அனாதையாக விட்டுவிடவில்லை ~ஈரநெஞ்சம்
[For English version, please scroll down]
நெருநல் உளனொருவன் இன்றில்லை.
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
கோவை
உக்கடம் பகுதியில் 15 நாள்களுக்கு முன், மயக்கமடைந்த நிலையில் திரு நா.
இராமசாமி என்பவர் காணப்பட்டார். அவரை யாரோ சில நல்லவர்கள், கோவை மாநகராட்சி
ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டுச் சென்றனர். அங்கு அவருக்குப்
பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கோவை
மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம் அமைப்பில் இருந்து, "ஈர நெஞ்சம்" அமைப்பின்
நிர்வாக அறங்காவலர் திரு. மகேந்திரனுக்கு, நேற்று (19.09.2012) அவரது
உறவினர்களைக் கண்டு பிடித்துத் தர உதவும்படி, தகவல் அளிக்கப்பட்டது. அந்த
பெரியவர் கூறிய நெய்காரன்பட்டி துளசி ராஜன், 12 ஆம் வகுப்பு என்ற தகவலைக்
கொண்டு "ஈர நெஞ்சம்" அமைப்பு, பள்ளி முதல்வர்களின் தொலை பேசி எண்களை விடா
முயற்சியோடு தொடர்பு கொண்டது. அந்த முயற்சிக்குப் பலனும் கிடைத்தது. இன்று
முழு கடை அடைப்பின் காரணமாக துர்க்கா தேவி பள்ளி விடுமுறை விடப்பட்ட
நிலையிலும் அந்த மாணவன் படிக்கும் பள்ளி முதல்வரின் முயற்சியால் அவரது
வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துளசி ராஜனும் அவனது அம்மா திருமதி.
ஜெயாவும், திரு. ராமசாமி அவர்கள் இருக்கும் இடம் தேடி விரைந்தோடி வந்தனர்.
ஆனால் காலன் அவர்களை முந்திக் கொள்ள அவர்களை காண்பதற்கு முன்னமே அவரது
உயிர் பிரிந்தது. திருமதி. ஜெயா, பழனியில் சத்துணவு கூடத்தில் ஆயாவாக
பணியாற்றும் சூழ்நிலையையும், அவரது மகன் 10 ஆம் வகுப்பு தேர்வில் 480
மதிப்பெண்கள் பெற்றவர் என்ற செய்தியும் அறிந்த எங்கள் அமைப்பு, இந்தக்
குடும்பத்தை ஒன்று சேர்த்து பார்க்கத்தான் முடியாத நிலை என்ற போதும் அவரது
நல்லடக்கமாவது அவரது குடும்பத்தார் முன்னிலையில் நடை பெற இறைவன் துணை
செய்தாரே என்ற நினைப்போடு அந்த மனிதரின் இறுதிச் சடங்கை இன்று கோவை
சொக்கம்புதூர் மயானத்தில் செய்து முடித்தது.
திருமதி. ஜெயா
மற்றும் அவரது மகன் துளசி ராஜன் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்வதோடு திரு. இராமசாமி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை
பிரார்த்திப்போம்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(81/2012)
ஈர நெஞ்சம்
......
No one lives forever.
Mr. N. Ramasamy, was admitted to "Coimbatore Corporation Home" by some
well-wishers about fifteen days before due to his indisposed condition.
He was given due care and medical treatment for those days. The said
home requested, Mr.Mahendiran, the Managing Trustee of EERA NENJAM
organization, to find out his address and his kith & kin on
19.09.2012. He just provided us minimum information such as
Neikaranpatti, Thulasirajan, 12 standard. Based on this information, our
organization acted immediately and tried that school principal
continuously. Though, it was state's strike, the principal provided the
address of Mr. Ramasamy based on Master. Thulasi Rajan, the said school
student. After hearing the news, he and his mother Mrs. Jeya rushed to
the home.
Unfortunately Mr.Ramasamy had passed away before they
arrived. Though Mrs. Jeya is working as a Domestic helper [Ayah] in
Noon-meals scheme programme, she has been educating her son. We came to
know that her son Master Thulasi Rajan has scored 480 marks in his 10th
standard state board examinations. We could satisfy ourselves that at
least they could see him at the end and attend the final rituals. Our
organization performed the final rituals in presence of her and son at
Sokkamputhur burial ground, Coimbatore.
We consoled them and we request the almighty for his soul rest in peace.
~Thanks (81/2012)
EERA NENJAM
Related Posts: ,
,
,
,
,
No comments:
Post a Comment