Sunday, November 25, 2012

வழி என்னும் விழி... ~மகேந்திரன்


இவர் பெயர் R.விஜயகுமார் வயது 25 (9095599719) திருப்பூரை சேர்ந்தவர் இவருடைய அப்பா ராமன், அம்மா கண்ணம்மாள் இவங்க இரண்டுபேருமே கூலி வேலைக்கு போறாங்க, விஜயகுமாருக்கு ஒரு தங்கை ஒரு அக்கா தங்கை இறந்துட்டாங்க அக்காவிற்கு திருமணமாகி குன்னதூ
ர்ல இருக்காங்க , விஜயகுமாருக்கு நான்கு வயது இருக்கும் போது ஏற்ப்பட்ட உடல் நலம் குறைவில் பார்வை பறிபோனது, மருத்துவ பரிசோதனையில் விழிக்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டதினால் மாற்று விழியும் பொறுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

"கைரேகை பார்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் வேளையில் கைகளே இல்லாதவனுக்கும் எதிர் காலம் உள்ளது என்பதற்கு ஏற்ப ."விழி இல்லை என்றாலும் வழி எனும் விழி உள்ளது" என்று கூறுகிறார் திரு விஜயகுமார் ,
ஆமாங்க இவருடைய அம்மா அப்பா கூலிவேலைக்கு போய் வரும் சம்பாதனையில் என்ன செய்ய முடியும் அதனாலேயே இவர் சிறு வயதில் இருந்தே பார்வை இல்லை என்றாலும் அதற்க்கு தகுந்த பாதையை பார்த்து சுயமாக பக்குவமாய் முன்னேறி தற்போது M.Phil பட்டப்படிப்பு கோவை அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார் , சாலையோரமாக கீசெய்ன் , மொபையில் கவர், இது போன்ற பொருட்களை விற்று வரும் லாபத்தில் தற்போது படிப்பு செலவுக்கு ஈடுகட்டுகிறார். எல்லாம் இருக்கின்றவர்களே கடன ஒடன வங்கி பகட்டை காட்டும் இந்த காலத்தில் பார்வை இல்லை என்பதை பொருட்படுத்தாமல் சுயதொழில் செய்து முன்னேறிவரும் விஜயகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் போதாதுங்க நீங்க யாராவது அவரை சந்தித்தால் விஜயகுமாரிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்குங்க அது போதும்.

இவரை சந்தித்தபோது நான் இவரிடம் உங்களது லட்சியம் என்னங்கனு கேட்டேன் . அதற்க்கு அவர் சொன்னது "நான் நல்லா பாடுவேன் நிறைய பாட்டு போட்டியில் கலந்து பரிசு பெற்று இருக்கிறேன். நல்ல பாடகனாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது" என்றாருங்க. விஜயகுமார் ஆசைப்படி ஒரு இசை குழுவில் சேர்ந்து மக்கள் மத்தியில் வளமும் பெயரும் வளர வேண்டும் என்று விஜயகுமாரது நன்னம்மிக்கையை உங்களோடு நானும் வாழ்த்தி தலை வணங்குகிறேன்.
நன்றி
~ மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

sakthi said...

வாழ்த்துக்கள் நண்பரே

M.Mani said...

நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழும் மகேந்திரன் வாழ்க்கையில் வெற்றி நாயகனாய்திகழ ஆண்டவனை இறைஞ்சுகின்றேன்.

Post a Comment