Monday, December 17, 2012

கோவை சிறப்பு பேரூர்...

நாயன்மார்கள் 64 பேர் இவர்களை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆமாம்க, பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் பார்த்திங்கனா வரிசையா குட்டி குட்டி சாமிங்களா இருப்பாங்க இல்லையா அவங்களைத்தான் நாயன்மார்கள் என்று சொல்றாங்க ,

கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகில் சுப்புராயர் பிள்ளை 1927 ஆண்டு நாயன் மார்களில் முதல் நால்வரான மாணிக்க வாசகர் , திருநாவுக்கரசர் , திருஞானசம்மந்தர் , சுந்தரர், ஆகியோருக்கு நால்வர் மடாலயம் கட்டி 1929 ஆம் ஆண்டு இக்கோவிலை பிரதிர்ஷ்டை செய்தார் .

இதன் சிறப்பு பார்த்திங்கனா இங்கு மட்டுமே இந்த நால்வர் உள்ளனர் , அது மட்டும் அல்லாது நாயன் மார்களின் மிக உயர்ந்த சிலை இங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









கோவை பேரூர் நால்வர் மடாலயம் அருகில் ஒரு பனை மரம் உள்ளதுங்க , இந்த பனை மரத்தை பற்றி சொல்றேன் , இந்த பனை மரம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர் .

அம்மக்கள் அந்த பனை மரத்திற்கு இறவாபனை என்று வைத்திருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது இந்த மரத்தின் சிறப்பை சேக்கிழார் புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது , 







கோவை பேரூர் அருகே இன்னும் ஒரு இடம் இருக்கீங்க அந்த இடத்திற்கு திருநீர் மேடு என்று அழைக்கிறார்கள் .

அந்த இடத்தில பிரம்மனின் சாப விமோசனம் கிடைக்க இந்த பகுதியில்தான் சிவனுக்கு யாகம் வளர்தியதாக கூறுகின்றனர்.

தொல்பொருள் அராய்ச்சி இங்கு ஆய்வுசெய்து வருகிறார்கள் , அந்த இடம் முழுவதும் மண் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது, பொது மக்கள் அதனை சாம்பல் என்றும் அந்த இடத்தில மண் பவளங்கள், மண்ணுக்குள் உள்ளதாகவும் கூறிவருகிறார்கள் .

இந்த இடம் இப்போது புதர் மண்டி கிடக்கிறது , அந்த மக்கள் சொல்வது போல அந்த இடம் தரை மட்டத்தில் இருந்து சற்று உயர்வாக ஒரு மேடு போல காட்சியளிப்பதும் தெரிகிறது .

கோவையிலும் இதுப்போன்ற இடமெல்லாம் இருக்கிறது என்பது நேற்றுதான் நண்பர் அருண் மூலமாக தெரிந்துக்கொண்டேன்.





~மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

கோவை நேரம் said...

பேரூர் சிறப்பு..பதிவும் சிறப்பு....உள்ளூர் சிறப்புகள் நமக்கு எப்பவும் தெரியாது..

இராஜராஜேஸ்வரி said...

வியக்கவைக்கும் தகவல் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Post a Comment