Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Thursday, March 18, 2021

மாணவர்கள்

*தினம் ஒரு குட்டிக்கதை* .



ஒரு ஆசிரியர் பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார்.

அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார்.அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர். 

இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியாக இருந்தது.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும். எல்லோரும் ஒரு துண்டு தாளில் அவரவர்  பெயரை எழுதி  ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார்.

அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை  எடுத்தார். அதில் தமிழ்ச்செல்வி என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.

அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும்  ஏழ்மையான  மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.

பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர  ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் சந்தோஷப்பட்டார்.

எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க  " நான் வீட்டுக்கு வந்து அப்பெட்டியிலுள்ள அனைத்து  காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை  மாணவியாகிய "தமிழ்ச்செல்வி" இன் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.

 *நீதி* 

*"தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக, சுயநலமற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்"*

Thursday, April 04, 2013

"மாணவர்கள் நினைத்தால் மாற்றங்கள் உருவாகும்" இந்த மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

ஆதரவற்ற ஒரு பெண்ணும், சுமார் 30 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட உடைகூட இல்லாமல் இன்னொரு பெண்ணும் கோவை சுங்கம் பகுதியில் பலமாதங்களாகச் சுற்றித் திரிவதை கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் பார்த்து , நமது ஈரநெஞ்சம் அமைப்புக்குத் தகவல் வழங்க, ஈரநெஞ்சம் அமைப்பு கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரசன்னா மற்றும் சமீர் உதவியுடன் அந்த இரண்டு பெண்களையும் 04/04/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தோம்.

மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் சமுதாயம் மேன்பட போதாது. அதற்கு மேலும் கடமை இருப்பதைக் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் மாணவர்களுக்குப் புரியவைக்க, மாணவர்கள் பிரசனா மற்றும் சமீர் அதைப் புரிந்து கொண்டு ஈரநெஞ்சம் அமைபிற்கும், பாதிக்கப்பட்ட அந்த இருபெண்களின் பாதுகாப்புக்கும் உதவியதை ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (153/2013)
ஈர நெஞ்சம்
Prof. Prince of Krishna Engineering College, Coimbatore informed Eera Nenjam about two young women, one of them mentally challenged wearing hardly any clothes on her, wanderiing in the area of Sungam, Coimbatore for many months. On hearing this, our volunteers Mr. Prasanna and Sameer from the same college helped them to get admitted in the Coimbatore Corporation Home on 04/04/2013.
Prof. Prince taught them an important lesson that just the college education is not enough and everyone has responsibility in helping the fellow citizens. Eera Nenjam appreciates the timely help of Prof. Prince, Mr. Prasanna and Mr. Sameer for helping those two women.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (153/2013)
Eera Nenjam

Monday, October 01, 2012

நல்லா பாத்துக்கோங்க...~ஈரநெஞ்சம்


******
[For English version, please scroll down]
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆதரவின்றி மயக்கமுற்ற நிலையில் இருந்த ஒரு மூதாட்டிக்கு, கோவை ஒக்கிலியர் காலனி அரசு
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ''ஈர நெஞ்சம்'' உதவியோடு, முதலுதவி செய்து 13.09.2012 அன்று, B8 காவல் நிலைய அனுமதியோடு, ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 27.09.2012 அன்று, ஒரு பெண்மணி தனது பாட்டியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு, கோவை மாநகராட்சி காப்பகத்தில் விசாரித்த போது, அது போல யாரும் அங்கு இல்லை என்பதால், அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பில் விசாரிக்கும்படி கூற, எங்கள் அமைப்பைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் கூறிய விபரம், ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில், எங்கள் அமைப்பால் சேர்த்த பாட்டியை நினைவுபடுத்தவே, நாங்கள், அவர்களை நேரில் வரச்சொல்லி பாட்டியைக் காண்பித்தோம். இறைவன் அருளால், அவர்கள் தேடி வந்த பாட்டி அவர்தான் என்று அறிந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் இருந்து, அந்த பாட்டி நினவு சரி இல்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியில் வர நேர்ந்த நிலையில் 15 நாட்களில் அந்த பாட்டி பத்திரமாகத் தன் வீடு போய்ச் சேர்ந்துள்ளார். அவரைப் பத்திரமாக அவரது மகன் சண்முகத்திடம் ஒப்படைத்த ஈர நெஞ்சத்திற்கு அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர். இதுபோல், இன்னும் நிறைய நற்செயல்கள் எங்கள் அமைப்பின் மூலம் நடைபெறுவதற்கு உங்கள் ஆதரவும், கடவுளின் அருளும் கிடைத்திட அனைவரும் வேண்டுவோம்.

https://www.facebook.com/eeranenjam

~ நன்றி /(88/2012)
ஈர நெஞ்சம்
......
You may recollect that an old lady was admitted to Sai Baba Home by us on 13.09.2012 with the help of pupils and teachers from the Government Higher Secondary School, Okkiliyar colony, Coimbatore. A lady was searching for another old lady in the Corporatiom Home. Since there was no person with that idendity, they asked her to contact our organization. Based on the description, we took her to show the old lady at the Sri Saibaba home. We were so happy when we found out that the old lady who has been searched for is the same as in Sri Saibaba home. We found out that the old dady hailed from Variety Hall road, Coimbatore and was found missing. We are also happy that she got reunited with her family within fifteen days from the day she found missing. Her son Mr. Shanmugam and his family thanked us and praised our organization.

We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks (88/2012)
EERA NENJAM
Like · ·

Friday, September 14, 2012

ஆதரவற்றோர் என யாரையும் உருவாக்க மாட்டோம் மாணவர்கள்~ ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சத்தின் உதவி / Help from EERA NENJAM''
******
[For English version, please scroll down]
......
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆதரவின்றி மயக்கமுற்ற நிலையில் ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக இருந்து வந்


தார். அதைக் கவனித்து வந்த கோவை ஒக்கிலியர் காலனி அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அந்த மூதாட்டிக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று யோசித்த போது கோவை கணுவாய் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் ''ஈர நெஞ்சம்'' பற்றி அறிந்தனர். அதன் பின்னர் மூதாட்டிக்கு முதலுதவி செய்து 13.09.2012 அன்று, B8 காவல் நிலைய அனுமதியோடு ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில் ''ஈர நெஞ்சம்'' அமைப்புடன் இணைந்து அவரைக் கொண்டு சேர்த்தனர். வீட்டை விட்டு துரத்தப்பட்டு சரிவர எதுவும் நினைவற்ற நிலையில் இருந்த அந்த மூதாட்டியை நல்லதொரு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கத் துணை செய்த மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் ''ஈர நெஞ்சம்'' வாழ்த்திப் பாராட்டுகிறது.

இந்த நற்செயலைச் செய்த மாணவ மாணவியர்கள், தங்களது கருத்தை இந்த காணொளியின் மூலம் சொல்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=iXYxSAdlBxQ&feature=youtu.be

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மாணவர்கள், தங்களைப் பெற்றெடுத்தவர்களைப் பிற்காலத்தில் பேணிக் காப்போம் என்ற உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

வரும் காலங்களில், இது போன்ற ஆதரவற்றவர்கள் இல்லாத ஓர் உலகம் படைப்பதை ''ஈர நெஞ்சம்'' தன் கடமையாகக் கருதுகிறது.

~நன்றி
ஈர நெஞ்சம் (75 /2012)
https://www.facebook.com/ஈரநெஞ்சம்
......
An old lady, unattended and under light-headedness, has been lying down in the streets near Corporation school, Okkliyar colony, Coimbatore for the past few days. By looking at the scenario, when the pupils and teachers of Government Higher Secondary School, Okkiliyar Colony, Coimbatore decided to do some good thing for her, they came to know about our organization ''EERA NENJAM'' through Government High School, Kanuvai, Coimbatore. The pupils and teachers have joined hands with our organization, gave first-aid to her, got permission from B8 police station and finally made arrangements to admit her into ''Sri Saibaba Old Age Home'' on 13.09.2012. We salute the pupils and the teachers for this noble service.

They expressed their views and feelings in the attached video. More over, they have also pledged to take care of their own parents in especially when they are old.

As per our vision, we want to have a better world without any orphan (s).
~Thanks
EERA NENJAM (75/2012)

Wednesday, September 12, 2012

வாழ்க மாணவர்கள் சமுதாயம் ~ ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் - செயல்பாடுகள்'' / ''EERA NENJAM - Activities''
******
[For English version, please scroll down]
இளம் வயது முதல் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறை, நாளைய உலகைக் காக்கும் கரங்களாக வலுப்பெறும் என்பதில் வியப்பேதும் இல்லை. இதற்கு உதாரணமாக, கோவை கணுவாய் அரசு பள்ளி முன்பாக பலநாட்களாக இடது கால் முறிந்த நிலையில் ஒரு பெண்மணி ஆதரவற்ற நிலையில் உணவின்றி பரிதாபமாகக் கிடந்ததை அறிந்து, மனதில் ஈரம் வெளிப்பட வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபிக்கும்

விதமாக, கோவை கணுவாய் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து, அந்த பெண் மணிக்கு முதலுதவி செய்து அதன் பின்னர் 11 .09 .2012 அன்று, துடியலூர் காவல் நிலையம் அனுமதியுடன் அன்னை தெரெசா முதியோர் காப்பகத்தில் அவர் சேர்க்கப்பட்டு நல்லதொரு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றவருக்கு உதவும் அந்த நல்ல உள்ளங்களை, ஈர நெஞ்சம் வாழ்த்தி பாராட்டுகிறது. இந்த நற்செயலை செய்த மாணவ மாணவியர்கள், தங்களது கருத்தை இந்த காணொளியின் மூலம் சொல்கிறார்கள்.

http://youtu.be/_e8ltotzQf8

http://youtu.be/f-eLY7vFwyA

~நன்றி
ஈர நெஞ்சம் (74/2012)
https://www.facebook.com/ஈரநெஞ்சம்
......
There is no doubt that the present youth's motto to do good things would lead to helping hands to the future world especially people who are in need. There was a old lady, lying on the street near Kanuvai, Coimbatore with her left leg broken. She was unattended and without proper food for the past few days. By looking at the scenario, the pupils and the teachers of Government High School, Kanuvai, Coimbatore have joined with our organization and given her a first-aid. We have got the permission from Thudiyalur police station and made arrangements to admit her in to ''Mother Teressa Homes'', Coimbatore on 11.09.2012 to safeguard her.
We salute the pupils and teachers for their noble services. Please watch the attached videos where the students talk about their views on unprivileged ones.
~Thanks
EERA NENJAM (74/2012)

Monday, June 25, 2012

ஆதரவற்ற சிறந்த மாணவர்களுக்கு ஊக்கதொகை

நண்பர்களே வருகின்ற 30/06/2012 சனிக்கிழமை ஈரநெஞ்சம் சார்பாக கோவை மாவட்ட  பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமம் இணைந்து  ஆதரவற்ற குழந்தைகளை மையமாக கொண்டு சுமார் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட  குழந்தைகளுக்கு , அதாவது பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் கோவை கருமத்தம் பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளியில் பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமம் என்னும் இடத்தில  நடத்த உள்ளது ,
மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற காப்பகங்களில் 10th, 12th தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்துள்ள ஆதரவற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் மற்றும்  நற்சான்றிதழும் வழங்கும் பணி துவங்க உள்ளது. அது சமையம் ஈரநெஞ்சம் , தாங்கள் மற்றும் தங்களது நண்பர்களின் ஆதரவையும் நாடுகிறோம் , அனைவரையும் அழைக்கிறோம் அனைவரும் வாருங்கள்....
தொடர்புக்கு ~ஈரநெஞ்சம் 9843344991

Thursday, November 03, 2011

மழை...

மழை
பாடம் படிக்க
வருகிறதாம்..!
அதனால்
மாணவர்களுக்கு
விடுமுறையாம்..!