Monday, September 24, 2012

பாண்டிச்சேரியில் மரம் நடுவிழா ~ ஈரநெஞ்சம்


[For English version, please scroll down]
"ஈர நெஞ்சம்" அமைப்பின் சார்பில் பாண்டிச்சேரியில் எம்பலம், மறைமலை அடிகளார் அரசு மேல் நிலைப்பள்ளியில் 22.09.2012 அன்று மரம் நடு விழா நடை பெற்றது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஈர நெஞ்சத்தின் தொண்டு ஆர்வலருமான திரு. அன்புதாசன் அவர்களின் முயற்சியினால், இந்த மரம் நடு விழா இனிதே நடைபெற்றது.

காலை ஒன்பது மணிக்கு, பள்ளியின் துணை முதல்வர் திரு. இரகோத்தமன் அவர்கள் தலைமை தாங்கி, முதல் மரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர், ”இன்று இங்கே நிழல் தரும் மரங்கள் மட்டும் நடப்படவில்லை; தான் படித்த பள்ளிக்குத் தன்னால் முடிந்தவற்றைச் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து மாணவர்கள் மனதில் விதைக்கக் காரணமாய் இருந்த முன்னாள் மாணவர் அன்புதாசனை வாழ்த்துகிறேன்” என்று பேசினார். அது மட்டுமின்றி ஈர நெஞ்சத்தின் தொடர் சேவைகளையும், அனைத்து நிர்வாகிகளையும், தொண்டு ஆர்வலர்களையும் பாராட்டி நினைவுப் பரிசும் வழங்கினார். நண்பகல் 12 மணி அளவில் அனைத்து மரக்கன்றுகளும் நடப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இந்த விழாவில்125 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

இதற்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் திரு கோவிந்தன், திரு. ராஜசேகரன் இருவருக்கும் "ஈர நெஞ்சம்" தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் மனமாரத் தெரிவித்துக் கொள்கிறது. மரம் நடுவதற்கு வேண்டிய உதவி செய்ததற்கும், நட்ட மரங்களை நீர் ஊற்றி அவற்றை நன்றாகப் பராமரிக்க வேண்டிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்வதாக உறுதி அளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் மனமாரத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் முன்னோடியாக விளங்கும் அன்புதாசனைப் போல இன்னும் பலர் உருவாக எல்லாம் வல்ல இறைவனை ஈர நெஞ்சம் வேண்டுகிறது. விழாவின் முடிவில், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

~நன்றி (84/2012 )
"ஈர நெஞ்சம்

"https://www.facebook.com/eeranenjam

......

We had the "Tree Plantation" ceremony at Maraimalai Adikalar Government Higher Secondary School, Embalam, Pondicheery on 22.09.2012 successfully. It was possible by the good effort of one of our volunteers Mr. Anbu Dassan and he also happened to be an alumni of this school.

Mr. Rahothman, Vice-Principal,initiated the function by planting the first tree. In his speech, he praised Mr.Anbu Dassan for his effort of planting trees and added that he not only helped to plant trees but also made himself a good example to the present students. He also congratulated the various services and activities of EERA NENJAM and its trustees. There were 125 trees planted on this function and it was completed by 12 noon.

We would like to thank the teachers Mr. Govindan, Mr. Rajasekaran for their help. The school management has promised us that they would take care of the planted trees by watering them as needed.

We expect some more volunteers would come and engage themselves in these of activities in the following years such as Mr. Anbu Dassan. Snack was served to all the participants.
~Thanks (84/2012)
EERA NENJAM























Friday, September 21, 2012

அனாதையாக விட்டுவிடவில்லை ~ஈரநெஞ்சம்

[For English version, please scroll down]
நெருநல் உளனொருவன் இன்றில்லை.

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

 கோவை  உக்கடம் பகுதியில் 15 நாள்களுக்கு முன், மயக்கமடைந்த நிலையில் திரு நா. இராமசாமி என்பவர் காணப்பட்டார். அவரை யாரோ சில நல்லவர்கள், கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டுச் சென்றனர். அங்கு அவருக்குப் பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம் அமைப்பில் இருந்து, "ஈர நெஞ்சம்" அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு. மகேந்திரனுக்கு, நேற்று (19.09.2012) அவரது உறவினர்களைக் கண்டு பிடித்துத் தர உதவும்படி, தகவல் அளிக்கப்பட்டது. அந்த பெரியவர் கூறிய நெய்காரன்பட்டி துளசி ராஜன், 12 ஆம் வகுப்பு என்ற தகவலைக் கொண்டு "ஈர நெஞ்சம்" அமைப்பு, பள்ளி முதல்வர்களின் தொலை பேசி எண்களை விடா முயற்சியோடு தொடர்பு கொண்டது. அந்த முயற்சிக்குப் பலனும் கிடைத்தது. இன்று முழு கடை அடைப்பின் காரணமாக துர்க்கா தேவி பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையிலும் அந்த மாணவன் படிக்கும் பள்ளி முதல்வரின் முயற்சியால் அவரது வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துளசி ராஜனும் அவனது அம்மா திருமதி. ஜெயாவும், திரு. ராமசாமி அவர்கள் இருக்கும் இடம் தேடி விரைந்தோடி வந்தனர்.

ஆனால் காலன் அவர்களை முந்திக் கொள்ள அவர்களை காண்பதற்கு முன்னமே அவரது உயிர் பிரிந்தது. திருமதி. ஜெயா, பழனியில் சத்துணவு கூடத்தில் ஆயாவாக பணியாற்றும் சூழ்நிலையையும், அவரது மகன் 10 ஆம் வகுப்பு தேர்வில் 480 மதிப்பெண்கள் பெற்றவர் என்ற செய்தியும் அறிந்த எங்கள் அமைப்பு, இந்தக் குடும்பத்தை ஒன்று சேர்த்து பார்க்கத்தான் முடியாத நிலை என்ற போதும் அவரது நல்லடக்கமாவது அவரது குடும்பத்தார் முன்னிலையில் நடை பெற இறைவன் துணை செய்தாரே என்ற நினைப்போடு அந்த மனிதரின் இறுதிச் சடங்கை இன்று கோவை சொக்கம்புதூர் மயானத்தில் செய்து முடித்தது.

திருமதி. ஜெயா மற்றும் அவரது மகன் துளசி ராஜன் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு திரு. இராமசாமி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

https://www.facebook.com/eeranenjam

~ நன்றி /(81/2012)
ஈர நெஞ்சம்
......
No one lives forever.

Mr. N. Ramasamy, was admitted to "Coimbatore Corporation Home" by some well-wishers about fifteen days before due to his indisposed condition. He was given due care and medical treatment for those days. The said home requested, Mr.Mahendiran, the Managing Trustee of EERA NENJAM organization, to find out his address and his kith & kin on 19.09.2012. He just provided us minimum information such as Neikaranpatti, Thulasirajan, 12 standard. Based on this information, our organization acted immediately and tried that school principal continuously. Though, it was state's strike, the principal provided the address of Mr. Ramasamy based on Master. Thulasi Rajan, the said school student. After hearing the news, he and his mother Mrs. Jeya rushed to the home.

Unfortunately Mr.Ramasamy had passed away before they arrived. Though Mrs. Jeya is working as a Domestic helper [Ayah] in Noon-meals scheme programme, she has been educating her son. We came to know that her son Master Thulasi Rajan has scored 480 marks in his 10th standard state board examinations. We could satisfy ourselves that at least they could see him at the end and attend the final rituals. Our organization performed the final rituals in presence of her and son at Sokkamputhur burial ground, Coimbatore.

We consoled them and we request the almighty for his soul rest in peace.

~Thanks (81/2012)
EERA NENJAM

Wednesday, September 19, 2012

ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்ளுங்கள் .

"ஒரு சோகமான செய்தி "/"Condolence"
******
[For English version, please scroll down]
எங்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம், கடந்த சனிக்கிழமை (15 .09 .2012) அன்று, கோவை மருத்துவமனை அருகில் ஆதரவற்று இருந்த ஒருவரை மருத்துவமனையில் சேர்த்து, காயம் 

ற்றும் உடல் நலக்குறைவிற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி (16 .09 .2012) அன்று அவர் இயற்கை எய்தினார் என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது, இறுதிச் சடங்கு எவ்வித குறைவுமின்றி நடந்தேறி, கோவை புலியகுளம் மயானத்தில் "ஈர நெஞ்சம்" மற்றும் உதவும் தோழர் நண்பர்கள் உதவியோடு அவர்து உடல் 18.09.2012 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
ஈர நெஞ்சம் (78/2012)


Photo: "ஒரு சோகமான செய்தி "/"Condolence"
******
[For English version, please scroll down]
எங்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலம், கடந்த சனிக்கிழமை (15 .09 .2012) அன்று, கோவை மருத்துவமனை அருகில் ஆதரவற்று இருந்த ஒருவரை மருத்துவமனையில் சேர்த்து, காயம் மற்றும் உடல் நலக்குறைவிற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி (16 .09 .2012) அன்று அவர் இயற்கை எய்தினார் என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது, இறுதிச் சடங்கு எவ்வித குறைவுமின்றி நடந்தேறி, கோவை புலியகுளம் மயானத்தில் "ஈர நெஞ்சம்" மற்றும் உதவும் தோழர் நண்பர்கள் உதவியோடு அவர்து உடல் 18.09.2012 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
ஈர நெஞ்சம் (78/2012)
https://www.facebook.com/eeranenjam
......
A man, suffered with leg injury surrounded by flies and maggots with light-headedness and improper foods, was been admitted to the Government Hospital, Coimbatore with the help of our friends and our organization on 15.09.2012 and has been given treatment for the past few days.

But unfortunately, he passed away on 16.09.2012 and his final ritual was performed with the help of our friends and our organization at Puliyakulam burial ground, Coimbatore on 18.09.2012. 

May his soul rest in peace.
EERA NENJAM(78/2012)


https://www.facebook.com/eeranenjam
......
A man, suffered with leg injury surrounded by flies and maggots with light-headedness and improper foods, was been admitted to the Government Hospital, Coimbatore with the help of our friends and our organization on 15.09.2012 and has been given treatment for the past few days.

But unfortunately, he passed away on 16.09.2012 and his final ritual was performed with the help of our friends and our organization at Puliyakulam burial ground, Coimbatore on 18.09.2012.

May his soul rest in peace.
EERA NENJAM(78/2012)

Monday, September 17, 2012

யாருக்கும் இன் நிலை வரகூடாது...

யாருக்கும் இன் நிலை வரகூடாது...

காலத்தினால் செய்த " ஈர நெஞ்சத்தின் உதவி" / Timely help from "EERA NENJAM"
******
[For English version, please scroll down]
ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் கோவை அரசு மருத்துவமனையை ஒட்டிய சாலையை கடந்து செல்கிறார்கள். அந்த வழியில் கிடந்த ஒரு புண்பட்ட மனிதரை, யாரும் கவனிக்கவே இல்லை.ஆனால், சூலூரைச் சேர்ந்த "ஈர நெஞ்சம்" கொண்ட சம்பத் குமார் மற்றும் ரஞ்சித் இருவரும் அதனைக் கண்டவுடன், எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர். இடது கால் தீக் காயம், அதில் ஈக்கள் மற்றும் புழுக்கள் மற்றும்
நினைவின்றி சரியான உணவோ தண்ணீரோ கிடைக்காமல் கிடந்த அவரை, "ஈர நெஞ்சம்" அமைப்பு உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அவருக்கு தக்க மருத்துவ சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

சூலூரைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் சம்பத்குமார் இருவருக்கும் ஈர நெஞ்சம் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. சரியான நேரத்தில் செய்த உதவியினால் ஒரு உயிர் இப்போது பாதுகாக்கப்பட்டமன நிறைவோடு எங்கள் அமைப்பு, இதுபோல் இன்னும் நிறைய நற்செயல்கள் நடைபெறுவதற்கு உங்களின் ஆதரவையும் இறைவனின் அருளையும் வேண்டுகிறது . பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்.

http://www.youtube.com/watch?v=u2JFad0uJ5U&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=oOqMG7AOGZQ&feature=youtu.be

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(77/2012)
ஈர நெஞ்சம்.
......
Thousands of people have been using roads leading to Coimbatore Government Hospital. No one noticed a unhealthy person who was lying down on the street except two kind hearted fellows, Sampath kumar and Ranjith, who hailed from Sulur. His left leg had fire-injury surrounded by flies and maggots with light-headedness and improper foods. We acted immediately after their information by calling 108 ambulance service and made arrangements to admit him to Government Hospital, Coimbatore. As of now he is under medication. We salute the noble service of Sampathkumar and Ranjith. We ourselves are satisfied that he is safe and given proper medication and care in the hospital.

We continue to seek your help and the almighty to perform such kinds of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks
EERA NENJAM (77/2012)
Like · ·

Sunday, September 16, 2012

இறப்பதற்காகவே வாழ்கிறேன்~கவிதை

அடம் பிடித்து அழுத
குழந்தைக்கு
மிட்டாய் கிடைத்த சந்தோசம்
எனக்கு இப்போது
உன் அழைப்பை கண்டு..!
 
 
அற்புதமான காதலை
மட்டும் அல்ல
அதி அற்புதமான
வேதனைகளும்
உன்
மௌனம்தான் தருகிறது..!
 
 
உன் கோவம் ஒவ்வொன்றிலும்
நான்
இறப்பதற்காகவே வாழ்கிறேன்
என்பதை
உணர்கிறேன்..!
 
 
உன்
செவ்விதழ் முத்ததிற்காக
பித்து பிடித்தவன் போல
ஆகி விட்டேன்..!
இதுதான் செவ்வாய் தோசமா..!
 
 
திட்டும் அம்மா ,
முறைக்கும் அப்பா ,
உன் பார்வை
நியாபகம் படுத்துகிறது...
வீட்டை மறந்து
உன்னோடு பேச நினைக்கிறன்
அது பிடிக்கலையா
உன்
பார்வையை மாற்று..!
 
 
உன்னையே
சுற்றிவந்த நான்
அவளை சுற்றவைததும்
நீ தான் இறைவா
கோவத்தில்
என்னை கைவிட்டுவிடாதே..♥

 
 
என்
புன்னகை பூவே...
உன்
புன்னகையில்
தெய்வீக அன்பு தவழ்கிறது...
பூவே
நீ
புன்னகைத்துக்கொண்டே
இரு...
நான்
வழிபடும் தெய்வம் நீ..!
 
 
 
 
 
 
 
 

Friday, September 14, 2012

ஆதரவற்றோர் என யாரையும் உருவாக்க மாட்டோம் மாணவர்கள்~ ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சத்தின் உதவி / Help from EERA NENJAM''
******
[For English version, please scroll down]
......
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆதரவின்றி மயக்கமுற்ற நிலையில் ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக இருந்து வந்


தார். அதைக் கவனித்து வந்த கோவை ஒக்கிலியர் காலனி அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அந்த மூதாட்டிக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று யோசித்த போது கோவை கணுவாய் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் ''ஈர நெஞ்சம்'' பற்றி அறிந்தனர். அதன் பின்னர் மூதாட்டிக்கு முதலுதவி செய்து 13.09.2012 அன்று, B8 காவல் நிலைய அனுமதியோடு ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில் ''ஈர நெஞ்சம்'' அமைப்புடன் இணைந்து அவரைக் கொண்டு சேர்த்தனர். வீட்டை விட்டு துரத்தப்பட்டு சரிவர எதுவும் நினைவற்ற நிலையில் இருந்த அந்த மூதாட்டியை நல்லதொரு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கத் துணை செய்த மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் ''ஈர நெஞ்சம்'' வாழ்த்திப் பாராட்டுகிறது.

இந்த நற்செயலைச் செய்த மாணவ மாணவியர்கள், தங்களது கருத்தை இந்த காணொளியின் மூலம் சொல்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=iXYxSAdlBxQ&feature=youtu.be

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மாணவர்கள், தங்களைப் பெற்றெடுத்தவர்களைப் பிற்காலத்தில் பேணிக் காப்போம் என்ற உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

வரும் காலங்களில், இது போன்ற ஆதரவற்றவர்கள் இல்லாத ஓர் உலகம் படைப்பதை ''ஈர நெஞ்சம்'' தன் கடமையாகக் கருதுகிறது.

~நன்றி
ஈர நெஞ்சம் (75 /2012)
https://www.facebook.com/ஈரநெஞ்சம்
......
An old lady, unattended and under light-headedness, has been lying down in the streets near Corporation school, Okkliyar colony, Coimbatore for the past few days. By looking at the scenario, when the pupils and teachers of Government Higher Secondary School, Okkiliyar Colony, Coimbatore decided to do some good thing for her, they came to know about our organization ''EERA NENJAM'' through Government High School, Kanuvai, Coimbatore. The pupils and teachers have joined hands with our organization, gave first-aid to her, got permission from B8 police station and finally made arrangements to admit her into ''Sri Saibaba Old Age Home'' on 13.09.2012. We salute the pupils and the teachers for this noble service.

They expressed their views and feelings in the attached video. More over, they have also pledged to take care of their own parents in especially when they are old.

As per our vision, we want to have a better world without any orphan (s).
~Thanks
EERA NENJAM (75/2012)

Wednesday, September 12, 2012

வாழ்க மாணவர்கள் சமுதாயம் ~ ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் - செயல்பாடுகள்'' / ''EERA NENJAM - Activities''
******
[For English version, please scroll down]
இளம் வயது முதல் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறை, நாளைய உலகைக் காக்கும் கரங்களாக வலுப்பெறும் என்பதில் வியப்பேதும் இல்லை. இதற்கு உதாரணமாக, கோவை கணுவாய் அரசு பள்ளி முன்பாக பலநாட்களாக இடது கால் முறிந்த நிலையில் ஒரு பெண்மணி ஆதரவற்ற நிலையில் உணவின்றி பரிதாபமாகக் கிடந்ததை அறிந்து, மனதில் ஈரம் வெளிப்பட வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபிக்கும்

விதமாக, கோவை கணுவாய் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து, அந்த பெண் மணிக்கு முதலுதவி செய்து அதன் பின்னர் 11 .09 .2012 அன்று, துடியலூர் காவல் நிலையம் அனுமதியுடன் அன்னை தெரெசா முதியோர் காப்பகத்தில் அவர் சேர்க்கப்பட்டு நல்லதொரு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றவருக்கு உதவும் அந்த நல்ல உள்ளங்களை, ஈர நெஞ்சம் வாழ்த்தி பாராட்டுகிறது. இந்த நற்செயலை செய்த மாணவ மாணவியர்கள், தங்களது கருத்தை இந்த காணொளியின் மூலம் சொல்கிறார்கள்.

http://youtu.be/_e8ltotzQf8

http://youtu.be/f-eLY7vFwyA

~நன்றி
ஈர நெஞ்சம் (74/2012)
https://www.facebook.com/ஈரநெஞ்சம்
......
There is no doubt that the present youth's motto to do good things would lead to helping hands to the future world especially people who are in need. There was a old lady, lying on the street near Kanuvai, Coimbatore with her left leg broken. She was unattended and without proper food for the past few days. By looking at the scenario, the pupils and the teachers of Government High School, Kanuvai, Coimbatore have joined with our organization and given her a first-aid. We have got the permission from Thudiyalur police station and made arrangements to admit her in to ''Mother Teressa Homes'', Coimbatore on 11.09.2012 to safeguard her.
We salute the pupils and teachers for their noble services. Please watch the attached videos where the students talk about their views on unprivileged ones.
~Thanks
EERA NENJAM (74/2012)

Tuesday, September 11, 2012

ஆதரவற்றவர் என யாரும் இல்லை~ஈரநெஞ்சம்



"ஈர நெஞ்சத்தின் உதவி" / Help from EERA NENJAM"

[For English version, please scroll down]

"ஈர நெஞ்சம்" அமைப்பின் தொடர் சேவைக்காகக் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு பணிவிடை செய்ய 09.09.2012 அன்று ஈர நெஞ்சம் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்கள் சென்றபோது, காவல்துறையினரால், சுப்பம்மாள் என்னும் 70 வயது மூதாட்டியை ஆதரவு இல்லை என்ற காரணத்தினால் அன்னை தெரெசா காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவரிடம் விபரம் கேட்கும் போது தனக்கு முருகேசன், பொன்முடி, ராமன்,
ஈஸ்வரி, பேச்சியம்மாள் என ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும் ராமன் வீட்டில் இருந்த போது ஏதோ காரணத்தினால் விரட்டி விட்டதாகவும், மற்ற 4 பிள்ளைகளை தேடி அலைந்து கொண்டு இருந்த போது, அவர்களின் முகவரி தெரியாததால் பசியால் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானதாகவும் பின்னர், காவல் துறையினர் தன்னை அன்னை தெரெசா காப்பகத்தில் சேர்த்து விட்டதாகவும் கூறினார். ”எனது மரணத்துக்கு முன்னராவது நான் என் பிள்ளைகளைக் காண்பேனா?” என்று சுப்பம்மாள் கட்டிப் பிடித்து அழுதார். "ஈர நெஞ்சம்" மேற்கொண்ட பெரும் முயற்சியால், தூத்துக்குடி அருகில் உள்ள சுப்பம்மாள் அவர்களின் மகன் பொன்குட்டியின் முகவரியைக் கண்டு பிடித்து அவர்களின் மூலமாக அவர்களது மருமகன் திரு. சுந்தரராஜ் அவர்கள் நேரில் வந்து தன் மாமியாரை தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். ஓர் அன்னையை அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்த மகிழ்ச்சியில் ஈர நெஞ்சமும் அவர்களை மனதார வாழ்த்துகிறது. அவர்கள், ஈர நெஞ்சந்த்தின் சேவைகளைப் பற்றி பெருமைப்படுவதை, இந்தக் காணொளியில் பார்க்கலாம்.







~நன்றி
ஈர நெஞ்சம் (73/2012)
https://www.facebook.com/eeranenjam
......
When Mr Mahendiran, the Managing Trustee of our organization "Eera Nenjam", went to serve inmates of "Mother Teresa Home", Coimbatore on 09.09.2012, as their routine service, they came to know that Mrs. Subbammal (Age:70) was admitted there by the police with a reason that she had no one to support. She told us that she has five children namely, Murugesan, Ponmudi, Raman, Eswari and Petchiammal and she was sent out from Raman's house for an unknown reason. It appears that the other four children were searching for her whereabouts and in the meantime, she was forced by herself to beg for living and finally the police made arrangements to admit her in the home. She was in tears and looking for her children. By looking at this scenario, we have tried from our sources and finally identified her son's [Ponmudi] address. Her son-in-law Mr. Sundararaj came directly to the home and took her to their house. We are very happy that we could help an elderely lady to get reunited with her family. Please watch the attached video where they talk about our activities.
~Thanks
EERA NENJAM (73/2012)

Wednesday, September 05, 2012

என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்காக கூறிய கதை .

Photo: ஒரு ஊரில் முனிவர் இருந்தார் , அவருக்கு பொதுமக்கள் பழம் உணவு என கொடுத்துவந்தனர் முனிவர் நல்ல உபதேசங்களை மக்களுக்கு கூறிவந்தார் , முனிவரை பிடிக்காத ஒருவர் முனிவர் முன் வந்து தகாத வார்த்தைகளால் ஏசிவந்தார், ஆனால் முனிவர் அந்தநபர் கூறுவதை கண்டுக்கொள்ளாமல் இருப்பார் , இப்படியே பலமுறை அந்த நபர் தகாதவார்தையால் திட்டு பேசுவதையும் , முனிவர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதையும் கவனித்த பொதுமக்கள் முனிவரிடம் கேட்டார்கள்:

"அந்த நபர் உங்களை இப்படி திட்டி வருகிறார் நீங்கள் என் கண்டுக்கொள்ளாமல் இருகின்றீர்கள்" என்று

அதற்க்கு முனிவர் : "நீங்கள் கொடுத்த பழம் , உணவு எல்லாம் நான் வாங்கிக்கொண்டேன் , நான் வாங்கிகொண்டதால் அது எனக்கு பயனாகிற்று , ஒருவேளை நான் வாங்காமல் இருந்தால் அது உங்களுக்கே பயனாகி இருக்கும் இல்லையா ,
அது போலதான்
அந்த நபர் கூறியது எல்லாம் நான் வாங்கிகொள்ளவே இல்லை அது அவருக்கே பயனாக   இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்" என்றார்,
முனிவர் கூறியதை கேட்டதும் அந்த ஊர் போது மக்கள் யாரையும் தீய தகாதவார்தையால் திட்டுவதை நிறுத்திவிட்டார்கள்..!
~ என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்காக கூறிய கதை .
~மகேந்திரன்

Monday, September 03, 2012

தெய்வமாய் வந்த குழந்தைகள் ~ ஈரநெஞ்சம்


[For English version, please scroll down]

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பார்கள். இளம் வயது முதல் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறை, நாளைய உலகைக் காக்கும் கரங்களாக வலுப்பெறும் என்பதில் வியப்பேதும் இல்லை. இதற்கு உதாரணமாக, கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆதரவற்ற நிலையில் உடல் நலமின்றி, உணவின்றி பரிதாபமாக, திரு. பரந்தாமன் என்னும் பெரியவர் இருப்பதைக் கண்டு, கோவையைச் சேர்ந்த
பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ம. பானு, அஜீத், ஷ்யாம் மற்றும் அவர்களின் தோழர்கள் இணைந்து, அவருக்கு முதலுதவி செய்து அவரைப் பராமரித்ததுடன், ''ஈர நெஞ்சம்'' உதவியுடன், B9. சரவணம்பட்டி காவல் துறை அனுமதியோடு சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு நல்லதொரு வாழ்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அந்த நல்லுள்ளங்களை ஈர நெஞ்சம் வாழ்த்தி பாராட்டுகிறது.

~நன்றி ஈர நெஞ்சம்
(67/2012)
https://www.facebook.com/eeranenjam
......
There is a saying that '' The quality of the crop can be determined from the seed itself''. Similarly the activity of the youth will reveal a good citizenship. There is no doubt that the present youth can help the needy people when need arises. To prove the above saying, twelfth standard students, Banu, Ajith, Shyam and their friends, found an elderly man, Mr Paranthaman, in the vicinity of Poonthottam, Ganapathy, Coimbatore. He had been unattended, unhealthy and without proper food for the past few days. These had helped him by providing a first-aid and made arrangements to admit him into Saibaba Homes with the help of Saravanampatti Police Station and our organization Eera Nenjam. We appreciate their services while we are also proud that the present younger generation is on the right track doing social services.
~Thanks
EERA NENJAM (67/2012)