Thursday, July 07, 2011

தேதி 21/06/11 அன்று cornierstone என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு நான் (மகேந்திரன்), அருள்ராஜ், மற்றும் கனகராஜ் ஆகியோர் பாடபுத்தகங்கள் நன்கொடையாக குடுக்க முடிவுசெய்து அதன் படி cornierstone ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கு உள்ள 40 குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள் நன்கொடையாக குடுத்தோம் .
அங்கு சென்று இருந்த போது அந்த குழந்தைகளிடம் ஒற்றுமையும் சந்தோசமும் ஆஹா ஆஹா நாங்களும் அங்கேயே தங்கிவிடலாமா என்ற ஆசை பெருக்கெடுத்தது . மனதை சமாதானப்படுத்தி அந்த குழந்தைகளிடம் இருந்த மனம் இல்லாமல் விடைபெற்றோம் .
வாசலில் வந்து கையசைத்து திரும்பும் வேலை ,
கௌரிசங்கர் வயது 5 இருக்கும் "அண்ணா ஏங்க பெயரை எல்லாம் கேடிங்கல்லா உங்க பெயரை சொல்லவே இல்லை" என்றான் ,
என்ன அழகு .
என் நபர்களுடன் அந்த சமயம் தான் பேசிக்கொண்டு இருந்தேன் ,"பாருங்க பசங்க நம்ம பெயரை கேட்கவே இல்லை" என்று . மலைத்து போய் கெளரிசங்கரை கொஞ்சலில் மூழ்கிவிட்டேன்.
அதன் பிறகு நாங்கள் அவனாசி சாலை வழியாக வந்து கொண்டு இருந்தோம் அப்போது ஒரு 15 வயது இருக்கும் ஒரு சிறுவன் சைக்கிளில் ஒற்றை சக்கரத்தில் மிக சர்வசாதாரணமாக சாகச பயணத்து கண்டு இருந்தான் நான் vaiththu இருந்த கேமராமூலம் படம் பிடித்துகொண்டேன் .
அவனை விசாரித்தோம் அவன் பெயர் அருண் என்று அத்தோடு அவனுடைய அலைபேசி எண் வாங்கிகொண்டு வந்து விட்டோம்.
வீடிற்கு வந்ததும் எனக்கு தெரிந்த விகடன் நிருபரிடம் அருணை பற்றி எடுத்துரைத்தேன்
உடனே வரும் ஞாயிற்றுக்கிழமை 26/06/11 அருணின் சாகசத்தை பதிவு செய்யல்லாம் என்றார் .
அதனை தொடர்ந்து எனது உறவினருடைய குழந்தைக்கி பிறந்தநாள் ஆகையால் அதே ஞாயிற்றுக்கிழமை அன்று மதிய உணவு உங்களுக்கு தெரிந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்க ஏற்பாடு செய்ய சொன்னார்.
சரி என்று சொல்லி விகடன் நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை 26/06/11, 3pm cornierstone ஆதரவற்ற குழந்தைகள் முன்னிலையில் அருணின் சாகசத்தை பதிவு செய்ய கேட்டுக்கொண்டேன் ,
உறவினரின் வீடு அன்னதானம் cornierstone குழந்தைகளுக்கு வழங்க கேட்டுக்கொண்டேன் .
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை 26/06/11 மதியம் cornierstone குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு.
அந்த குழந்தைகளின் முன்னிலையில் அருணின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது , இதை விகடன் பதிவு செய்தது.
 


அப்போது பாக்கணும் அந்த குழந்தைகளின் ஆனந்தத்தை அளவிட முடியவில்லை .
அருணின் முதல் மேடை இன்றுதான் அரங்கேறியது . அவனுடைய பூரிப்பையும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது .
-மகேந்திரன்
திறமை எங்கு இருந்தாலும் வெளிக்கொண்டு வரவேண்டும் உண்மையான விஷயம் தானங்க...
வாழ்த்துக்கள் அருண்
நன்றி -விகடன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Post a Comment