்வலர்களையும் பாராட்டி நினைவுப் பரிசும் வழங்கினார். நண்பகல் 12 மணி அளவில் அனைத்து மரக்கன்றுகளும் நடப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இந்த விழாவில்125 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

இதற்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் திரு கோவிந்தன், திரு. ராஜசேகரன் இருவருக்கும் "ஈர நெஞ்சம்" தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் மனமாரத் தெரிவித்துக் கொள்கிறது. மரம் நடுவதற்கு வேண்டிய உதவி செய்ததற்கும், நட்ட மரங்களை நீர் ஊற்றி அவற்றை நன்றாகப் பராமரிக்க வேண்டிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்வதாக உறுதி அளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் மனமாரத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் முன்னோடியாக விளங்கும் அன்புதாசனைப் போல இன்னும் பலர் உருவாக எல்லாம் வல்ல இறைவனை ஈர நெஞ்சம் வேண்டுகிறது. விழாவின் முடிவில், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

~நன்றி (84/2012 )
"ஈர நெஞ்சம்

"https://www.facebook.com/eeranenjam

......

We had the "Tree Plantation" ceremony at Maraimalai Adikalar Government Higher Secondary School, Embalam, Pondicheery on 22.09.2012 successfully. It was possible by the good effort of one of our volunteers Mr. Anbu Dassan and he also happened to be an alumni of this school.

Mr. Rahothman, Vice-Principal,initiated the function by planting the first tree. In his speech, he praised Mr.Anbu Dassan for his effort of planting trees and added that he not only helped to plant trees but also made himself a good example to the present students. He also congratulated the various services and activities of EERA NENJAM and its trustees. There were 125 trees planted on this function and it was completed by 12 noon.

We would like to thank the teachers Mr. Govindan, Mr. Rajasekaran for their help. The school management has promised us that they would take care of the planted trees by watering them as needed.

We expect some more volunteers would come and engage themselves in these of activities in the following years such as Mr. Anbu Dassan. Snack was served to all the participants.
~Thanks (84/2012)
EERA NENJAM