Monday, September 03, 2012

தெய்வமாய் வந்த குழந்தைகள் ~ ஈரநெஞ்சம்


[For English version, please scroll down]

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பார்கள். இளம் வயது முதல் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறை, நாளைய உலகைக் காக்கும் கரங்களாக வலுப்பெறும் என்பதில் வியப்பேதும் இல்லை. இதற்கு உதாரணமாக, கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆதரவற்ற நிலையில் உடல் நலமின்றி, உணவின்றி பரிதாபமாக, திரு. பரந்தாமன் என்னும் பெரியவர் இருப்பதைக் கண்டு, கோவையைச் சேர்ந்த
பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ம. பானு, அஜீத், ஷ்யாம் மற்றும் அவர்களின் தோழர்கள் இணைந்து, அவருக்கு முதலுதவி செய்து அவரைப் பராமரித்ததுடன், ''ஈர நெஞ்சம்'' உதவியுடன், B9. சரவணம்பட்டி காவல் துறை அனுமதியோடு சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு நல்லதொரு வாழ்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அந்த நல்லுள்ளங்களை ஈர நெஞ்சம் வாழ்த்தி பாராட்டுகிறது.

~நன்றி ஈர நெஞ்சம்
(67/2012)
https://www.facebook.com/eeranenjam
......
There is a saying that '' The quality of the crop can be determined from the seed itself''. Similarly the activity of the youth will reveal a good citizenship. There is no doubt that the present youth can help the needy people when need arises. To prove the above saying, twelfth standard students, Banu, Ajith, Shyam and their friends, found an elderly man, Mr Paranthaman, in the vicinity of Poonthottam, Ganapathy, Coimbatore. He had been unattended, unhealthy and without proper food for the past few days. These had helped him by providing a first-aid and made arrangements to admit him into Saibaba Homes with the help of Saravanampatti Police Station and our organization Eera Nenjam. We appreciate their services while we are also proud that the present younger generation is on the right track doing social services.
~Thanks
EERA NENJAM (67/2012)




மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Selvi Maaran said...

நேசம் சாகவில்லை..இதோ இந்தக் குழந்தைகள் உருவங்களில் நான் இன்றும் வரும் காலங்களிலும் இருப்பேன் என்கிற நம்பிக்கையைத் தருகிறாள். நமக்கும் உலகைப் பற்றிய வருங்கால நம்பிக்கை ஏற்படுகிறது..இவர்களை நாம் மிகவும் ஊக்குவித்து அவர்களின் கருணை மனப் பான்மையை இன்னமும் பெருகி மற்றக் குழந்தைகளிலும் பரவப் பண்ணனும்..அளவில்லா மகிழ்ச்சி..:)))

Post a Comment