Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Thursday, October 23, 2014

ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி

" ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி "
ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
***********************************************************
(370 / 21-10-2014)




கோவை சிங்கநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் என்னும் இடத்தில் சண்முகம் ( 58 ) என்பவர் கண் தெரியாதவராக இருக்கும் காரணத்தால் பத்து வருடங்களாக குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் ஓரமாக இத்தனை நாளும் இருந்திருக்கிறார் . அவரைப் பற்றி மனோன்மணி என்னும் பெண் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர் இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரநெஞ்சம் அமைப்பினர் , அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சண்முகத்தை அங்கேயே குளிக்க வைத்து , பொதுமக்கள் முன்னிலையில் அவரை தீபாவளி கொண்டாட வைக்க முடிவெடுத்தனர் . அதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களாகவே அவருக்கு உடுத்த புதிய துணி வாங்கி கொடுத்தனர் .பின்னர் சாப்பிட தீபாவளி பலகாரம் கொடுத்தனர் . பின்னர் அங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் அவருக்காக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி அங்கிருக்கும் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நமது ஈரநெஞ்சம் அமைப்பு தெரிவித்துக்கொண்டது ...





பின்னர் கோவை மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதி கேட்டு அங்கு சண்முகம் அவர்களை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார் . "




" சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது தான் " ; அந்த வகையில் சண்முகம் அவர்களை மகிழ்வித்ததில் ஈரநெஞ்சம் அமைப்பு பெருமிதம் கொள்கிறது . அதில் பொதுமக்களும் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ...
ஈரநெஞ்சம் அமைப்பிற்கு இந்த தீபாவளி மறக்கமுடியாத தீபாவளி !!!
~ஈரநெஞ்சம்.
https://www.facebook.com/eeranenjam

Saturday, November 09, 2013

ஒரு ஊர் இரண்டு தீபாவளி


மயிலந்தீபாவளி.
பசுமை நிறைந்த கிராமம் , இதமான தட்பவெட்பம் , விவசாய பூமி , மக்களிடையே கள்ளம் கபடம் இல்லை. எங்கு பார்த்தாலும் பசுமை இதுவரை எந்த ஒரு தொழிற்சாலை அதிபர்களின் கண்களுக்கும் படாததால் அங்கு இன்னும் மண்வாசம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. கோவையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பசுமையான கிராமம் வடசித்தூர்.
இங்கேதான் மக்கள் இரண்டு தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபாவளி நாளில் கூட ஊர் களைகட்டுவது இல்லை. அதற்கு அடுத்தநாள் மயிலன் தீபாவளியாக சுத்துப்பட்டு 16 கிராம மக்களும் வடசித்தூரில் சங்கமமாகி இந்து , கிறித்தவர், இஸ்லாமியர் என சமயம் பாராமல் ஒரே குடும்பமாக கொண்டாடுகின்றனர். பலவிதமான விளையாட்டுகளும் ஒயிலாட்டம்,மயிலாட்டம், கூத்து, கேளிக்கை , பட்டாசுகள், மற்றும் வித விதமான உணவு என்று இந்த மயிலன் தீபாவளியை கொண்டாடுகின்றனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அப்படி ஒரு சந்தோசத்தோட இந்த மயிலன் தீபாவளில கலந்துகிட்டு சந்தோஷ படறாங்க. தலை தீபாவளிக்கு வந்த புது தம்பதியினரை கூட மயிலந்தீபாவளி அன்று மிக சிறப்பாக உபசரிக்கிறார்கள் வடசித்தூர் மக்கள் அனைவருமே.
அது சரி.. அதென்ன "மயிலந்தீபாவளி"
அங்கே கொண்டாடும் சிலரிடம் விசாரித்தபோது , ஏறக்குறைய சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பசுமை கொஞ்சும் வடசித்தூர் கிராமத்தை ஆட்சி செய்தவர் 'மயில்சாமிக் கவுண்டர்'. அந்த ஊருக்கு நிறைய நன்மைகளை செய்தார். அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் நடந்துகிட்டாங்க. அவர் மேல ஊர் மக்கள் எல்லோரும் மிகுந்த மரியாதை வச்சிருந்தாங்க. இவரைக் கேட்காமல் ஒர் அணுவும் அசைந்ததில்லை இவருடைய சொல்லில் துவங்கியதுதான் இந்த மயிலன் தீபாவளி .
வடசித்தூர் கிராம மக்கள் இன்னால் வரையிலும் செவ்வாய்க் கிழமை அசைவ உணவு உண்பதில்லை என்ற வழக்கம் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சுமார் 100 வருடங்களுக்குமுன் ஒரு தீபாவளி செவ்வாய்கிழமையில் வந்தது, .தீபாவளி அன்று அசைவம் இல்லை என்றால் எப்படி..? அதுவும் தலைதீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளையை எப்படி உபசரிப்பது? வந்திருக்கும் பிள்ளைகள் எப்படி மகிழும் என்றும் தீபாவளி சிறப்புடையதாக இருக்காதே என மக்கள் குழம்பிய நிலையில், பெரியவர் மயில்சாமி அவர்களிடம் யோசனைக் கேட்க அவரும் ''ஏன் நாளைக்கு மாமிசம் சாப்பிட்டால் என்ன?'' நாளையும் தீபாவளி கொண்டாடலாமே என்று முடிவெடுத்து அந்த வருடம் தீபாவளிக்கு அடுத்தநாள் மீண்டும் தீபாவளி கொண்டாடினர்.
எதிர்பாராதவிதமாக அடுத்து வந்த தீபாவளியும் செவ்வாய்க் கிழமையே வர, மக்களும் அதற்கடுத்த நாளையே மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படி கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததால ஒவ்வொரு வருசமும் தீபாவளிக்கு அடுத்த நாளும் இவங்க ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சாங்க. பக்கத்துக்கு கிராம மக்கள் இந்த விழாவை பற்றி கேட்கும் போது மயில்சாமி ஐயா சொல்லி இருக்காங்க அதனால நாங்க இப்படி இந்த நாளும் கொண்டாடுகிறோம் என்று கூற காலப்போக்கில் மயில்சாமி தீபாவளி, மயிலந்தீபாவளி என்று ஆகி சுத்தி இருந்த 16 கிராம மக்களும் இவங்களோட இந்த தீபாவளியில கலந்துக்க ஆரம்பிச்சாங்க.
100 ஆண்டுக்கு முன் மயில்சாமிக் கவுண்டரால் உருவாகிய இந்த வழக்கத்தை இன்றளவும் இளைய தலைமுறைகளும் ஏற்று கொண்டாடுவது நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.அவரது பெயரிலேயே ''மயிலந்தீபாவளி" யில் 16 கிராம மக்களும் வடசித்தூரில் ஒன்று கூடி இந்து, முஸ்லீம்,கிறித்தவர் என மதப் பாகுபாடின்றி ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்டாடி மகிழ்வது சிறந்த மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக உள்ளது. இப்படிப் பட்ட நிகழ்வுகளை வரவேற்பது நம் கடமை.
காலங்கள் கடந்தும் காவியம் படைக்கிறது "மயிலந்தீபாவளி"
~நிறைமதி

Friday, November 01, 2013

"வருடத்தில் ஒருநாள் தீபாவளி திருநாள் "




தீபாவளி பண்டிகை என்று சொல்லும் போது மனதில் ஒருவித சந்தோஷம் எழும் , அதற்க்கு உண்மையான காரணம் எஎன்ன தெரியுங்களா? மற்ற பண்டிகைப்போல இல்லாமல் இந்த இந்த பண்டிகையில் தான் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்றோம் .

இந்த காலக்கட்டத்தில் பலரும் பிளைபிர்க்காக வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர். இதனால் பலர் தங்களது வீட்டை பிரிந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி வருடம் முழுவதும் பிரிந்து இருந்தாலும் அனைவரையும் ஒன்று சேர்ந்து வைப்பது இந்த தீபாவளி திருநாளில் மட்டும் . இத்தகைய அற்புதமான தீபாவளி பண்டிகையின் போது, குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்க வேண்டாமா , மனதில் இருந்த கஷ்டத்தை வெளியேற்றி, குடும்பத்தினரிடம் அன்பை பரிமாறி, மனதில் உள்ள வருத்தங்களைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் .

1) இந்த வருட தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாக இருக்க வேண்டும்.

2)குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லலாம் அல்லது வீட்டில் இருந்தே பூஜை செய்வதன் மூலமும் குடும்பத்துடன் சந்தோஷத்தை உணரலாம்.

3)பொதுவாக தீபாவளி அன்று மாலையில் வீட்டை தீபத்தால் அலங்கரிப்போம். அப்படி வீட்டை தீபத்தால் அலங்கரிக்கும் போது, குடும்பத்துடன் சேர்த்து அலங்கரித்தால், வீட்டில் உள்ள இருள் நீங்கி, எப்போதும் சந்தோஷம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமின்றி, உண்மையிலேயே சந்தோஷமான தருணமாகவும் இருக்கும்.

4)நிச்சயம் தீபாவளியின் ஒரு சிறப்பம்சமே இது தான். உண்மையிலேயே குடும்பத்துடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. குறிப்பாக இப்படி குடும்பத்துடன் சேர்த்து பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருங்கள்.

5)நிறைய பேர் வெளியூரில் இருந்து சொந்த வீடிற்கு வந்திருப்பாங்க , வீட்டில் எப்போதும் இருப்பவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்க்க சொல்லி விட்டு அவர்கள் வீட்டை சுத்தம் செய்தால் கொஞ்சம் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும், அதுவும் இல்லாமல் நமது வீட்டை நாம் அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தும் போதும் அலாதியான சந்தோஷம் கிடைக்கும்.

6) வழக்கமா வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் சமைப்பார்கள் , இந்த தீபாவளி க்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சமையலுக்கு உதவியாக இருந்து, சமைத்து சாப்பிட்டால் கொஞ்சம் யோசிச்சு பாருங்க எப்படிப்பட்ட சந்தோசம் இருக்கும் எண்டு.

7) தீபாவளிக்கு இனிப்புக்களை செய்யும் போது, குடும்பத்துடன் சேர்ந்து வேண்டிய இனிப்புக்களை ஒருமுறை முயற்சிக்கலாம். குறிப்பாக குலாப் ஜாமூன் போன்ற இனிப்புக்கள் குடும்பத்துடன் சேர்ந்து செய்வதற்கு ஏற்றது. இதை தீபாவளிக்கு முதல் நாள் மாலை அல்லது இரவில் முயற்சி செய்யுங்கள்.

8)அடுத்த அடுத்தநாள் விடுமுறைதான் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடலாம். அதிலும் கேரம் போர்டு, செஸ், தாயம் போன்ற விளையாட்டுக்கள் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடுவதில் உள்ள ஆனந்தம் 20/20 கிரிக்கெட் பார்ப்பதில் கூட இருக்காதுங்க.

9)குடும்பத்துடன் சினிமா தியேட்டர் போய் படம் பார்ப்பது 3 மணி நேரத்தை வீணாக்குகிறோம் ஆகையால் வீட்டில் இருந்த படியே தொலைகாட்சி சிறப்பு நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.

10)தீபாவளி பண்டிகை என்றால் நிச்சயம் வீட்டில் கலர் பொடிகள் கொண்டு வீட்டின் வெளியே கோலம் போடுவோம். அப்படி கோலம் போடும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து போட்டால், நிச்சயம் அதனாலேயே தீபாவளிக்கு போட்ட கோலம் இன்னும் அழகாக காணப்படும்.



வருடத்தில் ஒருமுறை வரும் தீபாவளி அந்தநாளி கிடைக்கும் சந்தோசம் ஆயுள் முழுவதும் நீடிக்க வேண்டும் இந்த வருட தீபாவளியை சந்தோஷமாக அமைந்திட மகியின் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.

~மகேந்திரன்

Monday, November 05, 2012

ஈரநெஞ்சம் நூறாவது சேவை...

"ஈர நெஞ்சம் உதவி" /"EERA NRNJAM Help"
******
[For English version, please scroll down]
கோவை பிரபஞ்ச அமைதி சேவை ஆசிரமத்தில் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பவித்ரா, ரஞ்சித், பூபதி, சிவப்ரகாஷ், தாரிணி என்ற பிள்ளைகளுக்கும் மற்றும் ஆத்மிகா, முரளி என்னும் சிறுவர்களுக்கும் வரப்போகும் தீபாவளிக்காக புதிய உடைகளை இன்று கோவையைச் சேர்ந்த நண்பர் திரு. முனியசாமி அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக வழங்கி உள்ளார்.

சின்ன சிறு வயதில் பண்டிகையைப் புத்தாடை உடு
த்திக் கொண்டாட நினைக்கும் பிஞ்சு உள்ளங்களின் ஆசையை நிறைவேற்ற உதவிய அன்பு நண்பர் திரு.முனியசாமி அவர்களுக்கு ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு,அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(100/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mr. Muniyasamy of Coimbatore, has sponsored new clothes/dresses for the forthcoming auspicious day Deepavali through our organization to the unprivileged children, Pavithra, Ranjith, Boopathy, Sivaprakash, Dharani who were admitted into Universal Peace Foundation, Coimbatore with the help of our organization and Aathmika and Murali at the same home.
We thank Mr. Muniyasamy and his family wholeheartedly for this help and wish them a very happy Deepavali too.
~Thanks / (100/2012)
"EERA NENJAM"
Photo: "ஈர நெஞ்சம் உதவி" /"EERA NRNJAM Help" 
******
[For English version, please scroll down]
கோவை பிரபஞ்ச அமைதி சேவை ஆசிரமத்தில் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பவித்ரா, ரஞ்சித், பூபதி, சிவப்ரகாஷ், தாரிணி என்ற பிள்ளைகளுக்கும் மற்றும் ஆத்மிகா, முரளி என்னும் சிறுவர்களுக்கும் வரப்போகும் தீபாவளிக்காக புதிய உடைகளை இன்று கோவையைச் சேர்ந்த நண்பர் திரு. முனியசாமி அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக வழங்கி உள்ளார்.

சின்ன சிறு வயதில் பண்டிகையைப் புத்தாடை உடுத்திக் கொண்டாட நினைக்கும் பிஞ்சு உள்ளங்களின் ஆசையை நிறைவேற்ற உதவிய அன்பு நண்பர் திரு.முனியசாமி அவர்களுக்கு ஈர நெஞ்சம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு,அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(100/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mr. Muniyasamy of Coimbatore, has sponsored new clothes/dresses for the forthcoming auspicious day Deepavali through our organization to the unprivileged children, Pavithra, Ranjith, Boopathy, Sivaprakash, Dharani who were admitted into Universal Peace Foundation, Coimbatore with the help of our organization and Aathmika and Murali at the same home. 
We thank Mr. Muniyasamy and his family wholeheartedly for this help and wish them a very happy Deepavali too. 
~Thanks / (100/2012)
"EERA NENJAM" 
 -----------------------------------------------------------------------------------------
இந்த பதிவோடு

"ஈர நெஞ்சம்" அமைப்பு ஆரம்பித்த இருநூறு நாட்களில், இரண்டு நாட்களுக்கு ஒரு நிகழ்வு என, நூறு நட்செயல்களை நடத்தி முடித்திருக்கிறோம். உங்களின் கருத்துக்களை eeranenjam@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தயவு செய்து அனுப்பி வைக்கவும்./We have accomplished one hundred activities in two hundred days which is an activity in every two days. Please send us your feedback to eeranenjam@gmail.com * "ஈர நெஞ்சம்" அமைப்பின் சேவைகள் / செயல்பாடுகள் பற்றிய உங்கள் கருத்து: / Your feedback on "EERA NENJAM Services.

https://www.facebook.com/questions/328763563887733/

 

Thursday, October 20, 2011

கனவு...

புது ஆடை எடுத்தாயிற்று,
புது பலகாரமும் சுட்டாயிற்று,
பட்டாசும் வாங்கியாயிற்று,
கனவு கடவுளே
எல்லோருக்கும்
தீபாவளி முடியும் வரை
என் கனவை
கலைத்துவிடாதே..!