Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, October 12, 2013

மகியின் ஹைக்கூ...





சோகம் கரைய 
நண்பன் இருந்தாலும் சரி 
கவிதை எழுததேரிந்தாலும் சரி..!


888888888888888888888888888888


பதுக்கப்பட்டது தானியங்கள் 
விதைத்த விவசாயிகள்
பட்டினியில்..!


888888888888888888888888888888


உயிர் போகும் நேரத்தில் 
உலகிற்கு ஒளி காட்டதுடிக்கும் 
தீக்குச்சிகளுக்கு 
வணக்கம்..!


888888888888888888888888888888


சேற்றில் முளைத்த 
செந்தாமரையில் தான் கலைமகளே 
வீற்றிருக்கிறாள்...

தீண்ட உனக்கு 
என்ன..?


888888888888888888888888888888


புதிதாய் அமைத்த பாதையில் 
அழிந்து போன புல்லினம் 

போர்க்கொடி தூக்கத்தேரியாமல் 
ஒரு சோகம்..!


888888888888888888888888888888


குளத்தில் மிதக்கும் 
தாமரை பூவை பறித்தாலும் 
நிலா பூவை பறிக்க 
முடியாது..!


888888888888888888888888888888


நெருப்புக்கும் 
அம்மாவின் தாலாட்டு...

ஊதும் குழலில் 
அம்மாவின் மூச்சுக்காற்று..!


888888888888888888888888888888


மனிதனின் தாக்குதலால் 
இப்போதெல்லாம் 
மின்னல் பூ 
பூப்பது அரிதாகிவிட்டது..! 


888888888888888888888888888888


கஞ்சன் கையில் இருந்து 
சிதறியது 
பருக்கைகள்...

நன்றி 
சொல்லி வாழ்த்தியது 
எறும்புகள்..!


888888888888888888888888888888


புல்லின் மீது 
வெள்ளை பூ 
பூத்திருக்கு 
சூரியன் வந்து 
களவாட..!

"பனித்துளி"


888888888888888888888888888888


நேற்று பெய்த 
மழையில் 
எங்கள் வீட்டு கிணற்றுக்கு 
தாகம் தீர்ந்தது..!







Sunday, January 20, 2013

மகியின் கவிதைகள்...


 
நீ  
தோளில் சாய்த்து
பயணித்த கனவுகளில்...

நான்இன்னும்
பயணித்துக்கொண்டே
இருக்கிறேன்..!
'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

காதலும் அதற்க்கான ஆறுதலும் நீயே தர வாராய்...
 
பேய் வீடு கண்டு
அஞ்சுவது போல...

நீ
இல்லாத
பகலை கண்டும்
அஞ்சி நடுங்குகிறேன்..!
 
சிறு
புன்னகை துளியில் தள்ளிவிட்டு...

காதல் கடலில்
தத்தளிக்க விட்டு விட்டு
போகிறாய்..!
 
உன் பார்வை வேப்பதிர்க்காகவும்
உன் பார்வை வெப்பத்திலும்
தவம் இருக்க வேண்டும்

மார்களியல்லாது
சித்திரையிலும்..!
 
புன்னகையை புயலாக்குவது...

புயலை பூவாக்குவதும்...

காதலுக்கு
கைவந்த கலை..!
 
ஆயிரம் ஏவுகணைகள்
அவள் பார்வையில்...
எனக்கு
மட்டும் சொந்தமாகவேண்டும்
அதன் தாக்குதல்..!
 
நீ இரவில் சூரியாங்க வருகிறாய்
பகலில் நிலாவாக வருகிறாய்
வேற்கின்ற போது அனலை மூடிகிறாய்
குளிர்கின்ற போது விசிரிவிடுகிறாய்
உன்
வார்த்தைகள் , பார்வைகள் , ஸ்பரிசங்கள் எல்லாம்
விசேஷ காலங்களில்
நான் உடுத்தும் ஆடைகளாக இருக்கிறது..!
 
உன்
விழி ஈர்ப்பு விசையால்
கரைதட்டிய
கப்பல் நான்..!
 
உன்னை
பார்க்கவோ...
பேசவோ...
பழகவோ...
எனக்கு எந்த அச்சமும்
இல்லை..!

ஆனால்
ஒரே ஒரு பயம்தான்
அதன் பிறகு
என்னை மறந்துவிடுவேனோ
என்று..!
 
இசையை போல...

என்
மெய் மறக்க செய்யும்
உன்
நினைவுகளுக்கு தெரிவதில்லை
காரணம்
தான் தானென்று..!
 
நூறு சூரியன் வந்தாலும்
உன் கோவம்
சுட்டேரிப்பதுபோல
எந்த
சூரியனாலும் முடியாது...!
 
எரிக்கும்
உன் கோவம்...

விளக்குகள் இல்லா
இரவு போல
இருக்கிறேன்..!
 
நீ
அந்தி சூரியன்...

உன்னை
பிரிய மனம் இல்லாத
வானம் கருவழிந்து
நிற்கிறது...

என்னை போல..!
 
இன்னும் எந்த எந்த
பழங்கள் தடை
செய்யப்பட்டு
உள்ளதோ...

வா
நீயும் நானும்
தேடி தின்போம்..!
 
எனக்கு
பிடித்தமான கவிதை
உன்
விழிகளை தவிர
வேறு யாரும்
எழுத முடியாது...

உனக்கு
பிடித்தமான கவிதை
என்
குறும்புகளை தவிர
என்னால் கூட
எழுத முடியாது..!
 
  எனக்கு
முன்னதாகவே
உனக்கு
"காலை வணக்கம்"
சொல்ல எழுந்து வந்துவிடும்
இந்த விடியலை
என்ன செய்வது..?
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..! 
 
பூக்களுக்குள்
தேன் நுழைந்ததுபோல...
எனக்குள்
உன்
நியாபகக்காதல்..!
 

Sunday, December 09, 2012

வரி வரியாக எழுதுகிறேன்..!

விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும்
வேரோடு பிடிங்கினால்
உயிர் போகும்
வலியடி..!


விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி 
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும் 
வேரோடு பிடிங்கினால் 
உயிர் போகும் 
வலியடி..!
~மகி 

வரி வரியாக
எழுதுகிறேன்..!

என்

காதல்

ஒரு வரியில்
உனக்கு புரியாதா
என்று..!


வரி வரியாக 
எழுதுகிறேன்..!

என் காதல் 

உனக்கு 
ஒரு வரியில் 
உனக்கு புரியாதா 
என்று..!
~மகி

Thursday, December 22, 2011

நினைவுகளுக்குள்ளேயே ஒளிவது தவிர...

பூட்டை போட்டு
பூட்டிவைத்தாலும்
புகை
நின்னாலும்
காதல்
நிற்காது..♥


உன்
கோபத்தை
கொஞ்சம் காட்டு
மார்கழி
சூடேரட்டும்..!



காதலில்
நீ
சத்யாக்கிரகம் செய்கிறாயா..?
சம்ஹாரம் செய்கிறாயா..?
புரியவில்லை..!

 
ஒரு
காகித தொழிற்சாலையை
இழுத்து மூடினாலும்..!
உனக்காக
நான் எழுதும்
கவிதை முடிவடையாது..♥

உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
அதுவும்
போதையை தான் தரும்..♥


உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
 அதுவும்
போதையை தான் தரும்..♥



கஷ்டங்கள் இல்லாமல்
கடவுளை
வழிபடுவது இல்லை..!
சண்டைகள் இல்லாமல்
காதலை
கொண்டாடுவதும் இல்லை..♥



பூக்களை
அலங்கரிக்க அதிகாலை ,
பனித்துளியை
அனுப்புகிறது..!
உன்னை
அலங்கரிக்க
நான்
கவிதைகளை அனுப்புகிறேன்..♥



உன்னை விட்டு பிரியும்
பாதைகள்
எல்லாம்
உன்னிடமே சேர்கிறது...
உன்னைவிட்டு
எப்படி
பிரியமுடியும்..♥



நீ
கைகுட்டையில்
முகம் துடைக்கும் போதெல்லாம்
கைக்குட்டையின்
மீது
 பொறாமை..!
உன்
வியர்வை
அதில் பதிகிறதே..♥



நிலாவிற்கு
துணையாக
நட்சத்திடங்கள் வருவதுபோல...
உன்
நியாபகத்திற்கு
துணையாக கவிதைகள் வாடுகின்றன..♥


உன்
சுவாசத்தில்
வாழும் உயிர் என்னிடம்..!
அதை பொறுக்காமல்
என்னை
நிராகரிக்கும் இதயம் உன்னிடம்..!





போன ஜென்மத்தில்
உன்
கூந்தல் அரியணை
ஏறி
இருக்கும் போல
இந்த பூக்கள்...
உன்
வாசத்தையும்
உன்
வண்ணத்தையும் கொண்டுள்ளது..♥



என்
தெருவில்
எரியாத விளக்குகள்
என்
காதலுக்கு
முகவரி சொல்கிறது..!


உன்
நினைவுகளில் இருந்து
என்னால்
தப்பிக்க முடியாது..!
உன்
நினைவுகளுக்குள்ளேயே
ஒளிவது தவிர
வேறு வழியும்
இல்லை..♥